2G ஸ்பெக்ட்ரம்-பலியாடு ரெடி! கிடா வெட்டு எப்போதாம்?

சிபிஐக்கு கார்பரேட் குற்றங்கள், பொறுப்பைப் பற்றி ஒன்றும் தெரியாது! கனிமொழிக்காக ஆஜராகி ராம்ஜேத் மலானி சொல்கிறார்! சிபிஐக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!

பூம் பூம் மாடுகளாக, எப்போதும் ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்தால், இப்படித்தான்! உச்ச நீதி மன்றத்தில் குட்டும் வாங்க வேண்டிவரும், நீதிமன்றத்தில் இப்படி வழக்கறிஞர்களிடம் கேவலப்பட வேண்டியும் வரும்!

சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!

இது திமுகவின் ஸ்லோகன்! ஆனால், சொல்லாததையும் செய்தார்கள் என்பதும் எந்த அளவுக்கு நீதிபதிகளே "நாங்கள் இத்தனை சைபர்களைப் பார்த்ததில்லை" என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு, முந்தைய சர்க்காரியா காலத்து விஞ்ஞான ஊழலையும் மிஞ்சுகிற அளவுக்கு ராக்கெட் வேகச் சாதனை செய்ததும்,  2G ஸ்பெக்ட்ரம்  ஊழல் முதற் கொண்டு, தமிழ்நாட்டையே ஏறக்குறைய விலைபேசி முடித்து விட்ட மாதிரி எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதாக அந்த ஸ்லோகன் பொருள் சொன்னது.

அதனால், நேற்றைக்குக் கனிமொழி ஒவ்வொரு டிவி சானலுக்கும் ஒவ்வொருவிதமாகப் பேட்டி கொடுத்ததை, அவ்வளவு பெரிய விஷயமாக, நம்புகிற விதத்தில் இருப்பதாக எடுத்துக் கொள்ள
முடியவில்லை.

என்டிடீவீ தொலைக்காட்சிப் பேட்டியில்,எதையும் சந்திக்கத்தயார் என்றார் கனிமொழி.
ஜாமீன் கோரினால் எதிர்க்கமாட்டோம் என்று ஏற்கெனெவே பேசிவைத்துவிட்டார்கள் என்றுதான் பொருள்கொள்ளத் தோன்றியது!

முன்ஜாமீன் கோர மாட்டேன் என்றார்! கவிஞராக இருந்து அரசியல் வாதியுமாகிவிட்டார் என்பதனால்,அதிலும் உண்மை பேசுவார் என்று எவரும் நம்பவில்லை.கோர்ட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, ஜாமீன் கேட்டு அவருக்காக ஆஜரான ராம்ஜேத் மலானி விண்ணப்பித்திருக்கிறார்.
பெண் என்பதால் எந்தவித தாட்சணியத்தையும் கோர மாட்டேன் என்றார், அவரது வழக்கறிஞரோ, அவர் ஒரு பெண், ஒரு எம்பி, சட்டத்திற்கு அடிபணிந்து நடப்பவர் என்று சட்டப்பிரிவு 437 இன் கீழ் ஜாமீன்  மனுச் செய்திருக்கிறார்!

ராம்ஜேத்மலானியின் வாதத்தில் புதுமை ஒன்றுமில்லை! கனிமொழி கலைஞர் தொலைக் காட்சியில் வெறும் பங்குதாரர் மட்டும்தான்! நிர்வாக முடிவுகளை எடுக்கக் கூடிய இயக்குனர் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சதி செய்தது முழுக்க முழுக்க ஆ.ராசா தான்! கூட்டுச் சதியாளராகக் கனிமொழியை சேர்த்தது தவறு என்பது அவருடைய வாதம்.


கனிமொழி பொறுப்பேற்று நடத்திய சங்கமம் நிகழ்ச்சிக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அத்தனையும், லட்சம் லட்சமாக நன்கொடையை அள்ளிக் கொட்டின என்பதும், நிரா ராடியாவுடன் பதிவு செயப்பட்ட உரையாடலில், ஆ.ராசா தான் தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக வருவதில் கனிமொழி காட்டிய அதீத அக்கறையும் ஏற்கெனெவே 80000 பக்க முதல் குற்றப் பத்திரிகையில் எங்கெங்கோ விரவிக் கிடக்கிறதென்பது சிபிஐ தானே கசியவிட்ட செய்திகள்!


ராம்ஜெத்மலானி வாதம் : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் கனிமொழிக்கும் தொடர்பு இல்லை என ராம்ஜெத்மலானி கோர்ட்டில் குறிப்பிட்டுள்ளார். கனிமொழி எந்த சதியும் செய்யவில்லை, 2ஜி வழக்கில் சதியில் ஈடுபட்டது மாஜி அமைச்சர் ராஜா தான். கனிமொழி எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறார். அவர் ஒரு பெண் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு கோர்ட்டில் ராம்ஜெத்மலானி வாதாடினார்.

