ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் மு.டிவுகள் வெளியாகிக் கொண்டே வருவதில் மக்களுடைய சாய்ஸ் என்ன என்பதும் தெரிய வந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட அதிமுக்கியமாக தேர்தல் ஆணையத்தின் மீதும் EVM வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் எதிர்க்கட்சிகள் சுமத்திய பழிகள் அத்தனையும் பொய் என்பதும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நிரூபிக்கப்பட்ட பிறகும் தங்களது பொய்களுக்காக வருத்தம் தெரிவிக்கிற basic decency கூட இல்லாத ஜனநாயகத்தில் வாழ்கிறோம் என்பது பெருமைப்பட்டுக்கொள்கிற விஷயமா என்ன?
மம்தா பானெர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 3வது முறையாகவும் ஆட்சியைப்பிடித்திருக்கிறது என்பதை வங்காளத்தின் வெற்றியாக அறிவித்திருக்கிறார் மம்தா. ஆனால் நந்திகிராம் தொகுதி அவரைக் கைவிட்டு விட்டது. சுவேந்து அதிகாரியிடம் தோற்றுவிட்டதாக செய்திகள்! Trinamool Congress chief Mamata Banerjee lost to loyalist-turned-foe BJP candidate Suvendu Adhikari in Nandigram by a margin 1,960 votes. Earlier, there were reports that said Banerjee had defeated Adhikari.In what appears as admission of defeat, the West Bengal cheif minister said, "Let the Nandigram people give whatever verdict they want, I accept that. I don't mind." என்று மம்தாவே சொன்னதாக The Week செய்தி சொல்கிறது. TMC 214 இடங்களில் ஜெயித்திருக்கிறது. சித்திக்கியின் ISF வெறும் இரண்டே இடங்கள். BJP 75 இடங்களில் வெற்றி. காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துத் தங்கள் வாக்கு வங்கியை அப்படியே மம்தா பானெர்ஜிக்கு மாற்றி விட்டார்கள் போல! BJP 100 இடங்களைத் தாண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்குப் பெரிய ஏமாற்றமே! வெற்றி மிதப்பில் பிஜேபி அலுவலகங்களுக்குத் தீ வைப்பது முதலான அசகாய சாதனைகளை திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கி விட்டது.
அசாமில் பிஜேபி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று இருப்பதில் எரிச்சலோடு மேலே 3நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்!
கேரள அரசியல் சரித்திரத்தில் ஒருமுறை ஆட்சியமைத்த கூட்டணி இரண்டாவது முறையும் வெல்வதில்லை என்கிற நாற்பது ஐம்பது ஆண்டுகால வழக்கத்தை மாற்றி இன்னும் அதிகமான சீட்டுக்களுடன் (99) இடது முன்னணி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி மீதமுள்ள 41 இடங்களில் ஜெயித்திருக்கிறது. இங்கேயும் LDF UDF இரண்டும் ஒரு புரிந்துணர்வோடு பிஜேபி ஒரு இடத்தில் கூட ஜெயித்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மனோரமா ஆன்லைன் வீடியோவில் வெளிப்படையாகவே சொன்னார்கள். இந்த மூன்று மாநிலத்தேர்தல்களில் மட்டும் anti incumbency இல்லை என்று சொல்லப்படுவது வேடிக்கை தான்! எதற்கும் இந்தச் செய்தியை ஒருமுறை பார்த்து விடுங்கள்!
தமிழ்நாட்டில் எல்லோரும் பயமுறுத்திக் கொண்டிருந்த படியே திமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. ஆனாலும் அதிமுக+ வலிமையான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. பிஜேபி உள்ளே வந்துரும் என்று சொல்லிச் சொல்லியே பிஜேபியும் சட்டசபைக்குள் அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலின் சுவாரஸ்யமே முன்னெப்போதும் இல்லாத வகையில் நிறைய உதிரிக்கட்சிகள் காலியாகி இருக்கின்றன. அதிமுக செய்த கூட்டணிக் குளறுபடியில் வெளியேறிய தேமுதிக, சரத்குமாரின் சமக. டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் என்று பல சிறிய கட்சிகள் அடிவாங்கியிருக்கின்றன. அடிவாங்காமல் கூட்டணிக்குள் இருந்து தானும் கெட்டு அதிமுகவையும் கெடுத்த கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான்! வன்னியர் வாக்குகள் கைவிட்டுவிட்டன.அதுபோக ஜெ.வால் சமஉக்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி போன்ற சில்லறைகளை இம்முறை அதிமுக, திமுக இரண்டுதரப்புமே கண்டு கொள்ளவில்லை.
ஆனாலும் கட்டாயப்படுத்தி பிஜேபி கூட்டணி வைத்ததால் தான் அதிமுக இவ்வளவு சரிவைச் சந்தித்தது என்று கூவ திமுக, அதிமுக இரண்டு கழகங்களிலும் ஆட்களுக்கா பஞ்சமில்லை.
இது ஒரு முதற்கட்டப்பார்வைதான்! முடிவுகள் முழுதும் வெளியானபிறகு விரிவாகப்பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம்.
