Showing posts with label உதயநிதி. Show all posts
Showing posts with label உதயநிதி. Show all posts

மறுபடியும்! ரங்கராஜ் பாண்டே! தயாநிதி மாறன்! உதயநிதி!

கொடநாடு எஸ்டேட் கொலைவிவகாரத்தில் திமுக தரப்பு காட்டிய வேகமும் தடை உத்தரவையும் மீறி முதல்வரை சம்பந்தப்படுத்திக் கொண்டே பேசி வந்ததையும் கவனித்தால் இன்றைக்கு சாணக்யா தளத்தில் வெளியான வீடியோ எழுப்பும் கேள்விகள், அதிர்வுகளை திமுக தரப்பு அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது.


கொடநாடு வீடியோ சொல்லும் உண்மைகள் என்று இந்த விவகாரத்தை ரங்கராஜ் பாண்டே விளக்கும் ஒரு வீடியோ  சாணக்யா தளத்தில் அடுத்தபடியாக  வெளியாகியிருக்கிறது. 19 நிமிட காட்சியாக  நாளை unedited வீடியோவை வெளியிட இருப்பதாக ரங்கராஜ் பாண்டே சொல்கிறார்.

செல்லாக்குட்டி தயாநிதி மாறனைப் பற்றி இங்கே எழுதி நீண்ட காலமாகிவிட்டது! இரண்டுநாட்களுக்கு முன்னாடியே பகிர்ந்திருக்க வேண்டிய வீடியோ இது! 


பின்னே? முன்னாடி மாதிரி தினகரனில் கருத்து கணிப்பை வெளியிட்டது மாதிரியா இப்போதும் செய்ய முடியும்?

தனதந்தி தனத்தந்தித் தானோ இந்த சதிகாரப் பாவிக்கு அதிகாரம் ஏனோ? எல்லாம் தாத்தா கருணாநிதி பாட்டுத்தான்! #குறவஞ்சி 

வாரிசுகளுக்குத் தேர்தலே ஒரு பொழுதுபோக்கு, விளையாட்டு! அவ்வளவுதான்!   

கடலூரில் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி 300 திமுகவினரின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன்கள் வழங்கப்பட்டதாக புகார்
* பெட்ரோல் நிரப்ப வந்த 165 பேரின் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
#FlyingSquad | #UdhayanidhiStalin | #Petrol
Thanthi TV
டிவி சேனல்



இப்படியெல்லாம் படாதபாடுபட்டுக் கூட்டத்தைக் கூட்டினால் உதயநிதி பேசியே கூட்டத்தைக் கலைத்து விடுவார் போல! தமிழ் தேசியம் பேசும்  கார்டூனிஸ்ட் G பாலா இப்படி சலித்துக் கொள்கிறார்!


G பாலா சலித்துக் கொள்வதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கத் தான் செய்கிறது! அவர் உதாரணம் காட்டும் சீமாறு, மயிலாப்பூரை ஸ்தம்பிக்க வைத்து ஒன்றரை மணிநேரம் பேசியதில் நம்மீது கருணை வைத்து கடைசி 30நிமிடங்களை மட்டும் இங்கே காணலாம் என செட் செய்து சுட்டி கொடுத்திருக்கிறார்!

மீண்டும் சந்திப்போம்!