ஒருவழியாகக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு
முடிந்து விட்டது! ஐமு கூட்டணிக் குழப்ப வேட்பாளர், பிரணாப்
முகர்ஜியின் வெற்றி அனேகமாக வாக்குகள் எண்ணிக்கை
அடிப்படையில் உறுதிதான்!
ஆனால், மன சாட்சிப்படி ஓட்டுப் போட்டு
யாராவது குழப்படி,சில்மிஷங்கள் செய்திருக்கிறார்களா என்பது இனி மேல்தான் தெரிய வேண்டும்.
போதாக்குறைக்கு, பிரணாபின்
வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதே செல்லாது என்ற சங்மா, டாக்டர்
சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் தாக்கல் செய்திருக்கும்
மனுக்கள்--உச்சநீதி மன்றத்துக்கு
இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்படலாம்.உச்சநீதிமன்றம்
இதில் என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது ஒருபக்கமிருக்க, ஐமுகூட்டணிக்
குழப்பம் பிரணாப் விஷயத்தில் கருத்தொற்றுமையுடன் நின்றது எந்த
லட்சணத்தில் என்பது சரத் பவார் முறுக்கிக் கொள்ள
ஆரம்பித்ததில் நன்றாகவே வெளிப் பட்டிருக்கிறது. வேறுவழியின்றி காங்கிரஸ் அதற்கான விலையையும்
கொடுத்து, சமாளித்திருக்கிறது!
முலாயம் சிங் யாதவ், சங்மாவுக்கு வாக்களித்து, அதை மறுபடி பிரணாபுக்கு மாற்றிப் போட்டதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளாமல்செல்லாத ஒட்டாக்கி நிராகரித்திருக்கிறது. அதனாலென்ன? முலாயம் தான் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகவே சொல்லி விட்டார்!.காங்கிரஸ் கொடுத்த கூலிக்கு சரியாகவே கூவியாயிற்று! இதற்குமேலும் ஆதரித்துக் கூவ வேண்டும் என்றால்,அதற்குத் தனி ரேட் என்பது தான்!
சரத் பவார் ராஜினாமா விவகாரமும் அப்படித்தான்!டம்மிப் பீஸ் மண்ணுமோஹனுக்கு அடுத்த நம்பர் டூ டம்மி யார் என்பதில் தான் பிரச்சினை என்றார்கள்! அதெல்லாம் காங்கிரசில் இருக்கும் சொந்த முகமற்ற, ஜனங்களிடம் தனித்துப் போய்முகம் காட்ட முடியாத தலையில்லாததுகளுக்கு! பவார் மாதிரி ஊறித்திளைத்த பழம் பெருச்சாளிகளுடைய கணக்கெல்லாம் வேறு என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.ஐமு கூட்டணிக் குழப்பத்தில் தொடர்ந்து இருக்கப்போவதாக, பவார் அறிவித்திருப்பதில், காங்கிரசின் கையறு நிலையைப் பயன்படுத்தித் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டு விட்டார் என்று தான் தோன்றுகிறது!
வேறென்ன? பவாருடைய மகள் சுப்ரியா சுலேவுக்கு விரைவில் மத்தியில் கேபினெட் அந்தஸ்துள்ள மந்திரிப் பதவி! அப்புறம் வேறு சிலபல விஷயங்கள்! தென்னகத் தோழி கனிமொழி வேடிக்கை பார்த்துக் கொண்டு வெறும் கையைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா என்ற கேள்வியை கடந்த மூன்று மாதங்களாகவே இந்தப்பக்கங்களில் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்!

சரத்பவார், முலாயம்
சிங் யாதவ்,
மம்தா
பானெர்ஜி, இடதுசாரிகள், மாயாவதி, ஜெயலலிதா,நிதிஷ்குமார், பட்நாயக் போன்றவர்கள் இந்த மாதிரி அரசியல் மாற்றத்தை
நிகழ விடுவார்களா தடையாக இருப்பார்களா என்பது கேள்வியின் உட்கிடையாகவே
இருக்கிறது. ஆனால் இவர்களையும்
மீறி, காங்கிரஸ்
வேகமாகச் சிதைந்து கொண்டிருப்பதில், அரசியல் மாற்றம்
தவிர்க்க முடியாதது என்பது நன்றாகவே புலப்படுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணிக் குழப்பம், பிஜேபி தலைமையிலான தேசீய ஜனநாயகக் கூட்டணிக் குழப்பம் இரண்டுமே கருத்தொற்றுமை பற்றி அவ்வப்போது பேசுகின்றன இல்லையா? முதலில் இந்தக் கருத்தொற்றுமை என்றால் என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாம்!

