2021 தேர்தல் முடிவுகள்! மேற்கு வங்கம்! தமிழகம்!

மூன்றாவது முறையாக மம்தா பானெர்ஜிக்கு மேற்கு வங்க முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த கையோடு, ஆளுநர் வாழ்த்துத் தெரிவித்ததுடன் சில அறிவுரைகளையும் சேர்த்தே சொல்லியிருப்பது, இன்று முக்கியத்துவம் பெற்ற செய்தியாகி இருக்கிறது. மம்தா முகத்தில்  மாஸ்க் முகபாவத்தை வேண்டுமானால் மறைத்திருக்கலாம், உடல்மொழி தீதியைக் காட்டிக்  கொடுத்து விட்டதே! மேற்கு வங்கம்: சங்கடம் கொடுத்த ஆளுநர், பதிலடி கொடுத்த மமதா - பதவியேற்பு விழா தருணங்கள் என்று பிபிசி தமிழ் செய்திகள் தலைப்பில்  சொன்னாலும் அந்த பதிலடி என்ன என்று சொல்லவே இல்லை. தமிழ் ஊடகங்கள் என்று வந்துவிட்டாலே ஒரு மார்க்கமாகச் செய்தியைத் திரிப்பதில் பிபிசி மட்டும் விதிவிலக்காக இருக்குமா என்ன?! 


ஆளுநர் அறிவுரை வழங்குவது போல பேசிய அந்த சில நிமிடங்கள், தலையை நிமிர்ந்து பார்த்தபடி மமதா இருந்தார். பின்னர் பேசிய அவர், "நிச்சயமாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரி செய்வதே எனது முதன்மையான பணியாக இருக்கும்," என்று மமதா பதிலளித்தார். பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா, மாநிலத்தில் முதலில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பேன். அதன் பிறகு சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று தெரிவித்தார் என்று இரட்டை நாக்குடன் மம்தா பேசியதைச் சொன்னவர்கள், தலைப்பை மட்டும் விஷமத்தனமாக எப்படி வைத்தார்கள் என்று இங்கே யாரும் கேட்கப்போவதில்லை என்கிற தைரியம் தானே! 


என்னதான் ஊடகக்காரர்களும் மீடியாவும் தங்களுக்கு சாதகமானவர்களுக்காக வரிந்து கட்டினாலும், பேய்களை மோனோலிசாவாகச் சித்தரிப்பதில் தோற்றுக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதை அழகாக விளக்கும் படம் ஒன்றைப்பார்த்தேன். 


ஹிந்து ஆங்கில நாளிதழில் சுரேந்திரா வரைந்த இந்த கார்டூன் கூட மம்தாவை மோனோலிசாவாக சித்தரிக்க முயல்கிற ஒன்றுதான்! 


பிஜேபியின் S G சூர்யா மேலே உள்ளபடத்தைப் பகிர்ந்து ஒரு கேள்வி எழுப்புகிறார் ::: Can someone please explain me why is the #Congress Party celebrating 2021 Assembly Election results as a defeat of #BJP? While Congress lost a net 44 MLAs, BJP has gained 83 MLAs in these 5 states. I'm really puzzled at what the Congress is celebrating. Please help me understand. அது தான் சோனியா காங்கிரஸ்! அதுதான் இடதுசாரிகள்! மேற்கு வங்கத்தில் 2016 இல் வெற்றிபெற்ற இடங்களை சுத்தமாகக் கோட்டைவிட்டு பிஜேபியின் வெற்றியைத் தேக்கி நிறுத்தியதற்காக மம்தாவுக்கு வாழ்த்தும் சொல்வது அசல் ராகுல் காண்டித்தனம்! காங்கிரசுக்கு மட்டுமல்ல மோடி வெறுப்பில் பிழைப்பு நடத்தும் ஊடக நிறுவனங்களுக்கும் அதே வியாதிதான்!

