தேர்தல் களம் 2011--ஜெயிக்கப் போவது யாரு?


தினமணி நாளிதழில் இன்று வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்!

First Published : 01 Apr 2011 02:24:14 AM IST

Last Updated :

புதுதில்லி,மார்ச் 31: தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக - தேமுதிக - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - ஹெட் லைன்ஸ் டுடே - மெயில் டுடே - ஓஆர்ஜி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பும் அவுட் லுக் வார இதழும் எம்டிஆர்ஏ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பும் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆட்சியைப் பிடிக்கும், அசாமில் எந்தக் கட்சிக்கும் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை அடிப்படையாக வைத்தும், இப்போதைய பிரச்னைகள் தொடர்பாக சில கேள்விகளுக்கு வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையிலும் இந்தக் கணிப்பு நடைபெற்றுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், விலைவாசி உயர்வு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்கள் - அதிகாரிகள் நிலையில் காணப்படும் ஊழல் போன்ற காரணங்களால் திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதாக கருத்துக்கணிப்பில் பங்கு கொண்டவர்களில் பெருவாரியானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் 51% பேர் ஊழலை முக்கிய பிரச்னையாகக் கருதுகின்றனர். 34% பேர் அது பெரிய பிரச்னை இல்லை என்கின்றனர்.

முதல்வர் பதவிக்கு ஏற்றவர் ஜெயலலிதாவே என்று 37% பேரும் கருணாநிதியே என்று 34% பேரும் கருதுகின்றனர்.

கருணாநிதியின் அரசுதான் ஊழல் மிகுந்தது என்று 39% பேரும் ஜெயலலிதாவின் அரசுதான் ஊழல் அரசு என்று 21% பேரும் கூறினர்.
அலைக்கற்றை ஊழல் குறித்து தெரியும் என்று 51% பேரும், தெரியாது என்று 17% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அலைக்கற்றை ஊழலில் கருணாநிதி குடும்பத்தாருக்குத் தொடர்பு உள்ளது என்று 38% பேரும் இல்லையென்று 26% பேரும் நினைக்கின்றனர்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அந்த விவகாரத்தை சரியாகக் கையாள கருணாநிதி அரசு தவறிவிட்டது என்று 41% பேரும் சரியாகத்தான் கையாண்டது என்று 25% பேரும் கருதுகின்றனர். விலைவாசி உயர்வு தங்களை பாதிக்கும் பிரச்னை என்று 59% பேரும், இது முக்கிய பிரச்னையே இல்லை என்று 29% பேரும் கருத்து தெரிவித்தனர்.

2009 மக்களவை பொதுத் தேர்தலில் நடந்த வாக்குப்பதிவு அடிப்படையில் ஹெட்லைன்ஸ் டுடே ஓஆர்ஜியின் கருத்துக் கணிப்பு முடிவு வருமாறு:

2009 மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 37% வாக்குகள்தான் கிடைத்தன, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 43% வாக்குகள் கிடைத்தன.

இப்போது நடைபெறவுள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 50% வாக்குகளும் 164 தொகுதிகளும் கிடைக்கும்.

திமுக கூட்டணிக்கு 45% வாக்குகளும் 68 தொகுதிகளும் கிடைக்கும்.
மற்றவர்களுக்கு 5% வாக்குகளும் 2 தொகுதிகளும்தான் கிடைக்கும்.

மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு 44% வாக்குகளும் 182 சட்டப் பேரவைத் தொகுதிகளும் கிடைக்கும். மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு 43% வாக்குகளும் 101 தொகுதிகளும் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 11 தொகுதிகளும் கிடைக்கும்.

கேரளம்: கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 48% வாக்குகளும் 96 தொகுதிகளும் கிடைக்கும்.
மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு 40% வாக்குகளும் 41 தொகுதிகளும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 3 தொகுதிகளும்தான் கிடைக்கும்.

அசாம்: அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 32% வாக்குகளும் 46 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் கண பரிஷத் கட்சிக்கு 25% வாக்குகளும் 38 தொகுதிகளும்தான் கிடைக்கும்.

பாஜகவுக்கு 12% வாக்குகளும் 15 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 14% வாக்குகளும் 15 தொகுதிகளும் தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 16% வாக்குகளும் 12 தொகுதிகளும் கிடைக்கும். எனவே அசாமில் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அவுட்லுக் - எம்டிஆர்ஏ கணிப்பு: 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் - பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4% பேரும் அதிமுக -தேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54% பேரும் மற்ற கட்சிகள் அல்லது அணி ஆட்சிக்கு வரும் என்று 8.6% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேற்று வரை தாங்கள் தான் வெற்றி பெறுவோம், கலைஞர்தான் ஆறாவது முறையும் முதல்வர் என்றெல்லாம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த குடும்பத் தொல்லைக் காட்சிகள், இரண்டு வேறுபட்ட சர்வே முடிவுகளைப் பார்த்துவிட்டு, கருத்துக் கணிப்பெல்லாம் சரிவராது, பொய்யாகி விடும் என்று திரும்பத்திரும்பத் தங்களுக்கே ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டிய நிலை இன்றில் இருந்து ஆரம்பம்! சுவாரசியமாக இருக்கிறது! வாக்காளர்கள் மன நிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் வேட்பாளர்கள் தவிக்கிற தவிப்பு இருக்கிறதே, அம்மம்மா!இந்தத்தேர்தல் திருவிழாவில் வெகு வினோதமான சோகம்!


