...
2010 -ல ஐமு கூட்டணி குழப்பம் வெர்ஷன் ரெண்டை ஏழரை பிடிக்க ஆரம்பிச்சது! ஆதர்ஷ் வீடு கட்டின ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2G ஸ்பெக்ட்ரம் ஊழல், கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் ரிலையன்சைக் கொள்ளையடிக்க விட்டதில் ஊழல்னு ஒவ்வொண்ணா வெடிச்சுச் சிதறிக்கிட்டே இருக்கு! பத்தாக்குறைக்கு முன்னாள் தலைமைநீதிபதி கேஜி பாலகிருஷ்ணனை வச்சு செஞ்ச ஊழலை மூடி மறைக்க அரசே படாதபாடு படுதுன்னு வேற செய்திகள்!
பானாசீனாவுக்கு அதிருஷ்டம் இன்னும் எத்தனை நாளோ?
மாட்டினவன் மாட்டிக்கோ! தப்பிக்க முடிஞ்சவன் தப்பிச்சுக்கோ!
அன்னைக்கு திமுக கூட்டணி தர்மத்தில் தனக்கு இன்னின்ன துறைகள் தான் வேண்டும் இல்லையென்றால் வெளியில் இருந்து ஆதரவு என்று சொன்னதனால் இன்னைக்கு வெளியில் இருந்துகொண்டு அவனை நீக்கு, அப்புறம் இவனை நீக்கு என்று மேடம் சொல்றாங்கன்னு சொன்னால் எப்பூடி?
எல்லாம் ஏட்டிக்குப் போட்டி தானா?
எல்லாம் ஏட்டிக்குப் போட்டி தானா?
திஹாருக்கு உள்ளே போனப்புறமும் இப்படித்தான் இருப்பாங்களாம்!கேட்டாக்க, தமிழ்நாடு சட்டசபையிலதான இடமில்லை! திஹார் சிறைக்குள் எங்க குடும்பம் தான் தனி மெஜாரிட்டின்னு சொல்றாங்களாம்!
குடும்பம் ஒரு கதம்பம்! கழகம் ஒரு குடும்பம்னு சொல்றது இதைத்தானோ? இதுக்குத்தானோ?
அட மாண்புமிகு நாதாரிங்களா! (மந்திரிங்கன்னு படிச்சுக்குங்க!) கொள்ளையடிச்ச பணத்தை எப்போ திருப்பிக் கொடுப்பீங்களாம்?
பானாசீனாவுக்கு அதிருஷ்டம் இன்னும் எத்தனை நாளோ?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் குழப்பத்தின் ஒரே குறிக்கோள், ஒன் லைன் தீம் இது தானோ?
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!