ஆ.ராசாவுக்கு உலக மகா ஊழல் அங்கீகாரம்!

மு.கருணாநிதியின்  "இளைஞன்" உலக சாதனை செய்திருக்கிறார்! நிஜமாக!

ஆ.ராசாவுக்குக் கிடைத்திருக்கும் இந்த சர்வதேச அங்கீகாரம் உண்மையில், கலைஞருக்கே உண்மையில் போய்ச் சேர வேண்டியது! டைம் பத்திரிகைக்கு, உளியின் ஓசையில் இந்த சாதனையைச் செதுக்கியவரைப் பற்றித் தெரியவில்லை! செதுக்கப்பட்ட சிலைக்குப் போய், Hall of Shame பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தந்திருக்கிறார்கள்!அறியாதவர்கள்!!


1923 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்த அரசியல்வாதிகள் பட்டியலில் திமுகவின் ஆ.ராசாவுக்கு, இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது. 

லிபியாவின் மும்மர் கடா ஃ பியைக் கூடப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! இந்தியர்களை அவ்வளவாகக் கண்டு கொள்ளாத அமெரிக்க டைம் பத்திரிக்கை கூட பட்டியலில் சேர்த்துக் கொள்கிற அளவுக்கு ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் முன்னாள் திமுக அமைச்சர் செய்த ஊழல்கள், அதிகார துஷ்ப்ரயோகம் எப்படியெல்லாம் கொடிகட்டிப் பறந்திருக்கிறது!

முதல் இடத்தில் வாட்டர்கேட் ஊழலில், நிக்சன் இருக்கிறார்! இன்று வரை அவரை அசைக்கக் கூட முடியவில்லை! அதற்கப்புமாகத் தான் ஆ! ராசா!


ஆ.ராசாவை இயக்கியவர்கள், பயன் படுத்தியவர்கள் பற்றிய முழு விவரம் வெளியே வந்தால்,யார் முதலிடம் பெறுவார் என்பது யாருக்குத் தெரியுமோ இல்லையோ, இந்தப்பக்கங்களுக்கு வரும் வாசகர் உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும் தானே!
இதுபற்றிய செய்திகளை, இங்கே மற்றும் இங்கே கொஞ்சம் விரிவாக!

தொடர்புடைய இன்னொரு பதிவு இங்கே 




8 comments:

  1. பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. // ஆ.ராசாவை இயக்கியவர்கள், பயன் படுத்தியவர்கள் பற்றிய முழு விவரம் வெளியே வந்தால்,யார் முதலிடம் பெறுவார் என்பது யாருக்குத் தெரியுமோ இல்லையோ, இந்தப்பக்கங்களுக்கு வரும் வாசகர் உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும் தானே!//
    தமிழகத்துக்கே தெரியும்னு எலெக்சன் ரிசல்ட் சொல்லிடுச்சே :))))

    ReplyDelete
  3. தமிழகத் தேர்தலில் தெரிந்தது சரி!

    ஆனால் குற்றத்துக்கு தண்டனை..?

    கூட்டணி தர்மத்தில் பங்கு பெற்ற கூட்டாளிகள், ஆதாயம் அடைந்தவர்களும் அம்பலத்துக்கு வர வேண்டாமா? அம்பானிகளை, டாட்டாக்களை தேர்தல் முடிவுகள் என்ன செய்து விட முடியும்?

    ReplyDelete
  4. //ஆனால் குற்றத்துக்கு தண்டனை..? //
    கண்டிப்பாக உண்டு. ஏனென்றால், தி மு க வினருக்கு தண்டனை கொடுப்பது மூலம் காங்கிரஸ் "தாங்கள் உத்தமனானவர்கள். கூட்டாளிகள் தான் ஊழல்காரர்கள்" என்று தப்பித்துக்கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல், இப்போது தி மு க பலம் குறைந்த நிலையில் உள்ளதால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதை நொறுக்க காங்கிரஸ் முயலும் என்று நான் நினைக்கிறேன். பார்க்கலாம். இது நடந்தால் பாதி நல்லது. மீதி நல்லது காங்கிரஸ் ஒழியும்போது!

    ReplyDelete
  5. பெரிய இடங்கள்,பெரிய அளவில் செய்கிற குற்றங்களுக்கு இதுவரை இந்தியாவில் தண்டனையே இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. முதல் முறையாக, பெரிய இடங்களும் தண்டனைக்குள்ளாகலாம் என்ற தோற்றம் இப்போது தான் வந்திருக்கிறது.

