Thursday, February 18, 2010

கவிதை மாதிரி! ஆனால் கவிதை இல்லை!இது கவிதை மாதிரி.......ஆனால் கவிதை இல்லை!
 
"கழிப்பறைக்குப் போய்த் திரும்பியதும் நிம்மதி!
கழித்தபின் தான் எத்தனை சுகம்! என்ன சுகம்!
முடியாமல் தேங்கி விட்டால் பெரும் சிக்கல் தான்!
எழுதிக் கழித்ததையும் தள்ளிவிட்டால் அப்படித் தான்!
கழித்தவனுக்கு நிம்மதி! சரி!
கழிவைச் சுமந்தவனுக்கு? காசு கொடுத்து
வாங்கிப் படித்தவனுக்கு........?

சொந்தக் கழிவுகளையே அகற்ற முடியாமல்
அவனவன் தவியாய்த் தவிக்கும்  போது
இவன் அவன் கழித்துப் போட்டதையும் சுமக்க
வாசகன் என்ன கழிப்பறையா? வந்தவனெல்லாம்
வந்து வந்து கழித்து விட்டுப் போவதற்கு?
அப்படித்தான் நினைப்பிருக்கும் போல!
குப்பைகளை இங்கே கொட்டாதீர்!"

" இத்தனை எழுதித்தள்ளிவிட்டோமே என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் வேறு வழியில்லை. எழுதாவிட்டால் அத்தனை நூல்களையும் நான் உள்ளே அல்லவா வைத்திருக்க வேண்டும்!"

குப்பை கொட்டுவதைப் பெருமிதமாகச் சொன்ன வார்த்தைகளைப் படித்துவிட்டு, குப்பை  சுமக்கிறவர்கள் மேல் பரிதாபம் மேலிட்டு எழுதிய  கவிதை மாதிரி! 


ஆனால் கவிதை இல்லை!

பச்சையாகச் சொன்னதற்கு அப்புறமும் தனி விளக்கம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்!

 

9 comments:

 1. /* குப்பை கொட்டுவதைப் பெருமிதமாகச் சொன்ன வார்த்தை*/

  இந்த இடுகையை படித்தேன். இவர் அசோகமித்திரனை கிண்டல் செய்கிறாரா ? அல்லது கணினி வைரஸ் பற்றி இவருக்கு தெரியவில்லையா ?
  நான் என்னதான் கணினி பொறியாளர் ஆகா இருந்தாலும் என்னால் பல கணினி வைரஸ்களை சமாளிக்க முடிவதில்லை. என்னுடையே அமெரிக்க மேலாண்மை அதிகாரிக்கே கணினி வைரஸ்களை கண்டு பயம்.
  ஏன், அமெரிக்காவாலேயே சீனா செய்யும் வைரஸ் வித்தைகளை சமாளிக்க முடிவதில்லை.
  இதில் இவருக்கு அசோகமித்திரனை பார்த்து ஒரு நையாண்டி. தலையில் தான் அடித்துக்கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 2. இந்தக் கவிதை மாதிரி, ஆனால் கவிதையாக இல்லாத விஷயம், தொடுப்பில் உள்ள பதிவில் முதல் 4 to 7 வது வரிகளிலேயே இருக்கிறது!

  எழுதிக் குப்பை கொட்டிய கதை! இல்லையென்றால், அத்தனையும் அவருக்குள்ளேயே அடைசலாக அல்லவா இருந்திருக்கும்!

  அவஸ்தையைக் கழித்து, அடுத்தவன் தலையில் கட்டியாயிற்று என்ற ஒரு பகுதியை மட்டுமே கொஞ்சம் எள்ளலாகச் சொல்லியிருந்தேன்.

  அசோகமித்திரன், கொஞ்சம் யதார்த்தமான ஆசாமி! இந்த மாதிரிப் பிரகிருதிகளுக்கெல்லாம் அசருகிற டைப் இல்லை!

  கணினி வைரஸ் பற்றிய பகுதி, அவரைப் பொறுத்தவரை அங்கதமாகச் சொல்லப் பட்டது மட்டுமே! யாராவது கேட்டால் அப்படித்தான் சொல்வார்!

  இங்கிதம் தெரியாத தலைக் கனம் பிடித்த நபரிடமிருந்து வருகிற farting அது!

  ReplyDelete
 3. சாப்பிட்டதெல்லாமா வெளியேற்றி விடுகிறோம்?.. இல்லையே! சத்தைத் தேக்கிக் கொண்டு, சக்கையைத் தானே?

  அதுபோலத்தான் எழுத்தாளனும் என்பது என் நினைப்பு. பார்த்த, படித்த, நினைத்துச் சேமித்த சத்தை பரிமாறுகிறான். சத்து இருந்தால் தானே பரிமாறும் பண்டம் (எழுத்தாக்கம்) சத்துள்ளதாக இருக்கும்? இல்லை என்றால் வெறும் காகிதக் குப்பைகளாக அல்லவோ போய்விடும்?..

  நல்ல வாசகனும் குப்பைகளைச் சீண்ட மாட்டான்.

  ReplyDelete
 4. வாருங்கள் ஜீவி சார்!

  ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறான், தன்னைச் சுற்றியுள்ள உலகம் தன்மேல் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைச் சொல்கிறவனாக இருக்கிறான், பல தருணங்களில், தான் தட்டுத் தடுமாறிக் கண்டுபிடித்த வெளிச்சத்தில் வாசகனையும் சேர்த்து அழைத்துப் போகிற வழிகாட்டியாகவும் இருக்கிறான் என்ற சித்திரம் எனக்குள் மிக அழுத்தமாக இருக்கிறது, மறந்து விடவில்லை!

