நான் ஏன் பிறந்தேன்? எதற்காகப் பிறந்தேன்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்விகள் அவ்வப்போது ஒவ்வொரு மனிதனுக்கும் வந்துபோகும். மரணபயம் அல்லது மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அடிப்படையாக இருப்பதையும் கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய சிந்தனையோட்டம் மனிதகுலத்தின் ஆரம்பநாட்களில் இருந்தே இருந்துவருவதையும் இந்தப்பக்கங்களில் அவ்வப்போது பேசி வந்திருக்கிறோம். முந்தைய பதிவில் சத்தியவான் -சாவித்திரி கதையை வைத்து ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி என்ற மகாகாவியத்தை எழுதியதையும் பார்த்திருக்கிறோம்.
மேலே மதுரை மீனாக்ஷி கோவில் தெற்கு கோபுரம் எதிரே இருக்கும் சொக்கப்ப நாயக்கன் கோவில் தெருவில் இருந்த உறவினர் வீட்டில்தான் பால ரமணனுக்கு மரண அனுபவமும் அதைத் தொடர்ந்து நான் யார் என்ற கேள்வியும் அதைத் தொடர்ந்த தேடலில் திருவண்ணாமலைக்குப் புறப்படுகிற நிகழ்வுமாக ......
வீட்டை விட்டு வெளியேறிய தருணத்தில் ஸ்ரீ ரமணர் எழுதி வைத்து விட்டுப்போன கடிதம் இன்றைக்கு ஸ்ரீ ரமண மந்திரமாக இருக்கும் அந்த வீட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது நான் என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது இந்தக் கடிதத்தின் முடிவில் இது என்று ஆகிப்போன முதிர்ச்சி,பக்குவத்தை பகவான் ஸ்ரீ ரமணரின் சரிதத்தில் பார்க்க முடியும்.
மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தப்பக்கங்கள் உதவியாக இருக்கும்
ரமணருடைய பாதையை, 'மலைப் பாதை' என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த மலைப்பாதை,எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ? இப்படி ஒரு பாதை இருப்பது தெரிந்தாலும், எல்லோருக்கும் அதில் ஈடுபடும் மனமும், வாய்ப்பும் வாய்த்து விடாது என்பதே
"ஒரு தரம் கபாலி சாஸ்திரியாரிடம் கேட்டேன், "உங்களை வணங்கும் போது, உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கிற அதே மாதிரி வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் மூவருடைய ஆசியும் ஒருங்கே கிடைக்கும் அல்லவா?!"
"ஆமாம், உனக்குக் கிடைக்கும்" என்று தனக்கே உரித்தான பாணியில் சாஸ்திரியார் பதிலிறுத்தார்.
இந்தப் பகுதியில் படித்த 'சின்ன நாயனா'வின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப என்னைச்சுற்றி வந்து கொண்டே இருந்தது. இந்தப் புண்ணிய புருஷர்கள், ஸ்தூல சரீரத்தில் இருந்த காலத்தில், நான் பிறக்கவில்லை. நேரடி தரிசனம் பெறுகிற வாய்ப்பும் எனக்கு இருந்ததில்லை. எழுதியவர் எத்தனைபாக்கியம் செய்திருமுடக்கி க்க வேணும் என்கிற நினைப்பிலேயே, எழுத உத்தேசித்திருந்தது தள்ளிப் போனது.கபாலி சாஸ்திரியாரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று மறுபடி அமரும் போது, சங்கரநாராயணன் வார்த்தைகளில் பொதிந்திருந்த திரிவேணி சங்கமத்தைக் கண்டேன். இப்படி மனம் கசிந்து எழுதியது இங்கே
இப்போது இதெல்லாம் எதற்காக என்கிறீர்களா?
கடந்த இரண்டு வருடங்களாகவே உடல் உபாதைகள் என்னை முடக்கி வைத்திருப்பதோடு மரணத்தை வலிந்து வரவேற்கிற மனநிலையைத்தூண்டி விட்டுக் கொண்டே இருப்பதை என்னதான் அசட்டை செய்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தாலும் முற்றிலும் தவிர்க்க முடியவில்லை.
अप्ना तो कोई नहीं, हम काहे को नांहि ।
पार पहूंची नाव जब, मिलि सब बिछुडे. जांहि ॥
தன்னவரென்று எவரும் ஏது, தானும் பிறர்க்கு உறவேது
முன்னம் சேர்ந்தவர் பிரிவரே, படகு கரைதொடும் போது
மாற்று :
पार पहूंची नाव जब, मिलि सब बिछुडे. जांहि ॥
தன்னவரென்று எவரும் ஏது, தானும் பிறர்க்கு உறவேது
முன்னம் சேர்ந்தவர் பிரிவரே, படகு கரைதொடும் போது
மாற்று :
என்ன வரென்று எவருமில்லை, யானும் பிறர்க்கு றவில்லை
பரிசல் கரைசேர்ந்த பின்னே, பயணியர் போவார் தம் வழியே
வாழ்க்கைப் பயணம் ஏதேதோ காரணங்களால் திசை மாறிக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு இலக்கு வந்ததும் ஒரு சிலர் விட்டு போகிறார்கள் அல்லது நாம் விட்டுச் செல்கிறோம். புது உறவுகள் அல்லது நண்பர்கள் சில காலத்திற்கு சேர்கின்றனர். இவையெல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மரணம் என்கிற இலக்கை அடைந்தவுடன் எல்லாமே அர்த்தமற்ற உறவுகளாகி விடுகிறது. அதை ராமகிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார்.
“கடலில் மிதக்கும் சில கட்டைகள் ஏதோ ஒரு அலையால் நெருங்கி வருகின்றன. அடுத்த ஒரு பெரும் அலை வந்து பிரிக்கும் வரை அருகருகே மிதக்கின்றன. உலகின் உறவுகள் தந்தை-தாய், கணவன் -மனைவி, மகன்-மகள் என்ற உறவுகளும் இப்படிப் பட்டவைதான். எதுவும் உண்மையானது கிடையாது. உண்மையான உறவு என்று ஒன்று உண்டானால் அது இறைவனுடைய திருவடிகள் மட்டுமே” என்று கபீரன்பன் இந்தப் பக்கங்களில்அழுத்தம்திருத்தமாகச்சொல்கிறார்.
பொதுவாக என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்துக் கொள்வதோ கொண்டாடுவதோ வழக்கமே இல்லை என்றாலும் இன்றுடன் 61 வயது நிறைந்து நாளை பிறந்தநாள் (20 மார்ச்) என்று நினைவு வரும்போது நான் ஏன் பிறந்தேன், எதற்காகப் பிறந்தேன், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி எதற்கும் விடை காணமுடியாமல், கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தவற விட்டுவிட்டேனோ என்ற தவிப்பு மட்டும் உருக்கிக் கொண்டிருக்கிறது.
அண்டினபேரை நழுவவிடாதவன் அச்சுதன் என்னை மட்டும் விடுவானோ?
அவன் கைவிடமாட்டான் என்கிற நம்பிக்கையோடு ......
நாளை புதிதாய்ப் பிறக்கிறேன்!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!