முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல் நலம் கொஞ்சம் மக்கர் செய்ய ஆரம்பித்த பிறகு இயலாமலேயே போனது . கேபிள் டிவி,செய்தித்தாட்களில் பார்த்தே பழைய நினைவுகளைக் கொஞ்சம் அசைபோட்டு அவளை வணங்குவது ஒன்றுதான் இப்போதைக்குக் கொடுப்பினை! காலையில் சங்கரா டிவி நேரடி ஒளிபரப்பின வர்ணனையைக் காதில் வாங்கியபடியே திருவிளையாடற் புராணம் விவரிக்கிற இந்தக்கதையையும் சேர்த்தே அசை போட்டுக் கொண்டிருக்கிறது மனசு. கதைக்குள் போகலாமா?
மலையத்துவசன் என்று ஒரு பாண்டிய ராஜா!
கண் ஊஞ்சல் ஆட்டினாள் காஞ்சனமாலை என்று தாலாட்டுப் பாட்டெல்லாம் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை , மீனாக்ஷி பெரிய ராவடியாகவே இருந்தாள் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இப்படித் தாலாட்டுப் பாடியே, அவளை ராவடியாக்கி விட்டார்களோ?!
ஒவ்வொருத்தரிடமாகப் போய், என்னுடன் சண்டைக்கு வருகிறாயா என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சண்டை செய்வதற்காகவே திக்விஜயம் செய்ய ஆரம்பித்தாள். பூலோகம், மேலோகம் என்று இவளது ராவடியை கண்டு அத்தனை பேருமே அரண்டு போய்த் தோல்வியை ஒப்புக் கொண்டார்களாம்!தனி ஆவர்த்தனமாகவே போய்க் கொண்டிருந்த போது, இவளை விடப் பெரிய ராவடியாகஅந்தப் பரமேஸ்வரனே சோம சுந்தரனாக மதுரைக்கு வந்தானாம்! அப்படி வந்தவனைக் கண்டவுடன், ராவடி, சண்டை போடுவதை எல்லாம் மறந்து மீனாக்ஷி வெட்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாளாம்!மூன்றாவது ஸ்தனமும், ஏற்கெனெவே அசரீரி சொல்லியிருந்ததைப் போல, மறைந்தது.
மூன்றாவது ஸ்தனம் மறைந்ததைக் கண்டு, காஞ்சனமாலை மாப்பிள்ளை ஒருத்தன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று தெரிந்துகொண்டு, முப்பத்து முக்கோடி தேவர்களோடு சேர்ந்து பெண்ணுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தாள்.
மதுரையில் இன்றைக்கு மீனாட்சிக்குக் கல்யாணம்!
ஊரெல்லாம் கொண்டாட்டம்!
அதுவரை அடக்க ஒடுக்கமாக இருந்த மாப்பிள்ளை சோமசுந்தரன், தன்னுடைய ராவடியை ஆரம்பித்தானாம்!
இரு! ஒரே ஒரு குட்டிப் பூதத்தை அனுப்புகிறேன், அவன் சாப்பிட்ட பிறகு மிச்சம் மீதி ஏதாவது இருந்தால், அப்புறம் மற்றவர்களைக் கூப்பிடுவதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு குண்டோதரன் என்ற ஒரு பூதத்தை அனுப்பி வைத்தானாம்.
குண்டோதரனும் சமைத்து வைத்திருந்த அத்தனை உணவையும் சாப்பிட்டு, பசி, இன்னும் வேண்டும், பசி, இன்னும் வேண்டும் என்று அரிசி, காய்கறி இப்படி சமைப்பதற்கு வைத்திருந்த அத்தனையையும் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து மீனாட்சியே பயந்து போனாளாம்! போதும் போதுமென்று வீட்டுக்காரனிடம் கெஞ்சுகிறாள் மீனாக்ஷி!
ராவடி மன்னனான சுந்தரேசப் பெருமானும் குண்டோதரனின் பசி அடக்கித் தாகத்தை உண்டு பண்ணினானாம்! தண்ணீர், தண்ணீர் என்று அலைந்த குண்டோதரனிடம் இதோ வை கை என்று சொல்ல, வைகை நதி உண்டாயிற்றாம்! இது திருவிளையாடல் புராணத்தில் வருகிற கதை!
வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்று மகிழ்ந்து கொள்கிறது திரு விளையாடற் புராணம்! வை கை என்று சொன்னதினாலோ என்னவோ கை நனைக்கிற அளவுக்குக் கூடவைகையில், பெரும்பாலான தருணங்களில் தண்ணீர் இருப்பதில்லை! சிறு கூடற்பட்டியில் பிறந்த எங்கள் கவிஞன் கண்ணதாசன் ஒரு திரைப் படப் பாடலில் சொன்னபடி,
மலைமேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயுமுன்னே வந்த வெள்ளம் போனது ராசா!
இப்படி, அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும், வைகையின் கதை மட்டுமல்ல, பாண்டிய நாட்டின் கதையே அப்படித்தான் இருக்கிறது!
மலைமேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயுமுன்னே வந்த வெள்ளம் போனது ராசா!
இப்படி, அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும், வைகையின் கதை மட்டுமல்ல, பாண்டிய நாட்டின் கதையே அப்படித்தான் இருக்கிறது!
அம்மையும் அப்பனுமே ராவடி பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி?
அடிப்பொடிகளோடு அட்டகாசம் பண்ணஅடுத்து ஒரு அ'னா வர வேண்டாமா!ராவடி பண்ணிய மீனாட்சியும், ராவடி மன்னன் சுந்தரேசனுமே அ' றங்காவலர் குழு செய்வது தான் சரி என்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்! மதுரைக்கு அரசி மீனாக்ஷி என்பதெல்லாம் முப்பதாண்டுகளுக்கு முந்தைய பழைய நம்பிக்கை! என்னை மாதிரிப் பழைய நினைவுகளைக் கொஞ்சம் சுமந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே, இன்னமும் அப்படி நம்பிக் கொண்டிருக்கிறோம்!
பண்டிகை என்ற மட்டுக்கு சித்திரைத் திருவிழாவின் போது மீனாக்ஷி கையிலும் ஆவணி மாதத்தில் சோமசுந்தரர் கையிலும் மதுரையின் ஆட்சி இருப்பதாக ஒரு கற்பனை மட்டும் பண்ணிக் கொண்டு, செங்கோல் கொடுக்கிற படலம் ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது!
ஆக, மதுரை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மூணு!
அப்புறம் ராவடி! ஒரு ராவடியை அடக்க, அதற்குக் கொஞ்சம் அதிகமான ராவடி என்று அராத்தாக, ராவடியாக இப்படித் தொடர்ந்து கொண்டு இருப்பதே மதுரையின் சோகக் கதையாக, புராணமாக இருக்கிறது!
தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா என்று கேட்கிற மாதிரி ராவடி செய்யத் தெரிந்தவனை எல்லாம் பாண்டியனாக ஆக்கிப் பார்ப்பதே மதுரைக்கு உள்ள தனிச் சிறுமை!
கலெக்டராக இருந்த ஒரு ஆங்கிலேயன், மீனாட்சிக்கு ஆபரணம் செய்து போட்டானாம்! அவனையும் பீட்டர் பாண்டியன் என்பார்கள்! பெரிய மருது, சின்ன மருது என்று இரு சகோதரர்கள்! அவர்களையும் பாண்டியன் என்பார்கள்! பிற்கால பாண்டிய வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் பாண்டியன் என்று எவர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்! அப்படிப் பாண்டியன் என்கிற அடைமொழியோடு என்ன அக்கிரமம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்!
திருநெல்வேலி தாண்டி தெற்கே, பாண்டியன் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுப் பாருங்கள்!
மதுரைக்கு அரசி நீயல்லவோ என்று அவளிடத்தில் கேட்க ஆசைதான்!
அவள் அவ்வளவு எளிதில் பதில் சொல்லிவிடுவாளா என்ன?
ஏழு வருடங்களுக்கு முன்னால் எழுதிய பதிவின் நீட்சி இது.
காலம் செய்திருக்கிற ஒரே மாற்றம், அவளிடம் இது மாதிரி விதண்டாவாதம் செய்ய என்னால் இப்போதெல்லாம் முடிவதில்லை. இப்படி அவள் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிற, கேட்கிற கொடுப்பினை ஒன்று போதுமே!
மீனாட்சி ஆட்சி ஐந்து மாதந்தானா?சிவனுக்கு ஏழுமாதமா?அப்ப துரையா? சிதம்பரமா?கேட்க கூடாதா ?
ReplyDelete