காங்கிரசைத் தொட்டுப் பதிவுகள்
எழுதுவதில் எனக்கு அவ்வளவு விருப்பமில்லை என்றாலுமே கூட, ஒரு தலைமை, நிர்வாகம் எப்படியெல்லாம்
இருக்கக் கூடாது, செயல்படக் கூடாது என்பதில், காங்கிரஸ் கட்சி எப்போதுமே
ஒரு சிறந்த உதாரணம். அதனால் தான் காங்கிரஸ் கலாசாரத்தை வைத்து எதை எதையெல்லாம் கற்றுக் கொள்ளக் கூடாது, எதெல்லாம் தவிர்க்கப் படவேண்டியது என்பதை
இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்!
Consensus! கருத்தொற்றுமை!
டோனி மோர்கன் என்ற பதிவரை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம்! இவருடைய பதிவுகள், பெரும்பாலானவை, கிறித்தவ சர்ச்சுக்களின் நிர்வாகம், நிதி, இயக்கம் சார்ந்தவை, சர்ச்சுக்களால் ஸ்பான்சர் செய்யப் படுபவை என்றாலுமே கூட, சில பதிவுகள், நிர்வாகம், மேலாண்மை, குறித்த விஷயங்களில் பொருந்தியும், சிந்திக்கத் தூண்டுபவையாகவும் இருக்கிறது.
இந்தக் கருத்தொற்றுமை என்ற வார்த்தையையே ரொம்பக் கெட்ட வார்த்தையாகப் பார்க்கும் விதத்தில், இவர் எழுதிய ஒரு பதிவு ஒன்றைப் படித்து விட்டு, நாட்டு நடப்பு, உலக நடப்போடு பொருந்தி வருகிறதா என்று பார்த்தபோது தான், மன்மோகன் சிங் பேசினது செம காமெடியாக இருந்தது.

எப்படி என்பதைப் பார்ப்போமா?
டோனி மோர்கன், இந்தக் கருத்தொற்றுமை என்பது வெறும் கேலிக் கூத்து என்பதைக் குறைந்தது ஐந்து காரணங்களை வைத்தாவது சொல்லிவிட முடியும் என்கிறார். ஒவ்வொன்றாக, நம்முடைய சூழ்நிலைக்குப் பொருந்துகிற விதத்தில், அரசியலை அல்ல, நிர்வாகம், மேலாண்மை, தலைமைப் பண்பு, இந்தத் தலைப்புக்களை மையப்படுத்தி மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாமல், பார்க்கலாமா?

