Showing posts with label குடியுரிமைச் சட்டத் திருத்தம். Show all posts
Showing posts with label குடியுரிமைச் சட்டத் திருத்தம். Show all posts

இட்லி வடை பொங்கல்! #55 குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பது!

குடியுரிமைச் சட்டத்திருத்தம், NRC, NPR இந்த மூன்று விஷயங்களையும் போட்டுக் குழப்பி   எதிர்க்கட்சிகள் ஒரு கலகத்தீயை மூட்டியிருக்கிறார்கள். குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக எந்த அளவு வன்முறை, விஷமப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதற்கு திருமாவளவன் உணர்ச்சி கொப்பளிக்கப் பேசும் இந்த 23 நிமிட வீடியோவே    நல்ல உதாரணம்.


ஆனாலும் கூட அவரை அறியாமலேயே ஒரு உண்மையை சொல்வதைக் கவனிக்க முடிகிறதா? குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை விளக்கி அமித் ஷா பேசும்போது எந்தக்காரணத்தை முன்னிட்டும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாகக் குடியேறிய முஸ்லிம்களுக்கு குடியுரிமை தர முடியாது என்று வன்மத்தோடு சொன்னாராம்! அதனால் என்ன? இங்கே வாழும் முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிற மாதிரி இருக்கிறது திருமா பேச்சு. அடுத்ததாக சொல்கிற இன்னொரு புரட்டு அரசியல் சாசனத்தின் முகவுரையில் சொல்லப்பட்ட செகுலர் என்ற வார்த்தையை உயிரற்றதாகச் செய்ய முயற்சி என்பது. அரசியல் சாசனத்தின் Preamble இல் 1976 இல் எமெர்ஜென்சி தருணத்தில் இந்திரா காண்டி செய்த 42வது திருத்த        இடைச் செருகலில் தான் Secular, Socialist, Integrity என்ற மூன்று வார்த்தைகள் உள்ளே புகுந்தன. இந்தத் திருத்தத்தை மினி கான்ஸ்டிடியூஷன் என்று கிண்டலாக அழைக்கப்பட்டது என்பதை அந்த நாட்களில் நேரடியாகப் பார்த்தவன் நான். The words 'Socialist and Secular' were inserted by the 42nd amendment in 1976. The same amendment contributed to the changes of the words unity of the nation into unity and integrity of the nation. The significance of the preamble of the Indian Constitution lies in the 'We the People'.  இது சுருக்கம். அடுத்து வந்த ஜனதாக்கட்சி கொண்டுவந்த 43 வது திருத்தம், 42வது திருத்தத்தை ரத்து செய்து முகவுரையை  எமெர்ஜென்சிக்கு முன்னாலிருந்த பழைய நிலைக்கே திருப்பியது.அதன்படி பார்த்தால் இடைச்செருகல் எதுவுமில்லாத ஒரிஜினல் நிலை. ஆனால் குறிப்பிட்டு அந்த வார்த்தைகளை நீக்குகிறோம் என்று தனியாகச் சொல்லவில்லை. 


பிஜேபியின் கூட்டாளிகளும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் அவரவர் அரசியல் ஆதாயத்துக்காக எப்படிப் பிரிந்து நிற்கிறார்கள் என்பதை சேகர் குப்தா இந்த 20 நிமிட வீடியோவில் கொஞ்சம் சொல்வதைக் கேளுங்கள். பிஜேபிக்கு எப்படியாவது அணைபோட்டு விடவேண்டுமென்கிற தவிப்பு, இப்போது அங்கங்கே கலவரங்களாகப் பற்றிக் கொண்டு எரிகிறது.

  
பிரச்சினையை பிஜேபி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. வாருங்கள்! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சோனியா, மற்றும் வாரிசை நீதிமன்றப்படிகளில் ஏறவைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். ஜாமீன் கிடைத்ததே சுப்ரமணியன் சுவாமியைத் தோற்கடித்த மாதிரித்தான் என்று காங்கிரஸ் தரப்பு அற்ப சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருப்பதை விட  ராஜ்தீப் சர்தேசாய் குதிப்பது அதிகமாக இருக்கிற நிகழ்நேரக் காமெடியை அனுபவிக்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.       

      

திரும்பத் திரும்ப சுற்றி வருவது ஒரே விஷயம் தான்!

பிஜேபிக்கு எதிரான போராட்டக்களமாக குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. ஒரு ஜனநாயகப்பூர்வமான உரையாடலை நாடாளு மன்றத்திலோ வெளியிலோ நடத்தத் திராணியில்லாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இந்த விஷயம் நல்லவாய்ப்பாகக் கிடைத்துவிட்டது என்பதற்கு மேல் உப்புப்பெறாத விஷயம் இது.