இலவசங்களால் ஜெயிப்போம் என்று திமுக அள்ளி விட்ட வாக்குறுதிகளை அதிமுக வெற்றிகரமாக முறியடித்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தை வில்லனாகச் சித்தரித்து அனுதாபம் தேட வேண்டிய நிலைக்குத் திமுக தள்ளப்பட்டு விட்டது. இது கலைஞருக்கு வாடிக்கையான ஒன்று தான் என்றாலும், இப்போதைய நிலைமை தலைகீழாக இருக்கிறது.  செய்தி இங்கே!


அ'னா பார்முலாவில் காசு கொடுத்தாலும், வாங்கிக் கொண்டு ஓட்டைப் போடுவார்களா என்பதில் சென்ற தேர்தல்களிலேயே நிறைய சந்தேகம் எழுந்தது. இந்தமுறை 234 தொகுதிகளிலும் அந்த பார்முலாவைக்  கடைப்பிடிக்க முடியுமா முடியாதா என்பதே தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும்போதே, தேர்தல் ஆணையம் ஒவ்வொரு நாளும் விதிக்கிற கெடுபிடிகளைத்  தாங்க முடியாமல் இப்படித் தனியாக மண்டபத்தில் புலம்பவிட்டு விட்டார்களே!


காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்!

பாட்டு ரெடியாக இருக்கிறது!மானம் கெட்ட தமிழன், சுரணை கெட்ட தமிழன் என்று தான் தோற்றபோதெல்லாம் தூற்றி வாரிய வார்த்தைகள் இருக்கின்றன! புள்ளிவிவரங்களைத்  திரித்து, தோற்றதற்கு சப்பைக்கட்டு சொல்வதற்கு ஏற்கெனெவே அனுபவம் நிறைய இருக்கிறது!



அப்புறம் என்ன, காங்கிரஸ் திமுக கூட்டணிக்குக் கம்பல்சரி ஓய்வு கொடுத்து விட வேண்டியதுதானே!

அப்படி செய்தால் மட்டுமே இந்த நாடு, மக்கள் பிழைத்திருக்க முடியும்!









3 comments:

  1. 2009 The Same India Today poll result said DMK willl will in 10 and ADMK in 30

    but the actual result was ADMK 11 and DMK 29 -total ulta...

    so dont get over excited..

    DMK will get more than 150 in reality

    ReplyDelete
  2. 2009 தேர்தலில் தோற்றவர் எப்படி ஜெயித்தவரானார் என்ற சிதம்பர ரகசியம் அறியாத அரசியல் தற்குறி நானில்லை!கருத்துக் கணிப்புக்களின் எல்லை எது, நம்பக்கூடியது எது என்பதும் மே 13 அன்று தெரிந்துவிடும் இல்லையா?

    நக்கீரன் கருத்துக் கணிப்பை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்கள் போல!அடுத்தமுறை பின்னூட்டம் எழுதும் பொது கொஞ்சம் சுய விவரத்தோடு எழுதுங்கள். அனானிகளை இந்தப்பக்கங்களில் பொருட்படுத்துவதில்லை.

    ReplyDelete
  3. இன்றுள்ள நிலையில் யாருக்கு உங்கள் வாக்கு என்ற வினாவிற்கு பதிலளித்தோரில் 48.6 விழுக்காடு வாக்காளர்கள் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான அணிக்கும் என்றும், 41.7 விழுக்காடு வாக்காளர்கள் தி.மு.க. தலைமையிலான அணிக்கே என்றும் கூறியுள்ளதாகவும், இன்னமும் 8.2 விழுக்காடு வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி முடிவு செய்யாமல் உள்ளனர் என்றும் மக்கள் ஆய்வக கணிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

    சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் துறையில் பணியாற்றிவரும் பேராசிரியர் இராஜநாயகம் மேற்பார்வையில் மார்ச் மாதம் 21 முதல் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் 117 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 3,171 பேரிடம் கள ஆய்வு நடத்தப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

    மின்வெட்டிற்கு முதலிடம்

    வாக்காளர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் மின் வெட்டிற்கே முதலிடம் கிடைத்துள்ளது. 25.2 விழுக்காடு வாக்காளர்கள் மின்வெட்டு முக்கிய பிரச்சனை என்றும், 14.2 விழுக்காட்டினர் விலைவாசியே முக்கிய பிரச்சனையென்றும், குடி தண்ணீர் 12.6%, போக்குவரத்து வசதி இல்லாதது 9.6%, பொது விநியோகம் சரியின்மை 8.5%, தொழில் வளர்ச்சி இல்லாதது 5.3%, மருத்துவ சுகாதார வசதியின்மை 5.1% ஆகியன அவர்களுடைய பிரச்சனைகளில் முன்னுரிமை பெற்றுள்ளன.

    தேர்தல் ஆணையத்திற்கு வரவேற்பு

    தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை தமிழக முதல்வர் ‘அவசர நிலை’க் காலத்தோடு ஒப்பிடுகையில் வாக்காளர்களில் 60.5 விழுக்காட்டினர் அது பாரபட்சமற்ற வகையில், பொறுப்புணர்வுடன் செயல்படுவதாகக் கூறியுள்ளனர். அது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறது என்று 24.7% கூறுகின்றனர்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!