மக்கள், நீதி, மய்யம்! பார்ட் பார்ட்டாகக் கழன்று போன கமல் காசர் கட்சி!

கோவை தெற்கு தொகுதியில் தோல்வியை சந்தித்த கமல் காசர் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டார் என இன்றைய நிகழ்வுகள் சொல்கின்றன.  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து டாக்டர் மகேந்திரன், பொன்ராஜ், சந்தோஷ்பாபு, மவுரியா, சி.கே.குமரவேல் என முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகியுள்ளனர். ` இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை' என விலகல் கடிதத்தில் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார் என்கிறது பிபிசி செய்தி. 


வீடியோ 35 நிமிடம். விஜய் டிவி மகேந்திரன் மற்றும் சுரேஷ் அய்யர் இருவரும் சேர்ந்து தொடங்கிய சங்கையா சொல்யூஷன்ஸ், கமல் காசர் கட்சிக்கு  ஆலோசனை சொல்கிற பொறுப்பை எடுத்துக் கொண்டதில் இருந்தே பிரச்சினைகள் எழுந்ததாக சிலகாலத்துக்கு முன்பே தகவல்கள் வெளியாகின. தங்களை மீறிக் கமலை வேறு எவரும் அணுக முடியாதபடி சங்கையா சொல்யூஷன்ஸ் சிறப்பாகச் செயல்பட்டதில் முதல் பலி திருமதி கமீலா  நாசர்! கமல் குடும்ப நண்பர் என்பதால் பிரச்சனைகளை வெளியே பேசாமல், அமைதியாக வெளியேறி விட்டார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த நான்கே நாட்களில் மக்கள்நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி இருப்பது கமல் காசருடைய  அரசியல் சாகசம், தலைமை  எப்படிப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.  



பொள்ளாச்சி மருத்துவர் மகேந்திரன் தனது 12 பக்க அறிக்கையில் கமல் காசருடைய தலைமையின் லட்சணத்தை மிக விரிவாகவே சொல்லியிருப்பதை ரங்கராஜ் பாண்டே மேலே வீடியோவில் தெளிவாகவே எடுத்துச் சொல்கிறார்.



முன்னதாக வந்த செய்தி க்கும் இன்றைய நிகழ்வுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? சுயேட்சைகளைத் தவிர்த்து ஐந்து முனைப்போட்டியாக நடந்து முடிந்த தேர்தலில் கமல் காசர் கட்சி+  ஐந்தாமிடத்தைத் தான் பெற்றிருக்கிறது என்பதில் பொன்ராஜ் சொன்னதுபோல தேமுதிக, சமக இருகட்சிகளுடன் கூட்டணி வைத்தது தான் என்பது உண்மையான காரணமல்ல. 


#Breaking || "களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்" கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே மகேந்திரனின் சாதனை மகேந்திரன் விலகியதில் மகிழ்ச்சி, இனி கட்சிக்கு ஏறுமுகம் தான் - கமல் #KamalHaasan | #MakkalNeedhiMaiam
Image

கமல் காசரும் அவரது மய்யமும் வெறும் பிக் பாஸ் ஷோ மட்டும்தான் என்றாகிப்போனதில் ஆச்சரியம் ஏதும் இல்லை! அரசியல் கட்சி நடத்துவது  வெறுமனே வசனம் பேசுவது மட்டும் இல்லை, அவ்வளவுதான்!

மீண்டும் சந்திப்போம

10 comments:

  1. எப்படியோ அக்கு வேறு ஆணி வேறாக அவர்களே பிரித்துப் போட்டு விட்டார்கள்... நல்லது...

    ReplyDelete
    Replies
    1. கமல் காசரின் சரிவு ஆரம்பமாகியிருக்கிறது என்பதுவரை சரி துரை செல்வராஜூ சார்! அவர்களே பிரித்துப் போடாவிட்டால்தான் எசெய்து ன்ன? ஆளும் கழகம் அதைச் செய்துவிடாதா? :-))))

      Delete
  2. கமல் கலைஞராகி வருகிறார்!

    ReplyDelete
    Replies
    1. மேடைக்கலைஞன் என்றால் அது சரிதான் ஸ்ரீராம்! அரசியல் அவதாரம் அல்லது அரிதாரம் கமலுக்கு செட்டாகவில்லை.

      Delete
  3. நல்ல முதலீட்டில் ஒரு தோல்விப் படம்.

