Sunday, June 07, 2009

அறிவியலோ, ஆன்மீகமோ, ஒரே அடிப்படைத் தேவை!

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா! கீதையின் நாயகனே!

TMS இன் கணீரென்ற குரலில் இந்தப் பழைய பாடலை நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கேட்டேன். யோசித்துப் பார்க்கையில் கொஞ்சம் சிரிப்புத் தான் வந்தது.

கேட்டவுடன் கொடுத்து விட வேண்டும் இல்லையென்றால் கடவுள், கடவுளாக இருக்க முடியாது. கொஞ்சம் விவகாரமான கவிஞரிடம் மாட்டிக் கொண்டால், அவர் இப்படி சாபம் கொடுத்து விடக் கூடும்:

"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்

காதலித்து வேதனையில் வாட வேண்டும்"

இப்படி முந்தைய பதிவொன்றில் எழுதியிருந்தேன். கடவுளுக்கு
வரம் கொடுப்பதைத் தவிர வேறு வேலையே இல்லையா? அப்படிக் கிடைத்து விடுவதெல்லாம் உண்மையிலேயே வரமாக இருக்குமா, சாபமாகி விடுமா இப்படி சில கேள்விகளெல்லாம் அந்தப் பதிவில் எழுந்தன. இதே சிந்தனையில் தொடர்ந்து, கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் என்ற தலைப்பிலும் இரு பதிவுகள் தொடர்ந்தன.

இன்றைக்கு ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களில் ஒரு பகுதியைப் படித்துக் கொண்டிருந்தபோது, இந்தப் பகுதி என் கவனத்தைக் கவர்ந்ததுடன், இன்றைய த்யானத்திற்கான பொருளாகவும் ஆனது:

"Whatever you may want to do in life, one thing is absolutely indispensable and at the basis of everything, the capacity of concentrating the attention. If you are able to gather together the rays of attention and consciousness on one point and can maintain this concentration with a persistent will, nothing can resist it - whatever it may be, from the most material physical development to the highest spiritual one. But this discipline must be followed in a constant and, it may be said, imperturbable way; not that you should always be concentrated on the same thing - that's not what I mean, I mean learning to concentrate.

And materially, for studies, sports, all physical or mental development, it is absolutely indispensable. And the value of an individual is proportionate to the value of his attention.

And from the spiritual point of view it is still more important. There is no spiritual obstacle which can resist a penetrating power of concentration. For instance, the discovery of the psychic being, union with the inner Divine, opening to the higher spheres, all can be obtained by an intense and obstinate power of concentration - but one must learn how to do it. There is nothing in the human or even in the superhuman field, to which the power of concentration is not the key.

You can be the best athlete, you can be the best student, you can be an artistic, literary or scientific genius, you can be the greatest saint with that faculty. And everyone has in himself a tiny little beginning of it - it is given to everybody, but people do not cultivate it."

- The Mother,

collected works centenary edition, pp.360-361

ஸ்ரீ அரவிந்த அன்னை எந்த ஒரு துறையானாலும் சரி, ஒருமித்த சிந்தனை மிக மிக முக்கியமான தேவை என்கிறார். நல்லதோ கெட்டதோ, எதுவானாலும் ஒருமித்த சிந்தனையோடு கவனமாகச் செய்யப் படும் எந்தக் காரியமும் அதற்குரிய பலனைத் தந்தே தீரும். அதனால் தான், எவர் தலையில் கைவைத்தாலும் பஸ்மமாக்கிவிடும் வல்லமையை ஒரு அசுரன் வேண்டி வரம் கேட்ட போது அதை தருவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால் கடுந்தவம் இருந்து பெற்ற வரமே பஸ்மாசுரனுக்கு எப்படி சாபமாகிப் போனது என்பதையும் புராணக் கதைகளில் படித்திருக்கிறோம்.

இப்பதிவின் கருப்பொருள் வரம், சாபம் இவற்றைப் பற்றியல்ல. ஒருமித்த சிந்தனை, முழுமையான கவனம் என்பது ஆரம்ப நிலைகளில் எவ்வளவு அவசியமாக இருக்கிறது, அறிவியல் ஆனாலும் ஆன்மிகம் ஆனாலும் இந்தத் திறமை மட்டும் அமைந்து விட்டால் மனிதன் எந்த அளவுக்கு உயர முடியும் என்பதை மட்டுமே சிந்திப்பதற்காக, ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களில் இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று வைகாசி அனுஷம், பரமாச்சார்யர், மகாப் பெரியவாள் என்றெல்லாம் சமயபேதங்களைக் கடந்து பலதரப்பட்ட மக்களாலும் வணங்கப் பட்ட காஞ்சி சங்கராசார்யாருடைய அவதார தினம். உபதேசம் செய்ததைத் தானும் கடைப் பிடித்த தபஸ்வி, ஞானத்தைத் தேடி பால் பிரண்டன் போன்ற சிலர் அணுகியபோது, ஒரு மடாதிபதியாக இருந்து கொண்டு தனிப்பட்ட சீடர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்தபோதிலும், அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டி, ஸ்ரீ ரமண மகரிஷியிடம் அனுப்பி வைத்த பெரும் கருணையை. இதே மாதிரிப் பல கோரிக்கைகளோடு அணுகிய பக்தர்களைத் தன்னருள் திறத்தால் ரக்ஷித்த ஒரு கருணைக் கடலை வணங்கி அஞ்சலி செய்யும் போதே,
இந்த நிலைமையை எட்ட எவ்வளவு ஒருமித்த சிந்தனை, கவனம் நல்ல எண்ணங்களோடு மகாப் பெரியவர் முயற்சித்திருப்பார் என்பதையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை!

இங்கே இணையத்தில் மௌலி சார் பரமாச்சார்யர் ஜெயந்தியை ஒரு வலைத்தள உத்சவமாகவே நடத்தியிருக்கிறார்.

"பரமாசார்யாருக்கு நாம் செய்யும் பூஜை என்பதில் முதலாவதானது அவர் சொற்படி வாழ்தலே!" மிகப் பொருத்தமான வார்த்தைகள்.

அறிவியல் ஆனாலும், ஆன்மீகமானாலும் சரி முதலாவது அடிப்படைத் தேவை, ஒருமித்த சிந்தனையுடன் கூடிய கவனம், ச்ரத்தை, விடாமுயற்சி இவைதான்.

இருந்துவிட்டால், கண்ணதாசன் பாடல் வரிகளில் வருவது போல,

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!

1 comment:

  1. இன்றுதான் இந்த இடுகையைப் பார்த்தேன்....எப்போதும் போல அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆன்மிகத்தில் உயர ஒருமித்த சிந்தனை-சிரத்தை போன்றவை தேவை என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    தாங்கள் என் போஸ்டுக்கு லிங்க் கொடுத்தமைக்கும் மிக்க நன்றிகள்.

    தயவு செய்து எனக்கு சார் என்ற அடைமொழிகளெல்லாம் வேண்டாம். தங்களைவிடச் சிறியவன் தான்....மெளலி என்றே குறிப்பிடலாம். :)

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails