ஒரு பிரார்த்தனை! உனது திருவுள்ளப்படியே நடந்தேறட்டும்!


Nov 24, 2012 - Darshan Card



On the Darshan day of 24th November, we celebrate the anniversary of the descent of the Overmental Consciousness and the founding of Sri Aurobindo Ashram. The Card distributed in the Ashram on 24th November this year contains the following beautiful message from Sri Aurobindo about the sincere seeker’s endeavour and his reward. It also contains a picture of Sri Aurobindo of 1950.
 
“A peace and bliss inconceivable to the pleasure-bound and pain-racked mind, and immeasurable by the limited capacities of our present bodily sense, is the reward of the seeker’s insistent self-discipline, his painful struggle, his untiring endeavour.”  - Sri Aurobindo


பிலாத்து மன்னனிடம் யாரோ ஒருவன் "உண்மையை" பற்றிப் பேசப் போக, பிலாத்து கேட்டானாம்

" உண்மை! யாருடைய உண்மை? உன்னுடையதா அல்லது என்னுடையதா?"

இப்படித் தான் ஒவ்வொருவரும் உண்மையை தாம் அறிந்து கொண்டிருப்பதாக அல்லது தமது வசதிக்கேற்றபடி புரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டுகாலம் கடத்திக் கொண்டிருக்கிறோம்.விவாதம், எதிர்வாதம், கடைசியில் இறுகிப் போன பிடிவாதமாக இப்படித் தான் மேலும் மேலும் குழப்பிக் கொண்டிருக்கிறோம்.

யானையைக் குருடர்கள் தடவிப் பார்த்து, ஒவ்வொருவரும் யானை இப்படித் தான் இருக்கும் என்று சொன்ன கதையைப் போல.

கதையைப் படித்துவிட்டு, அடுத்த நபர் எப்படி இந்த கதையில் வரும் குருடனைப் போல யானை இப்படித் தான் இருந்தது என்று சொல்வதாக, அவரை விமரிசிக்கவும் தயங்குவதில்லை. அதே கதையில் வரும் இன்னொரு குருடன் யானையைப் பற்றித் தன் கருத்தை சொல்வது போலவே தானும் சொல்லிக் கொண்டிருப்பது மட்டும் நமக்குப் புரிவதேயில்லை.

"Were Truth to manifest in such a way as to be seen and understood by all, they would be terrified by the enormity of their ignorance and false interpretation."

விலகி நின்று பார்க்கும் போது தான் இவனும்,இன்னும் பலரும் பிலாத்து மாதிரியே உண்மையை தன் வசதிக்கேற்றபடி புரிந்து கொண்டு அதுவே உண்மை என்று பினாத்திக் கொண்டிருந்தது புரிகிறது.

The defenders of the truth are often worse than the enemies of the truth.

"உண்மையின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், உண்மையின் விரோதிகளை விட மோசமானவர்கள். "

ஸ்ரீ அன்னைக்கும், சத்ப்ரேம் என்று அழைக்கப் பட்ட பிரெஞ்சு அன்பர் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் தொகுப்பின் இந்த ஒரு பக்கத்தைப் படித்த போது கூட பிலாத்து மாதிரித் தான், நாம் ஒவ்வொருவருமே உண்மையை நமக்கு வசதிப்படுகிற மாதிரியோ, அல்லது நமக்கு புரிந்தது மட்டுமே என்ற அளவில் குறுக்கியோஅது தான் 'உண்மை' என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்,நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது போல, உண்மை என்பது,  உள்ளது உள்ளபடிக்கே எல்லோராலும் புரிந்துகொள்கிறமாதிரி, பார்க்கமுடிகிற மாதிரி வெளிப்படுமேயானால், ஒவ்வொருவருமே தன்னுடைய அறியாமையையும், புரிந்துகொள்வதில் ஏற்பட்ட தவறும்  எவ்வளவு பெரிது என்பதைக் குறித்து அச்சம் கொள்ள வேண்டியிருக்கும்.

"Were Truth to manifest in such a way as to be seen and understood by all, they would be terrified by the enormity of their ignorance and false interpretation."

