...
மரணத்தை
வெல்லவேண்டும்!இதுவே மனித குலத்தின் நீண்டநாள் கனவாகவும், தவிப்பாகவும்,
தவமாகவும் இருக்கிறது. ஆனால், மரணம் என்றால் என்ன, ஜனனம் என்றால் என்ன
என்பதை ஒரு தெளிவான விசாரணையாகவும், உள்ளார்ந்த தேடலாகவும் இந்தப் புண்ணிய
பூமியிலன்றி உலகில் வேறெங்கும் நிகழ்ந்ததில்லை. மரணத்தை வெல்ல முடியும்
என்பது ஒட்டு மொத்த மனித குலத்தின் கனவாகவும், லட்சியமாகவும்
இருந்தபோதிலும், அதை வென்று காட்டியவர்கள் வெகு சிலரே.
மகாபாரதத்தில் சத்தியவான்-சாவித்ரி கதை கொஞ்சம் சுருக்கமாக, இந்த விஷயத்தைத் தொட்டுச் செல்கிறது.அதே மாதிரி கடோபஷநித்தில் நசிகேதஸ் என்ற சிறுவன், தர்மதேவதையிடம் இதைத் தெரிந்து கொள்வது விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.
மகாபாரதத்தில் சத்தியவான்-சாவித்ரி கதை கொஞ்சம் சுருக்கமாக, இந்த விஷயத்தைத் தொட்டுச் செல்கிறது.அதே மாதிரி கடோபஷநித்தில் நசிகேதஸ் என்ற சிறுவன், தர்மதேவதையிடம் இதைத் தெரிந்து கொள்வது விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.
|
||
பகவான் ஸ்ரீ அரவிந்தர்,உரை,மனம் கடந்து அரைசு செய்தோங்கும் அருட்பெரும் ஜோதியை இந்த மண்ணில் கொண்டு வருவதற்காகத் தன்னுடைய உடலைத் தியாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5. | ||
ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய
தத் சவிதுர் வரம் ரூபம் ஜ்யோதிர் பரஸ்ய தீமஹி யன்ன சத்யேன தீபயேத்
Remember
and Offer! எப்படிப் பட்ட பிரச்சினையானாலும், உள்ளது உள்ளபடி ஸ்ரீ
அன்னையிடம், ஸ்ரீ அரவிந்தரிடம் ஆத்ம சமர்ப்பணமாகச் செய்ய முற்படும்போது,
எனக்குள் ஏதோ ஒன்று பழக்கத்தின் அடிமையாகவோ அல்லது, சமர்ப்பணம் முழுமையடைய
விடாமலோ தடுத்துக் கொண்டிருப்பதை கடந்த சில மாதங்களாகவே கவனித்துக்
கொண்டிருக்கிறேன்.
வம்பு, வழக்குகள் -அதனால் எழும் குழப்பங்களையும், சோர்வையும் ஸ்ரீ அரவிந்த
அன்னையே, உன்னிடம் சமர்ப்பிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? இப்படி
வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது ஸ்ரீ அரவிந்தரின் இந்த அமுத மொழி,
நம்பிக்கையளிப்பதாக இருப்பதையும், திருவருள் துணை இருப்பதையும் மீண்டும்
மீண்டும் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பாக இருப்பதையும் பார்த்தேன்.
"Imperfect capacity and effect in the work that is meant for thee is better than an artificial competency and a borrowed perfection." Sri Aurobindo Thoughts and Aphorisms ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய என்று இருகரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதைத் தவிர வேறென்ன செய்து விட முடியும்? |
பகிர்வதிலும் பகிர்வதை அடியொற்றி மனசில் வாங்கிக் கொள்வதின் புரிதலிலும் தனியான ஒரு சந்தோஷம் இருக்கிறது. தங்கள் பகிர்தலுக்கு நன்றி, எஸ்.கே.சார்!
ReplyDelete