மனித்தப் பிறவியும் வேண்டுவதே! இப்படி வீணாக்கிக் கொள்ள அல்ல!புதுச்சேரியில் இருக்கும்  ஸ்ரீஅரவிந்தாசிரமம் வம்பர்களால் மட்டுமல்ல அன்பர்களாலும்கூட   மீண்டும் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாக்கப் படுவது புதிதல்ல என்பதை இந்தப்பக்கங்களில்  ஏற்கெனெவே எழுதியிருக்கிறேன் 

ஆனந்தவிகடனில் வா.மணிகண்டன் என்பவர் எழுதியிருக்கும் இந்த வம்புச் செய்தியையும் படிக்க நேர்ந்தது,அரவிந்தரும் அன்னையும் திரும்ப வந்தாலும் கூட அழிக்கவே முடியாத கறை!.என்று முத்தாய்ப்பாக உச்சுக் கொட்டி இருப்பதைத் தவிர இந்த செய்தியை எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே தளிவாக இல்லை. போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பது மட்டும் எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம், அதுபோக சம்பந்தப்பட்ட சகோதரிகளே தங்களுடைய வலைப்பதிவுகளில் தொடர்ந்து ஆசிரமத்தைப் பற்றியும்  உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கடுமையாகச் சாடி எழுதிக் கொண்டிருந்ததை எல்லாம் இங்கே படிக்கலாம்,  இவர்களுக்காக ஆதரவுக்குரலென்ற போர்வையில் இங்கேயும்.  உண்மையைக் கண்டறியக் கொஞ்சமும்  அலட்டிக் கொள்ளாத வா.மணிகண்டனைப்போல, புதுச்சேரியில் உள்ள பெரியாரிஸ்டுகளும் ஆசிரமத்தின் மீதுள்ள வெறுப்பைக் கல்லெறிதல் முதலான வக்கிரங்களாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்கப் பட்டிருக்கிறது.  இதற்கு முந்தைய புத்தக சர்ச்சையைப் போலவே இந்த விவகாரமும் ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் வேண்டுமென்றே! . 

In spite of all the ill-saying and ill-doing never have the five sisters been denied food and accommodation –  until the legal case came to a close with the verdict, not of the Trustees, but of the Supreme Court.  They chose the Legal Way. Why did they not accept the Legal Verdict?
We all know that life is not such an easy matter to deal with. One part of us wants something, while another wants just the opposite. One part sees mostly the dark side of life, while another marvels at the miracle the Earth is. Sadly, the Prasad sisters tended to see more and more the dark side of their life here, and they ended in the dark. But why drag into this obscurity those who wish to live in the light?
To those who feel so unhappy here, so bitter, so negative, the world has still many wonderful things to offer. Instead of harming the life of others, and in the end their own, instead of wasting their lives in destructive criticism, the sisters could have gathered their self-respect and courage and begin a new life, build something, whatever it may be : a farm, a school, why not the ideal ashram of their dreams! The earth is vast, and there are countless opportunities to serve the Future. And Mother India. And Mother Earth. என்று இந்தப் பக்கங்களில்  சொல்வதையும் பார்த்தேன்.ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்று இன்று பரவலாக அறியப் பட்டிருக்கும் அமைப்பு, உண்மையில் மனித குலத்தை, ஸ்ரீ அரவிந்தர் கண்ட பூரண யோக சாதனை வழியாக சத்திய ஜீவியத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பரிசோதனைக் கூடமாகவே ஸ்ரீ அரவிந்த அன்னையால் உருவாக்கப் பட்டது. ஆசிரமத்தைத் தன்னுடைய சரீரமாகவே பாவித்து ஸ்ரீ அன்னை சொன்னதும் உண்டு. பரந்த இந்த பூமியில், நிலவும் ஒவ்வொரு குணமும் சூழலும் ஆசிரமத்தில் பரிசோதனைக்காகவும், திருவுரு மாற்றத்திற்காகவும் பிரதிநிதித்துவப்படுகிற சூக்ஷ்மத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பலநேரங்களில் சொன்னதுண்டு.
ஸ்ரீ அரவிந்த அன்னையின் செயலாளராக இருந்து  நிறைய  நூல்களை எழுதியவரான திரு எம் பி பண்டிட் ஸ்ரீ அன்னையுடன் நடத்திய ஒரு உரையாடலை இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே சுட்டியிருக்கிறேன். மாற்றம் என்பது தானாகப் பழுத்து வெளிப்பட வேண்டியது. எவரும் எவர்மீதும் திணிக்க முடியாதது, இறைவனும் தன்னுடைய விருப்பத்தைத் தன்னுடைய சிருஷ்டி மீது திணிப்பதில்லை.  
தன்னை முதலில் மாற்றிக் கொள்ளத்தயாராக இல்லாதவர்களால் கொஞ்ச நேரப் பரபரப்புச் செய்தியாகமட்டுமே இந்த சகோதரிகளைப் போல யாருடைய கைப்பாவையாகவோ இருக்க  மட்டுமே முடியும் என்பதுதான் பரிதாபம். 
தமஸோ மா ஜ்யோதிர் கமய 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!