ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா....!ண்டை நாடான மியான்மர் ராணுவ ஆட்சியின் சிறைக் கதவுகளுக்குப் பின்னால், ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் ஆங் சான் சூ குயி இன்றைக்கு அறுபத்தைந்தாவது பிறந்த நாளைக் காண்கிறார். செய்தி, மேல் விவரங்கள் இங்கே


ர்வதேச அளவில், ஒரு ஆயத்தமாக, ஆங் சான் சூ குயிக்கு ஆதரவாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆதரவுக் குரல் எழுவதை வீடியோவில் பாருங்கள்! 

ண்டைநாடுகள் அத்தனையும் ஒரு ரவுடிக் கும்பலாக இருக்கிற பெருமை, அவஸ்தை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு! வெளியில் இருந்து வருகிற ஆபத்துக்கள், அச்சுறுத்தல்கள் போதாதென்று, ஆளுகிற, எதிர்க்கிற அத்தனை அரசியல் கட்சிகளும் பெரும் தொற்றுநோயாக இருப்பதும் இங்கே இந்தத் திருநாட்டில் தான்!


தினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆங் சான்  சூ குயி வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டிருக்கிறார். அவருடைய ஆதரவாளர்களை, உரிமை கேட்டுப் போராடுபவர்களை பர்மிய ராணுவ அரசு படிப்படியாகக் களைஎடுத்து வந்தபோதிலும், உலகெங்கும் ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது.வெளியில் இருந்து எழும் நிர்பந்தத்திற்கு செவி சாய்க்க வேண்டிய கட்டாயம் ராணுவ அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

ந்த வருடக் கடைசிக்குள், ஒரு பொம்மலாட்டத்தை, தேர்தலை நடத்தப் போகிறார்களாம்! அது வெறும் பித்தலாட்டம் தான் என்பதை நேரடியாகவே முகத்தில் அறைகிற மாதிரி சொல்கிற விதத்தில், ஆங் சான்  சூ குயியின் சிறை வாசத்தை நீட்டித்திருக்கிறார்கள், அவரோ, அவருடைய ஆதரவாளர்களோ தேர்தலில் நிற்க முடியாது. ஆங் சான் சூ குயி ஆதரவாளர்களில்  2200 பேர் சிறையில்!வருடைய கட்சியான என் எல் டியை வலுக்கட்டாயமாகக் கலைத்திருக்கிறார்கள், தடை செய்திருக்கிறார்கள். 

முக்கியமானவர்கள் என்று தெரிந்தவர்களை எல்லாம் சிறைக்குள் தள்ளியிருக்கிறார்கள்.

த்தனைக்குப் பின்னாலும் மியான்மர் மக்களுடைய ஆதரவு ஆங் சான் சூ குயிக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது!


குரூரமான துப்பாக்கி முனைகளையும் தேக்கி வைத்து அமைதியாகப் போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கும் ஆங் சான்  சூ குயிக்கு இன்றைக்குப் பிறந்த நாள் வாழ்த்து, வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம். 


சுதந்திரம் என்பது எவரோ வாங்கி எவருக்கோ கொடுப்பது அல்ல. நம்முடைய சுதந்திரத்தைப் பாதுகாத்துக்  கொள்வது நம்முடைய கைகளில் தான் இருக்கிறதென்பதை நமக்கே நினைவு படுத்திக் கொள்ள இது உதவும்.

ங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 

ன்ன செய்து கொண்டிருக்கிறோம்? 
ன்னவாகப் போகிறோம்?
1 comment:

  1. ஆனாலும் இந்த ஜனநாயகவாதி முஸ்லீம் பயங்கரவாதத்தை, அதன் தீவிரம் புரியாமல் ஆதரிக்கிறார்..இது வருத்ததிற்குரிய செய்தி..

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!