சண்டேன்னா மூணு! அடக்க முடியாதா? காங்கிரஸ் காமெடி! நினைவுகள்!


ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் வசனம் நினைவுக்கு வந்தால், அதற்கு யாரும் பொறுப்பல்ல!
 
அடக்க முடியாதா!! தினமணியில் அடடே மதி கேலிச் சித்திரம்!
******* 

இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவரின் வாக்கு, காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தான் உறைத்திருக்கிறது போல! எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் பரவாயில்லை, காமெடி செய்தே தீருவது என்று முடிவுக்கு, அரசியல் வாழ்க்கையின் விளிம்புக்கே வந்து விட்ட மாதிரிப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.  


""ஊழல் நடைபெறுவதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். தில்லியில் அருகே உள்ள புராரி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு இன்று தொடங்கியது.இதில் சோனியா பேசியதாவது: ஊழல் நடை பெறுவதையும், ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் துணைபோகின்றவர்களையோ காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது (!!??). கட்சிக்கும், ஆட்சிக்கும் இது பொருந்தும். எளிமை, கட்டுப்பாடு, நேர்மை ஆகியவற்றை நமது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.(!!) எனவே நமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழும்பாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்"

அந்தோனியோ மைனோ என்ற இயற்பெயரையும், அரசியலில் சோனியா காண்டி என்ற பெயரையும் பயன்படுத்திவரும் ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் சேர் பெர்சன்இன்றைக்கு  காங்கிரஸ் ப்ளீநரி கூட்டத்தில் பேசிய, அல்ல அல்ல, அடித்த சீரியஸ் ஜோக் இது!
 

இந்த மாதிரி மட்டமான ஜோக்கை/ஜோக்கர்களை  சகித்துக் கொள்ளப் போகிறீர்களா அல்லது தூக்கி எறியப் போகிறீர்களா என்பது தான் பிரதானமான கேள்வி! 
******
நீண்ட காலம் ஆகிப் போனாலும் மறக்க முடியுமா? தோழருக்கு அஞ்சலி!


 

11 comments:

 1. ஊழலில் ஒன்னும் புரியல சாமி!

  ReplyDelete
 2. ஊழல் நடந்திருக்கிறது என்ற அளவுக்காவது புரிந்தால் சரி!

  ஒன்று இரண்டு என்று இருந்தால் புரிந்திருக்குமோ என்னவோ? லட்சம் கோடிகள் என்று ஒவ்வொருநாளும் புற்றீசல் மாதிரிக் கிளம்பிக் கொண்டே இருப்பதில் புரியாமல் இருப்பது சகஜம் தான்!

  ReplyDelete
 3. // காங்கிரஸ் ப்ளீநரி கூட்டத்தில் பேசிய, அல்ல அல்ல, அடித்த சீரியஸ் ஜோக் இது! //

  இத்தனைநாள் எங்கே ஒளித்து இந்த வைத்தீர்கள் சடய்ர் எழுத்தை?

  ReplyDelete
 4. கம்யுனிஸ்ட் தோழர்கள் கூட மறந்து விட்ட பாப்பா உமா நாத் அவர்களின் மறைவுக்கு உங்களின் நினைவாஞ்சலி சிறப்பு.

  ReplyDelete
 5. சமீபத்தில் டிவியில் ஒரு சினிமா காமெடி பார்த்தேன். அர்ஜுன்-கஞ்சாகருப்பு நடித்த காமெடி. நன்றாக இருந்தது. அதில் கஞ்சா கருப்பு ஓடும் படகிலிருந்து ஆட்டத்தைச் சமாளிக்க முடியாமல் விழப்போக அர்ஜுன் அவரைக் காப்பாற்றுவார். தப்பிக் கரையேறிய கஞ்சாகருப்பு அர்ஜுனைப் பார்த்து,"பாத்து நில்லுப்பா, விளுந்து கிளுந்து வெச்சிரப் போற. என்னய மாதிரி ஒனக்கு படகு சவாரி பளக்கமில்லேல்ல", என்று உதார் விடுவார். படத்தின் பெயர் நினைவில்லை. ஆனால் அந்தக் காட்சி அந்தோணியா@சோனியா ஊழல் ஒழிப்பு பற்றிப் பேசும் போது ஏன் நினைவுக்கு வருகிறது என்று யோசித்துப் பார்த்தேன். சற்றே புரிந்த மாதிரி இருந்தது.

  ReplyDelete
 6. //அடக்க முடியாதா!! தினமணியில் அடடே மதி கேலிச் சித்திரம்!//

  சாதி அரசியலுக்கு பதிலாக 'புலி வருது' ன்னு இருக்கணும் :)

  ReplyDelete
 7. வாருங்கள் "பொருனையின் செல்வன்" அருண் அம்பி!

  உங்களைப் பற்றிய சுய அறிமுகம் மிக சுவாரசியமாக இருக்கிறது.