  அந்த மாதிரியான எழுத்தை அனுபவித்துப் படித்து வளர்ந்தவன் நான் என்பதில் ஒரு கர்வமே இருக்கிறது.

  அதே நேரம், அங்கதம் என்ற சந்தடி சாக்கில் இங்கிதம் தெரியாமல், அல்லது தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை அவ்வப்போது தம்பட்டம் அடித்துச் சொல்கிற நபர்களைப் பார்க்கும்போது, கோபம் வருவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

  இதைத் தூண்டிய பதிவின் சுட்டி கீழேயே இருக்கிறது! அதைப் படித்தீர்களா என்று எனக்குத் தெரியவில்லை!

  அகிலன், நா.பா மாதிரி லட்சிய வேகமும் தன்மானமும் மிகுந்த எழுத்தாளர்களையும் பார்த்திருக்கிறேன்! வாசித்துக் கொண்டிருக்கிறேன்!

  சமீபகால எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் ஒரே நேரத்தில் ஒரே எழுத்தாளர் இணையத்தில் வாந்தி எடுத்ததை எல்லாம் தொகுத்து ஒரே சமயத்தில் பத்து, பதினைந்து நூல்களாக வெளியிடுகிற கொடுமையை நீங்கள் எந்த அளவுக்குக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை!

  என்னத்தைச் சொல்ல ...... :-((

  ReplyDelete
 5. //ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறான், தன்னைச் சுற்றியுள்ள உலகம் தன்மேல் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைச் சொல்கிறவனாக இருக்கிறான், பல தருணங்களில், தான் தட்டுத் தடுமாறிக் கண்டுபிடித்த வெளிச்சத்தில் வாசகனையும் சேர்த்து அழைத்துப் போகிற வழிகாட்டியாகவும் இருக்கிறான் என்ற சித்திரம் எனக்குள் மிக அழுத்தமாக இருக்கிறது, மறந்து விடவில்லை!

  அந்த மாதிரியான எழுத்தை அனுபவித்துப் படித்து வளர்ந்தவன் நான் என்பதில் ஒரு கர்வமே இருக்கிறது.//

  ஆஹா! எவ்வளவு உணர்வு பூர்வமாகச் சொல்லியிருக்கிறீர்கள்?..
  நினைப்பதை எவ்வளவு அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்?..
  உங்களைப் பார்த்து எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. நல்ல வாசகனே நல்ல எழுத்தாளனை உருவாக்குபவன் மட்டுமல்ல, ஒரு நல்ல எழுத்தாளனாகவும் பரிமளிப்பவன் என்கிற கருத்து மேலும் பலப்பட்டிருக்கிறது.

  மிக்க நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.

  ReplyDelete
 6. சமீபகால எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் ஒரே நேரத்தில் ஒரே எழுத்தாளர் இணையத்தில் வாந்தி எடுத்ததை எல்லாம் தொகுத்து ஒரே சமயத்தில் பத்து, பதினைந்து நூல்களாக வெளியிடுகிற கொடுமையை நீங்கள் எந்த அளவுக்குக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை!"//

  ஏன் இந்தக் கோபம்? யார் மேல்?

  ReplyDelete
 7. ஸ்ரீராம்!

  அதற்கு முந்தைய வரிகளிலேயே, யார் மேல், எதற்காக, ஏன் கோபம் என்பதெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது.

  எழுத்தை, வாசிக்கிறவன் கொண்டாடினால் அதில் அர்த்தம் இருக்கிறது!

  குப்பை கொட்டினவனே, பார்த்தாயா நான் எத்தனை குப்பை கொட்டியிருக்கிறேன், இதை உன் வீட்டு வாசலில் கொட்டவில்லை என்றால், எனக்குள்ளேயே கிடந்து அடைப்பு நாறிப்போய் இருக்கும் என்றெல்லாம் பீற்றிக் கொள்பவர்களைக் கண்டு கோபப் படாமல் வேறென்ன செய்வது?

  ReplyDelete
 8. what about in blogger world.

  95% bloger writing useless only.

  they wasting their time and others also. they making syndicate themself for voting and doing all nonsense.

  but we have to found good blogs in wastes only.

  real pity they publishing books also.

  ReplyDelete
 9. வாருங்கள் திரு.பாலு,

  பதிவுகள், முதிர்ச்சியடையாத எழுத்துக் களம். நமக்குள் சொல்லத் தவிக்கிற உணர்வுகளைக் கொட்டுகிற இடமாக இருப்பதால், எழுதப்படுகிற எல்லாமே செம்மையாகவோ, பயனுள்ளதாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

  எழுத எழுத, முதிர்ச்சி தானே வருகிறது, அடுத்தவர் சொல்வதைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகமாகக் கிடைக்கிறது என்று பார்க்கும்போது, எந்தப் பதிவுமே பயனற்றது என்று அப்படியே ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

  ஒரு நல்லதைத் தேர்ந்தெடுக்க நாற்பது குப்பைகளைப் படிக்க வேண்டியிருக்கிறதே என்ற அலுப்பில் எழுதியது தான் இந்தக் கவிதை மாதிரியாக, ஆனால் இல்லாத பதிவு!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails