மனமே மனமே நீ யாரோ? உள்ளதை உண்மையைச் சொல்வாயோ? பகுதி-3
சில நாட்களுக்கு முன்னால், ஒரு வலைக் குழுமத்தில், கர்மா, விதி, Free Will எனப் படும் ஜீவனின் ஸ்வாதந்தர்யம் இவை பற்றிய விவாதத்தில் பங்கு கொண்ட அனுபவம் கிடைத்தது. ஒன்றைக் கவனித்தேன், பங்கு கொண்ட எவரும் தன்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தில் இருந்து இவைகளைப் பற்றிச் சிந்தனை செய்யவே இல்லை.

"Cause & effect தான் முடிவு அப்படீன்னா free will எதுக்கு?

உலகமே லீலை ன்னுதான் சொல்றோம் ஏன்னா உலகம் எதுக்கு படைக்கப்பட்டது என்ற
கேள்விக்கு எந்த காஸும் கிடையாதுதான் பதில்

ப்ராப்தம் தான் வாழ்க்கைன்னா முதல்ல எப்படி இருந்துச்சி? ப்ராப்தமே ஆரம்பிக்காத
நிலை உண்டா?

கண்ணன் கீதையில சொல்ற கர்மம், அகர்மம், விகர்மம் எல்லாம் பொய்யா? "
இப்படி எழுந்த கேள்விக்கு,

"அநாதி - அவித்யைக்கு மூலம் கிடையாது - கஹநா கர்மணோ கதி:
இவையே வேதாந்தம் தரும் உண்மைகள்;

எல்லாம் தெரிந்து விட்டால் இத்தனை துயரம் ஏன் ?

எந்தப் புள்ளியில் ஜீவன் ஸம்ஸாரத்தில் மாட்டிக்கொள்கிறான் ?
சிக்கல்களின் ஆரம்பப்புள்ளி எங்கே? இவற்றுக்குக் கடைசியில்தான் -
விடுபடும் நிலையில்தான் விடை கிடைக்கும்.

அதுவரை ‘பித்யதே ஹ்ருதய க்ரந்தி: .......... தஸ்மிந் த்ருஷ்டே பராவரே’
என்னும் சுலோகத்தை மேற்கோள் காட்டி உபதேசம் செய்து கொண்டிருக்க
வேண்டியதுதான். நம்பிக் கேட்போர் கேட்கலாம். " என்று ஒரு பதில்.

எதை ஆதாரமாகக் கொண்டு, அங்கே நம்பிக்கை இருந்தது? எதை நம்பிக் கேட்பது?

அங்கேயே, சிந்தனை என்பது வெறும் வாசிப்பு அனுபவமாகவே குறுகி நின்றது வெளிப்பட்டது. "பல ஏன்'களுக்கு விடை கிடையாது. கர்மச் சிக்கல் பிடிபடாது;
இன்றும் கொடியவர்கள் கவலையின்றி வாழ்வதைப் பார்க்கிறோம்" என்றார் ஒருவர்.
கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்த இன்னொருவரோ Free Will அப்புறம் எதற்கு என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

**முக்திக்கு முன்னர் – மலபரிபாகம் பெற்றநிலையில்தான்
‘ஸர்வ சம்சயா: சித்யந்தே ’ எல்லா ஐயப்பாடுகளுக்கும் தெளிவு கிடைக்கிறது
என்று தேறுகிறது. எல்லா சந்தேகத்துக்கும் முடிவில்தான் விடை. வெளிப்படையான நிகழ்வுகள், அவற்றை ஒட்டிய அனுமானம், தர்க்கம் போன்றவற்றால் உண்மை புலப்பட
வழியில்லை.**

என்று xxxx சார் சொன்ன மாதிரி இல்லை, இங்கேயே, இப்போதே கூட விடை கிடைத்து
விடலாம்! அது நாம் எவ்வளவு நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும் தேடுகிறோம்
என்பதைப் பொறுத்தது மட்டுமே. "

இது அங்கே நான் அவருக்குச் சொன்ன பதில். விவாதம் அதற்கு மேல் தொடரவில்லை, அந்த விஷயத்தில் ஒரு தெளிவான புரிதல் அங்கே எவருக்குமே வேண்டி இருக்கவில்லை. ஒரு கிளையில் இருந்து இன்னொன்றிற்குத் தாவுகிற மாதிரி, ஒரு விவாதம், அதில் என்ன தெளிவு கிடைத்தது என்பதெல்லாம் முக்கியமில்லை, இன்னொரு விவாத இழை, அடுத்து இன்னொரு விவாத இழை, தொடர்ந்து தாவிக் கொண்டே இருக்க வேண்டியது தான். நமக்கு வேண்டியது, வெறும் விவாதம் மட்டும் தான், இல்லையா!

