ஆயிரம் ஆயிரம் தீபங்கள் ஒளிர் விடட்டும்!

ஆயிரம் ஆயிரம் தீபங்கள் ஒளிர் விடட்டும்!

இரண்டு வருடங்களுக்கு முன்னால், சுவாமி சிவானந்தருடைய உரையிலிருந்து ஒரு பகுதியை தீபாவளிச் சிந்தனையாக இந்த வலைப் பதிவில், "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதி வரிகளை நினைவு கூர்ந்த வலைப்பதிவு இதோ:

Many Deepavali festivals have come and gone. Yet the hearts of the vast majority are as dark as the night of the new moon. The house is lit with lamps, but the heart is full of the darkness of ignorance.

O man! Wake up from the slumber of ignorance. Realise the constant and eternal light of the Soul, which neither rises nor sets, through meditation and deep enquiry.

May you all attain full inner illumination! May the supreme light of lights enlighten your understanding! May you all attain the inexhaustible spiritual wealth of the Self! May you all prosper gloriously on the material as well as spiritual planes!"


The blog is inspired by the chat krishnamoorthy had with sri Krishnan [Chris] yesterday, while discussing Ravi's blog on child labour..our responsibility..our particiation.

See the link below, to find how you can also participate:

http://blog.360.yahoo.com/blog-oa0W6L88dK7Fz7P5899.6TnxSQ--?cq=1&p=1028#comments


இந்த தீபாவளியில் ஏற்றப் படுகிற ஒவ்வொரு தீபமும் இன்னுமொரு நூறு, ஆயிரம் தீபங்களை ஏற்றும் ஞான தீபங்களாகச் சுடர் விடட்டும்.

கல்வி என்பது அரசியல் பெருச்சாளிகளின் பிடியில் சிக்கி, வெறும் வியாபாரமாகவும் ஓட்டுக்களை பெறுகிற தந்திரமாகவும் மாறிப் போன சூழலில், அறிவையும், பண்பையும் வளர்க்க வேண்டிய கல்வி இன்று சாதி, இனம் என்று பிரித்து வைக்கிற சாதனமாகவே பயன்படுகிற நிலையில் இருந்து மாறி, கற்றலென்பது மனித குலத்தை, மிருகங்களாக இருக்க வைக்கிற பழக்கங்களில் இருந்து விடுவித்து, உயர் தெய்வ நிலைக்கு எடுத்துச் செல்லும் பாதையாக மாறட்டும்.

சுயநலமில்லாத, அர்ப்பணிப்புடன் கூடிய பன்னிரண்டு இளைஞர்களைத் தாருங்கள், பாரத தேசத்தை உன்னத நிலைக்கு இட்டுச் செல்கிறேன் என்றார் சுவாமிவிவேகானந்தர்.

குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவன்

அன்றுஞாலம் அளந்தபிரான் பரன்

சென்றுசேர் திருவேங்கடமாமலை

ஒன்றுமே தொழ நமவினைஓயுமே


என்று நம்மாழ்வார் அருளியபடி குன்றமேந்திக் குளிர்மழை காத்த பெருமானை இந்த தீபாவளி நாளில் வணங்கி இந்த தேசம் உருப்பட ஒரு வழி காட்டும்படி பிரார்த்தனை செய்கிறேன்.

ஆயிரம் ஆயிரம் தீபங்கள் ஒளிர் விடட்டும்! அகந்தை இருள் விலகட்டும்!