Showing posts with label இங்கே குப்பை கொட்டாதீர். Show all posts
Showing posts with label இங்கே குப்பை கொட்டாதீர். Show all posts

கவிதை மாதிரி! ஆனால் கவிதை இல்லை!



இது கவிதை மாதிரி.......ஆனால் கவிதை இல்லை!
 
"கழிப்பறைக்குப் போய்த் திரும்பியதும் நிம்மதி!
கழித்தபின் தான் எத்தனை சுகம்! என்ன சுகம்!
முடியாமல் தேங்கி விட்டால் பெரும் சிக்கல் தான்!
எழுதிக் கழித்ததையும் தள்ளிவிட்டால் அப்படித் தான்!
கழித்தவனுக்கு நிம்மதி! சரி!
கழிவைச் சுமந்தவனுக்கு? காசு கொடுத்து
வாங்கிப் படித்தவனுக்கு........?

சொந்தக் கழிவுகளையே அகற்ற முடியாமல்
அவனவன் தவியாய்த் தவிக்கும்  போது
இவன் அவன் கழித்துப் போட்டதையும் சுமக்க
வாசகன் என்ன கழிப்பறையா? வந்தவனெல்லாம்
வந்து வந்து கழித்து விட்டுப் போவதற்கு?
அப்படித்தான் நினைப்பிருக்கும் போல!
குப்பைகளை இங்கே கொட்டாதீர்!"





" இத்தனை எழுதித்தள்ளிவிட்டோமே என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் வேறு வழியில்லை. எழுதாவிட்டால் அத்தனை நூல்களையும் நான் உள்ளே அல்லவா வைத்திருக்க வேண்டும்!"

குப்பை கொட்டுவதைப் பெருமிதமாகச் சொன்ன வார்த்தைகளைப் படித்துவிட்டு, குப்பை  சுமக்கிறவர்கள் மேல் பரிதாபம் மேலிட்டு எழுதிய  கவிதை மாதிரி! 


ஆனால் கவிதை இல்லை!

பச்சையாகச் சொன்னதற்கு அப்புறமும் தனி விளக்கம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்!