“May the highest good be yours.” !


ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் Next Future எனும் மின்னிதழின் டிசம்பர் மாத இதழ் தலையங்கம் இப்படி ஆரம்பிக்கிறது.

“As the year draws to a close, we at Next Future wonder at what our personal achievements have been. Our main objective is to share some powerful thoughts with our readers. We constantly aspire that the views expressed in the magazine may inspire and motivate others to move closer and closer towards the light. And it is almost an ardent prayer on our part to use the magazine as a platform through which we can offer our best and highest, not just to those who share the moment with us, but to the One who is the source of all our effort and our inspiration.”
courtesy http://nextfuture.sriaurobindosociety.org.in/dec08/nf_home.htm

வருடம் முடியப் போகும் தருணத்தில், கடந்து வந்த பாதையை, நடத்த நினைத்து ஆனால் நடக்காமல் போன குறிக்கோள்களை, எங்கு செல்ல நினைத்து எங்கு வந்து நிற்கிறோம் என்கிற மாதிரியான சுய அலசல்கள், ஆராய்ச்சிகள், விமரிசனங்கள் எல்லாம், கிளம்புகிற தருணம் இது. ஆர்வக் கோளாறில் கிளம்புகிற இத்தகைய சுயவிமரிசனங்கள் எல்லாம், கிளம்பின வேகத்திலேயே அடங்கிப் போவது, நம்முடைய தேசியக் கலாச்சாரம், பின்னே இல்லையா!

ஒவ்வொருவரும் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது,எதையோ எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு பொதுவான நோக்கத்தில் தான் ஆரம்பிக்கிறோம்..அப்படித்தான், இந்த வலைப் பதிவும் ஒரு நெருக்கடியான கால கட்டத்தில், 2004 ஆம் ஆண்டு இறுதியில், பிறந்தது. என்னுடைய சொந்த சோகங்களை அல்லது உபதேசங்களை அள்ளித் தெளிக்க வேண்டும் என்கிற நோக்கம் அப்போதும் சரி, இப்போதும் கூட கொஞ்சமும் இல்லை. நான் அனுபவித்துக் கொண்டிருந்த கஷ்டங்களுக்கு, எனக்குள்ளேயே காரணங்களைத் தேடிக் கொண்டிருந்த காலம் அது. எவரையும் குற்றம் சொல்லவோ, அல்லது என்னை நானே சவுக்கால் அடித்துக் கொள்ளவோ அல்லாமல், ஒரு சாட்சியாக என்னை நானே வேடிக்கை பார்க்கத் தொடங்கிய ஒரு காலம், ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அருளிய பிரார்த்தனைகள், உரையாடல்கள் இவற்றுள் ஏதோ ஒரு பகுதியை அன்றன்றைய த்யானமாகப் படிப்பது, வலைப் பதிவில் இடுவதுமாக ஆரம்பித்தது.சிறிது சிறிதாக ஒரு நண்பர் வட்டம் கூடியது. 2006 ஆம் ஆண்டு நவம்பர் அனுபவங்கள், Yahoo! 360 நண்பர் வட்டத்தைக் கலைத்து விட்டு, ஒதுங்கியே இருக்கும்படி தூண்டின. அதிலே சில நல்ல நண்பர்களையும் இழந்தது, இன்னமும் கூட வருத்தம் தான்.

ஆனாலும், இந்த வலைப்பதிவுகளில் முக்கியமான விஷயம், நான் யார், இங்கு என்ன செய்கிறேன், நான் செய்ய வேண்டிய கடமை என்ன என்பது தான். ஒரு சிறு வெளிச்சக் கீற்றாகவாவது, எவருக்கேனும் இது உதவக்கூடும் என்பது தான் என் நம்பிக்கை.தமிழில் எழுத வேண்டும் என்பது வலைப் பதிவு தொடங்கிய நாளிலிருந்தே எனக்குள்ளிருந்த தாகம். அதற்கும், இப்போது தான் நேரம் வந்திருக்கிறது.

