..
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமாம்!
ஆ! ராசா என்று வாயைப் பிளக்க வைக்கிற அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் கிளம்பிய பின்னாலும் கூட, ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லையாம்! ராசாவை விசாரித்தபோது, அதற்கு முந்தைய பிஜேபி ஆட்சியில் நடைமுறையில் இருந்த கொள்கையைத் தான் பின் பற்றியதாக சொன்னாராம்! அப்படிச் சொன்ன அமைச்சர் பிஜேபி அமைச்சரா அல்லது ஐமு கூட்டணிக் குழப்பத்தின் அமைச்சரா? அதையாவது சொன்னாராமா?
"Our government has been very clear right from the beginning that corruption is a problem. If I come to know that there is any involvement at any level, we will take action"
"Our government has been very clear right from the beginning that corruption is a problem. If I come to know that there is any involvement at any level, we will take action"
மன்மோகன் சிங் சொன்னதிலேயே மிகப் பெரிய காமெடி இதுதான்!
சென்ற வருடம் மே மாதம் இருபத்துநான்காம் தேதி எழுதிய பதிவின் ஒருபகுதி
சென்ற வருடம் மே மாதம் இருபத்துநான்காம் தேதி எழுதிய பதிவின் ஒருபகுதி
ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் முதலாம் ஆண்டு பூர்த்தியானதைக் கொண்டாடும் விதத்தில் ஒரு விருந்து நடந்ததைப் பற்றிய பதிவு இங்கே
நாளை, மே 23 அன்று ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின், இரண்டாம் ஆண்டு முடிந்ததைக் கொண்டாட விருந்து ஒன்று ஏற்பாடாகியிருப்பதாகவும், கனிமொழி சிறையில் இருக்கும் இந்தத் தருணத்தில் திமுக அதில் கலந்துகொள்ளாது என்றும் செய்திகள் லேசுபாசாகக் கசிந்து கொண்டிருக்கின்றன. பெயரளவுக்கு திமுக இருப்பதுபோல காட்டிக் கொள்வதும் சாத்தியமே என்ற அளவுக்குத் தான் செய்திகள் சொல்கின்றன. மத்திய அரசில் பங்கேற்றுள்ள திமுக அமைச்சர்கள், தயாநிதி மாறன் உட்பட அனைவரும் சென்னை திரும்பி, கருணாநிதியுடன் சந்தித்தார்களாம்!
வெளிப்படையாக எதிர்ப்பையோ கோபத்தையோ காட்டக் கூடிய நிலையில் திமுக தலைவர் இல்லை என்பது அவருக்குத் தெரிந்த மாதிரியே, ஜனங்களுக்கும் நன்றாகத்தெரிந்திருப்பதுதான், இவர்கள் இத்தனைநாள் நடத்திய விளம்பர அரசியலில் மிகப்பெரிய பரிதாபமே!
கனிமொழியை சிறையில் சந்திக்க கருணாநிதி நாளை மறுநாள் (அதாவது திங்கட்கிழமை) டில்லி வரக் கூடும், அதே நேரம் விருந்தில் கலந்துகொள்ளாமல், கடுமையான சிக்னலைக் காங்கிரசுக்கு காட்டுவார் என்ற செய்தி டிவி செய்திகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ராஜாத்தி கண்ணீர் : 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழி, கலைஞர் டி.வி., நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று காலையில் மீண்டும் இன்று கனிமொழி, சரத்குமார் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். ராஜாவும் ஆஜர் படுத்தப்பட்டார். கனிமொழி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரான போது அங்கே காத்திருந்த கனிமொழியின் தாயார் ராஜாத்தி, கனிமொழியை பார்த்து அழுத வண்ணம் இருந்தார். கோர்ட்டில் விசாரணை முடிந்த பிறகு கனிமொழி அவரது தாயார் ராஜாத்தியை கட்டிப்பிடித்து அழுதார். கனிமொழியின் கணவர் அரவிந்தன், டி.ஆர்.பாலு, நெப்போலியன் ஆகியோர் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.இது இன்றைய தினமலர் செய்தி
ஏற்கெனெவே பலவீனப்பட்டுப் போயிருக்கும் காங்கிரசின் பேஸ் மெண்டை, ஆந்திராவில் ஜகன் ரெட்டி இன்னும் அசைத்துப் பார்த்திருக்கிறார். மும்பையில் சரத் பவார் என்ன உள்ளடிவேலை
செய்வார் என்பதும் தெரியாது! மம்தாவை சமாளிக்க முடியுமா என்பதும் தெரியாமல், வரிசையாக ஒவ்வொரு ஊழலாக உச்சநீதி மன்றத்தின் நேரடி கண்காணிப்புக்கு வந்து கொண்டிருப்பதைத் தடுக்க முடியாமல் காங்கிரஸ் தவித்துக் கொண்டிருக்கையில், வெட்டி உதாரை எல்லாம் காங்கிரஸ் சட்டை செய்யுமா? தாஜா செய்ய முற்படுமா என்பதை இப்போதே சொல்ல முடியாது!
ஆறு மந்திரி வேணுமின்னு கேட்டு வாங்கினாங்களே!பசையுள்ள துறைகளைக் கேட்டும் வாங்கினாங்களே!
ரெண்டே வருஷத்துல,இப்ப அது இமயம் முதல் குமரி வரை திமுகவுக்கு எதிரான வஞ்சமாப்போனதென்ன?
ரெண்டே வருஷத்துல,இப்ப அது இமயம் முதல் குமரி வரை திமுகவுக்கு எதிரான வஞ்சமாப்போனதென்ன?
சண்டேன்னா மூணு செய்திகளில் நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!