கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!



நண்டு கொழுத்தால் வளையில் தங்காது,சொல்லக்  கேட்டிருக்கிறேன்! எல்லாம் சரிதான்!

நண்டைக் கொழுக்க வைத்தது யார், இப்போது வெளியே விட்டு, பிடிப்பவர்கள் யார்? இதற்கு உங்களுக்கு விடை தெரியுமா?

ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் தயாநிதி மாறன்?

தாத்தாவிடம் இருந்து தயாநிதி மாறன் கற்றுக் கொண்ட மிக மோசமான பாடம், எதற்கெடுத்தாலும் வக்கீல் நோடீஸ் அனுப்பி, ஊடகங்களின் வாயை அடைக்க முயற்சி செய்வது என்பதுதான் என்று தோன்றுகிறது! நேற்றைய நாட்களில் தாத்தா விட்ட உதார்கள் கொஞ்சம் பலன் அளித்தன என்பதால் பேரன் விடுகிற உதார்களும் அப்படியே பலித்துவிடுமா என்ன! நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுத்தது!!

தான் பெண்ணெடுத்து சம்பந்தம் செய்துகொண்ட ஹிந்து நாளிதழ் மீது விக்கிலீக்ஸ் விஷயமாக சமீபத்தில் தான் பத்துக் கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். உடனடியாக, மறுப்பையும் வருத்தமும் தெரிவித்து அந்த நாளிதழிலேயே செய்தி போட வேண்டும் என்றும் "வேண்டி" இருந்தார்! அதே செய்தியை எடுத்துப்போட்ட எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கும் வக்கீல் நோட்டீஸ்-ஒரு கோடி நஷ்ட ஈடு, வருத்தம் தெரிவித்து செய்தி போட வேண்டும் என்ற நிபந்தனை..

ஆனால்,இரண்டு பத்திரிகைகளும் மாறனுடைய உதார்களைக் கொஞ்சம் கூட சட்டை செய்தமாதிரி, இந்த நிமிடம் வரை தெரியவில்லை! மாறனும் அதற்கு மேல் எதையும் செய்யத் துணிந்ததாகவும் செய்திகள் இல்லை. இப்போது, இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா?

தயாநிதி மாறன் தெஹெல்கா இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்! புலனாய்வு செய்திகள் என்ற போர்வையில் அப்பட்டமான பொய்களை, அவரைக் குறித்த செய்திகளை தெஹெல்கா இதழ் வெளியிட்டு வருகிறதாம்!அவருடைய சன் குழுமம் என்ன மாதிரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரியாது போல!!
தெஹெல்கா இதழ் மாறன் மிரட்டலுக்குக் கொஞ்சம் கூட பயப்படாமல் திருப்பி சாத்தியிருக்கிறது. வக்கீல் நோட்டீஸ் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை, ஆனால் இது சும்மா பயமுறுத்திப் பார்க்கிற வேலை என்று அந்த பத்திரிக்கை சொல்லியிருப்பதாக, செய்திகள் தொலைக் காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.Maran at backfoot என்று மாறன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டிய, அசௌகரியமான டிஃ பென்ஸ் எடுத்தாக வேண்டிய நிலையில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

  தயாநிதி, ஆ.ராசா, இருவரும் ஒரே ஒரு விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை! மன்மோகன் சிங் வெறும் டம்மிப் பீஸ்தான்!பேசி முடித்த இடமே வேறு! "யப்பா..டம்மிப்பீசு! கொஞ்சம் ஒத்திக்கோ! அல்லாத்தையும் நாங்களே முடிவு செஞ்சுக்கிறோம்!"

சென்ற வியாழக்கிழமை சோனியாவை சந்தித்தது, அடுத்து  வெள்ளிக் கிழமை முக அழகிரியோடு திஹார் சிறையில் கனிமொழியை சந்தித்தது என்று வரிசையாக தயாநிதி மாறன் சந்திப்புக்கள் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது என்று சொன்னால், நேற்று திங்கள்கிழமை, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்திருப்பது, விவகாரம் முற்றிக் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்!