உண்மை என்பது ஒரே ஒருமுறை கற்றுக்கொண்டு  அதுவே என்றைக்குமான விதியாகக் கருதும் வரட்டுத் தனமான கோட்பாடு அல்ல.சத்தியம் என்பது பரம்பொருளைப்போலவே எல்லையற்றதாக, உண்மையாகவும் விழிப்போடும் இருப்பவர்களிடம் ஒவ்வொரு கணத்திலும் உதிப்பதாகவும் இருக்கிறது என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை. உண்மை என்பதுகாலாவதியாகிப்போன ஒன்றல்ல. உயிரோட்டமாக, அதைத் தேடுபவர்களுக்கு என்றைக்கும் இருப்பது!

"Truth is not a dogma that one can learn once and for all and impose as a rule. Truth is as infinite as the supreme Lord and It manifests every instant for those who are sincere and attentive."

உண்மை என்பது தேடப்படுவது மட்டும் அல்ல.

உரை, மனம், கடந்து அனுபவிக்கப் படுவது.

சாட்சிகளால் மட்டும் நிரூபிக்கப் படுவதல்ல.

சாட்சியமே தேவைப்படாத அனுபவ சத்தியம்.

நான் எனது என்கிற புகை படிந்த கண்ணாடி வழியாக ஒருபோதும் உண்மையை உணர முடியாது என்பது புரிய வந்திருக்கிற இந்த வேளையில், ஸ்ரீ அரவிந்தரிடம், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யம் புகுந்த இந்த நாளில் November 24, The Day of Victory or Siddhi Day என்றும் ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமத்தில் கொண்டாடப் படும் வெற்றித் திருநாள், உண்மையை உள்ளது உள்ளபடிக்கே, ஒவ்வொருவரும் தமது உள்ளொளியாகக் கண்டுகொள்ளும் விதமாக, அடியவர்கள் ப்ரார்த்தனையோடும், உள்ளார்ந்த ஆர்வமாகவும் உணரும் நாள்! 

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னிடம் இவனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தும் சமர்ப்பணம் ஆகட்டும்.இன்னமும், நான் எனது என்கிற இருளில் தோய்ந்திருக்கிற பகுதிகள் அனைத்தும் உனது ஒளியால் நிறைவிக்கப் பெறட்டும்.

புண்ணிய பூமியாக வணங்கப்படும் பாரத தேசம், இன்றைக்கு எல்லையற்ற சீரழிவுகளை, உள்ளேயும் அண்டை நாடுகளிடமிருந்து அச்சுறுத்தலாகவும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. உறுதியான தலைமை இல்லாமல், தேசம் சிறுமைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணங்களில், தெய்வத் துணை ஒன்றே வழிகாட்டுவதாக இருக்க வேண்டும்.

இந்த வெற்றி தினம் இவனுக்கும், இந்தப் புண்ணிய பூமிக்கும்   இருளில் இருந்து, சிறுமைகளில் இருந்து  விடுபடுகிற உன்னதமான தருணமாகவும் வரம் அருள்வாய், தாயே!


"Supreme Lord! Eternal Truth!
Let me obey Thee alone and
live according to Truth."

1971 ஆம் ஆண்டில், இந்தியாவைப் போர்மேகங்கள் சூழ்ந்த தருணங்களில், அடியவர் ஒருவர் வேண்டிக் கொண்டதற்கு விடையாக, நீ அருளிய பிரார்த்தனைஇது!

இந்தப் பிரார்த்தனை, இன்றைய காலச் சூழ்நிலைக்கு, மிகவும் அவசியமாகப் படுகிறது. தாயே!

உன்னை மறுபடி மறுபடி வணங்குகிறேன்.


இதுவுமே கூட சென்ற வருடம் இதே நாளில் எழுதியதன் மீள்பதிவுதான்! இன்றைய தேவைக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றங்களுடன்!

1 comment:

  1. உண்மை - உண்மையான கருத்துக்கள்...

    மீள்பதிவு என்றாலும் உண்மை மாறவில்லை... கூடி உள்ளது... அதுவும் இன்றைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப...

    நன்றி ஐயா...

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!