படங்களைப் பார்த்துக் கொண்டே வாருங்கள்! ஒவ்வொரு பெண்ணும் வாயைப் பெரிதாகத் திறந்து ஏதோ சொல்லவருகிற மாதிரி இல்லை?
ஒருவேளை ஜெயகாந்தனுக்கு எதிராக, மகளிர் அமைப்புக்கள் எல்லாம் சர்வதேச அளவில் ஆதரவைத் திரட்டி விட்டார்களா என்ன?
பயந்துபோய் விசாரிச்சப்புறம் தான் தெரிஞ்சது! தாய்க் குலங்கள் தும்மப் போறாங்களாம்! வேற ஒண்ணும் இல்லை!
எல்லோரும் நிம்மதியா அ'னா பிறந்தநாளைக் கொண்டாடிட்டு, காந்தி நல்லவேளையா அறுபத்திரண்டு வருஷத்துக்கு முன்னாலேயே போய்ச் சேர்ந்து விட்டார் என்பதற்காகவும் சந்தோஷப்பட்டு, நிம்மதியாத் தூங்குங்கள்!
2011 வரை டைம் இருக்கிறது! அதான் போஸ்டர் அடிச்சே சொல்லிட்டாங்கல்ல..!
படங்களுக்கு நன்றி இங்கே
செம காமெடி .
ReplyDeleteநல்லா இருக்கு - படங்களும், உங்க 'அ' கிண்டலும்
ReplyDeleteஹா ஹா ஹா ஹா. செம குறும்பு சார் நீங்க.
ReplyDeleteஅ'னா கிண்டலெல்லாம் இல்லை! செம குறும்பும் இல்லை!
ReplyDeleteஅப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை என்று அழகிரி புராணம் பேசும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைக் கேபிளில் பார்க்க நேர்ந்தது!
அப்பாவாவது, கொஞ்சம் பரவாயில்லை! வெல்லப் பிள்ளையாரில் கொஞ்சம் கிள்ளிப் பிள்ளையாருக்கே படைக்கிற மாதிரி, தனக்கு விருது கொடுப்பவ்ர்களுக்கு ஏதோ கொஞ்சம் கொடுக்கிற மாதிரித் தெரிகிறது.
இங்கே தப்பாமல் பிறந்த பிள்ளைக்கு முன்னால் வந்து தினந்தினம் புலவர்கள் இந்திரனே சந்திரனே எங்கள் வாழ்வே என்று போஸ்டர் அடித்து, துதிபாடி ஆரம்பித்தபிறகுதான் ஒவ்வொரு நாள் பொழுதையும் ஓட்ட முடிகிறது!
வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு, இந்த மனிதருக்கு எழுதக் கூடத் தெரிஊமா என்றே இத்தனை நாள் தெரியாமல் இருந்தது! "அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை" என்று அழகிரி புராணம் பாடி ஒரு புத்தகம் எழுதிஇருக்கிறாராம்!
அதன் வெளியீட்டு விழாவில் பேசிய மாண்புமிகு ஒருத்தர், எழுத்தாளர் ரத்தினவேலு எண்டு அழைக்க மனிதன் நெளிந்த நெளிப்பைக் காட்டினார்கள் பாருங்கள்!
மீனாக்ஷி மதுரை இப்போது ஐயோ பாவம் மதுரையாகி நிற்கிறது!
திருவிளையாடல் படத்தில் சிவாஜியும் AP நாகராஜனும் ரொம்ப அலட்டலாக வசனம் பேசி, நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றெல்லாம் பேசினது வெறும் வசனமாகப் பழங்கதையாகிபோய் விட்டதே என்ற ஆதங்கம் தான்!
படங்களைப் பார்த்து என்னமோ ஏதோ என்று பார்த்துக் கொண்டே வந்தேன்...
ReplyDeleteஅது சரி அந்த போஸ்டர்களை படம் எடுத்து போட்டிருக்கலாமே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஇத்தனை அவ்.வ். யாருக்கு?
ReplyDeleteபோஸ்டர் அடிச்சவுங்களுக்கா? மேலே படத்தில் போஸ் கொடுக்கிற பொண்ணுங்களுக்கா?
இல்லே, பதிவெழுதின, படம் காட்டின எனக்கா?
எதுவுமே சொல்லாமப் போனா எப்பூடி?!
:-))
எதோ கிளுகிளுப்பா சொல்லப்போறிங்கன்னு நினைச்சேன்!
ReplyDeleteகடைசியில் தும்மல்ல முடிச்சிடிங்களே அதுக்கு!
நேத்திக்குத் தும்மக் கூட மறந்து போயிருப்பீங்கன்னு நினைச்சுத் தான் அதை சாய்ஸில் விடலை!
ReplyDelete