ஜேபிசி தலைவர் சாக்கோ, நிருபர்கள் திரும்பத் திரும்ப மாறன் விவகாரத்தைக் கேட்டதற்குப் பூசி மெழுகிய மாதிரியான பதில் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக் காட்டுகின்றன. கலைஞர் தொலைகாட்சிக்கு இருநூற்று சொச்சம் கோடி ரூபாய் லஞ்சப்பணம் திருப்பிவிடப்பட்ட விவகாரம் மாதிரியே, மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தருணத்தில் சுமார் எழுநூறு கோடி ரூபாய் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்தில் இருந்து சன் குழுமத்திற்குத் திருப்பி விடப் பட்டதாக, இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் செய்தி.

தயாநிதி சந்திப்பு இத்துடன் முடிந்துவிடவில்லை, சுப்பிரமணியன் சுவாமியின்  கட்சி செயலாளர் வி எஸ் சந்திரலேகாவையும் சந்தித்ததாக தெஹெல்கா செய்திகள் சொல்கின்றன. இதெல்லாம், திமுகவைக் காப்பாற்ற என்று சொன்னால், இதை எழுத உபயோகிக்கும் கருவியே கூட நம்பாது என்பதுதான் உண்மை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மாறன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதை, ஒரு பத்து  நாட்களாகவே  மாறன் சகோதரர்கள் காங்கிரசுக்குத் தாவ இருப்பதாக வரும் செய்திகள் கோடிட்டுக் காண்பிக்கின்றன. புகை நிறையக் கிளம்பிக் கொண்டிருக்கிறது, ஆனால் அங்கே நெருப்பு எதுவும் இல்லை என்று தயாநிதி வக்கீல் நோட்டீஸ்களில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்!

அடுத்து சிக்கப்போகிற திமுக புள்ளி யார் என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடம் கொடுக்காத வகையில் இன்னார்தான் என்று தெளிவாகத் தெரிகிற மாதிரியே, 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் மட்டும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில், இந்த வார, இந்த மாத வெளிச்சம் முழுவதும் சன்குழுமம், தயாநிதி மாறன் மீதுதான் இருக்கும் என்பதன் பின்னணயில்  காங்கிரஸ்காரர்களுடைய சாமர்த்தியம்தொடர்ந்து ஆச்சரியப் படுத்துவதாக இருக்கிறது.

“Maran’s three-year-old stay at Sanchar Bhawan was marred by a spate of controversies. He shared an extremely strained relationship with Ratan Tata, chairman of Tata Sons. It was widely speculated that Maran brothers wanted to buy a substantial take in Tata Sky but when Tata spurned them, the DOT started putting roadblocks in Tata Teleservices’ expansion plans. The Niira Radia-Ratan Tata tapes which got their way in the media in mid 2010, confirmed Tata’s deep-seated dislike towards Maran and his preference for Raja over Maran as telecom minister.

In his report, Justice (retd) Shivraj Patil came down hard on Maran’s delaying tactics. He has also remarked that on several occasions, Maran deviated from procedures

“The only concern I have is that Maran is going hammer and tongs for Raja. And I hope Raja doesn’t trip or slip,” Ratan was famously heard telling Radia in a phone conversation which happened on 7 July 2009 and which later got leaked in the media.

In February this year, former Telecom Minister Arun Shourie made further dent in Maran’s reputation by blaming him for the genesis of 2G scam.
“It was in Maran’s time that one sentence was put into the guidelines that there shall be no cap on the number of operators in a circle. Such a change could only come in the form of a Telecom Regulatory Authority of India (TRAI) recommendation,” said Shourie.

“This (change) comes in the guidelines of 2005 whereas the TRAI did not recommend it till 2007. So by what horoscope did Mr Maran anticipate these recommendations — two years ahead? That is how some operations were planned that could not go through and then Mr Raja acted on them.”

So, did Maran really lay the foundation of the 2G scam? Was the Aircel-Maxis-Sun Direct TV deal the prototype of payoffs that Raja later followed on a much larger scale? 

