கனிமொழி, கருணாநிதி, கருத்துக் கணிப்புக்கள், குழப்பங்கள்! குழப்பத்தில் வரும் தெளிவு!

...


கவிஞராக மட்டும் இருந்திருந்தால் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருந்திருக்க முடியுமோ?


சிபிஐ நீதிமன்றம் மே ஏழாம் தேதியன்று, நீதிமன்றத்தில் தினசரி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கனிமொழியின் விண்ணப்பத்தை நிராகரித்தது. நேற்று முன்தினம் மறுபடி விண்ணப்பித்ததில், மே 12, 13 இரண்டு நாட்கள் மட்டும்,அதுவும் சென்னையில்  12 ஆம் தேதி வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராவதற்காக மட்டும்,விலக்களித்து நேற்றைக்கு உத்தரவு பிறப்பித்தது. 'உடனடியாக டில்லி திரும்ப முடியாது' என்பதால் 13 ஆம் தேதியும் விலக்களித்து நீதிமன்றம் அனுமதித்தது.


முதலில் குழப்பத்துக்கு வித்தாக இருக்கும் கருத்துக் கணிப்புக்கள் என்ன சொல்கின்றன என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்!

ப்படி ஒரு கணிப்பு! தேர்தலுக்குப் பிந்தைய வாக்காளர் மனநிலையைத் தொட்டு சிஎன்என்-ஐபிஎன்- சிஎஸ்டிஎஸ் எடுத்தது. 
தில் பிஜேபி கட்சிக்கு மூன்று சதவீதம் வாக்காளர்கள் ஆதரவு என்பது கொஞ்சம் ஆச்சரியமான செய்தி மட்டுமல்ல,மாறிவரும் வாக்காளர் மனநிலையை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. இதர வகையில் 2006 தேர்தலில் பதினைந்து சதவீதமாக இருந்தது இந்த எக்சிட் போல் எடுக்கும் போது பத்து சதவீதமாக சுருங்கிவிட்டதாம்!
த்துத் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு தெரிகிறது என்று பிஜேபியின் இல. கணேசன் சொன்னாராமே! எங்கே என்று தேடுகிறீர்களா? இப்போதுள்ள தேர்தல் முறையில் ஒரு கட்சி வாங்குகிற வாக்கு சதவீதத்துக்கும், ஜெயிக்கிற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை!

ஹெட்லைன்ஸ்டுடே-ஒ ஆர் ஜி கருத்துக் கணிப்பு இதற்கு  உல்டாவாக திமுக அணிக்கு 115-130 வரை கிடைக்கும் என்றும், அதிமுக அணி 105-120 வரை சட்டமன்றத்தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் சொல்கிறது.

துவரை அதிகம் அறியப்படாத, சி- வோடர்ஸ்  சர்வே என்ற அமைப்பு அதிமுக கூட்டணி 168-176 இடங்கள் வரையிலும், திமுக அணி 54-62 இடங்களையும் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பை வெளியிட்டிருப்பதாக, ஹிந்து நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்த செய்தி சொல்கிறது.

ந்தக் கருத்துக் கணிப்புக்கள், ஒரு சிறுபகுதி வாக்காளர்களிடம் தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில் சொல்லப்படுபவை. உண்மை நிலவரத்தைப் பிரதிபலிப்பவை என்று எடுத்துக் கொள்ள முடியாதவை.

இன்னும் நியூஸ் எக்ஸ், ஆசியாநெட் சர்வேக்களும் அதிமுகவுக்குத் தான் அதிக இடங்கள் கிடைக்கும் என்று சொல்வதாக, இப்படிக் கருத்துக் கணிப்புக்களைப் பற்றிய ஒட்டு மொத்த சித்திரத்தை எக்ஸ்ப்ரெஸ் நாளிதழ் தருகிறது 

ஆனால், ஒரு விஷயம் மட்டும் தொடர்ந்து உறுதிப்பட்டுக் கொண்டே வருகிறது. 


உதயசூரியனாக கருதப்பட்டு வந்த திமுக அஸ்தமன சூரியனாகிக் கொண்டிருக்கிறது.


சென்ற சட்ட மன்ற தேர்தல்களிலேயே வெறும் 96  தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, ஜெயலலிதா வார்த்தைக்கு வார்த்தை மைனாரிட்டி திமுக அரசு என்று சொன்னது பொய்யில்லை. காங்கிரஸ் முட்டுக் கொடுத்து வந்தன் அடிப்படையில் மட்டுமே திமுக, மெஜாரிட்டி அந்தஸ்தில் இந்த ஐந்தாண்டுகளைக் கடக்க முடிந்தது. இப்போது  நடந்து முடிந்த தேர்தலில் முட்டுக் கொடுத்த காங்கிரஸ், காணாமல் போய்விடுகிற சாத்தியம் அதிகமாகி இருப்பதோடு, திமுக தன்னுடைய சொந்தக் காலில் நிற்க முடியாத அளவுக்குப் பலவீனமாகிவிட்டது என்பது மட்டும், தேர்தல் முடிவுகள்  காட்டப்போகும் உண்மை.

