ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே.


பிறக்கும் புது வருடம், திருவுருமாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்குமான வருடமாக அமைய வாழ்த்தியிருக்கிறாய் தாயே! தெய்வீக நிலையை எட்டுவதில் ஓரடி முன்னேற்றமாக அமையவும் வாழ்த்தியிருக்கிறாய்.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உனது கருணைக்குத் தகுந்த பாத்திரமாகும் தகுதியை வரமாக அருள்வாய்.
உனது ஒளியினால் பாதுகாக்கப்படும் வாழ்க்கையை அருள்வாய்.
உனது ஒளி பொருந்திய பாதையில் எங்களை வழிநடத்திச் செல்வாய் அம்மா.
உனது திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே.

“May the highest good be yours.” !


ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் Next Future எனும் மின்னிதழின் டிசம்பர் மாத இதழ் தலையங்கம் இப்படி ஆரம்பிக்கிறது.

“As the year draws to a close, we at Next Future wonder at what our personal achievements have been. Our main objective is to share some powerful thoughts with our readers. We constantly aspire that the views expressed in the magazine may inspire and motivate others to move closer and closer towards the light. And it is almost an ardent prayer on our part to use the magazine as a platform through which we can offer our best and highest, not just to those who share the moment with us, but to the One who is the source of all our effort and our inspiration.”
courtesy http://nextfuture.sriaurobindosociety.org.in/dec08/nf_home.htm

வருடம் முடியப் போகும் தருணத்தில், கடந்து வந்த பாதையை, நடத்த நினைத்து ஆனால் நடக்காமல் போன குறிக்கோள்களை, எங்கு செல்ல நினைத்து எங்கு வந்து நிற்கிறோம் என்கிற மாதிரியான சுய அலசல்கள், ஆராய்ச்சிகள், விமரிசனங்கள் எல்லாம், கிளம்புகிற தருணம் இது. ஆர்வக் கோளாறில் கிளம்புகிற இத்தகைய சுயவிமரிசனங்கள் எல்லாம், கிளம்பின வேகத்திலேயே அடங்கிப் போவது, நம்முடைய தேசியக் கலாச்சாரம், பின்னே இல்லையா!

ஒவ்வொருவரும் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது,எதையோ எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு பொதுவான நோக்கத்தில் தான் ஆரம்பிக்கிறோம்..அப்படித்தான், இந்த வலைப் பதிவும் ஒரு நெருக்கடியான கால கட்டத்தில், 2004 ஆம் ஆண்டு இறுதியில், பிறந்தது. என்னுடைய சொந்த சோகங்களை அல்லது உபதேசங்களை அள்ளித் தெளிக்க வேண்டும் என்கிற நோக்கம் அப்போதும் சரி, இப்போதும் கூட கொஞ்சமும் இல்லை. நான் அனுபவித்துக் கொண்டிருந்த கஷ்டங்களுக்கு, எனக்குள்ளேயே காரணங்களைத் தேடிக் கொண்டிருந்த காலம் அது. எவரையும் குற்றம் சொல்லவோ, அல்லது என்னை நானே சவுக்கால் அடித்துக் கொள்ளவோ அல்லாமல், ஒரு சாட்சியாக என்னை நானே வேடிக்கை பார்க்கத் தொடங்கிய ஒரு காலம், ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அருளிய பிரார்த்தனைகள், உரையாடல்கள் இவற்றுள் ஏதோ ஒரு பகுதியை அன்றன்றைய த்யானமாகப் படிப்பது, வலைப் பதிவில் இடுவதுமாக ஆரம்பித்தது.சிறிது சிறிதாக ஒரு நண்பர் வட்டம் கூடியது. 2006 ஆம் ஆண்டு நவம்பர் அனுபவங்கள், Yahoo! 360 நண்பர் வட்டத்தைக் கலைத்து விட்டு, ஒதுங்கியே இருக்கும்படி தூண்டின. அதிலே சில நல்ல நண்பர்களையும் இழந்தது, இன்னமும் கூட வருத்தம் தான்.

ஆனாலும், இந்த வலைப்பதிவுகளில் முக்கியமான விஷயம், நான் யார், இங்கு என்ன செய்கிறேன், நான் செய்ய வேண்டிய கடமை என்ன என்பது தான். ஒரு சிறு வெளிச்சக் கீற்றாகவாவது, எவருக்கேனும் இது உதவக்கூடும் என்பது தான் என் நம்பிக்கை.தமிழில் எழுத வேண்டும் என்பது வலைப் பதிவு தொடங்கிய நாளிலிருந்தே எனக்குள்ளிருந்த தாகம். அதற்கும், இப்போது தான் நேரம் வந்திருக்கிறது.