ஆ.ராசா! திமுக  தலைவரின் குடும்ப ஊழல்கள் மொத்தத்துக்கும் பலிகடா ஆக்கப்படுவார் என்பது ஏற்கெனெவே தெரிந்ததுதான்! ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உட்பட அவரது குடும்பமும் கூட வழக்கில் சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்துகொண்டுதான் இருக்கின்றன.

சிபிஐ , கனிமொழி ஜாமீன் கோரினால், எதிர்க்காது என்ற உத்தரவாதத்தின் பேரிலேயே சி என் என் தொலைக்காட்சிக்கும், என்ன நடந்தாலும் சந்திக்கத்தயார் என்று என்டிடீவீ தொலைக் காட்சிக்கும் பேட்டி கொடுத்தார் என்றும் தெரிகிறது.

குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நின்றவர் சிரித்த முகத்துடன் இருந்தாராம்! டென்ஷன் தாங்க முடியாமல் திமுக எம்பி ஆதிசங்கரர் நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தாராம்! தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீப வருடங்களில் கருணாதி கதை வசனம் எழுதி இயக்கிய எதுவுமே எடுபடவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.

இப்போதுகூட, கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதி, குடும்ப உறுப்பினர்கள் நடிப்பில் நடந்துகொண்டிருக்கும் இந்த அரசியல் சித்து விளையாட்டு என்ன ஆகப்போகிறது என்பது நீதிமன்றத்தின் கைகளில் இருக்கிறது.

 

இன்று மாலைக்குள், சிபிஐ உச்சநீதிமன்றத்தில் நேற்றைக்குக் குட்டு வாங்கியதைப்போல குட்டு வாங்கப்போகிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும்! மாறுகிற காட்சிகள் இந்தப்பதிவிலேயே அவ்வப்போது சேர்க்கப்படும்!


இன்று போய் நாளை வா! கனிமொழி விசாரணை, நாளைக்கு!

பிற்பகல் 4.30  மணி நிலவரம்


சிபிஐ தன்னுடைய துணைக்குற்றப்பத்திரிகையில், கனிமொழி சொன்ன சமாதானங்களை  நிராகரித்து, நாற்பத்தெட்டுப் பக்கங்களில், லஞ்சம் பெற்றதாக, சதியில் கூட்டாளியாக இருந்ததாக கனிமொழியையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்திருந்தது நினைவிருக்கலாம். 

ராம்ஜெத்மலானியின் வாதம் முழுக்க முழுக்க,கம்பனி  சட்டத்தின் படி, இயக்குனர் குழு தான் நிர்வாகம், குளறுபடிக்குப் பொறுப்பு , கனிமொழி வெறும் பங்குதாரர் தான், நிர்வாகத்தில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை என்ற ரீதியில் இருந்தது.
கலைஞர்  டிவி நிர்வாகி சரத் குமார், இன்று கைது செய்யப்படவில்லை என்றாலும் ஆ.ராசாவுக்குத் துணையாகக் கூடுதல் பலியாடாக சேர்க்கப் படுவார் என்பது போலத்தான் இன்றைய நிகழ்வுகள் இருந்தன.

இந்த நிலையில் கனிமொழியின்  ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்ந்து நாளைக்கும் நடக்கும் என்று நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது.


Dealing with the CBI's allegations, Jethmalani said on behalf of Kanimozhi, "Even if we assume that A Raja (former Telecom Minister) got transferred the bribe money from Dynamix group to Kalaignar TV, no guilt is proved against me as I did not sign any of the documents on behalf of the recipient TV channel. 

"Let us also assume that at his (Raja's) instance Rs 200 crore was routed to the TV channel. What is the offence committed by me? I am only a shareholder in the company," he asserted. 

In an apparent bid to shift the blame to co-accused Sharad Kumar, he said it was he (Kumar) who took all the decisions on behalf of the TV channel. 

He, however, clarified that his contentions were without prejudice to the rights of other co-accused. 

"It is almost impossible to obtain a conviction of mine in this case," he said.Jethmalani further said, "My misfortune is that I am Karunanidhi's daughter and an MP. I have 20 per cent shares in Kalaignar TV. Show me one overt act of mine which relates to the offence." 

Citing various judgements of the Supreme Court and those of various US courts, Jethmalani said an overt act committed by the company cannot be attributed to a person who is its mere shareholder and did not take part in any of its decision-making processes, indicating his complicity in the case. 

"I am an MP and a law abiding citizen. Moreover, being a woman I be released on bail on furnishing of bond," he pleaded. 

Jethmalani said, "I do not suggest that everybody is innocent in this case but so far as I am concerned I was not handling the day-to-day affairs of the company which had been in the chargesheet." 

"I am just a shareholder and not a director who had signed any document during the alleged transfer of money," said Jethmalani.
In case of an arrest, Kanimozhi might be shifted to Rohini Jail’s women wing soon after her arrival at Tihar - PTI

.....முகத்தில் முகம் பார்க்கலாம்!
In case of an arrest, Kanimozhi might be shifted to Rohini Jail’s women wing soon after her arrival at Tihar - PTI  further news here

சட்டம் ஒரு இருட்டறை! அதை மேலும் இருட்டாக்குகிற வேலை எப்படி இருக்கும்? இப்படித்தான்!


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!