தன்னையறியத் தனக்கொரு கேடில்லை!

 ஸ்ரீ அரவிந்த அன்னையே! உ ன் திருவடிகளை வணங்குகிறேன்.


[I+pray+to+thee+guide+copy.jpg]
தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்கம், பிறரிடம் பார்க்கும்போது கேலி, கண்டனத்துக்கு உரியதாகி விடுகிற வேடிக்கையைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை இப்படிச் சொல்கிறார்.

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறதுஉதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோஏதோ ஒன்று தவறாகவோஅல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம்அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால்அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோவியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!
 
அதே கேலிக்குரிய பழக்கம்தவறுஅல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போதுமிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம்.

நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல்அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்னஇவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!

ஆகநம்மிடம் இருக்கும் அழுக்குடன்அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதுயாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கைபேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போதுகேலி செய்யத் தோன்றும்போது, "என்னஅவர் அப்படி இருக்கிறாராஅப்படி நடந்து கொண்டாராஅப்படிச் சொன்னாராஅப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போதுஉங்களுக்குள்ளேயே சொல்லிப் பாருங்கள்!

நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயேஅப்படித் தான் செய்கிறேனோ என்னவோஅவரை விமரிசிப்பதற்கு முன்னால்என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு  "அதிர்ச்சியடையும் ஒவ்வொரு தடவையும்இதே மாதிரி நல்ல விதமாகவும்புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்நமக்குள் இருக்கும் அழுக்கு,பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால்அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாகமறைவாகஅல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்நம்மிடம் இருக்கும் குறை பெரிதாகதீமை இல்லாததாகத் தெரிவதுஅடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"

1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதிஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்என்ற ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்துஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி. அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21 
 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!