கமல் காசர் திமுகவோடு கைகோர்த்திருப்பது தான் இந்த 45 நிமிட விவாதத்தின் பேசுபொருள். ஏதோ ஒன்றை புதிதாக மிக்ஸ் செய்கிற பாவனையில் தான்   சேனல்கள் தங்களுடைய அஜெண்டா, பிழைப்பை ஓட்டியாகவேண்டியிருக்கிறது. எனக்கு கமல் காசர் மாதிரி திடீர் சுயம்புகள் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லையென்றாலும் இந்த விவாதத்தைக் கவனித்ததற்கு முக்கியமான காரணம் நெறியாளர் தம்பி தமிழரசன் பங்கேற்பாளர்களிடம் கேள்வியைக் கேட்டுவிட்டு இடையே குறுக்கிடாமல் பதிலைப் பெற்ற விதம் ஒன்று! இசுடாலினுடைய போதாத காலம், கமல் காசரை எல்லாம் வலியப்போய்க் கூப்பிட்டு கைகோர்க்க வேண்டியிருக்கிறதே என்பது மற்றொன்று. இந்த மாதிரி ஏதோ ஒரு சாக்கில் ஒருவருக்கு ஒருவர் முதுகு சொறிந்துகொள்கிற தந்திரம் எல்லாம் அரதப்பழசு! வேண்டுமானால் united front tactics, George Dimitrov என்று தேடிப்பாருங்கள். கற்றுக் கொடுத்த கம்யூனிஸ்டுகள் என்ன நிலையில் இன்றைக்கு இருக்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! 

        
   
குடியுரிமை பற்றி காங்கிரசின் நிலைபாடு நேற்றைய நாட்களில் என்னவாக இருந்தது, இன்றைக்கு எதற்காக எதிர்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விசேஷமான அரசியல் ஞானம் எல்லாம் வேண்டியதே இல்லை. இந்த 10 நிமிட வீடியோவைப் பார்த்தாலே போதும். சிறுமதி படைத்தவர்களுக்கு கலகம் செய்வதற்கு ஏதோ காரணம் கிடைத்தால் போதாதா?


வரலாற்றுப் புத்தகங்கள் எழுதிக் கிடைக்காத புகழ் வெளிச்சம் ராமச்சந்திர குகாவுக்கு நேற்று 144 தடையை மீறிப் பரப்புரை செய்ய முயன்றதில் கிடைத்திருப்பது ஒரு வினோதம் என்றால் இந்த மேதாவிக்கு எங்கேயும் எதிலும் நரேந்திரமோடியும் அமித் ஷாவும் தோன்றிப் பயமுறுத்திக் கொண்டிருப்பது போலப் பீலா விட்டுக் கொண்டிருப்பது இன்னொரு வினோதம்! உசுப்பிவிடுவது ராஜ்தீப் சர்தேசாய் என்பதில் வினோதம் எதுவுமில்லை. கொல்கொத்தா டெலிகிராப் பத்திரிகையில் எழுதிக் கிழிப்பதற்கு குகாவுக்கு ஒரு விஷயம் கிடைத்து விட்டது.

   
இசுடாலின் ஒரு போராட்டத்தை சும்மாவா அறிவிப்பு செய்திருக்கிறார்? மாரிதாஸ் கொஞ்சம் விவரங்கள் சொல்கிறார். வீடியோ 18 நிமிடம்.

மீண்டும் சந்திப்போம்.      
     

குடியுரிமைச் சட்டத் திருத்தமும் வாக்குவங்கி அரசியலும்!

மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துபேச ஆரம்பித்தபோது பல எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அரைகுறை மீறி நடந்து கொண்டதில்  அவைத்தலைவர் உத்தரவின் பேரில் நேரடி ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு அவை ஒழுங்குக்கு வந்தபிறகு மீண்டும் தொடங்கியது என்ற செய்தி, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர் எவரையும் தலைகுனியச் செய்கிற ஒன்று. உளறுவாயர் கபில் சிபல் பேச ஆரம்பித்தவுடன் ராஜ்யசபா நேரலையை நிறுத்திவிட்டு, வேறு செய்திகள், காணொளிகள் என்று பார்க்க ஆரம்பித்ததில் இந்த 38 நிமிட காணொளி கிடைத்தது.