    ஊழலில் பங்குபெற்ற, பணம் கொடுத்த கார்பரேட்டுகளும் கடுமையாகத் தண்டிக்கப்படும் நிலை இந்தத் தருணம் வரை தெளிவாக இல்லை. அது தெளிவாகும் போதுதான் காங்கிரஸ் வேரோடு சாயக்கப்படுமா என்பதே தெரிய வரும். இடையில், ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரசைத் தூக்கி எறிய வேண்டும் என்ற விழிப்புணர்வை உண்டுபண்ணுவது மட்டுமே நாம் செய்யக் கூடியது.

    ReplyDelete
  6. .சரி 2ஜி அலைகற்றையை விசாரித்து தண்டனைதர உச்சநீதிமன்றம் இருக்கு, அனால் தமிழனின் வரி பணத்தை சுரண்டி இலங்கைக்கு வாரி வழங்கி, தமிழ் மீனவர்களையும், இலங்கை அப்பாவி தமிழர்களையும் கொன்று குவிக்க உதவிய இந்திய அரசாங்கத்தை யார் தண்டிப்பார்கள், இந்தியா செய்தது வரி ஊழலல் மட்டும் அல்ல தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றமும் செய்துள்ளது.இதே நிலை இந்தி பேசும் மக்களுக்கு நேர்ந்திருந்தால் இந்தியா இப்படிதான் உதவி செய்திருக்குமா, நாட்டையே அலைகழித்திருக்க மாட்டார்கள், என்ன ஆர்பாட்டம் செய்திருப்பார்கள்.பக்கத்து நாட்டுகாரன் இந்திய மீனவர்களை தாக்கி கொன்று குவிக்கிறான் அதை என்ன எது என்று கேட்க துப்பில்லை. அது சரி தமிழர்கள் உயிர் எல்லாம் இந்த இந்திய அரசாங்கத்துக்கு மயிர்மாதிரி, இதுல இந்திய இறையாண்மை ஒன்னுதான் குறைச்சல்.

    ReplyDelete
  7. தாமிரபரணி என்ற பெயரில், ப்ரொபைல் விவரம் சிறிதுமில்லாத அனானியிடமிருந்து வந்திருக்கும் மேற்கண்ட பின்னூட்டத்தை, அதில் இருக்கும் கோபத்தின் நியாயத்தை உத்தேசித்து மட்டும் அனுமதித்திருக்கிறேன். பின்னூட்டப்பெட்டியின் மேலேயே, தங்களை ஓரளவிற்காவது அடையாளம் காட்டக் கொள்ளக் கூட தைரியம் இல்லாதவர்கள் கருத்தை ஏற்பதற்கில்லை என்று தெளிவாகச் சொல்லியிருந்தும்.......!

    //2G அலைக்கற்றை ஊழலை விசாரித்துத் தண்டனை தர நீதிமன்றம் இருக்கிறது ...!//

    என்ன முடிவாகும், குற்றவாளிகள் தண்டனை பெறுவார்களா என்பது எண்ணமும் முடிவாகவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    //இதே நிலை இந்தி பேசும் மக்களுக்கு நேர்ந்திருந்தால் இந்தியா இப்படிதான் உதவி செய்திருக்குமா,//

    வடக்கே உள்ள மக்கள், நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போல! போபால் விஷவாயு சமாசாரம் முதல்,இன்று பன்னாட்டு நிறுவனங்கள் ஜனங்களுடைய நலன்களையும் வாழ்வாதாரங்களையும் சுருட்டிக் கொண்டிருக்கும் செய்தியைப் புரிந்து கொண்டால், இந்தக் கேள்வியே மிக அபத்தமான, தவறான அனுமானத்தின் அடிப்படையில் எழுவது புரியும். தமிழன் உயிர், வடவன் உயிர் என்று தனியாகப் பிரித்துப் பார்க்காமல் கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களானால், இந்தியாவில் ஊழல், தொடைநடுங்கி அரசியல்வாதிகளால், மனித உயிருக்கு எந்த மதிப்புமில்லை, வாழ்வுக்கு உறுதியில்லை என்பதும் புரியும்.

    ReplyDelete
  8. //தமிழன் உயிர், வடவன் உயிர் என்று தனியாகப் பிரித்துப் பார்க்காமல் கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களானால், இந்தியாவில் ஊழல், தொடைநடுங்கி அரசியல்வாதிகளால், மனித உயிருக்கு எந்த மதிப்புமில்லை, வாழ்வுக்கு உறுதியில்லை என்பதும் புரியும்.//
    மிகச் சரி

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!