நம்முடைய பலவீனங்களும், தோல்விகளும் கூட நமக்குப் பேருதவியாக இருக்க முடியும் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார். நாம் எதிர் கொள்ளும் மிக மோசமான சூழ்நிலைகள் கூட, நமக்குள்ளிருக்கும் பலவீனத்தை, இருண்ட பகுதியை எப்படி எதிர்கொள்ள வேண்டும், வெல்ல வேண்டும் என்பதை எடுத்துச்சொல்லும் என்கிறார்.

வார்த்தைகளின் உள்ளே பொதிந்து கிடக்கிற மகா சக்தி இது வரை எனக்கு தெரியாமலே போனதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பிறக்கும் இந்த புது வருடத்திலாவது வார்த்தைகளினூடே பொதிந்து கிடக்கும் சக்தி இவனுக்கு வசப்படட்டும். பயனிலாச் சொல் எதுவும் வேண்டாம்.வார்த்தைகளின் சக்தியைக் குறித்து ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதை இன்றைய த்யானமாக ஏற்றுக் கொள்வோமா ?


The Power of Words


“It seems unnecessary to draw your attention to the quantity of useless
words that are uttered each day; this evil is well known to all, although very few people think of remedying it. But there are many other words which are spoken needlessly. That is to say, in the course of the day, we often have the opportunity of expressing a helpful wish by pronouncing one word or another, provided that we know how to put the appropriate thought behind the words. But too often we lose this opportunity of drawing a beneficial mental atmosphere around the people we know and thus of truly helping them. It would be very useful to remedy this neglect. To do this, we must refuse to allow our minds to remain in that state of vague and passive imprecision which is almost constant in most people. To cure ourselves progressively of this somnolence, we can, when pronouncing a word, force ourselves to reflect upon its exact meaning, its true import, in order to make it fully effective. In this regard, we can say that the active power of words comes from three different causes. The first two lie in the word itself, which has become a battery of forces. The third lies in the fact of living integrally the deep thought expressed by the word when we pronounce it. Naturally, if these three causes of effectiveness are combined, the power of the word is considerably enhanced. 1) There are certain words whose resonance in the physical world is the perfect vibratory materialisation of the more subtle vibration produced by the thought in its own domain. If we examine closely this similarity between the vibrations of thought and sound, we can discover the limited number of root syllables which express the most general ideas, and which are to be found in most spoken languages with an almost identical meaning. (This origin of language should not be confused with the origin of written languages, which are of an altogether different nature and correspond to different needs.) 2) There are other words which have been repeated in certain circumstances for hundreds of years and which are instinct with the mental forces of all those who have pronounced them. They are true batteries of energy. 3) Finally, there are words which assume an immediate value when they are pronounced, as a result of the living thought of the one who pronounces them. To illustrate what I have just said with an example, here is a very powerful word, for it can combine the qualities of all three categories: it is the Sanskrit word “AUM”. It is used in India to express the divine Immanence. There, it is associated with every meditation, every contemplation, every yogic practice. More than any other sound, this sound “AUM” gives rise to a feeling of peace, of serenity, of eternity. Moreover, this word is instinct with the mental forces which for centuries all those who have used it have accumulated around the idea that it expresses; and, for Hindus especially, it has the true power of bringing one into contact with the divine Essence it evokes. And as Orientals have a religious mind and the habit of concentration, few pronounce this word without putting into it the conviction that is needed to make it fully effective. In China, a similar effect is obtained with a word of identical meaning and somewhat similar sound, the word “TAO”. Our western languages are less expressive; in their present form, they are too far removed from the root language which gave birth to them. But we can always animate a word by the power of our living and active thought. Besides, there are formulas which we could profitably add to all those in common use. These formulas were used in certain ancient schools of initiation. They served as greetings, and in the mouth of one who knew how to think them, they had a very special power of action. The disciples, the neophytes who were taking their first steps on the path, were greeted: “May the peace of equilibrium be with you.” All those who by their constant and progressive inner and outer attitude had shown their deep and lasting goodwill, were greeted: “May the highest good be yours.” And in certain instructors manifesting especially high forces, this word was endowed with the power of transmitting true gifts, for example, the gift of healing. “

The Mother
From “Words Long Ago”
18 June 1912

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!