#அரசியல்இன்று கொஞ்சம் செய்தி! கொஞ்சம் விமரிசனம்!

மக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது தமிழக அரசியலின் நிகழ்நேரக் காமெடி!தானாக நடந்ததா அல்லது திரைமறைவில் வேறு எவருடைய இயக்கத்திலோ நடக்கிறதா என்ற கேள்விக்கு விடைதேடினீர்களானால் அது இன்னமும் தமாஷாக இருக்கும்! 


தற்போது கமலின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான தலைமை அலுவலக பொதுச் செயலாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகியுள்ளார். கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த சந்தோஷ்பாபு பதவி விலகியுள்ளது மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது சந்தோஷ் பாபுவைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் மதுரவாயல் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியாவும் விலகியுள்ளார் என இந்து தமிழ்திசை ஆதங்கத்தோடு செய்தி வெளியிடுகிற சாக்கில் உள்ளூர சந்தோஷப் படுகிறதோ? 
 
முகநூலில் ஹரன் பிரசன்னா தனியே அதகளம் செய்து கொண்டு இருக்கிறார்!! 

பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகியுள்ளதற்கு தனியே ஒரு களை எடுத்தல் கடிதம்‌ எழுத சோம்பலாக இருப்பதால், மகேந்திரனுக்கு எழுதிய கடிதத்தையே பத்மப்ரியா என்று திருத்தி வாசித்துக் கொள்ளவும்.
- மக்கள்‌ மாஜி மய்யம்

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவிப்பு. பத்து உறுப்பினர்கள் கட்சியில் இருந்து அம்பது பேர் விலகினால் எந்த ஒரு தலைவனும் ஆடிப் போக மாட்டானா? களையை எடுப்பது எளிதா கட்சியையே எடுப்பது எளிதா என்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும். - மக்கள் காலி மய்யம்.

எத்தனை பேர் விலகினாலும்‌ புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அத்தனை பேர் விலகவும்‌ சம‌ வாய்ப்பு தரப்படும்.- மக்கள் நாதியற்ற மய்யம்.

"பழ கருப்பையா இன்னும் விலகவில்லை என்றே நினைக்கிறேன். பழ கருப்பையா விலகல் என்று கூகிளில் தேடினால் 1,44,876 ரிசல்ட் வருவதால் உறுதி செய்ய முடியவில்லை' என்று மக்கள் பீதி கட்சித் தலைவர் ப்ளீஸ் ஹெல்ப் என்ற தலைப்பில் டிவிட்டரில் வெளியிட்டதைத் தொடர்ந்து பரபரப்பு கூடி உள்ளது.

நான் கட்சியில் இருந்து விலகேன் என்றுதான் போஸ்ட் செய்ய நினைத்தேன். ஆனால் எதோ நெட்‌ பிரச்சினையில் கட்சியில் இருந்து விலகுவேன் என்று போஸ்ட் ஆகிவிட்டது. அந்த ஸ்க்ரீன் ஷாட்டை வேண்டுமென்றே பரப்புகிறார்கள். கமலே‌ விலகினாலும் நான் விலகமாட்டேன். இது அவருக்கும் தெரியும்.
- கவிஞர் சி.நாகன்.


வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டு அருகிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகம்  செய்வதும் தொடக்கம். ஸ்டெர்லைட் போராளிகளைக் கண்டா வரச்சொல்லுங்க! பாடகன் கோவனை கையோடு கூட்டி வாருங்க! 


சாந்தினி தமிழரசன்! இப்படி ஒரு நடிகையை நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் துணிச்சலாக ஒரு கேள்வியை தமிழக அரசுக்கு முன்வைத்திருப்பதாக தினமணி செய்தி சொல்கிறது.


சினிமா படப்பிடிப்புகள் தவிர டிவி சீரியல் படப்பிடிப்பும் தங்குதடங்கல் இல்லாமல் நடைபெற்று வருவதில் விஜய் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பில் பங்கேற்ற பிரபலங்கள் சிலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட செய்தியை நீங்களும் படித்திருக்கக்கூடும்.

கொரோனா பரவலைத் தடுக்க வேண்டியவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்! பதில் கிடைக்காது என்பது மட்டுமல்ல .....!

