படித்ததும் பிடித்ததும் --ஆன்மீகம்4டம்ப்மீஸ்!


அலிப்பூர் சதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டபிறகு, ஸ்ரீ அரவிந்தர் 1909, மே மாதம் 30 ஆம் தேதி, உத்தர்பாரா என்ற இடத்தில் உரை நிகழ்த்தினார். உத்தர்பாரா உரை என்று பின்னாட்களில், புகழ் பெற்ற இந்த உரையில், தான் செய்ய வேண்டிய இரண்டு பணிகள் என்ன என்பதில் இறைவன் திருவுள்ளக் குறிப்பைப் பெற்றதைக் குறித்து விளக்கமாகச் சொல்கிறார். உத்தர்பாரா உரை நிகழ்ந்து ஒரு நூற்றாண்டு முடியும் தருணம் இன்று, மே 30 ஆம் நாள்! ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவரையும் வணங்கி, இந்தத் தருணம், ஸ்ரீ அரவிந்த யோகத்தில் பங்கு பெறும் புண்ணியம் அருள வேண்டுமென இறைஞ்சுவோம்!




படித்ததும் பிடித்ததும் என்று முந்தைய பதிவிற்குத் தலைப்பிட்டிருந்தேன்.
அளியன், அறியாமையில் எழுதிய வார்த்தைகளாகவே ஸ்ரீ அரவிந்த அன்னையின் இந்த அமுத மொழிகளைப் படித்த பிறகு, என்னை வெட்கம் கொள்ளச் செய்தது.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதைப் பார்ப்போம்:

"We read, we try to understand, we explain, we try to know.
But a minute of true experience teaches us more than millions of words and hundreds of explanations.
So the first question is: "How to have the experience?"

To go within yourself, that is the first step.
And then, once you have succeeded in going within yourself deeply
enough to feel the reality of that which is within, to widen yourself progressively, systematically, to become as vast as the universe and lose the sense of limitation.
These are the first two preparatory movements.

And these two things must be done in the greatest possible calm, peace
and tranquility. This peace, this tranquility brings about silence
in the mind and stillness in the vital.

This effort, this attempt must be renewed very regularly,
persistently. And after a certain lapse of time, which may be longer
or shorter, you begin to perceive a reality that is different from the
reality perceived in the ordinary, external consciousness.

Naturally, by the action of Grace, the veil may suddenly be rent from
within, and at once you can enter the true truth; but even when that
happens, in order to obtain the full value and full effect of the experience,
you must maintain yourself in a state of inner receptivity,
and to do that, it is indispensable for you to go within each day.

The Mother
[CWMCE, 10:19-20]

சென்ற பதிவின் இறுதியில் ஸ்ரீ அரவிந்தர் ஆன்மீக அனுபவத்தைப் பெறுவது எப்படி என்பதைச் சொல்லி இருந்ததைக் கண்டோம். இங்கே ஸ்ரீ அரவிந்த அன்னை, அதையே இன்னமும் கொஞ்சம் எளிமையாகச் சொல்லியிருக்கிறார்.

பல நூறு புத்தகங்களைப் படிப்பதை விட, பல்லாயிர மணி நேரச் சொற்பொழிவுகளைக் கேட்பதை விட, ஒரே ஒரு அனுபவம், அது எவ்வளவு சிறியதாக இருந்த போதிலும் கூட, உண்மையை உள்ளது உள்ளபடி புரிய வைத்து விடும்.

தீ சுடும் என்பதை ஆயிரம் பக்கங்களில் எழுத முடியும். பலமணி நேரம் அது எப்படி என்பதை விளக்கிப் பேசிக்கொண்டே இருக்க முடியும். ஆனாலும், அத்தனையும், ஒரு அனுமானமாகவே நின்றுவிடும். நேரடியாகவே தீக்குள் விரலை வைத்தால், இத்தனை பாடு படாமலேயே, இவ்வளவு வியாக்கியானங்கள் இல்லாமலேயே, எவருடைய துணையும் இல்லாமலேயே, சுடுதல் என்றால் என்ன என்கிற ஞானம் கிடைத்து விடுகிறது, இல்லையா!

ஞானம் என்பது அனுபவம் பழுத்து வருவது, அதுவாகவே ஆகி விடுவது. உரை, மனம் கடந்து நிற்பது,சாட்சியே தேவைப் படாதது, என்றும் உள்ளது.

இதை அறிவதற்கு, நமக்குள்ளேயே உள்ளொளியைக் காணும் திறம் வேண்டும். வெளியே தேடிப் பயனில்லை. இன்றைய அறிவியல் பரிசோதனைக்கூடங்களில் உண்மையை, உள்ளது உள்ளபடி அறிய முடியாது. தனக்குத் தெரிந்தது தான் முழு உலகம் என்று எப்படி ஒரு கிணற்றுத் தவளை வாதிடுமோ, அதே மாதிரி, தனக்குத் தோன்றிய விதத்தில் காண முடியவில்லை, அதனால், இறைவன் என்பவன் இல்லவே இல்லை என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

ஒன்றும் தெரியாத நிலையில் இருப்பவர்கள் கூடப் புரிந்து கொள்கிற மாதிரி, computer for dummies தலைப்பில் சீரியலாகப் புத்தகங்கள் வந்து கொண்டிருக்கிற மாதிரி, புரிந்து கொள்ளக் கொஞ்சம் கடினமான அத்வைதக் கருத்துக்களை anmikam4dumbme என்ற தலைப்பில் டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் எளிய தமிழில் தொடர்ந்து தனது வலைப்பூவில் வெளியிட்டு வருகிறார். எவ்வளவு எளிமையாக எழுதினாலும், வெறும் வாசிப்பு மட்டுமே புரிதலுக்கு உதவாது என்பதை, பின்னூட்டங்களில் வந்த கருத்துக்கள், கேள்விகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது மறுபடியும் ஸ்ரீ அரவிந்த அன்னையின் வார்த்தைகளை நினைவு படுத்திக் கொள்வோம்:

"We read, we try to understand, we explain, we try to know.

