காரியமாகும் வரை கூஜா தூக்குவது, ஆனதும் ....? காங்கிரஸ் கலாசாரம்!


காரியம் ஆகிற வரை காங்கிரஸ் பையும் சுமப்பார்கள்..கூஜாவும் தூக்குவார்கள்! ஆன பிறகு........?
மம்தா பானெர்ஜி,என்னவோ பெரிய சாதனையை செய்துவிட்ட மாதிரி, மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா அரசு டாட்டாவுடன் சிங்கூர் கிராமத்தில், நானோ கார் தொழிற்சாலையை அமைக்க சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தியதில், டாட்டாக்களுக்கு அரசு அறிவித்த சலுகைகளை அம்பலப் படுத்தியிருக்கிறார்!
முதலில் அம்பலமானது என்ன என்று பார்ப்போம்!
அதன்படி கையகப்படுத்தப்பட்ட சுமார் 997 ஏக்கர் நிலத்துக்கு, லீஸ் தொகையாக, முதல் ஐந்துவருடங்களுக்கு வெறும் ஒரு கோடி ரூபாய் செலுத்தினால் போதும்!ஐந்து வருடங்களுக்குப் பிறகு அடுத்த இருபத்தைந்து வருடங்கள் வரை 25% உயர்த்தியும், முப்பத்தொன்றாம் வருடத்தில் இருந்து அறுபதாம் வருடம் வரை 30% வரை உயர்த்தியும் லீஸ் தொகை கொடுப்பது; அறுபது வருடங்களுக்குப் பிறகு, அடுத்த முப்பது வருடங்களுக்கு  டாட்டா நிறுவனம் வருடத்துக்கு இருபது கோடி ரூபாய் கொடுப்பது என்பதும் ஒப்பந்தம்.

அது போக வருடத்துக்கு ஒருசதவீத வட்டியில்  இருநூறு கோடி ரூபாய் கடன், அப்புறம் பலவிதமான வரி விலக்கு, சலுகைகள், மலிவு விலையில் யூனிட் ஒன்றுக்கு மூன்றே ரூபாயில் மின்சாரம் இப்படி இப்படி!

ஆக, இந்தப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு, அரசே முன்னால் நின்று  "எல்லாவற்றையும்" செய்துகொடுக்க வேண்டியிருக்கிறது! அரசிடமிருந்து இவ்வளவு சலுகைகளைப் பெறுகிற இவர்கள், செலுத்தவேண்டிய வரிகளையாவது ஒழுங்காகக் கட்டுவார்களா என்றால், அதுதான் இல்லை! ஒவ்வொருநாளும், இந்தமாதிரிக் கொழுத்துப் பெருத்தவர்கள் செலுத்த வேண்டிய வரியில் இருநூற்று எண்பத்திரண்டு கோடி ரூபாய் அளவுக்குத் தள்ளுபடி பண்ணிக் கொண்டிருக்கிறது என்பதை ஹிந்து நாளிதழில் திரு பி சாயிநாத் ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்தினார்.

வெல்லத்தில் பிள்ளையார் செய்து, அதன் வயிற்றிலிருந்தே கொஞ்சம் வெல்லத்தைக் கிள்ளி அதற்கு நிவேதனம் செய்கிற கதைபோல, டாட்டாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள் போன்ற பெரும் தொழிலதிபர்கள் தங்களுடைய மூலதனத்தில் இருந்து அல்ல, அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்றே, தொழிற்கூடங்களை உருவாக்கி, வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் பாங்குகளில் போய்க் சே ர்த்து வைப்பார்களாம்! அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சம் வீசி எறிந்தால் போகிறது!அல்லது கொள்ளையில் கூட்டாளிகளாக்கிக் கொண்டால் போகிறது!

மேற்குவங்கத்தில் புத்ததேவ் மட்டும் தான் இதை செய்தாராமா? அம்பலமாகாமல் இருக்கும் மற்றவற்றையும் பார்க்க வேண்டாமா?

