மாறனுக்கு ஆப்பு! அடுத்து, காங்கிரஸ் கொள்ளையனே! வெளியேறு!ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?
கேடிகள் கைகளில் தேசம் சிக்கிச் சீரழிந்ததும் என்ன?
டாட்டாவுக்கும் அம்பானிக்கும் கிளீன் சிட்!அவங்க எந்தத்
தப்புமே செய்யலையாம்! உத்தமராம்!சிபிஐ சொல்லுது.

...............காகித ஓடம், கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்!

           

கூட்டணிப் பங்கீடு பணப் பெட்டிகளில் தான் வாழும்; ஆனால்
அகப்பட்டவனுக்கு மட்டும் அட்டமச்சனி,கூடவே ஏழரையும் என்பதுதான்
இந்தியத்திருநாட்டில் "கூட்டணி தர்மம்"! இதுதான் அரசியல் அரிச்சுவடி!
தெரியாமப் போச்சேன்னு இப்பப் புலம்பி ஆவதென்ன?

...............காகித ஓடம், கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்!கெட்டவனோடு சேர்ந்திடில் கிட்டிடும் தோல்வி என்று
பட்டுத்  தெரிந்துகொண்டு மூக்கால் முனகிக் கொண்டு
கெட்டதும் பெண்ணாலே திமுக ஆனதும் பெண்ணாலே!
மெட்டுப் போட்டு பாட்டுப் பாடி வைத்ததும் மறந்து போனதோ?

...............காகித ஓடம், கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்!ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிமுடித்துவிழும் பம்பரம்தான்
வாழ்க்கை நிலையாமைக்கு நல்லதொரு உதாரணமாம்!
கூடாநட்பு கேடுதரும் என்பதும்கூட இங்கே பொருந்திவரும்.
உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய்

...............காகித ஓடம், கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்!சிந்துபாத் கதைகளிலே வருகிற நொண்டிக் கிழவன் போல் அடுத்தவர்
தோள் மீதேறி அதிகாரம் செய்யத் தெரிந்த சொந்தவலுவில்லாத காங்கிரஸ்
கட்சிக்கும் காத்திருக்கு பெரிய ஆப்பு! காங்கிரசுக்கும் ஆப்பு வச்சாத் தான் 
இந்த தேசம் பிழைத்திருக்கும்!உணர்ந்துகொண்டால் விடுதலை நமக்குண்டு!

சென்ற பதிவில், நண்பர் ஸ்ரீராம், பாபா ராம்தேவ் விவகாரத்தில் மாறன் விஷயம் கொஞ்சம் அமுங்கிப் போய்விடுமோ என்ற ரீதியில் ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் வரலாறு தெரிந்தவர்களுக்கு, அப்படி சந்தேகங்கள் வருவதில்லை! தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும்,பதவியில் ஒட்டிக் கொள்ளாமல் ஒரு நாள் கூட உயிர் வாழமுடியாத நபர்களால் நிரப்பப்பட்ட கட்சி அது. கருணாநிதிக்கு, காங்கிரசோடு கூட்டணி வைத்துக் கொண்டு "அனுபவித்த போது" கூட்டணி தர்மம் இனித்தது! இப்போது தேர்தலிலும் தோற்று, குடும்பத்தில் ஒவ்வொருவராக ஏதோ ஒரு ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொண்டு சிறை நிரப்பும் கட்டத்துக்குத்  தள்ளப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் பேசும் "கூட்டணி தர்மமே" வேறு என்பதைப் பார்த்துக் கசந்து, கூடா நட்பு கேடு தரும் என்று அனுபவித்து நொந்து சொல்லியிருக்கிறார்.

தயாநிதி,மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து கழற்றி விடப்படுவார்
என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

அஞ்சாநெஞ்சன் என்று சொல்லிக் கொண்டவர் இன்றைக்கே வருமோ, நாளைக்கு வருமோ என்று பிடிவாரண்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரமும் வந்தது. ஆமாம், இன்றைக்கு முக அழகிரி மேலூர் கோர்டில் சரணடைந்து, முன்ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

கருணாநிதியும், ஐமு கூட்டணிக் குழப்பத்தில் இருந்து நாங்களாகத் தான் வெளியேறினோம் என்று "மாரடிக்க" ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி விட்டார் என்றும் தலைப்புச் செய்தியாக கசிகின்றன.

திருடர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டால் மட்டுமே உண்மைகள் நிறைய வெளியே வரும் என்ற நிலை மாறி, திருடர்களுக்கு  இடம் கொடுக்காத விழிப்புணர்வைப் பெற என்ன செய்யப் போகிறோம்? 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!