படித்ததும் பிடித்ததும்!




சமீப காலமாகத் தமிழ் வலைப் பதிவுகளில் தேடும் போது சில நல்ல பதிவுகளை, உள்ளடக்கங்களைப் படிக்க நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கிறது!

தமிழ்ப் பதிவுகள் என்றாலே 'மொக்கை போடுவது' 'பதிவர்கள் கூடிக் கும்மியடிப்பது', 'சல்லியடிப்பது' 'சாதியைக் குறிப்பிட்டுக் கும்முவது', இன்னபிற இணையக் கலாசாரத்தைக் கண்டு மிரண்டு ஒதுங்கியே இருந்த எனக்கு, ஒரு மாறுதலாக, ஆழ்வார்களது பாசுரங்களைப் புதியதொரு கோணத்திலிருந்து அணுக வேண்டுமென்ற ஆர்வத்தோடு இடப்பட்ட பதிவுகள் மகிழ்ச்சியை அளித்தன. ஆன்மீகத்தை எழுதுகிறவர்கள், வெறும் கதை சொல்லிகளாகவும், அல்லது பிரவசனம் செய்பவர்களாகவும் நின்றுவிடாமல், அதையும் தாண்டி ஒரு புதிய சிந்தனையோட்டத்தின் துவக்கமாக இந்தப் பதிவுகளைப் பார்க்க முடிவது மிகவும் சந்தோஷமான அனுபவம்.


கொரியாவில் இருந்து கொண்டு. ஆழ்வார்கள் அருளிய தமிழை அனுபவித்துக்கொண்டு பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார், முனைவர் நா. கண்ணன் . ஒரு புதிய கோணத்தில், இன்றைய சூழலுக்குப் பொருத்தமாக, ஆழ்வார்கள் அருளிச் செயல்களை விளக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதப் பட்டிருப்பதால், இந்தப் பக்கஙகளில் இருக்கும் அத்தனை பதிவுகளுமே என் கவனத்தை ஈர்த்த பதிவுகள், அனுபவித்துப் படித்த பதிவுகள்.

இன்னொருபுறம், தமிழில் அறிவியலைப் பற்றி அறிமுகம் செய்கிற மாதிரி ஒரு வலைப்பதிவு,இணையத்தில் தமிழ் வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பு என்பதோடு நின்று விடாமல், அதையும் தாண்டி வளர்ந்திருப்பதில் இரட்டிப்புச் சந்தோஷம்.தமிழ் என்றாலே பழங்கதை பேசுவது, இனத்தின் பெயரால் பிறரை இழிவு படுத்துவதே தமிழனின் தனித்தவொரு அடையாளம் என்று கங்கணம் கட்டிக் கொண்டது போல அல்லாமல், தமிழில் அறிவியலையும் பேசலாம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சங்கத்தமிழ் என்று நம்முடைய தொன்மையையும் பேசலாம் என்பது போல இப்படி நிறைவான விஷயங்களைப் பார்க்க முடிகிறது என்பதே பெருத்த சந்தோஷம்.


விஞ்ஞானத்தை வளர்க்கப்போறோங்க என்ற முகப்புடன், இந்த வலைப்பதிவு பலருடைய கூட்டு முயற்சி.

அறிவியலை எளிய தமிழில் சொல்ல முன்வந்திருக்கும் குழுவினருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது போல பலருடைய கூட்டு முயற்சியில் வெளிவரும் இந்த முயற்சியும் தழைத்து வளர வேண்டும்!

இதைத் தொடர்ந்து, திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களும் ஒரு வலைப் பதிவைத் தொடங்கினார்.உயிர் என்ற தலைப்பில் இதுவரை ஆறு பதிவுகள் வந்திருக்கின்றன.


"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்செல்வம் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
என்று பாரதி தமிழ் வளர, புத்துயிர் பெறப் பாடிய வரிகளை நினைத்துக் கொண்டே இந்தப் பதிவுகளைக் குறித்து என்னுடைய கருத்தையும்பதிவு செய்ய ஒரு ஆசை எழுந்தது.

அதென்னவோ அறிவியல் பதிவுகள் என்றாலே, இறைமறுப்பு என்பது அதன் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்க வேண்டும் என்கிற மாதிரி ஒரு கட்டாயம் இருக்கிறது போல.

விஞ்ஞானத்தை வளர்க்கப் போறோங்கன்னு சொல்லிக் கொண்டே வேறு என்னென்னவும் இருக்கிறது என்பதை ஒருபதிவின் பின்னூட்டங்களைப் பார்த்தபோது கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது.

முனைவர் நா.கண்ணனின் பதிவில் "பரிணாமம் உண்மையா" என்ற ஒரு இடுகையைச் சுட்டியிருந்தார் ஒருவர். அதற்கடுத்தவர் பின்னூட்டம் இப்படியிருந்தது:

"read science-less s*** in above link and read also this: Why People Believe Invisible Agents Control the World - A Skeptic’s take on souls, spirits, ghosts, gods, demons, angels, aliens and other invisible powers that be." science-less s*** இந்த மூன்று நட்சத்திரங்கள் சுட்டும் எழுத்துக்கள் விமரிசனம் எழுதியவர் மனநிலை எப்படி என்பதைச் சுட்டிக் காட்டியதாகவே எனக்குப் பட்டது. Shit! என்ன ஒரு வார்த்தைப் பிரயோகம்?

அறிவியலை இப்படியெல்லாம் வளர்க்க முடியாது என்பதை யாராவது இப்படிப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு் புரியும்படி சொன்னால் தேவலை!

டார்வின் கோட்பாடுகள். கடவுள் இந்த உலகை ஆறு நாட்களில் படைத்து முடித்து ஏழாவது நாள் ஓய்வெடுத்துக் கொண்டார் என்பதை Genesis சொல்வதை அசைத்துப் பார்த்ததென்னவோ உண்மை.

ஒரு புதிய கண்ணோட்டம் பிறந்திருக்கிறதே என்று சந்தோஷப் படும் போது இப்படிக் கண்ணில் விழுந்து உறுத்தும் வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்த்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!

இந்த சிந்தனைகளோடு இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, யானையின் இறக்கைகள் என்ற தலைப்பில், நமக்கெல்லாம் தெரிந்த கதைதான், குருடர்கள் நான்கு பேர், ஒரு யானையைத் தடவிப் பார்த்து, அதை முழுமையாக அறிந்துவிட்டதாக சொல்வார்களே அதே கதைதான், ஆனால் மின்னிசொட்டா பல்களைக் கழகத்தில், தாவர இயல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் திரு P Z மெயெர்ஸ் எழுதியிருக்கும் இந்தப் பதிவு கண்ணில் பட்டது.

நமக்குத் தெரிந்த கதையில், நான்கு குருடர்கள், யானையைத் தடவிப் பார்த்து, யானை இப்படித்தான் இருக்கும், இல்லை இல்லை இப்படித்தான் என்று தங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொண்டிருப்பார்கள் இல்லையா?

இங்கே,மெயெர்ஸ் கதையில், நான்கு ஆராய்ச்சியாளர்கள், யானைக்குச் சிறகுகள் இருக்கிறது என்று ஒருத்தர் சொல்ல, கதையை தன்னுடைய கருத்தோட்டத்திற்கு இசையச் சொல்லியிருக்கும் அழகுக்காகவே இதை ஒருதரம் படிக்கலாம்.

இந்தப் பதினைந்து நாட்களில் 1203 பின்னூட்டங்கள், விவாதம் இன்னமும் முற்றுப் பெறவில்லை ஆனாலும் சுவாரசியம் கொஞ்சம் கூடக் குறையவில்லை.

நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்!
இதெல்லாம் எதற்கு, இருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக எதையாவது சிந்திக்கலாம் என்பவர்களுக்காக:
"You have asked what is the discipline to be followed in order to convert the mental seeking into a living spiritual experience. The first necessity is the practice of concentration of your consciousness within yourself. The ordinary human mind has an activity on the surface which veils the real Self. But there is another, a hidden consciousness within behind the surface one in which we can become aware of the real Self and of a larger deeper truth of nature, can realise the Self and liberate and transform the nature. To quiet the surface mind and begin to live within is the object of this concentration. Of this true consciousness other than the superficial there are two main centres, one in the heart (not the physical heart, but the cardiac centre in the middle of the chest), one in the head. The concentration in the heart opens within and by following this inward opening and going deep one becomes aware of the soul or psychic being, the divine element in the individual. This being unveiled begins to come forward, to govern the nature, to turn it and all its movements towards the Truth, towards the Divine, and to call down into it all that is above. It brings the consciousness of the Presence, the dedication of the being to the Highest and invites the descent into our nature of a greater Force and Consciousness which is waiting above us. To concentrate in the heart centre with the offering of oneself to the Divine and the aspiration for this inward opening and for the Presence in the heart is the first way and, if it can be done, the natural beginning; for its result once obtained makes the spiritual path far more easy and safe than if one begins the other way.