கருத்தொற்றுமை ஏற்பட சில அடிப்படைத் தேவைகள்!
விதங்கள்!
கற்றுக்
கொள்வதில் இரண்டு விதம்,
ஒன்று நம்முடைய சொந்த அனுபவங்களில்
இருந்து! இரண்டாவது, அடுத்தவருடைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்வது! இதுவும் இரண்டு விதமாகப்
பிரிந்து, எப்படி சரியாகச் செய்வது
என்பதாகவும், எப்படிச் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதைக் கற்றுக்
கொடுப்பதாகவும் இருக்கும் இல்லையா?!
கருத்தொற்றுமை என்பது
அர்த்தமே இல்லாத வெற்று வார்த்தை! எப்படி என்றால்,
முதலாவதாக, கருத்தொற்றுமை என்ற வார்த்தை, குறிப்பிட்ட ஒரு தருணத்துச் சூழ்நிலையோடு
நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.. மாற்றம் என்பது ஒரு பக்குவ நிலை,
அதற்குத் தயாராக
இருக்கும் தைரியம் எல்லோருக்குமே இருப்பதில்லை.
கருத்தொற்றுமை என்று பேச ஆரம்பிக்கும்போதே,
மாற்றத்திற்குத்
தயாராக இருப்பவர்கள், இல்லாதவர்கள் இரண்டு தரப்பையும் ஒன்றாக உட்கார்த்தி வைக்கும் போதே, தேக்க நிலை வந்து விடுகிறது. Status Quo என்ற படிக்கு எப்படி இருந்ததோ அதே பழைய நிலையிலேயே நிற்றல் என்பது, கருத்தொற்றுமை என்பதன் முதல் கோணலாக,
அவலட்சணமாக
இருக்கிறது.
இரண்டாவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கும்போதே, அங்கே எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகி, சந்தைக் கடை மாதிரி இரைச்சலும், கூச்சலுமாகிப் போய் விடுகிறது. தரங்கெட்ட விஷயங்களும், எதிர்மறையான போக்குகளும், கெட்ட எண்ணம் உடையவர்களுமே கூட சம வாய்ப்பு என்ற சந்தடி சாக்கில் உள்ளே நுழைந்து, உண்மையான குறிக்கோளை எட்ட விடாமல் செய்துவிடுகிற வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது.
மூன்றாவதாக, தைரியமான முடிவுகளை, விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் எடுபடாமல் போய்விடுகிறது. நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களைப் பேச முடியாமலேயே போய்விடுகிறது. நடுநிலை என்பது ஆகச் சிறந்தது எது என்று சீர்தூக்கிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது என்பதற்குப் பதிலாக, மதில் மேல் பூனை மாதிரி ரெண்டுங் கெட்டானான நிலையை எடுப்பது தான் என்றாகிப் போய்விடுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம், இங்கே மதச் சார்பின்மை-செக்குலரிசம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கும் விதம்!
நான்காவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்யும் முனைப்பு, பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே வளர்த்துக் கொண்டிருப்பதாக மாறிப்போய் விடுகிறது. ஒரு ஆரோக்கியமான விவாதம், அழுத்தமான கருத்தைப் பேசினால், எங்கே மற்ற தரப்பு விறைத்துக் கொள்ளுமோ என்ற பயத்தில், நடக்காமலேயே தவிர்க்கப் படுகிறது. அந்த நேரத்துக்கு, இரண்டு தரப்பையும் சமாதானமாகப் போகும்படிக் கெஞ்சலாக, விரிசலை பெயின்ட் அடித்து மறைத்து விடலாம் என்கிற மாதிரியானதாக, நின்று விடுகிறது.
ஐந்தாவதாக,கருத்தொற்றுமை என்கிற பெயரில், இப்போதிருக்கும் நிலையை விட உயரத் தவிக்கும் கனவுகளின் சிறகுகளை முறிப்பதாக மட்டுமே நடக்கிறது. கொஞ்சம் வித்தியாசமாக, ஆக்கபூர்வமாகச் சிந்திக்க முற்படுபவர்களை, கூட்டத்தோடு கோவிந்தா என்று போய்விடும்படி வற்புறுத்துகிறது. மறுப்பவர்களை வலுக் கட்டாயமாகப் பேசாமல் இருக்கும்படி மிரட்டுகிற கட்டப்பஞ்சாயத்தாகவுமே பெரும்பாலான சமயங்களில் மாறிவிடுகிறது.
அரசியலாகட்டும், அல்லது பணிபுரியும் இடமாக இருக்கட்டும்! கருத்தொற்றுமை என்பது எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்! தேக்கமடைந்து விடுவதை உங்கள் மீது திணிக்கிறதா? எதில் கருத்தொற்றுமை அவசியம் என்பதை விட்டு விலகி, சம்பந்தமே இல்லாமல், சந்தைக் கடையாகவும், சண்டைக் களமாகவும் ஆகி விடுகிறதா?

மிகச் சொற்பமான அளவிலேயே சொல்லப் பட்டாலும்,
சொல்வதன் உண்மையை
ஏற்றுக் கொள்ள முடிகிறதா, அல்லது கும்பலாகக் கூச்சல் போட்டே நல்ல விஷயம் கூட அம்பலமேறாமல் போய் விடுகிறதா? கூட்டமாகச் சொல்வது தான் சரி, அது சரி அது சரி என்று தலையாட்டிப் பொம்மைகளாக்குகிறதா அல்லது, தீர்க்கமாகச் சிந்திக்க இடம் இருக்கிறதா?
இந்த
ஐந்து காரணங்கள் அத்தனையும்உங்களுடைய அனுபவத்தில், யோசித்ததில் பொருந்துகிறதா? கூடுகிறதா? குறைகிறதா?
உங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கேட்போம்!