சுனந்தா ஒரு கிறிஸ்த்மஸ் பார்டியில் ..!
நியாயமாக இதற்கு சுனந்தா புஷ்கர் என்று தான் தலைப்புக் கொடுத்திருக்க வேண்டும்! ஆனால் தலைக்கே தலைப்புக் கொடுத்த விஷயம் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று ஊகிக்க முடியாததால், இது சசி தரூர் பாகம் இரண்டு!
புனிதப் பசுக்களோடு ஒற்றுமையாக..! இப்போது தான் அர்த்தம் என்னவென்று புரிகிறது!
ஐபிஎல் கொச்சி அணியை உருவாக்குவதற்கு சசிதரூர் ரொம்பவுமே மெனக்கெட்டார்! கொச்சி அணியின் mentor என்று அவரை சொல்கிறார்கள்! ஏன் என்று இப்போது வெளி வரும் செய்திகளைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது.
கொச்சி ஐபிஎல் அணி பிரான்சைஸ் பெறுவதற்கு 1533 கோடி ரூபாய்கள் கொட்டப் பட்டிருக்கிறது! என்றைக்குமில்லாத திருநாளாக ட்விட்டர் பக்கம் போய்ப் பார்த்தபோது, லலித் மோடிக்கு கொச்சி ஐபில் அணி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது என்ற தகவலை சற்று நேரத்துக்கு முன் தான் படித்துத் தெரிந்து கொண்டேன்!
ஏனாம்?
இருந்து விட்டுப் போகட்டுமே என்கிறீர்களா?
இந்த சுனந்தா புஷ்கர் என்ற பெண்மணியைப் பற்றி எந்த விவரமும் தோண்டித் துருவி விசாரிக்க வேண்டாம் என்று ஒரு மத்திய அமைச்சரிடம் இருந்து ஐபிஎல் நிறுவனத்தை நடத்தும் அதிகாரிக்குத் தொலைபேசியில் சொல்லப் பட்டிருக்கிறது! அப்புறம் இந்தப் பெண்மணி மத்திய அமைச்சர் சசிதரூருக்கு "வேணுங்கப் பட்டவங்க" என்றும் சொல்லப் பட்டதாம்!
“I was told not to get into who owns Rendezvous, specially Sunanda Pushkar. Why?” wondered IPL chairman Lalit Modi on Twitter. The request has been minuted in the records of the meeting.
Media reports have said that Tharoor proposed to marry Sunanda Pushkar, a Kashmiri girl. Trained as a beautician, she runs a spa and has lived in Dubai.
இந்தச் செய்தி Rendezvous நிறுவனத்தின் கூட்டாளிகள் யார் யார், பிரான்சைஸ் உரிமையாளர்கள் யார் என்பதை லலித் மோடி டிவிட்டரில் சொன்னதை இப்படிப் பட்டியல் இடுகிறது!
Sunanda Pushkar, a friend of union minister Sashi Tharoor holds 18% free equity in Rendezvous Sport Limited, Narendra Modi Tweeted “I was told not to get into who owns Rendezvous, specially Sunanda Pushkar. Why?” IPL chairman Lalit Modi had tweeted on Twitter reports DNA
Lalit modi has named the stake holders in Kerala IPL team.
The complete list of partners of IPL Kerala team as per reports are Rendezvous (25% free), Rendezvous (1% purchased), Anchor (27%), Parinee (26%), Film Waves (12%), Anand Shyam (8%) and Vivek Venugopal (1%). Rendezvous free equity is held by Kisan, Shailender and Pushpa Gaikwad, Sunanda Pushkar, Puja Gulathi, Jayant Kotalwar, Vishnu Prasad, Sundip Agarwal.
வாயைப் பிளந்து நல்லா வேடிக்கை பாருங்க! கட்டியிருக்கும் துணியும் கூடக் காணாமப் போகும்!
கிரிக்கெட் சூதாடிகளுக்குப் பின்னால், துபாயும் இருப்பது தெரிந்தது தானே!
இந்தச் செய்தியின் தற்போதைய நிலை! அப்டேட்! 13/04/2010 12.15PM
இங்கே சசி தரூருக்குக் கிளம்பியிருக்கும் புதுத் தலைவலியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்!
சசி தரூர், எல்லா அரசியல்வாதிகளையும் போல, தன் மீது சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களையும் மறுத்து இன்றைக்கு ஒரு அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இங்கே பார்க்கலாம்!
இதிலும் கூட முக்கியமாக இரண்டு விஷயங்கள், அந்த அறிக்கையின் வார்த்தைகளுக்கு நடுவே தெளிவாக வெளிப்படுகிறது.