But a minute of true experience teaches us more than millions of words and
hundreds of explanations.

So the first question is: "How to have the experience?"



படித்ததும் பிடித்ததும் தலைப்பிற்குப் பொருத்தமான இந்த வலைப்பூவை இன்றைக்கு அறிமுகம் செய்து கொள்வோம். இதில் சொல்லப் பட்டிருக்கும் சில விஷயங்களை, விவாதிப்பதற்கு, இது ஒரு முன்னூட்டம். அங்கே நான் எழுப்பியிருந்த கேள்வி இது.

//த்வைதி, அத்வைதி, விசிஷ்டாத்வைதி மூணு தரப்புமே ஒத்துக்கற, வ்யாஸ பகவானுடைய கதையிலேயே ஒரு திருஷ்டாந்தம் இருக்கே அண்ணா!

வ்யாசருடைய மகன் சுகர். சுகருக்கு, பிரம்மத்தைப் பத்தி உபதேசம் பண்ணினாராம் வியாசர். கேட்ட விஷயத்தைக் கற்பூரம் மாதிரி கப்புன்னு புடிச்சிண்டாராம் சுகர். ப்ரம்மத்தொடேயே ஒன்றினாராம், மகனைக் காணாமல், வியாசர், சுகா, எங்கே இருக்கேன்னு தேடித் தவிச்சப்ப, மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன, எல்லாமே "தந்தையே, நான் இங்கே தான் இருக்கேன்"னு பதில் சொல்லித்தாம்.

இந்தக் கதையை வச்சுப் பாத்தா, இரண்டறக் கலத்தல் என்பது திரும்பி வராத நிலைன்னு சொல்ல முடியலை.

இதே மாதிரி, ஒரு சமயம் ஒரு குளத்துப் பக்கம் வியாசர் நடந்து போகும் போது, குளிச்சிண்டிருந்த பெண்கள் எல்லாம் தலைப்பை மூடி மறைச்சு நின்னாளாம்; அதே நேரம் சுகப் பிரம்மம் அங்கே வந்த போது அதே பெண்கள் எல்லாம் இயல்பா இருந்தாளாம்.

இந்த கதையில் உணரப்படுவது, பிரம்ம நிலை என்பது விகற்பமற்ற நிலை தானே தவிர, அதைத் தவிர வேறெதுவும் இல்லாத நிலைன்னு சொல்ல முடியலையே!

அங்கே இங்கேன்னு சுத்தித் திரிஞ்ச நாட்களில், ஒரு அனுபவம் -அதில் தெரிஞ்சிண்டது என்னன்னா, ஜகத் சிருஷ்டி இந்த விளையாட்டிலே, தனியா ஒருத்தர் மட்டுமே அனுபவதீதம் பெற முடியாது, எல்லோருக்கும் அது கிடைக்கிற வரைக்கும், ஜீவன் முக்தரானாலும், இங்கே திரும்பி வந்து சில வேலைகளைச் செய்து தானாக வேண்டியிருக்கும். மற்றவர்களைக் கரை சேர்க்கும் பணியை, இவர்கள் செய்து வர, திரும்பிவருகிறார்கள் அப்படிங்கிற மாதிரி. சுவாமி விவேகானந்தர், புத்தர் இந்த இரண்டு பேர் சரித்திரத்தையும் படிச்சுப் பாக்கும் போதே, தனிப்பட தங்களுக்கு மட்டும் மோக்ஷம் என்பதை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளின கதையும் தெரிய வருமே!

அதே மாதிரி, முழுக்க முழுக்க த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்னு கலப்பில்லாத அனுபவமே கிடையாதுன்னும் தோன்றுகிறதே? அத்வைத சித்தாந்தத்தை ஸ்தாபித்த ஆதி சங்கரர் கூட, அத்வைதம் ஒன்றில் மட்டுமே, முழு நம்பிக்கையோடு இருந்த மாதிரி தெரியவில்லையே?

ஒண்ணிலே, மத்த ஒண்ணும், இரண்டும் ஏதோ ஒரு நிலையில் கலந்திருப்பதைப் பெரியவர்கள், பல இடங்களிலே சொல்லிவைத்திருக்கிறார்களே, அண்ணா!

என்ன சொல்கிறீர்கள்?//
http://anmikam4dumbme.blogspot.com/2009/05/blog-post_12.html

பின்னூட்டங்களை பட்டிமன்றம் போல ஆக்கிப் பதிவு எழுதிபவரின் கவனத்தைச் சிதற அடிக்க வேண்டாமே என்பதால், விவாதத்தை நான் அங்கே தொடரவில்லை. ஆனாலும், கேள்விகள் அப்படியே இருக்கின்றன அல்லவா, அதற்கு சமாதானம் தேடுகிற முயற்சியை, எந்த ஒரு சிந்தனைக்கும், தத்துவத்திற்கும் பல முகம் உண்டு என்பதை அறிந்து கொண்ட விதத்தை இங்கே எழுத உத்தேசம். சின்னப் பதிவு, சின்னூண்டு பதிவு எல்லாம் இல்லை!

தொடர்ந்து பேசுவோம்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!