The answer lies in hard evidence and this is where the CBI will be tested.

தெஹெல்கா, பூனைக்கு மணிகட்டப் போவது யார் என்ற கேள்வியுடன், தயாநிதி மாறன் ஏர்செல் சிவசங்கரனைக் கையைப்பிடித்து முறுக்கி , மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்த கெடுபிடிகள், அதற்குப் பிரதி பலனாக, சன் குழுமத்திற்கு, மாக்சிஸ் நிறுவனம் அளித்த முதலீடுகள் என்று கொஞ்சம் விலாவரியாகப் பழைய கதையைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. கலைஞர் டிவிக்கு இருநூறு  கோடி கைமாறியதைப் போலவே,சன் குழுமத்துக்கும் எழுநூறு கோடி ரூபாய் கைமாறியதைக் கேள்விக்குள்ளாக்கி, சிபிஐ என்ன செய்யப்போகிறது, உண்மையைக் கண்டுபிடிக்கப்போகிறதா அல்லது எது எதையோ கண்டு கொள்ளாமல் விட்ட மாதிரி இதையும் விட்டு விடப்போகிறதா என்று செய்திக் கட்டுரையை முடித்திருக்கிறது.

.....எதுவோ தனியாகப் போகாது என்பார்கள்! அது திமுக குடும்பத்துக்கு நன்றாகவே பொருந்துகிறது!

போகிற போக்கைப் பார்த்தால், மொத்தக் குடும்பமும் டில்லியில் ஒரே விலாசத்தில் குடிவருகிற நாள் வந்துவிடும் போலத்தான் தெரிகிறது!

எடியூரப்பா விவகாரத்தில் காங்கிரஸ் கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் காண்பித்தது. பிஜேபிக்கு இப்போது நல்ல சான்ஸ்! பிஜேபியின் ரவிசங்கர் பிரசாத் மாறன் விவகாரத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு, பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்! மாறன் மட்டும் லேசா? அவரும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்! காங்கிரஸ், வழக்கம் போல, நீங்களே முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் நிதானமாக வந்து ரத்த ஜூஸ் குடித்துக் கொள்கிறோம் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது!

அதுதான் காங்கிரஸ்!



 

10 comments:

  1. தவறுகள் இருந்தால் கண்டிப்பாக வெளியில் வரும்...

    தயாநிதிக்கு ஏன் இவ்வளவு கோவம் வருகிறது என்று தெரியவில்லை...

    ReplyDelete
  2. முதல் வருகைக்கு நன்றி.

    இங்கே தமிழ்நாட்டில் இருந்தபோது மனுநீதிச்சோழர்களாக மட்டுமே இருந்தவர்கள், டில்லியிலும் ஆளத் துவங்கியபோது சுல்தான்களாகவும் பாதுஷாக்களாகவும் ஆகிப் போன பிறகு, கோபம் வராமல் வேறு என்ன வரும் என்று நினைக்கிறீர்கள்?

    தெஹெல்கா ஆசிரியர், நிருபர் சென்னையில் இருந்திருந்தால் அவர்கள் கதி என்ன ஆகியிருக்கும் என்பதை உங்களால் ஊகமாவது செய்ய முடியுமா?

    ReplyDelete
  3. உண்மையில் கலாநிதி , தயாநிதி இவர்களிடமிருந்துதான் ஸ்பெக்ட்ரம் கதையே ஆரம்பம். நியாயப்படி ராசாவுக்கு முன்னரே இவர்களை முதலில் உள்ளே தள்ளியிருக்கவேண்டும். சி.பி.ஐ யின் குடுமி இப்போது உச்ச நீதி மன்றத்தின் கையில். சோனியாவும். மன் மோகனும் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் சொல்வது சரிதான். தி.மு.க. குடும்பம் முழுவதும் திகாரில் இருக்கும் நாள் வரும் போலவே உள்ளது. எளியாரை வலியார் வைத்தால் வலியாரை தெய்வம் வதைக்கும்.