மத்திய மாநில அரசுகள் ஒவ்வொன்றும் இந்தமாதிரிப் பெருந் தலைகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு என்னென்ன செய்தார்கள்? எவரெவர்கள் எவ்வளவு கூட்டாக இருந்தார்கள் என்று, குறைந்தபட்சம் ஒரு பத்து முப்பது பெருந் தொழிலதிபர்களைக் கிண்டிப்பார்க்க மம்தா தீதி, தான் அங்கம் வகிக்கும் ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டைக் கேட்பாராமா?

கேட்கத்தான் முடியுமா?  !!

முந்தைய பதிவில் தினமணி தலையங்கத்தைப் படித்தீர்களா?

அதில், முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக,

நடப்பு  நிதியாண்டில் மொத்தவிலை குறியீட்டெண் உயர்ந்த போதெல்லாம் வட்டிவீதமும் இப்படி 9 முறை உயர்த்தப் பட்டிருக்கிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை உயர்ந்த போதெல்லாம் அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டம் அடைந்து திவாலாகிவிடும் என்பதைப்போன்ற பிரமையை ஊட்டி விற்பனை விலையை இரவோடு இரவாக உயர்த்த உதவுகிறது அரசு. கடைசியாக லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியது.இதனால் பஸ், ரயில், போக்குவரத்துக் கட்டணங்கள் லாரி வாடகை, சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்கள் அதே வேகத்தில் உயரும் என்பது மத்திய அரசுக்குத் தெரியாததல்ல. இந்தச் சுமையை மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற முடிவுக்கு அது என்றைக்கோ வந்துவிட்டது.

அரசு தன்னுடைய
திறந்தவெளிக் கிடங்கிலும் மூடிய கிடங்குகளிலும் உள்ள கையிருப்பை உரிய நேரத்தில் பொது விநியோகத்துக்குத் திறந்துவிடாததும் விலைவாசி உயர முக்கியக் காரணம்.

எவ்வளவு கையிருப்பில்
இருக்கிறது, பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறதா என்றெல்லாம் கணக்குப் பார்க்க முடியாதபடி இந்த முன்பேர வர்த்தகம் தடுத்துவிடுகிறது. எனவே செயற்கையாகவே விலை ஏற்றப்படுகிறது.

பெட்ரோல்
, டீசல் விலையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி (கலால்) வரி, மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி, செஸ், சாலை மேம்பாட்டு வரி போன்றவற்றை விலக்கினால் இப்போதுள்ள நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.33 முதல் ரூ.34  வரையில்தான் ஆகும்

வங்கிகள் கடன்களுக்கான வட்டி வீதத்தை அதிகரித்தால்
பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை. 1990-களில் நம் நாட்டிலேயே வங்கிகள் வசூலித்த வட்டி வீதம் 18% முதல் 20% வரையில்கூட இருந்தன.வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் வீட்டுக்கடன் வட்டி கூட கணிசமாகக் குறைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு தவணைகளைக் குறைக்கவா, வட்டியைக் குறைக்கவா என்று எல்.ஐ.சி. போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் கடிதம் எழுதி களிப்பில் ஆழ்த்தின. அப்போதுதான் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி பெற்றது. ஆட்சிக் காலத்தில்தான் வீட்டுக்கடன் வட்டி கூட கணிசமாகக் குறைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு தவணைகளைக் குறைக்கவா, வட்டியைக் குறைக்கவா என்று எல்.ஐ.சி. போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் கடிதம் எழுதி களிப்பில் ஆழ்த்தின. அப்போதுதான் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி பெற்றது.வட்டிவீதம் 6% முதல் 7% வரை குறைக்கப்பட்டபோது பணவீக்க விகிதமும் அதே அளவுக்குக் குறைந்தது.

