பொன் ஒளியாய் வரும் அருட்பெரும் ஜோதி!

Golden Day - 29 February 2012
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன்!
ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்யமயி பரமே!
 

மா மிரா சரணம் மம! ஸ்ரீ அரவிந்த சரணம் மம!
ஓம் சத்யம் ஞானம் ஜ்யோதி: அரவிந்த!



அன்னை என்னும் அற்புதப் பேரொளி

அன்னை என்னும் அற்புதப் பேரொளி, பூமிக்கு வந்த நாள் பிப்ரவரி 21, 1878.
பிப்ரவரி பிறந்தாலே, அன்னையின் அன்பர்களுக்கு ஒரு இனம் புரியாத பரவசம், எதிர்பார்ப்பு மிகுந்து காணப்படும்.அன்னை சரீரத்தில் இருந்த நாட்களில், அவளது பாதங்களில் விழுந்து வணங்கி, அவள் தரும் தரிசன நாள் செய்தியுடன், மலர்களைப் பிரசாதமாக பெறுவதற்காக ஒருவிதத் தவம் ஆரம்பித்து விடும்! அன்னை இன்றைக்கு ஸ்தூல சரீரத்தில் இல்லை என்ற போதிலும், அவளுடைய சாந்நித்தியத்தை உணருகிற பேறு அவளது குழந்தைகளுக்கு இன்றைக்கும் கிடைக்கிறது. 
 
 
நாளைக் காலையில், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான அன்பர்கள் வரிசையில் காத்திருந்து பெறுகிற தரிசன நாள் செய்தியின் முகப்புப் பக்கம் இது!
 தரிசன நாள் செய்தியின் உள்பக்கம் இது!
அன்னை-ஸ்ரீ அரவிந்தர் சமாதி மீது வைக்கப்பட்ட மலர்களுடன் அன்பர்களுக்குப் ப்ரசாதமாகக் கிடைக்கு
ம். அன்னையின் ஆசியைக் கோரிக் கடிதம் எழுதுகிறவர்களுக்கும் சில வாரங்களுக்குக் கிடைக்கும்!நேரில் செல்கிற அன்பர்கள், ஸ்ரீ அன்னையின் அறைக்கும் சென்று வர நாளை அனுமதிக்கப்படுவார்கள்.காத்திருந்து, ஸ்ரீ அன்னையின் தரிசனத்தை அனுபவிக்கக் கொடுப்பினை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் அனுபவமே அலாதி!

எங்கிருந்து அழைத்தபோதிலும்,அங்கே நானிருப்பேன், பிரார்த்தனைகளைச் செவிமடுப்பேன் என்று ஸ்ரீ அன்னை சொல்லியிருக்கிறார்.  அதை அனுபவபூர்வமாக உணர்ந்த அன்பர்கள் ஏராளம்!அன்னையை  புதுச்சேரி சென்று சேவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஒருபக்கம் இருந்தாலும், அந்தக் குறை தெரியாத வண்ணம் அவளது அருள் எப்போது அடியவர்களைக் காத்து நிற்கிறது.

மா மிரா சரணம் மம! ஸ்ரீ அரவிந்த சரணம் மம!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய
யி, சத்யமயி பரமே!
 

இது கடவுள் வரும் நேரம்.......!




நான்கு வாரமாகப் பதிவெழுத, நிறைய விஷயங்கள் இருந்தபோதிலும் ஒரு மாதிரியான அயர்ச்சி, சோர்வினால் பதிவைப் புதுப்பிப்பதில் ஒருவிதமான சோம்பேறித்தனமே மிஞ்சியிருந்தது. புது நண்பர்கள் இந்தப்பக்கங்களுக்கு வந்து போனார்களோ இல்லையோ, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து சில நண்பர்கள் பழைய பதிவுகளைத் தேடித் படித்து விட்டுப் போனதைப் பார்க்கும்போது, கொஞ்சம் சந்தோஷமும்,நன்றி உணர்வும் எழுகின்றன.

நன்றி நண்பர்களே!

பிப்ரவரி 21! ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள்!

பிப்ரவரி 29! அருட்பெரும் ஜோதி, (அதிமானச ஒளியாக) பூமியில் இறங்கிய தங்கமயமான நாளாக இந்த மாதத்தில் எஞ்சியிருக்கும் பன்னிரண்டு நாட்களில், ஆசிரமத்தில் தரிசன நாட்களாகவும், முயன்று தேடுவோருக்கு அருளை வாரி வழங்கும் அற்புதமான நாட்களாகவும் வருகின்றன. பிப்ரவரி பிறந்தாலே, ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக் கொண்டவர்களுக்கு திருநாள்தான்! அன்னையின் பிறந்தநாளுக்காக, அவளுடைய தரிசனத்திற்குக் காத்திருப்பதே ஒரு தனி அனுபவமாக உணரப்படுகிற ஒரு அற்புதமான அனுபவம் தான்!





Remember and Offer! எப்படிப் பட்ட பிரச்சினையானாலும், உள்ளது உள்ளபடி ஸ்ரீ அன்னையிடம், ஸ்ரீ அரவிந்தரிடம் ஆத்ம சமர்ப்பணமாகச் செய்ய முற்படும்போது, 
 
எனக்குள் ஏதோ ஒன்று பழக்கத்தின் அடிமையாகவோ அல்லது, சமர்ப்பணம் முழுமையடைய விடாமலோ தடுத்துக் கொண்டிருப்பதை கடந்த சில வாரங்களாகவே கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எழும் குழப்பங்களையும், சோர்வையும் ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னிடம் சமர்ப்பிப்பதைத் தவிர வேறென்ன  செய்ய முடியும்? 
 
இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது ஸ்ரீ அரவிந்தரின் இந்த அமுத மொழி, நம்பிக்கையளிப்பதாக இருப்பதையும், திருவருள் துணை ருப்பதையும் மீண்டும் மீண்டும் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பாக இருப்பதையும் பார்த்தேன். 

"Imperfect capacity and effect in the work that is meant for thee is better than an artificial competency and a borrowed perfection."

Sri Aurobindo 
 
Thoughts and Aphorisms


ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய

என்று இருகரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதைத் தவிர வேறென்ன செய்து  விட முடியும்?


ஸ்ரீ அரவிந்தர் திருவடிகளைச் சரண் அடைகிறேன்!
ஸ்ரீ அரவிந்த அன்னையின் திருவடிகளைச்  சரண் அடைகிறேன்!


தொடர்புடைய இன்னொரு பதிவு 


அன்னையைக் கண்டு கொண்ட அந்தத் தருணத்தில்....!