2021 தேர்தல் களம்! முதல் கட்டப்பார்வை!

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் மு.டிவுகள் வெளியாகிக் கொண்டே வருவதில் மக்களுடைய சாய்ஸ் என்ன என்பதும் தெரிய வந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட அதிமுக்கியமாக தேர்தல் ஆணையத்தின் மீதும் EVM வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் எதிர்க்கட்சிகள் சுமத்திய பழிகள் அத்தனையும் பொய் என்பதும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நிரூபிக்கப்பட்ட பிறகும் தங்களது பொய்களுக்காக வருத்தம் தெரிவிக்கிற basic decency கூட இல்லாத ஜனநாயகத்தில் வாழ்கிறோம் என்பது பெருமைப்பட்டுக்கொள்கிற  விஷயமா என்ன?  


மம்தா பானெர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 3வது முறையாகவும் ஆட்சியைப்பிடித்திருக்கிறது என்பதை வங்காளத்தின் வெற்றியாக அறிவித்திருக்கிறார் மம்தா. ஆனால் நந்திகிராம் தொகுதி அவரைக் கைவிட்டு விட்டது. சுவேந்து அதிகாரியிடம் தோற்றுவிட்டதாக செய்திகள்! Trinamool Congress chief Mamata Banerjee lost to loyalist-turned-foe BJP candidate Suvendu Adhikari in Nandigram by a margin 1,960 votes. Earlier, there were reports that said Banerjee had defeated Adhikari.In what appears as admission of defeat, the West Bengal cheif minister said, "Let the Nandigram people give whatever verdict they want, I accept that. I don't mind." என்று மம்தாவே சொன்னதாக The Week செய்தி சொல்கிறது.  TMC 214 இடங்களில்  ஜெயித்திருக்கிறது.  சித்திக்கியின் ISF வெறும் இரண்டே இடங்கள். BJP 75 இடங்களில் வெற்றி. காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துத் தங்கள் வாக்கு வங்கியை அப்படியே மம்தா பானெர்ஜிக்கு மாற்றி விட்டார்கள் போல! BJP 100 இடங்களைத் தாண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்குப் பெரிய ஏமாற்றமே! வெற்றி மிதப்பில் பிஜேபி அலுவலகங்களுக்குத் தீ வைப்பது முதலான அசகாய  சாதனைகளை திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கி விட்டது. 


அசாமில் பிஜேபி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று இருப்பதில் எரிச்சலோடு மேலே 3நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்!


கேரள அரசியல் சரித்திரத்தில் ஒருமுறை ஆட்சியமைத்த கூட்டணி இரண்டாவது முறையும் வெல்வதில்லை என்கிற நாற்பது ஐம்பது ஆண்டுகால வழக்கத்தை மாற்றி இன்னும் அதிகமான சீட்டுக்களுடன் (99) இடது முன்னணி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி மீதமுள்ள 41 இடங்களில் ஜெயித்திருக்கிறது. இங்கேயும் LDF UDF இரண்டும் ஒரு புரிந்துணர்வோடு பிஜேபி ஒரு இடத்தில் கூட ஜெயித்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மனோரமா ஆன்லைன் வீடியோவில் வெளிப்படையாகவே சொன்னார்கள்.  இந்த மூன்று மாநிலத்தேர்தல்களில் மட்டும் anti incumbency இல்லை என்று சொல்லப்படுவது வேடிக்கை தான்! எதற்கும் இந்தச் செய்தியை ஒருமுறை பார்த்து விடுங்கள்!


பாண்டிச்சேரி ரிசல்ட் இன்னமும் தெளிவாக வரவில்லை. தற்போதைய நிலவரப்படி NR காங்கிரஸ் பிஜேபி கூட்டணி தான் ஆட்சியைப்பிடிக்கும் போலத்தெரிகிறது.

தமிழ்நாட்டில் எல்லோரும் பயமுறுத்திக் கொண்டிருந்த படியே திமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. ஆனாலும் அதிமுக+ வலிமையான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. பிஜேபி உள்ளே வந்துரும் என்று சொல்லிச் சொல்லியே பிஜேபியும் சட்டசபைக்குள் அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலின் சுவாரஸ்யமே முன்னெப்போதும் இல்லாத வகையில் நிறைய உதிரிக்கட்சிகள் காலியாகி இருக்கின்றன. அதிமுக செய்த கூட்டணிக் குளறுபடியில் வெளியேறிய தேமுதிக, சரத்குமாரின் சமக. டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் என்று பல சிறிய கட்சிகள் அடிவாங்கியிருக்கின்றன. அடிவாங்காமல் கூட்டணிக்குள் இருந்து தானும் கெட்டு அதிமுகவையும் கெடுத்த கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான்! வன்னியர் வாக்குகள் கைவிட்டுவிட்டன.அதுபோக ஜெ.வால் சமஉக்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி போன்ற சில்லறைகளை  இம்முறை அதிமுக, திமுக இரண்டுதரப்புமே கண்டு கொள்ளவில்லை.

ஆனாலும் கட்டாயப்படுத்தி பிஜேபி கூட்டணி வைத்ததால் தான் அதிமுக இவ்வளவு சரிவைச் சந்தித்தது என்று கூவ திமுக, அதிமுக இரண்டு கழகங்களிலும் ஆட்களுக்கா பஞ்சமில்லை.

இது ஒரு முதற்கட்டப்பார்வைதான்! முடிவுகள் முழுதும் வெளியானபிறகு விரிவாகப்பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.

8 comments:

 1. அட்டகாசம் ஆரம்பமோ?

