கடவுள் பாதி, மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை அல்ல மனிதன்!


Sweet Mother, please tell me the meaning of "consciousness''.

Without consciousness you would not even know that you live. Consciousness is the faculty of becoming aware of anything through identification.
The Divine Consciousness is not only aware but knows and effects. To become aware of a vibration, for instance, does not mean that you know everything about it.
In the Divine Consciousness the smallest things from below unite with the highest, the most sublime from above.

The Mother, 3 July 1954
Coll. Works Vol.15

இப்போது தான் தொடங்கின மாதிரி இருந்தது, இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டே நாட்கள் தான் மீதம் இருக்கிறது. அப்புறம் என்ன, வெடி வெடித்து, ஆர்ப்பாட்டமாக வருகிற புதிய ஆண்டின் வரவைக் கொண்டாட வேண்டியது தான்!

ஒவ்வொரு ஆண்டுத தொடக்கத்திலும், இந்த ஆண்டில் குறைந்த பட்சமாக இன்ன இன்ன இலக்கைத் தொட்டு விட வேண்டும் என்று குறித்துக் கொள்வது உண்டு. அப்புறம், அது இந்திய அரசாங்கம் போடும் அய்ந்தாண்டுத் திட்டங்கள் மாதிரித் தான். என்ன குறிக்கோளுடன், என்ன செயலைத் தொடங்கினோம், எவ்வளவு முன்னேறினோம்,இன்னமும் எட்டப் பட வேண்டிய இலக்கு எந்த அளவு இருக்கிறது அது எதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாது,அது பற்றிக் கவலை படுவாருமில்லை!

ஏகப்பட்ட அபிலாஷைகள், கனவுகள்! எல்லாம் சரி தான்! கனவுகளும், அபிலாஷைகளும் எட்ட முடியாதவை ஒன்றும் அல்ல. ஆனாலும், கனவு காணத் தெரிந்த அளவுக்கு, கனவு மெய்ப்பட, காரியம் கை வசமாக எந்த அளவுக்கு சிரத்தையுடன் உழைப்பும் வேண்டும் என்பதில் ஏற்படுகிற தளர்வு, சோம்பேறித்தனம் இதெல்லாம் தான், கனவுகளை வெறும் பகற்கனவாகவே வைத்திருக்கிறது.

Consciousness என்றும் ஜாக்ரத் அல்லது விழித்திருக்கும் நிலையைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லியிருப்பதை மேலே பார்த்தோம்.

அளவு பண்பை மாற்றும்: பண்பு அளவை மாற்றும் என்பது இயக்கத்தின் அடிப்படை விதி.

நம்முடைய ஒவ்வொரு எண்ண அலையும், செயலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு அடிப்படையாக, விதையாக இருப்பதை நாம் அறிவதே இல்லை. தெரியாமல் நிகழ்ந்த போதிலும், இந்த பிரபஞ்சம் ஒரு புதிய கட்டமைப்பிற்கு மாறிக் கொண்டே இருப்பதும், விழிப்புணர்வு என்று இப்போது நாம் அறிந்திருப்பது கூட பெரும் மாறுதலுக்கு உள்ளாகிக் கொண்டிருப்பதும் கூட பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி தான்.

மனிதப் பிறவி என்பது ஸ்ருஷ்டியின் முடிந்த, இறுதியான நிலை அல்ல.

பரிணாம வளர்ச்சியில், மிருகத்திடமிருந்து முன்னேறி, ஆனாலும், மிருக உணர்வுகளின் ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுபடாமலிருக்கும், இடைப்பட்ட நிலை தான்!

கடவுள் பாதி, மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை அல்ல மனிதன்.

மிருகவுணர்வுகளில் இருந்து விடுபட்டு தெய்வீக நிலையை எட்டக் காத்திருக்கும் ஒரு புதிய ஏற்பாடு.

You are
what your deep, driving desire is.

As
your desire is, so is your will.

As
your will is, so is your deed.

As
your deed is, so is your destiny. “

(Brihadaranyaka Upanishad, 4.4.5)


ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னைச் சரண் அடைகிறேன்.

அறியாமை, முயலாமை, இல்லாமை, இப்படி எல்லா ஆமைகளையும் என் தோள்களில் இருந்து இறக்கி வைக்க தயவு செய்வாய்.

இந்த ஆமைகளோடே இனியும் கூடியிராமல், ஒரு புதிய அனுபவத்திற்கு என்னைத் தயார் செய்வாய். தகுதியும், தைரியமும் அருள்வாய்!

பிறக்கும் புத்தாண்டு, உணமையிலேயே புத்துணர்வை அளிக்கும் ஆண்டாக வரம் அருள்வாய். வீணாய்க் கழிந்த பொழுதையும் ஈடு கட்டும் முயற்சியை, மன வலிமையை,எல்லா நேரங்களிலும் நீ என்னோடே கூட இருக்கிறாய், துணை செய்கிறாய், என்னுள் நிறைந்து எல்லாவற்றையும் நீயே நடத்துகிறாய் என்கிற உறுதியான நம்பிக்கையை வரமாக அருள்வாய்.

ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்ய மயி, பரமே!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!