முந்தைய பதிவில் காங்கிரசும் இடதுசாரிகளும் தங்கள் வாக்கு வங்கியை பிஜேபிக்கு எதிராக மடைமாற்றியது பற்றிச் சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா? அதே கருத்தை இன்றைக்குச் சொல்லியிருப்பது பெங்களூரு IIM இல் பேராசிரியர்! ஒரு பொது எதிரிக்கு எதிராக இதுமாதிரி அரசியல்கட்சிகள் செய்வது இங்கே  சர்வ சாதாரணம்!  


இது இந்தவாரம் வெளியான துக்ளக் அட்டைப்பட நையாண்டி!  ஈவெரா ஊட்டியதாகச் சொல்லப்படுகிற பகுத்தறிவு வளர்ந்து எந்த முட்டுச் சந்தில் நிற்கிறது என்பதை இதற்குமேல் எளிமையாக விளக்கிவிட முடியுமா என்ன? தேர்தல் முடிவுகளை இன்னமும் முழுமையாக analyse செய்யவில்லை. புள்ளிவிவரம் சொல்வதை cross check செய்த பிறகே, இங்கே கொஞ்சம் பேசலாம் என்றிருக்கிறேன்.   

  


இசுடாலின் நாளைமறுநாள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்க இருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. சொன்னதைச் செய்வோம்  செய்வதைச் சொல்வோம் என்பது திமுகவே மறந்து போன பழைய ஸ்லோகன். தேர்தல் வாக்குறுதிகள் மீறப்படுவதற்காகவே கொடுக்கப் படுபவை என்பது நம்மூர் அரசியல் இலக்கணம் என்பதால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. 


ஆனால் இன்று பார்த்த இந்தப்படம், இது  ஒன்றையாவது  செய்கிறாரா என்று ஆவலோடு எதிர்பார்க்க வைக்கிறதே!

மீண்டும் சந்திப்போம்.  
 

2 comments:

  1. இந்த திட்டங்களில் சில உண்மையிலேயே நல்ல திட்டங்கள் (குடும்பத்தலைவியருக்கு உதவித் தொகை / மாணவிகளுக்கு இலவச நாப்கின்). இந்த திட்டங்களுக்கெல்லாம் நிதி ஆதாரம் எங்கிருந்து வரும் என்று தெளிவு படுத்தினால் நல்லது.

    போக்குவரத்து துறையை எடுத்துக்கொண்டால் .. டிக்கெட் விலை குறைவாக இருக்கவேண்டும்.. மகளிருக்கு இலவசம்.. ஊழியர்களுக்கு போனஸ்.. ஒப்பந்த ஊழியர்கள் இருக்கக் கூடாது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம்.. பயணிக்கும் வாகனங்கள் நல்ல முறையில் பராமரிக்கப் பட வேண்டும்.. இது எல்லாவற்றிற்கும் ஆதாரம் நிதி. அது எங்கிருந்து வரும் என்பது புரியாத புதிர்!

    ReplyDelete
    Replies
    1. இங்கே இலவச மாயையை அறிமுகப்படுத்திய கழகங்களுக்கு நிதி எங்கிருந்து வரும் என்கிற கவலை இருக்குமா என்ன? கடன் வாங்கி ஊழல் என்பதுதான் நேர்மையான பதிலாக இருக்கும் பந்து! கடன் வாங்கி வளர்ச்சி என்பதான கீனிஷியன் தியரியை கடன்வாங்கியாவது இலவசங்கள் அதிலும் கணிசமாகக் காசுபார்ப்பது என்று மாற்றியவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும், சொல்லுங்கள்!

      நல்லவேளை நாப்கின் டயப்பர் மாற்றுவதைக்கூட இலவசசேவையாக அறிவித்து அதற்கும் பணியாளர்களை நியமிப்பது என்கிற கூத்து இதுவரை இல்லை, அவ்வளவு தான்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!