The Sunlit Path! பூமிக்கு வந்த பொன் ஒளி!

...

ரணத்தை வெல்லவேண்டும்!இதுவே மனித குலத்தின் நீண்டநாள் கனவாகவும், தவிப்பாகவும், தவமாகவும் இருக்கிறது. ஆனால், மரணம் என்றால் என்ன, ஜனனம் என்றால் என்ன என்பதை ஒரு தெளிவான விசாரணையாகவும், உள்ளார்ந்த தேடலாகவும் இந்தப்  புண்ணிய பூமியிலன்றி உலகில் வேறெங்கும் நிகழ்ந்ததில்லை. மரணத்தை வெல்ல முடியும் என்பது ஒட்டு மொத்த மனித குலத்தின் கனவாகவும், லட்சியமாகவும் இருந்தபோதிலும், அதை வென்று காட்டியவர்கள் வெகு சிலரே.

காபாரதத்தில் சத்தியவான்-சாவித்ரி கதை கொஞ்சம் சுருக்கமாக, இந்த விஷயத்தைத் தொட்டுச் செல்கிறது.அதே மாதிரி கடோபஷநித்தில் நசிகேதஸ் என்ற சிறுவன், தர்மதேவதையிடம் இதைத் தெரிந்து கொள்வது விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.



பகவான் ஸ்ரீ அரவிந்தர்,உரை,மனம் கடந்து அரைசு செய்தோங்கும் அருட்பெரும் ஜோதியை இந்த மண்ணில் கொண்டு வருவதற்காகத் தன்னுடைய உடலைத் தியாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.
 
ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய 

தத் சவிதுர் வரம் ரூபம் ஜ்யோதிர் பரஸ்ய தீமஹி
யன்ன சத்யேன தீபயேத் 

 
 

Remember and Offer! எப்படிப் பட்ட பிரச்சினையானாலும், உள்ளது உள்ளபடி ஸ்ரீ அன்னையிடம், ஸ்ரீ அரவிந்தரிடம் ஆத்ம சமர்ப்பணமாகச் செய்ய முற்படும்போது, எனக்குள் ஏதோ ஒன்று பழக்கத்தின் அடிமையாகவோ அல்லது, சமர்ப்பணம் முழுமையடைய விடாமலோ தடுத்துக் கொண்டிருப்பதை கடந்த சில மாதங்களாகவே கவனித்துக் கொண்டிருக்கிறேன். 
 
வம்பு, வழக்குகள் -அதனால் எழும் குழப்பங்களையும், சோர்வையும் ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னிடம் சமர்ப்பிப்பதைத் தவிர வேறென்ன  செய்ய முடியும்? இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது ஸ்ரீ அரவிந்தரின் இந்த அமுத மொழி, நம்பிக்கையளிப்பதாக இருப்பதையும், திருவருள் துணை ருப்பதையும் மீண்டும் மீண்டும் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பாக இருப்பதையும் பார்த்தேன். 

"Imperfect capacity and effect in the work that is meant for thee is better than an artificial competency and a borrowed perfection."
Sri Aurobindo 
 
Thoughts and Aphorisms

அருட்பெரும் ஜோதியாக இறைவனது கருணை இந்த மண்ணில் இறங்கி  வரும் தருணத்தை விரைவுபடுத்தும் பொருட்டு, ஸ்ரீ அரவிந்தர் தனது உடலையே தியாகம் செய்த நாள் டிசம்பர் 5. தொடர்ந்து ஐந்து நாட்கள் அந்தப் பொன்னொளி ஸ்ரீ அரவிந்தரின் உடலில் தங்கி இருந்ததைக் கண்டுகொள்ளும் அற்புத வரம் பலருக்கும் அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குமுன்னால் கிடைத்தது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய
என்று இருகரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதைத் தவிர வேறென்ன செய்து  விட முடியும்?

1 comment:

  1. பகிர்வதிலும் பகிர்வதை அடியொற்றி மனசில் வாங்கிக் கொள்வதின் புரிதலிலும் தனியான ஒரு சந்தோஷம் இருக்கிறது. தங்கள் பகிர்தலுக்கு நன்றி, எஸ்.கே.சார்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!