  ReplyDelete
  Replies
  1. 10 ஆண்டுகள் பணப் பசியோடு வெறியில் இருந்தவர்களிடம் நல்லதை எதிர்பார்க்க முடியுமா அம்மா?!

   Delete
 2. இந்த தேர்தலில் பெரிய வெற்றியும் பெரிய தோல்வியும் பெற்றவர்கள் கம்யூனிஸ்ட் தான்! தொடர்ந்து இரண்டாவது முறையாக கேரளாவில் பெற்றது பெரிய வெற்றி என்றால், 33 வருடங்கள் ஆண்ட மாநிலத்தில் இனி போட்டி மமதாவிற்கும் பிஜேபி க்கும் என்று மாறி போட்டியிலேயே இல்லாமல் இருப்பது பெரிய தோல்வி!
  திமுக வென்றது கொடுமை! வேறென்ன சொல்வது என்று தெரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. கம்யூனிஸ்டுகளுக்கு தேசிய அளவில் ஒரு நல்ல எதிர்க்கட்சியாகச் செயல்பட வாய்ப்பு இருந்தது. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா என்று மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிற வாய்ப்பையும் கொடுத்தாகிவிட்டது அத்தனையையும் கெடுத்துக் கொண்டு கடைசியில் கேரளா ஒற்றைப்பிடித்துக்கொண்டு ஜீவிக்க வேண்டிய நிலைமை! இதை உண்மையில் வெற்றியாகப்பார்க்க முடியுமா என்ன?

   இங்கே திமுக ஜெயித்திருப்பது பெரும் கொடுமைதான்! அமமுக TTV தினகரன் பலதொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்குக் காரணமாகி இருக்கிறார். முடிவுகளை இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

   Delete
 3. மேற்கு வங்கத்தில் 'வங்காளி, ஹிந்திக்காரங்க' என்று பிரிவு வந்திருக்கலாம். அதனால்தான் மம்தாவிற்கு அதிகமான வாக்குகள் வந்திருக்கு என்று நினைக்கிறேன். அனுதாப வாக்குகளும் இருக்கலாம்.

  ஆனால் மேற்கு வங்கம் என்றால் திரினாமுல் மற்றும் பாஜக என்று இரண்டு கட்சிகள் போட்டி என்றாகிவிட்டது. பாவம் கம்யூனிஸ்டுகள். பழைய நினைப்பிலேயே வாழ்க்கையை ஓட்டவேண்டியதுதான்.

  கேரளாவில் கம்யூனிஸ்டுகளின் வெற்றி மிகவும் குறிப்பிடத்தக்கது. அதில் எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. காங்கிரஸ் கரைந்துகொண்டுவருகிறது. ஆச்சர்யமா இருக்கு.. இரு முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சியை ஒருவாறு கைப்பற்றி மேனேஜ் செய்தவர்கள் 7 வருடங்களில் இந்த நிலையை அடைந்துவிட்டார்களே என்று. ராகுல், சோனியா should take the blame.

  ReplyDelete
  Replies
  1. மம்தாவின் வெற்றி எனக்கு ஆச்சரியமாகத்தான் இன்னமும் இருக்கிறது. எப்படி என்கிற கலைத்தகவல்களை இனிமேல்தான் தேடி analyse செய்யவேண்டும். இந்த 5 மாநில சட்டசபைத்தேர்தல் முடிவுகளில் தெளிவாகத்தெரிவது, சோனியா காங்கிரஸ் தேசியக்கட்சியாக இருந்ததில் இருந்து கீழிறங்கி கேரளாவைத்தவிர்த்து ஒரு மாநிலக்கட்சியாகக் கூட இருக்கிற தகுதியை இழந்து நிற்கிறது என்கிற செய்திதான்! 2024 இல் பிஜேபியுடன் நேரடியாக மோதுகிற அளவுக்குத்தேறுமா?

   அதன் அடிப்படையில்........

   2011 தேர்தல் வெற்றிக்குப்பிறகு எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குப் பிரதமர் முகமாக அறியப்பட்ட மூன்று பெண்மணிகளில் இப்போது மம்தா பானெர்ஜி மட்டுமே எஞ்சி இருக்கிறார். 2024 தேர்தலில் அவரை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்று சேருகிற வாய்ப்பு உருவாகியிருப்பதாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.

   அதே நேரம் மாநிலக்கட்சிகளுடைய அவசியம், முக்கியத்துவம் அறவே இல்லாமல் போனது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். மாநிலக்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரே கட்சியாக மாறாமல் மம்தா பானெர்ஜியை அல்லது வேறொரு'நபரை முன்னிறுத்துவதால் மட்டுமே, மத்தியில் பிஜேபியை எதிர்கொள்ள முடியாது என்பது நிதரிசனம்.

   Delete
 4. முதலில் சொல்லப்பட்டுள்ள - அடிப்படை நாகரிகம்...

  அது இன்னமும் இருக்கின்றதா!...

  ReplyDelete
  Replies
  1. தமிழக அரசியலில் அநாகரீகத்தை வளர்ந்துவிட்டது நீதிக்கட்சியும் அதன் வழித்தோன்றல்களும் தான் என்பது நினைவிருக்கிறதா துரை செல்வராஜூ சார்? நாடாவுக்குள் தேடிப்பார் என்று சட்டசபையிலேயே சொல்லமுடிந்தது அரசியல் நாகரீகம் இவர்களிடம் குற்றுயிரும் குலையுயிருமாகத் துடிக்கப்போகிறது என்பதன் அடையாளமாக இருக்கிறதே!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!