இட்லி வடை பொங்கல்! #82 சோனியா காங்கிரஸ்! தியாகராஜன் who? கார்த்தி சீனாதானா!

மாமியார் தேய்ந்து கழுதை கழுதை தேய்ந்து கட்டெறும்பு அதுவும் தேய்ந்து கரையான் என்று தேய்ந்து கொண்டே போன கட்சி சோனியா நடத்தும் காங்கிரஸ் என்பதை இந்தப் பக்கங்களில் நீண்ட நாட்களாகவே சொல்லி வருவது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்! அரசியல் செய்யத் தெரியாத ஒரு கும்பல் நாசகாரக் குழுவாக மாறுவதை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சிதைந்ததில் மகஇக மாதிரியான சில்லறைகள் உருவானவிதம் ஏற்கெனெவே இங்கே அரங்கேறியிருக்கிறது.


காங்கிரஸ் டூல்கிட் சர்ச்சை விஷயத்தில்   கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த 24 நிமிட வீடியோவில் சோனியா காங்கிரஸ் ஒரு அபாயகரமான நிலைக்குப் போய்  விட்டதை, விவரிக்கிறார். கொஞ்சம் கவனமாகப் பார்த்து, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இதில் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன? The Print தளத்தின் சேகர் குப்தா சோனியா காங்கிரசுக்கு முட்டுக்கொடுக்கிற விதமே அலாதி!  தேசிய அளவில் பிஜேபிக்கு சவாலாக சோனியா காங்கிரஸ் மட்டுமே இருக்க முடியுமாம்!  சோனியாவுக்கு இது தெரியுமா? 

 

அஞ்சாநெஞ்சன் அழகிரி மட்டும் பழைய கெத்தோடு இருந்திருந்தால் சில்லறை எல்லாம் சிலுப்புகிற நிலைமை வந்திருக்குமா? திரு P தியாகராஜன். மதுரை மத்திய தொகுதியின் MLA . விதி வசத்தால் இன்று தமிழக அரசின் நிதியமைச்சராகவும் ஆகி இருப்பவர். நிதியமைச்சராக வந்து என்ன செய்யப் போகிறார் என்று பார்த்தால் ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சும். இத்தனை ஆணவம் loose talk எதற்கும் உதவாது. நேற்றைக்கு இசுடாலின் மதுரை விசிட்டில் அண்ணன் மு க அழகிரியைச்  சந்திக்கப்போவதாக, கண்கள் பனித்தன இதயம் இனித்தது என்கிற கருணாநிதி வசனம் இன்னொருமுறை அரங்கேறப்போகிறது என்று ஊடகங்களை பரபரக்கவிட்டு இசுடாலின் மதுரைக்கு வந்தார் மருத்துவமனைக்குப் போனார் ஆட்சியர் அலுவலகத்தில் ராஜீவ் காண்டி படத்துக்கு மாலை போட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி வாசித்த கையோடு திருச்சிக்குப் போய்விட்டார். மு க அழகிரி இன்னமும் அமைதி காத்துவருவதில், ஆளாளுக்கு ஒரு விதமான ஊகத்தை, கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 அன்று சகோதரர்களுடைய இணைப்பு இருக்கலாம் என்று ஊதிக் கொண்டிருக்கிறார்கள். விகடன் மட்டும் கொஞ்சும் வித்தியாசமாக ஊதல்  


கொரோனா பரவலைத்தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப் பட்டிருப்பதாக, இன்றும் நாளையும் தளர்வுகள், பேருந்து இயக்கம் என்ற விதவிதமான அறிவிப்புக்களில் தமிழக அரசும் அமைச்சர்களும் குழம்பி இருப்பது தெரிகிறதோ இல்லையோ திருவாளர் பொதுஜனம் குழம்பிக் கிடப்பது மேலே உள்ளட்வீட்டர் செய்தி தெளிவாகவே சொல்கிறது. அதைவிட பெரும் அதிசயம் கார்த்தி P சிதம்பரத்துடைய ட்வீட்டர் செய்தி.


கார்த்தியோ,  பானாசீனாவோ ஒரு சரியான கருத்தை இதுநாள்வரை இவ்வளவு தெளிவாகப் பேசியதே இல்லை. நேற்றைக்குக் கூட எழுவர் விடுதலை விஷயத்தில் இசுடாலின் குரியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில் உடன்பாடு இல்லை என்று பேசிய ஒரு வீடியோவையும் பார்த்தேன்.ஒரு தெளிவான கருத்தை சொன்னதற்காக  சபாஷ் கார்த்தி!

மீண்டும் சந்திப்போம்.   

2 comments:

 1. சிற்றரசர்கள் பிரிந்து தனி ஆவர்த்தனம் பண்ண ஆரம்பித்து பலப்பல வருடங்களாயிற்று. காங்கிரஸ் சாம்ராஜ்யம் விரைவான சரிவை நோக்கிச் செல்ல ஆரம்பித்து இருபது வருடங்களுக்குமேல் ஆகிறது.

  அதிமுகவை தேவையில்லாத்தற்கெல்லாம் கடுமையாக விமர்சித்த பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இப்போது பயந்துகொண்டு அல்லது ... காரணமாக பாசமழை பொழிகிறது.. அமைச்சர், கால்குடம் போலத் தெரிகிறது, அதிக சவுண்டு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. சோனியா காங்கிரஸ் என்றான பிறகும் கூட பழைய பெருங்காய டப்பா வாசனைக்கு ஓட்டுப்போடுகிற ஜனங்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே பெரும் வினோதம் நெல்லைத்தமிழன் சார்!

   இனியும் ஒரு அரசியல் கட்சியாக சோனியா காங்கிரஸ் தலையெடுப்பது குதிரைக் கொம்புதான் என்பதால் நாசகார சக்திகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

   திமுகவும் கூடத் தன்னுடைய கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது சிலருடைய நாற வாய் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!