That other way is the concentration in the head, in the mental centre. This, if it brings about the silence of the surface mind, opens up an inner, larger, deeper mind within which is more capable of receiving spiritual experience and spiritual knowledge. But once concentrated here one must open the silent mental consciousness upward to all that is above mind. After a time one feels the consciousness rising upward and in the end it rises beyond the lid which has so long kept it tied in the body and finds a centre above the head where it is liberated into the Infinite. There it begins to come into contact with the universal Self, the Divine Peace, Light, Power, Knowledge, Bliss, to enter into that and become that, to feel the descent of these things into the nature. To concentrate in the head with the aspiration for quietude in the mind and the realisation of the Self and Divine above is the second way of concentration. It is important, however, to remember that the concentration of the consciousness in the head is only a preparation for its rising to the centre above; otherwise, one may get shut up in one's own mind and its experiences or at best attain only to a reflection of the Truth above instead of rising into the spiritual transcendence to live there. For some the mental concentration is easier, for some the concentration in the heart centre; some are capable of doing both alternately - but to begin with the heart centre, if one can do it, is the more desirable.

The other side of discipline is with regard to the activities of the nature, of the mind, of the life-self or vital, of the physical being. Here the principle is to accord the nature with the inner realisation so that one may not be divided into two discordant parts. There are here several disciplines or processes possible. One is to offer all the activities to the Divine and call for the inner guidance and the taking up of one's nature by a Higher Power. If there is the inward soul-opening, if the psychic being comes forward, then there is no great difficulty - there comes with it a psychic discrimination, a constant intimation, finally a governance which discloses and quietly and patiently removes all imperfections, brings the right mental and vital movements and reshapes the physical consciousness also. Another method is to stand back detached from the movements of the mind, life, physical being, to regard their activities as only a habitual formation of general Nature in the individual imposed on us by past workings, not as any part of our real being; in proportion as one succeeds in this, becomes detached, sees mind and its activities as not oneself, life and its activities as not oneself, the body and its activities as not oneself, one becomes aware of an inner Being within us - inner mental, inner vital, inner physical - silent, calm, unbound, unattached which reflects the true Self above and can be its direct representative; from this inner silent Being proceeds a rejection of all that is to be rejected, an acceptance only of what can be kept and transformed, an inmost Will to perfection or a call to the Divine Power to do at each step what is necessary for the change of the Nature. It can also open mind, life and body to the inmost psychic entity and its guiding influence or its direct guidance. In most cases these two methods emerge and work together and finally fuse into one. But one can begin with either, the one that one feels most natural and easy to follow.

Finally, in all difficulties where personal effort is hampered, the help of the Teacher can intervene and bring about what is needed for the realisation or for the immediate step that is necessary.

- Sri Aurobindo
[SABCL, 23:517-19]

மேலே, ஸ்ரீ அரவிந்தர் சொல்லியிருப்பதைக் கொஞ்சம் கவனமாகப் புரிந்துகொண்டோமேயானால், அகப் பயணத்திற்குத் தேவைப் படுகிற கருவிகள் என்னவென்பதும், அதை தற்கால அறிவியலாளர்களால் பரிசோதனைக் கூடத்தில் நிறுவ முடியாதென்பதும் விளங்கும்.

நிறைய விஷயங்களுக்கு தற்கால அறிவியல் காரணத்தைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.காரணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதாலேயே காரணன் ஒருவன் இருக்கிறான் என்பதையே மறுப்பது உண்மையான அறிவியல் அல்ல!

'ஆசைகள் தான் துயரத்திற்குக் காரணம்' என்பதை ஆன்மிகம் அழகாக, தர்க்கித்துக் கொண்டே இருக்கும் மனத்திற்கு மட்டும் அல்ல, இதயத்திற்கும் புரிகிற மாதிரி சொல்லி வைத்திருக்கிறது. அறிவியலோ, இன்னமும் ஆசைகள் என்றால் என்ன, அவை எழுமிடம் என்ன அவை எப்படித் துயரத்தின் தோற்றுவாயாக இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விட்டதா? சோதனைச் சாலைகளில் நிறுவப்பட்ட முடிவுகளைச் சொல்லி விட்டதா?

கேள்விகள் நிறைய இருக்கின்றன!



படத்தின் மீது க்ளிக் செய்து வாசகங்களைத் தெளிவாகப் படிக்கலாம்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!