2008 ஜனவரியில் நடந்த துக்ளக் இதழின் 38வது வருடக் கூட்ட நிகழ்வின் முதற்பகுதி இது. இதன் முதல் பத்துப் பன்னிரண்டு நிமிடங்களைக் கவனித்தீர்கள் என்றால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்! இன்றைய நடப்போடு 11 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியது எந்த அளவுக்குப் பொருந்திப் போகிறது என்பதைப் பார்க்கும் போது சோ அவர்களுக்கிருந்த தொலைநோக்குப்பார்வை தெளிவான கருத்துக்கள் என்று ஒவ்வொன்றையும் பார்த்து மிகவும் வியந்து போனேன். #GoBackModi என்ற அசிங்கத்தை 2008 இலேயே இங்கே ஆரம்பித்து விட்ட விஷயம் கூட! சோ அதைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேளுங்களேன்!  இங்கே சட்ட விரோதமாகக் குடியேறுகிறவர்கள் பற்றி  பிஜேபி, அந்த நாட்களிலேயே என்ன கருத்தை கொண்டிருந்தார்கள் என்பது ஏற்கெனெவே தெரிந்த விஷயம் என்பதால், இன்றைக்கு குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் குறித்து எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. தவிர இந்த மசோதா கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப் பட்டபோது எதிர்க்கட்சிகளின் ரகளை காரணமாகத் திரும்பப்பெறப்பட்டது. ஆக இது ஒன்றும் புதிதாகக் கொண்டு வரப்பட்ட விஷயமல்ல. எதிர்க்கட்சிகள் அமளிதுமளியில் இறங்குவதற்கு வாக்குவங்கி அரசியலைத் தவிர வேறு உண்மையான காரணம் எதுவுமில்லை. 

மக்களை பிரிக்கும் இத்தகைய மசோதா ..இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இதற்கு எதிராக நாங்கள் அனைத்து தளங்களிலும் போராடுவோம் - எச்சூரி
கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய ரத்த வரலாறுகளில் ஒன்றான 1978 மாரீச்சபி படுகொலைகளை..இந்நாட்டின் யெச்சூரிகளுக்கு நினைவூட்ட வேண்டிய தருணம் இது !
பங்களாதேஷிலிருந்து மாற்று மத அடக்குமுறையின் காரணமாக அடைக்கலம் கேட்டு மேற்கு வங்காள மாநிலத்திற்கு தப்பித்து வந்த ஹிந்துக்களை ..தண்டகாருண்ய காட்டுப் பகுதிகளில் அடைத்து வைத்ததும், மாரீச்சபி தீவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு குடிநீர் , உணவு போவதை தடுத்து நிறுத்தி பலரை சாகடித்ததும், அதன் பின்னரும் துப்பாக்கி சூடு நடத்தி பல நூறு பேரை கொன்று குவித்ததும்..என்று கம்யுனிஸ்டுகளின் மேற்குவங்காள ஆட்சி அதிகார கொடூரங்கள் மிக மிக அதிகம்.
வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள்..ஆட்சி அதிகாரம் கிடைத்த போதெல்லாம்..கொடும் ஹிட்லர்களாக மாறி.. மக்களை சொல்லொணா துயரத்திற்கும், படுகொலைகளுக்கும், பஞ்சம்- பட்டினி சாவுகளுக்கும் ஆளாக்கியது தான் உலக வரலாறு முழுவதும் பதிந்திருக்கும் உண்மைகள்.


தானே சட்டமும் நீதிபதியாகவும் தீர்ப்பாகவும் இருப்பதான மிதப்பில் பானாசீனா என்னென்னவோ சொல்கிறார் என்கிற ஒன்றே போதாதா இந்தச் சட்டத் திருத்தம் நியாயமானதுதான் என்று முடிவு செய்ய? அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் கலவரம் தூண்டப்  படுவதில் ராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபா விவாதத்துக்குப் பதிலளித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார். அடுத்து வாக்கெடுப்பு இன்றே நடந்துவிடும் என்றுதான் தெரிகிறது. 

                                                          நேரடி ஒளிபரப்பு

இந்திய ஜனநாயக நடைமுறைகளில் கோளாறுகள் குறைபாடுகள் இருக்கலாம். ஆனாலும் இன்னமும் கூட நம்பிக்கை இருக்கிறது .

மீண்டும் சந்திப்போம்.                                                          

வாக்கெடுப்பில் வெளிநடப்பு! தனித்துவிடப்பட்ட காங்கிரஸ்!