இங்கே தான் மனம் என்கிற விசித்திரமான கருவியைப் பற்றி, அது எதற்காக நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய ஞானம் அவசியப் படுகிறது. இந்த மனம் நமக்கு, உண்மையைக் கண்டறிய உதவுமோ என்ற கேள்வியும் பிறக்கிறது.

ஒருபக்கம், இப்படி நடந்து கொண்டே இருக்கையில், இறைவனது அருள், நாம் அறியாமலேயே, நம்மை ஒரு பேரருள் திட்டத்தின் படி நடத்திக் கொண்டே இருக்கிறது. நம்முடைய சம்மதம், அல்லது மறுப்பு எதுவானாலும் சரி, சூத்திரதாரியாக இருந்து நம்மை வழிநடத்திச் செல்லும் நாயகன் ஒருவன், நமக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து நடத்திக் கொண்டே இருக்கிறான்.

"எங்கேயடா இருக்கிறான் உன் ஹரி?" என்று உறுமுகிறான் இரணியன்.

"எங்கே இல்லை ஹரி? அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், இல்லை, இல்லை என்று நீங்கள் மறுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே, அந்தச் சொல்லிலும் இருப்பான்" என்கிறது குழந்தை பிரகலாதன்.

கதை சொல்லிகள், சுவாரசியத்திற்காக இப்படிச் சொல்கிறார்கள். பிரகலாதன், தூணில் இருக்கிறான் என்று சொல்லிவிட்டானே, எந்தத் தூண் என்று கூடச் சொல்லத் தெரியவில்லையே, அதனால் அங்கிருந்த எல்லாத் தூண்களிலும் எம்பெருமான் நிறைந்திருந்தானாம். அதில் ஒரு தூணை இரணியன் எட்டி உதைக்க, தூண் பிளந்து அங்கே சிங்கப் பிரானாய் எழுந்து அவனை முடித்தான். அங்கே எம்பிரான் எல்லாத் தூண்களிலும் எழுந்தருளினான் என்றது, கதை கேட்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. எல்லாத் தூண்களிலும், துரும்பிலும், அவனை இல்லை, இல்லை, என்று மறுத்துச் சொன்ன நாத்திக வார்த்தைகளிலும் அவன் அப்போது மட்டுமல்ல, எப்போதுமே இருக்கிறான். நாமம் சொன்ன நாத்திகனைப் பற்றி எழுதியவருக்குமே கதை சுவாரசியத்திற்காகச் சொன்னது மட்டும் நினைவு வந்ததே தவிர, கதை சொல்ல வந்த பாடம் என்ன என்பதில் கவனமில்லாமல் போனது.

ஆக, இந்த விதி, கர்மா, Free Will எனப்படுகிற ஆத்மா ஸ்வாதந்தர்யம் இதெல்லாம் என்ன என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், எல்லாம் நம் மனம் ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறதோ, அது தான் என்கிற மாதிரியும் தோற்றுகிறது. பாம்பென்று கண்டால் பாம்பு, இல்லை, பழுதைஎனத் தெளிந்தால் பழுதை.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிற இந்த அமுதமொழிகளைக் கொஞ்சம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோமா? உண்மையை நமக்குள்ளே தானே கண்டாக வேண்டும்!

"When you are in a particular set of circumstances and certain events take place, these events often oppose your desire or what seems best of you, and often you happen to regret this and say to yourself, "Ah! how good it would have been if it were otherwise, if it had been like this or like that", for little things and big things… Then years pass by, events are unfolded; you progress, become more conscious, understand better, and when you look back, you notice - first with astonishment, then later with a smile - that those very circumstances which seemed to you quite disastrous or unfavourable, were exactly the best thing that could have happened to you to make you progress as you should have. And if you are the least bit wise you tell yourself, "Truly, the divine Grace is infinite."

So, when this sort of thing has happened to you a number of times, you begin to understand that in spite of the blindness of man and deceptive appearances, the Grace is at work everywhere, so that at every moment it is the best possible thing that happens in the state the world is in at that moment. It is because our vision is limited or even because we are blinded by our own preferences that we cannot discern that things are like this.

But when one begins to see it, one enters upon a state of wonder which nothing can describe. For behind the appearances one perceives this Grace - infinite, wonderful, all-powerful - which knows all, organises all, arranges all, and leads us, whether we like it or not, whether we know it or not, towards the supreme goal, that is, union with the Divine, the awareness of the Godhead and union with Him.

Then one lives in the Action and Presence of the Grace a life full of joy, of wonder, with the feeling of a marvellous strength, and at the same time with a trust so calm, so complete, that nothing can shake it any longer.

And when one is in this stage of perfect receptivity and perfect adherence, one diminishes to that extent the resistance of the world to the divine Action; consequently, this is the best collaboration one can bring to the Action of the Divine. One understands what He wants and, with all one's consciousness, adheres to His Will.

- The Mother

Collected Works, centenary edition, Vol.8 pp257-258

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!