விலைவாசிச் சுமையை அவர்களே தாங்குகிற மாதிரி சாதாரண ஜனங்கள் மீது நேரடி மறைமுகவரிகளை சுமத்துகிறார்கள்! ஒட்டகத்தின் மீது எவ்வளவு பாரத்தை ஏற்ற முடியுமோ அவ்வளவு ஏற்றிவிட்டு, ஒரு சிறு சுமையை அதன் முதுகில் இருந்து எடுத்தெறிகிற மாதிரி அரேபிய வணிகர்கள் ஒரு நாடகம் நடத்தி ஒட்டகத்தை, சுமை குறைந்துவிட்டது என்று நம்ப வைப்பது போலக் கதை ஒன்று உண்டு.

அந்தக் கதையில் வருவது போல, கொஞ்சம் சலுகைகள், இலவசங்கள் என்று அறிவித்து விட்டு ஜனங்களை மொத்தமாக ஏமாற்றுவது இந்திய அரசியல்வாதிகளால் தொடர்ந்து  கடைப் பிடிக்கப்படும் உத்தி! நாமும் இந்த இலவசங்களில் மயங்கி ஏமாந்து கொண்டு, இவர்களை ஏழைப் பங்காளர்களாகவும் சமத்துவம் கண்ட நாயகர்களாகவும் நம் தலையில் இன்னமும் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறோம், கதையில் வரும் ஒட்டகங்களைப் போலவே!!

ooOoo
29/05/2011 தேதியிட்ட ஜூனியர் விகடனில் இருந்து....கழுகார் பதில்கள்! கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது.  ஜூவிக்கு நன்றியுடன்

இனி, தி.மு.க-வில் ஸ்டாலின் கை ஓங்க வாய்ப்பு உள்ளதா?

முதலில், தி.மு.க-வின் கை ஓங்க வாய்ப்பு உள்ளதா என்று பாருங்கள். அதன் பிறகுதான் ஸ்டாலின்!

இப்போதும் அப்பாவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து​கொள்ளும் சங்கோஜப் பிள்ளையாகவே ஸ்டாலின் இருந்தால்... அவர் எப்போது தான் தளபதி ஆவது? எந்தப் பிரச்னையிலும் தன் சொந்தக் கருத்தை ஸ்டாலின் சொல்லியது இல்லை. அறிமுகம் இருப்பவர் களை பார்த்துக்கூட சிரிக்கத் தயங்குகிறார். இயக்கப் பொறுப்பாளர்களை உட்காரவைத்து இது வரை எந்த யோசனையும் கேட்டதும் இல்லை. மாஜி மந்திரிகளுக்கு, மாவட்டச் செயலாளர்களுக்கு, யார் எல்லாம் எதிர் கோஷ்டியோ... அவர்களைத் தன்னுடைய எதிர் கோஷ்டியாக நினைக்கிறார்.

இத்தனை மனோபாவங்களையும் மாற்றிக்கொண்டால்​தான், ஸ்டாலின் கை ஓங்கும். இல்லாவிட்டால்... 

மு.ரா.பாலாஜி, சொர்ணாகுப்பம்

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது... காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடுவது.... எது நல்லது?

புதிய தலைவரை நியமிப்பது கருணாநிதிக்கோ, ஜெய லலிதாவுக்கோ, நல்லது!
 
கலைத்துவிடுவது...  காமராஜருக்கும் கக்கனுக்கும் நல்லது! ஸாரி! 

உலகநாதன், புதியம்புத்தூர்

இவ்வளவு நடந்த பிறகும் தி.மு.க. - காங்கிரஸ் உறவில் மாற்றம் வரவில்லையே..?

கழுத்தைப் பிடித்துத் தள்ளும் வரை விருந்தாளியாக இருப்பது தி.மு.க. ஸ்டைல். சிரித்துக்கொண்டே காலை வாருவது காங்கிரஸ் டெக்னிக். கடைசி நொடி வரை பதவியை ருசிப்பது, இருவருக்கும் பொதுவான கொள்கை. கடைசி அவமானம் வரை உறவு தொடரும்! 



No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!