    ReplyDelete
  4. வாருங்கள் மாணிக்கம்!

    சிபிஐ தன்னுடைய விசாரணையின் தரத்தை சாட்சியங்களோடு நிரூபிக்க வேண்டிய தருணம் இது. சாட்சியங்களைக் கோட்டை விடாமல் சேகரித்து, நீதிமன்றத்தில் கொண்டுவருவார்களா, அல்லது குவத்ரோச்சியைக் கோட்டை விட்டது போலக் கோட்டைவிடுவார்களா என்பதை இப்போதே சொல்வது கிளி ஜோசியம் மாதிரித்தான்!

    ReplyDelete
  5. உண்மையில் கலாநிதி , தயாநிதி இவர்களிடமிருந்துதான் ஸ்பெக்ட்ரம் கதையே ஆரம்பம். நியாயப்படி ராசாவுக்கு முன்னரே இவர்களை முதலில் உள்ளே தள்ளியிருக்கவேண்டும்

    ReplyDelete
  6. \\போகிற போக்கைப் பார்த்தால், மொத்தக் குடும்பமும் டில்லியில் ஒரே விலாசத்தில் குடிவருகிற நாள் வந்துவிடும் போலத்தான் தெரிகிறது!\\எனக்கென்னமோ, இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை. இந்த கதைகளை தினமும் படிக்கும் போது ஏதோ "கோலங்கள்" மாதிரி ஒரு மெகாத் தொடர் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. ஜெ. மேல பதினஞ்சு கேசு போட்டாங்க, அத்தனைக்கும் ஆதாரம் இருந்தன, ஒன்றில் கூட மாட்டியதாகத் தெரியவில்லையே? போட்ட கையெழுத்தையே இல்லை என்று சொன்னதையும் ஒப்புக் கொண்டார்களே! வழக்கில் சாட்சிகளை மிரட்டி, அழித்து, திசை திருப்பி இன்னும் என்னென்ன தில்லு முல்லு இருக்கிறதோ அத்தனையும் செய்து, கேசை பூட்ட கேசாக்கிய பிறகு "தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும்" என்று டயலாக் வேறு. கடைசியில் இந்த கேஸ் பூட்ட கேசாகத்தான் போகப் போகிறது. [ஒரு வேலை என் கணிப்பு தவறாகப் போய் நீதி கிடைத்தால் மகிழ்ச்சியே.]

    ReplyDelete
  7. காங்கிரஸ் இந்த வாய்ப்பை சும்மா விடாது. தி மு க வை ஒழித்துவிடும் என்றே தோன்றுகிறது! ஊழலுக்கு தி மு க மட்டுமே காரணம். தான் இல்லை என்று நிரூபிக்கவே இதை செய்கிறது என நினைக்கிறேன்!

    ReplyDelete
  8. என்ன.... சகோதரர்கள் காங்கிரசுக்கு தாவ நினைக்கிறார்களா.....செய்தி! ஆனால் பயன்தான் என்ன?!

    ReplyDelete
  9. நாட்டின் மிக கொடுமையான வைரஸ்கள் ! @settaikaaran

    ReplyDelete
  10. இது மட்டுமல்ல இன்றைக்கு(02-06-2011)தினமணி திருச்சி பதிப்பில் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது சன் டி.வி க்காக தனது வீட்டில் மிகஉயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட 323இணைப்புகளைக் கொண்ட ஒரு தொலைபேசி நிலையத்தையே தனது வீட்டில் நிறுவி அங்கிருந்து 4.500கி.மீட்டர் தொலைவில் உள்ள சன் டி.வி.க்கு இணைப்பு கொடுத்துஅப்படியே சைடுல மதுரையில் உள்ள தினகரன் பத்திரிக்கைக்கும் கொஞ்சம் கொடுத்து மகிழ்ந்தது பத்தி பெருசா குருமூர்த்தி எழுதியிருக்கார் அரசாங்கத்துக்கு இவரால் கொஞ்சம் (சுமார் 440கோடி ரூபாய்) நஷ்டமாம்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!