துவரை தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சிக்கே வாக்காளர்கள் ஆதரவு தந்து வந்திருக்கிறார்கள் என்று திமுக தலைவரும், அதிமுக அம்மாவும் சொல்லிக் கொண்டு வந்தது, இனிமேல் உண்மை நிலவரம் அப்படி இல்லை என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது.

........நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை!
 

"நான் கலைஞர் தொலைக்காட்சியில் டைரக்டர் இல்லை, எந்த முடிவையும் எடுக்கவில்லை, எதிலும் கைஎழுத்திடவுமில்லை" என்று கனிமொழி தரப்பில் வாதிடப்பட்டாலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பேரிலேயே கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குனராக நீடிக்க முடியவில்லை என்பதை சிபிஐ தரப்பில் அதன் வழக்கறிஞர் லலித் சிபிஐ நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். தயாளு அம்மாளைக் துணைக் கு ற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் விட்டு விட்டாலும் கூட, தயாளு அம்மாளும் கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குனர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவே ஆவணபூர்வமான ஆதாரம் இருப்பதாக இந்த செய்தி சொல்கிறது.ஜூலை மாத இறுதிக்குள் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துத் தனது விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் சிபிஐ இருக்கிறது. இன்னும் இரண்டு துணைக் குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப் படும் என்று சிபிஐ தெரிவித்திருக்கிறது. 

ஆக, சுப்பிரமணியன் சுவாமி சொன்னது போல மூன்றாவது குற்றப் பத்திரிகையில் தயாளு  அம்மாள் பெயரும் சேர்க்கப்படுமா என்பது இந்தத் தேர்தல் முடிவுகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் இன்னொரு கேள்வி! விடை, எப்போதும் போல வெறும் ஒன்பது ரூபாய் நோட்டுத் தான்!


"மே 13 இல் என்ன தெரிந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்? இந்தக் கூட்டணி அல்லது அந்தக் கூட்டணி என்று எதுவந்தாலும் ஜனங்களுக்கு விடிவு வரப் போவதில்லை. அதற்குக் காரணம், ஒரு தவறு நடக்கும்போது அதைத் தட்டிக் கேட்கிற தைரியம் இல்லாத ஊமைச் சனங்களாகவே நாம் குறுகிப் போய்க் கிடப்பதுதான்!
வாக்காளர்களிடம் விழிப்புணர்வு! முதலில் வாக்குச் சீட்டு என்பது மூணு சீட்டு மாதிரியோ, குறைந்தபட்சம் லாட்டரிச்சீட்டு மாதிரியோ கூட இல்லை அதற்கென்று சில கடமைகளும் பொறுப்புணர்வும் தேவைப்படுகிற ஒன்று என்ற அளவிலாவது புரிந்துகொண்டிருக்கிறோமா? ஜனநாயக்காவலர் நேரு முதற்கொண்டு எந்தத்தலைவராவது ஜனங்களை ஜனநாயகத்துக்குத் தயார் செய்திருக்கிறார்களா?

தலைவர்கள் தான் சரியில்லை, போய்த்தொலையட்டும், தன் கையே தனக்குதவி அல்லது நமக்கு நாமே என்று ஜனங்களாவது தங்கள் பொறுப்பை உணரத் தலைப்பட்டிருக்கிறார்களா? சினிமாவாகட்டும், நடப்பு வாழ்வாகட்டும், எதிலும் யாரோ ஒரு ஹீரோ வந்து தான் இவர்கள் வீட்டில் சேர்கிற குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தால் எப்படி?

சுதந்திரம், ஜனநாயகம் என்பதெல்லாம் அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே! குறைந்தபட்சம் இந்த செய்தியையாவது ஜனங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா?"

இந்தப்பதிவுக்கு வந்த பின்னூட்டத்திற்குப் பதிலாக எழுதியது இது.

தொடர்ந்து பேசுவோம்!
 

 

2 comments:

  1. Sometimes we started to write a comment, after it becomes a post!!!!

    ReplyDelete
  2. முதல் தடவையாக இந்தப்பக்கங்களுக்கு வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நன்றி.

    இந்தப்பக்கங்களில் கொஞ்சம் பொறுமையாகப் பழைய பதிவுகளில்குறிச் சொற்களின் உதவியோடு அல்லது நேரடியாகப் படிக்க முடியுமானால், consistent ஆக சில அரசியல் விவகாரங்கள் பேசப்படுவதைப் புரிந்து கொள்ள முடியும். பின்னூட்டம் எழுத ஆரம்பித்துப் பதிவுகளாக்குகிற வேலை இங்கில்லை.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!