    தயாரிப்பாளருக்குத்தானே நஷ்டம். நடிகர்களுக்கு நஷ்டம் இல்லையே

    ReplyDelete
    Replies
    1. தயாரிப்பாளர்களுக்குத் தொடர்தோல்விகளைக் கொடுப்பதில் கமல் காசர் மிகவும் கெட்டிக்காரர்! அரசியலிலும் அப்படியே! நம்பினவர்களுக்குத் தொடர் நஷ்டம் தான்!

      Delete
  4. கமலின் கட்சி இந்த தேர்தலில் ஓட்டை பிரிப்பதற்காக உருவானது என்று தோன்றுகிறது. மொத்தமாக ஒரு தொகையை கொடுத்து இந்த வேலையே கொடுத்திருப்பார்கள். அவரும் அந்த வேலையே முடித்து விட்டதால் கட்சி இனி நடக்கும் என்று தோன்றவில்லை. கமலை பொறுத்தவரை இது ஒரு நான்கு சினிமா விற்கு தேவையான நேரம். பெரிய அளவு வந்தால் ஆட்சி. இல்லையேல் வந்த வரை லாபம். அப்படித்தான் நடப்பவை காட்டுகிறது.

    அமெரிக்க அரசியலில் இது போல சில குழுக்கள் தேர்தல் சமயத்தில் தோன்றும். எல்லோரையும் குழப்பி அடித்துவிட்டு தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடும். அது போலத்தான் இதுவும்!

    ReplyDelete
    Replies
    1. ஜான் கெர்ரி தன் வியட்நாம் போர் அனுபவத்தை பெரிதாக முன்னுறுத்தி நடத்தியபோது திடீர் என்று Swift Boat Veterans For Truth என்ற குழு பெரிய அளவு பரபரப்பை உண்டாக்கி கெர்ரி அனுபவம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று பெரிதாக்கி அவரை ஒழித்தார்கள்.

      பிறகு அந்த குழுப்பற்றி எங்குமே எதுவுமே வரவில்லை!

      Delete
    2. //கமலின் கட்சி இந்த தேர்தலில் ஓட்டை பிரிப்பதற்காக உருவானது என்று தோன்றுகிறது.//

      இன்னுமா அதில் சந்தேகம், பந்து? கமல் அரசியலில் வெறும் spoil sport தான் என்பது ஆரம்பநாட்களிலிருந்தே தெரிந்த விஷயம்தான். யாருடைய நிம்மதியைக் கெடுக்கப் போகிறார் என்பதில் இப்படியும் அப்படியுமாக ஊகங்கள், சந்தேகங்கள் இருந்தன. தன்னை நம்பிவந்த சொந்தக்கட்சிக்காரர்களையே நம்பவைத்துக் கழுத்தறுத்த கதை இப்போது அந்த சந்தேகத்துக்கும் விடை கொடுத்திருக்கிறது.

      Delete
    3. அமெரிக்க டெமாக்ரட்டுகளுடைய அரசியலை நான் எப்போதுமே ரசித்ததில்லை, பந்து! அதுவும் ஒபாமாவுடைய வழவழா நிர்வாகத்தைப் பற்றி, அதில் அங்கம் வகித்து இன்றைக்கு ஜோ பைடன் நிர்வாகத்திலும் தொடர்கிற ஜான் கெரியைப் பற்றி ...! இஸ்ரேலி ரகசியங்களை ஈரானுக்குக் கடத்தினாரா என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவருடைய அரசியலை 2004 இல் டெமாக்ரட்டுகளே காலி செய்தார்கள் என்கிற விஷயம் கமலுக்குப் பொருந்துமா பந்து?

      சினிமா மார்க்கெட் இல்லாதநிலையில் விஜய் டிவிக்குள் Big Boss நிகழ்ச்சி நடத்த வந்து காசு, புகழ் வெளிச்சம் இரண்டையும் தக்கவைத்துக்கொள்ள முயற்சித்ததன் அடுத்தகட்டம் அரசியல் பிரவேசம்! அரசியலையும் முழுநேரத்தொழிலாக அல்லது ஆட்சியைப்பிடிக்கிற தொலைநோக்குப்பார்வையுடன் ஆரம்பித்த மாதிரித் தெரியவில்லை. இன்றைக்குக் காருண்யாவிடம் காருண்யம் வாங்கியவர் நாளை யார் யாரிடம் வாங்குவார் என்பதும் தெரியாது.

      நம்பியவர்கள் எப்படிப்போனால் அவருக்கென்ன?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!