மீண்டும் சந்திப்போம்.   



10 comments:

  1. மக்கள் காலியான மையம்!..
    நல்லதொரு நகைச்சுவை விருந்து...

    ReplyDelete
    Replies
    1. கமல் காசர் சினிமாவில் மாஜி ஹீரோ அரசியலில் எப்போதும் ஜீரோ என்பதை சிரித்துக் கொண்டேதான் சொல்ல வேண்டியிருக்கிறது துரை செல்வராஜூ சார்!

      Delete

      Delete
  2. சாருஹாசன், படித்துப் படித்துச் சொன்னதைக் கேட்காமல் கம்பெனி ஆரம்பித்தார் கமலதாசர். போணியாகலை. அவர், கடையை மூடுவதற்கு முன்பு வேலையாட்கள் கிளம்புகிறார்கள். கமல், படத்தில் நடிக்கப் போகலாம், மத்தவங்க என்ன செய்வாங்க? புதிய வேலை தேடுவார்களாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கெனவே படத்தில் போணி ஆகாததால்தான் இங்கு வந்தார்.  இனியும் படத்தில் அவரை யார் பார்க்க ரெடி?!

      Delete
    2. நெல்லைத்தமிழன் சார்! அன்னான் சாரு உளறலை எல்லாம் நம்புகிறீர்களா என்ன? கமலுடைய மொத்தக்குடும்பமும் கூடிப் பரமக்குடியில் கும்மியடித்த வீடியோக்கள் யூட்யூபில் இன்னமும் உலவுகின்றன. அதுதவிர அவருடைய கிறித்தவ ஊழியம் பற்றிய விவரங்களும்.

      கமல் கடையை இன்னமும் மூடவில்லை. ஒற்றை ஆளாக என்னத்தையோ நிரூபிக்கப் படாத பாடு படுவார் என்றே தோன்றுகிறது. தேவனுக்கு ஊழியம் செய்தால் காசு என்பது படுத்துகிற கோளாறு!

      Delete
    3. ஸ்ரீராம்! சினிமாவில் போணியாகாவிட்டால்தான் என்ன? மறுவாழ்வளிக்க விஜய் டிவி இருக்கவே இருக்கிறது! அவர்களும் கூட, இருக்கிற கொஞ்சநஞ்ச மவுசையும் சக்கையாகப் பிழிந்துவிட்டுத்தான் வெளியே அனுப்புவார்கள்!

      ஒரு கூத்தாடிக்கு அவ்வளவு போதாதா?

      Delete
    4. அதேதான் துரை செல்வராஜூ சார் தாடியும் உணமையில்லை கூத்தாடியும் உண்மையில்லை!

      Delete
    5. சங்கர், நல்ல காலத்திலேயே 100 கோடி வியாபாரம் இருந்தால், 125 கோடி செலவழித்து படத்தை முடித்துத் தருவார். இப்போ இந்தியன்2 என்ன பாடு படப் போகிறதோ.

      கமல், அவர் குடும்பத்தின் ஊழியம் தெரிந்ததுதான். இன்னும் நிறைய செய்திகள் சூர்யா-தாவூத்-ஜோதிகா லிங்க் என்றெல்லாம் வந்துகொண்டிருக்கின்றன. 2000 (அல்லது லட்சம்) கோடிக்கு மேல் ஹவாலா வருகிறது, 2 சதம் கமிஷன், இதில் மாட்டிக்கொண்டு விடுபடமுடியாததால் மதமாற்றம் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

      Delete
    6. நெல்லைத்தமிழன் சார்! சங்கர் - கமல் இருவரிடமும் மாட்டிக்கொண்டு தயாரிப்பு நிறுவனம்தான் படாத பாடெல்லாம் படுகிறதாம்! சொல்கிறார்கள்! கமலை வைத்துப் படம் பண்ணி நிம்மதியாக இருக்கிற தயாரிப்பாளர் இனிமேல்தான் பிறந்து வர வேண்டும்!

      சிவகுமார் வாரிசுகள் மீட்கமுடியாத அளவுக்குச் சிக்கிக் கொண்டு விட்டார்களோ?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!