எது பலிக்கும்? கைப்புள்ள வடிவேலு சொல்வதா? கருத்துக் கணிப்பு சொல்வதா?

ச்சரியத்திலும் பெரிய ஆச்சரியம் குடும்பத் தொல்லைக் காட்சி எதுவும் ஹெட்லைன்ஸ் டுடே-ஒ ஆர் ஜி நடத்திய கருத்துக் கணிப்பைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொண்ட மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை

னால், இன்றைக்குக் காலையில் காமெடியன் வடிவேலு முதலமைச்சரை சந்தித்தது மட்டும் தான் செய்தியாகவும், ஸ்க்ரோல் நியூசாகவும் ஓடிக் கொண்டிருந்தது.  

கருத்துக் கணிப்பை விட, காமெடியன் கணிப்பை மட்டுமே திமுக நம்புகிற மாதிரித்தான் தெரிகிறது!

போகிற போக்கில் ரஜனிகாந்த் படத்தில் இருந்து நீக்கப் பட்டதைப் பற்றியும் கேள்வி எழுந்தது. இந்த செய்தியைப் பாருங்கள்!

திமுக தலைவர் கலைஞரை, நடிகர் வடிவேலு 29.04.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு சொன்னது:

"
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்துக் கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும்"

கேள்வி: விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

தில்: ராணா  படம், கானா படம் எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப்படவில்லை. மே 13 ந் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும்.

கேள்வி: அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகின்றீர்களா?

தில்: பொறுத்து இருந்து பாருங்கள். கலைஞரிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும்" என்றார் வடிவேலு.

ந்த வீடியோவில் மாடு பிடிக்கப் போன வடிவேலு என்ன பாடு படுகிறார் என்பதைப் பாருங்கள்! படத்தில் மட்டும் தான் இந்தக் காமெடி என்று இருந்தவருக்கு வாழ்க்கையிலும் இது போலத்தான் என்றாகிவிடுமோ?டிவேலு ஜாதகம் அப்படி! நாம் என்ன செய்ய?!!


நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுத்தது என்பார்கள்! வடிவேலுவை  அவர்  வாயே கெடுத்தது என்றால் அதில் தவறேதுமில்லை! வடிவேலு கதை கிடக்கட்டும்!

கூத்தாடிகளிடம் அரசியலைக் கொடுத்துவிட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் பாருங்கள், நம்மைச் சொல்ல வேண்டும்!


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!