  தங்களுடைய தவறுகள் ஊழல்கள் வரிசையாக, பூதாகாரமாகப் பல்லை இளித்துக் கொண்டு வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், காங்கிரஸ் கட்சி நான் மட்டுமா இப்படி, அவனும் அப்படித்தானே என்ற சிறுபிள்ளைத் தனமான விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது. சிறுபிள்ளைகளைக் கூட விட்டு விடலாம்! சிறுபிள்ளைத்தனமாகவே தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கும் ஒரு கட்சியை ஓரம் கட்டி விட்டு, அடுத்த மாற்று என்ன என்பதைப் பார்ப்பது தான் சரியாக இருக்கும். முதலில், தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள்!

  ReplyDelete
 8. வாருங்கள் மாணிக்கம்!

  "இடுக்கண் வருங்கால் நகுக" என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்! காங்கிரஸ், அதன் கூட்டுக் களவாணிகள் என்ற இடுக்கண்கள் களையப்படும் வரை கொஞ்சம் நகைத்துத் தான் வைப்போமே என்று தான்!!

  நான் முயற்சிப்பதற்கு முன்னாலேயே அவர்களே காமெடி பண்ணிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து விடக் கூடாது!

  ReplyDelete
 9. வாருங்கள் கோவி.கண்ணன்!

  சாதி அரசியல் ஒன்றும் புலி வருது ரகம் அல்ல! "புலி வாலைப் பிடித்த நாயர் கதை" என்பது தான்சரியாக இருக்கும்!! விட முடியவும் இல்லை, பிடித்துக் கொண்டு அதன் வேகத்தோடு தொங்கிக் கொண்டு ஓடவும் முடியவில்லை என்பது தான் இது மாதிரி குறுகிய எண்ணங்களின் பின் அலைபவர்கள் பட்டு,கெட்டு அறிகிற பாடம்!

  மாணிக்கம்!

  முதலில், திரு.ராமச்சந்திர குஹா தன்னுடைய புது நூலை அறிமுகம் செய்து கல்கத்தாவில் பேசியபோது, வங்காளம் பிழைத்திருப்பதற்காவது, சிபிஎம் பதவியில் இருந்து பத்தாண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னதைத் தொட்டுத் தான் கொஞ்சம் விரிவாக எழுத உத்தேசித்திருந்தேன்.

  தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் மறைவுச் செய்தி, முந்திக் கொண்டது.தனிப்பட்ட முறையில் எனக்கு இருந்த அறிமுகம், அபிமானம், அப்புறம் எழுந்த கடுமையான விமரிசனங்கள் எதுவும் இப்போது வேண்டாமே என்பதால் தான் ஒற்றைவரியோடு அஞ்சலி. நீங்கள் நினைப்பது போல, 'கம்யூனிஸ்ட் தோழர்களே மறந்துவிட்டவராக' என்பதும் சரியல்ல. உடல் நலக் குறைவினால் அதிக செயல்பாடு இல்லை. அவ்வளவுதான். அதை ஈடு கட்டும் விதத்தில் அவருடைய இரண்டு மகள்களும், (வாசுகி, நிர்மலாராணி) செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
 10. ஊழலை ஒழிக்க ஒரே வழி காங்கிரசை கலைப்பதுதான்

  ReplyDelete
 11. விடுதலை அடைந்தவுடன் காங்கிரசைக் கலைத்து விடவேண்டும் என்று மகாத்மா காந்தி உறுதியாகச் சொன்னார். கேட்பவர்கள் தான் எவருமில்லை.நேருவுக்கு நாடாளும் ஆசை முற்றி, அங்கே வங்காளத்திலும் பஞ்சாபிலும் ஹிந்து முஸ்லிம் கலவரம் வெடித்து இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் கூட, Tryst with destiny என்று ரேடியோவில் உரையாற்றப் பயிற்சி செய்து கொண்டிருந்தார், காந்தி ஒருவரைத் தவிர கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கவோ, ஆறுதல் சொல்லவோ காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருத்தரும் முனையவில்லை.

  ஊழல் என்பது பிரிட்டிஷ் அரசு அமைப்பு முறையில் நமக்கு அளிக்கப்பட்ட வரமல்ல, சாபம். அதை விடக் குழப்பமான தேர்தல் முறைகள்! காங்கிரசைத் தூக்கி எறிவது, தேசம் உருப்பட முதல் படி என்றாலும், வெள்ளைத் துரை போய் கதர்க் குல்லாத் துரை வந்த மாதிரி, காங்கிரசை அகற்றி விட்டு, அதை விட கேடுகெட்ட ஒன்றை வைத்து ரீப்ளேஸ் செய்து விட முடியாது.இப்போதிருக்கும் தேர்தல் முறை அப்படிப்பட்ட சிக்கலைத் தான் நமக்குத் தந்திருக்கிறது.

  முதலில் விழிப்புணர்வு! எப்படிப் பார்த்தாலும் திருந்தாத கட்சியாக இருக்கும் காங்கிரஸ், தேர்தலில் மறுபடி தலைதூக்காமல் பார்த்துக் கொள்ளும் அதே நேரம், காங்கிரசின் ஊழல் வேறு ஒரு கட்சி அல்லது வேறு பெயரில் தலைதூக்கிவிடாமல் இருக்க, முக்கியமாகத்தேவைப் படுவது தேர்தல் சீர்திருத்தங்கள்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!