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் சுமார் 12 மணிநேர விவாதத்துக்குப் பிறகு நேற்றிரவே நிறைவேற்றப்பட்டு விட்டது. மக்களவையில் ஆதரித்து வாக்களித்த சிவசேனா காங்கிரசின்  எதிர்ப்புக்குப் பிறகோ என்னவோ, சிலவிஷயங்களைத் தெளிவு படுத்தினாலொழிய மாநிலங்களவையில் ஆதரிக்க மாட்டோம் என்று காமெடி செய்திருக்கிறது. இதில் சிவசேனாவுக்கு ராஜ்யசபாவில் வெறும் மூன்றே உறுப்பினர்கள் என்பதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். கட்சிவாரியான பலம் முழுப்பட்டியல் இங்கே.   


காங்கிரஸ் பெருந்தலைகளுக்குக் கிறுக்குப் பிடித்து விட்டதோ இல்லையோ, சார்புநிலையெடுக்கும் சதீஷ் ஆசார்யா போன்ற கார்டூனிஸ்டுகளுடைய தூரிகைக்குப் பிடித்துவிட்ட மாதிரித்தான் தெரிகிறது.


விவரங்கள் வேண்டும்
நேற்று பின்னிரவு மக்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா ஆதரவு 311, எதிர்ப்பு 80 என்று வாக்கெடுப்பில் நிறைவேறியது என நாளிதழ் செய்திகள் கூறுகின்றன (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
மக்களவையில் பாஜகவின் பலம், 302 (சபாநாயகர் நீங்கலாக) அதன் கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும் சேர்த்தால் 358
எதிரணியில்,(உதிரி கட்சிகளைச் சேர்க்காமல்) 129
இரு தரப்பிலும் அவர்களின் பலத்திற்குக் குறைவாக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன
என் கேள்விகள்:
1. கட்சிகள் கொறடா ஆணை ஏதும் பிறப்பிக்கவில்லையா?
2.ஆளும் கட்சிக் கூட்டணியில் இருந்து கொண்டு வாக்களிக்காதவர்கள் யார், யார்? (உதாரணமாக அதிமுக அன்று நாள் முழுவதும் நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை)
3.எதிர்கட்சிகளில் வாக்களிக்காதோர் யார். யார்?
4. எல்லாக் கட்சிகளிலும் உள்ள எல்லா உறுப்பினர்களும் வாக்களித்தார்களா? (அல்லது, பின்னிரவு நேரம் என்பதால் குளிர் நிலவும் தில்லியில் உறங்கப் போய்விட்டார்களா?) அப்படியானால் வாக்களிக்கும் நேரத்தில் அவைக்கு வராதோர் யார்? அவர்கள் எந்தக் கட்சி?
வாக்கெடுப்பின் போது மக்களவையில் இருந்த உறுப்பினர்களோ, செய்தியாளர்களோ விவரங்கள் தர இயலுமா?
சிவசேனாவை விடுங்கள்! இங்கே கடுமையான எதிர்ப்பு என்பது உதட்டளவில் மட்டுமே வாக்கெடுப்பில் அல்ல! காங்கிரசின் நிலைமைதான் மிகவும் பரிதாபம்! எதிலும் ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமலும், எதிர்க் கட்சிகளின் ஆதரவைப்பெற முடியாமலும் முட்டுச் சந்தில் தனித்து விடப்பட்டிருக்கிறது.

   
ஏண்ணே வீராவேசமா பேசிட்டு, வாக்கெடுப்புல கலந்துக்காம, எல்லாரும் ஓட்டு போடாம வெளி நடப்பு செஞ்சீங்க ?
தம்பி...நம்மாளுக பாதி பேருக்கு 6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது. சரக்கடிக்க விடாம அவனுகள அவ்வளவு நேரம் பிடிச்சு வெச்சதே பெரிய விஷயம்.
ஜோதிமணி குறட்டைக்கு பதில் சொல்ற மாதிரி தமிழச்சி 8 மணிக்கே குறட்டை விட்டு எசப்பாட்டு பாடுது. எழுப்பிவிட்டா டச்சப் செய்ய மேக்கப் மேன பாராளுமன்றத்துக்குள்ளயே கூப்பிடுது. அந்த நாதாரிப்பய வாங்குற 200 ரூபாய் பேட்டாக்கு நல்லா சோலி பாக்குறான் தம்பி.
சொல்றான்...அவ்வ்வ்...அக்கா இந்த நாலு A 4 பேப்பபர கைல வெச்சுகிட்டு கோபமா போஸ் குடுங்கன்னு சொல்லி போட்டோ எடுக்குறான் தம்பி...
சுத்தி கேமரா வேற இருக்கு. கழக மானம் போகக்கூடாதுன்னு கெளம்பிட்டோம்.


மதன் ரவிச்சந்திரன் தனது பரிவாரங்களோடு விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார் இப்போது.

மீண்டும் சந்திப்போம்.