Rendezvous Sports World என்ற அமைப்பு, ஐபிஎல் கொச்சி அணியின் பிரான்சைஸ் உரிமையாளர்களில் ஒன்று! 1533 கோடி ரூபாய் முதலீடு செய்து பிரான்சைஸ் உரிமைய வாங்கியவர்களில் இருபத்தைந்து சதவீதப் பங்கை வைத்திருக்கும் ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம்! அதில் பதினெட்டு சதவீதம் பங்கு, சுனந்தாவுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டதாம்!
ஒன்று சுனந்தா புஷ்கருடனான உறவு குறித்து. அதைத் தன் சொந்த விஷயம் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார். இரண்டு தனி நபர்களுக்கிடையேயான உறவு சொந்த விஷயம் தான்! யாரும் மறுக்கவில்லை. அதே நேரம், அந்த நபர்களில் ஒருவர் மத்திய அமைச்சராகவும், இன்னொருவர் ஒரு வணிக பேரத்தில் சம்பந்தப் பட்டவராகவும் இருக்கும்போது, அமைச்சர் அந்த பேரத்தில் காட்டிய அதீத அக்கறை! அதைத் தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு, பொது வாழ்வில் இருக்கும் ஒருவருக்குத் தார்மீகமான கடமையாகவும் இருக்கிறது.
இரண்டாவதாக, லலித் மோடியுடன் சனிக்கிழமை பேசியதை அமைச்சரால் மறுக்க முடியவில்லை. அதற்கு வேறு மாதிரியான சப்பைக் கட்டு கட்ட முயற்சித்திருக்கிறார் என்றே கருத இடம் இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இங்கே இந்திய அரசின் ராணுவ ரகசியங்கள் சீன ஹாக்கர்களால் களவாடப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி வெளி நாட்டு நிறுவனங்களால் வெளியிடப்பட்டு இங்கேயும் செய்திகளாக வந்தது தான். இதிலும் கூட முக்கியமாக இரண்டு விஷயங்கள், அந்த அறிக்கையின் வார்த்தைகளுக்கு நடுவே தெளிவாக வெளிப்படுகிறது.
Rendezvous Sports World என்ற அமைப்பு, ஐபிஎல் கொச்சி அணியின் பிரான்சைஸ் உரிமையாளர்களில் ஒன்று! 1533 கோடி ரூபாய் முதலீடு செய்து பிரான்சைஸ் உரிமைய வாங்கியவர்களில் இருபத்தைந்து சதவீதப் பங்கை வைத்திருக்கும் ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம்! அதில் பதினெட்டு சதவீதம் பங்கு, சுனந்தாவுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டதாம்!
ஒன்று சுனந்தா புஷ்கருடனான உறவு குறித்து. அதைத் தன் சொந்த விஷயம் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார். இரண்டு தனி நபர்களுக்கிடையேயான உறவு சொந்த விஷயம் தான்! யாரும் மறுக்கவில்லை. அதே நேரம், அந்த நபர்களில் ஒருவர் மத்திய அமைச்சராகவும், இன்னொருவர் ஒரு வணிக பேரத்தில் சம்பந்தப் பட்டவராகவும் இருக்கும்போது, அமைச்சர் அந்த பேரத்தில் காட்டிய அதீத அக்கறை! அதைத் தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு, பொது வாழ்வில் இருக்கும் ஒருவருக்குத் தார்மீகமான கடமையாகவும் இருக்கிறது.
இரண்டாவதாக, லலித் மோடியுடன் சனிக்கிழமை பேசியதை அமைச்சரால் மறுக்க முடியவில்லை. அதற்கு வேறு மாதிரியான சப்பைக் கட்டு கட்ட முயற்சித்திருக்கிறார் என்றே கருத இடம் இருக்கிறது.
கொச்சி ஐபிஎல் அணி பிரான்சைஸ் பெறுவதற்கு 1533 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டிருக்கிறது என்ற நிலையில், அதன் உரிமையாளர்கள் யார் எவர் என்று தகவலை வெளியிட்டதற்காக, லலித் மோடிக்கு வக்கீல் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிறதே, அது ஏன்?
ராணுவ ரகசியத்தை விட, ஒரு வியாபாரத்தின் உரிமையாளர் பற்றிய தகவல் அவ்வளவு பெரிய ரகசியமா?
இந்த விவகாரத்தை டிவிட்டரில் லலித் மோடி சொன்னபோது அவருக்கு அங்கே வந்து பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ஒருத்தர், இதே மாதிரி, ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்கள் யார் எவர் என்பதையும் வெளியிடுவாரா என்று கேட்டிருக்கிறாரே, அதுவும் ஏன்?
கிரிக்கெட் சூதாடிகளின் கைகளில் சிக்கி இருக்கிறதென்பதற்கு இதை விட வேறென்ன prima facie வேண்டும்? ராணுவ ரகசியத்தை விட, ஒரு வியாபாரத்தின் உரிமையாளர் பற்றிய தகவல் அவ்வளவு பெரிய ரகசியமா?