நம்முடைய பலவீனங்களும், தோல்விகளும் கூட நமக்குப் பேருதவியாக இருக்க முடியும் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார். நாம் எதிர் கொள்ளும் மிக மோசமான சூழ்நிலைகள் கூட, நமக்குள்ளிருக்கும் பலவீனத்தை, இருண்ட பகுதியை எப்படி எதிர்கொள்ள வேண்டும், வெல்ல வேண்டும் என்பதை எடுத்துச்சொல்லும் என்கிறார்.

வார்த்தைகளின் உள்ளே பொதிந்து கிடக்கிற மகா சக்தி இது வரை எனக்கு தெரியாமலே போனதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பிறக்கும் இந்த புது வருடத்திலாவது வார்த்தைகளினூடே பொதிந்து கிடக்கும் சக்தி இவனுக்கு வசப்படட்டும். பயனிலாச் சொல் எதுவும் வேண்டாம்.வார்த்தைகளின் சக்தியைக் குறித்து ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதை இன்றைய த்யானமாக ஏற்றுக் கொள்வோமா ?


The Power of Words


“It seems unnecessary to draw your attention to the quantity of useless
words that are uttered each day; this evil is well known to all, although very few people think of remedying it. But there are many other words which are spoken needlessly. That is to say, in the course of the day, we often have the opportunity of expressing a helpful wish by pronouncing one word or another, provided that we know how to put the appropriate thought behind the words. But too often we lose this opportunity of drawing a beneficial mental atmosphere around the people we know and thus of truly helping them. It would be very useful to remedy this neglect. To do this, we must refuse to allow our minds to remain in that state of vague and passive imprecision which is almost constant in most people. To cure ourselves progressively of this somnolence, we can, when pronouncing a word, force ourselves to reflect upon its exact meaning, its true import, in order to make it fully effective. In this regard, we can say that the active power of words comes from three different causes. The first two lie in the word itself, which has become a battery of forces. The third lies in the fact of living integrally the deep thought expressed by the word when we pronounce it. Naturally, if these three causes of effectiveness are combined, the power of the word is considerably enhanced. 1) There are certain words whose resonance in the physical world is the perfect vibratory materialisation of the more subtle vibration produced by the thought in its own domain. If we examine closely this similarity between the vibrations of thought and sound, we can discover the limited number of root syllables which express the most general ideas, and which are to be found in most spoken languages with an almost identical meaning. (This origin of language should not be confused with the origin of written languages, which are of an altogether different nature and correspond to different needs.) 2) There are other words which have been repeated in certain circumstances for hundreds of years and which are instinct with the mental forces of all those who have pronounced them. They are true batteries of energy. 3) Finally, there are words which assume an immediate value when they are pronounced, as a result of the living thought of the one who pronounces them. To illustrate what I have just said with an example, here is a very powerful word, for it can combine the qualities of all three categories: it is the Sanskrit word “AUM”. It is used in India to express the divine Immanence. There, it is associated with every meditation, every contemplation, every yogic practice. More than any other sound, this sound “AUM” gives rise to a feeling of peace, of serenity, of eternity. Moreover, this word is instinct with the mental forces which for centuries all those who have used it have accumulated around the idea that it expresses; and, for Hindus especially, it has the true power of bringing one into contact with the divine Essence it evokes. And as Orientals have a religious mind and the habit of concentration, few pronounce this word without putting into it the conviction that is needed to make it fully effective. In China, a similar effect is obtained with a word of identical meaning and somewhat similar sound, the word “TAO”. Our western languages are less expressive; in their present form, they are too far removed from the root language which gave birth to them. But we can always animate a word by the power of our living and active thought. Besides, there are formulas which we could profitably add to all those in common use. These formulas were used in certain ancient schools of initiation. They served as greetings, and in the mouth of one who knew how to think them, they had a very special power of action. The disciples, the neophytes who were taking their first steps on the path, were greeted: “May the peace of equilibrium be with you.” All those who by their constant and progressive inner and outer attitude had shown their deep and lasting goodwill, were greeted: “May the highest good be yours.” And in certain instructors manifesting especially high forces, this word was endowed with the power of transmitting true gifts, for example, the gift of healing. “

The Mother
From “Words Long Ago”
18 June 1912

கடவுள் பாதி, மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை அல்ல மனிதன்!


Sweet Mother, please tell me the meaning of "consciousness''.

Without consciousness you would not even know that you live. Consciousness is the faculty of becoming aware of anything through identification.
The Divine Consciousness is not only aware but knows and effects. To become aware of a vibration, for instance, does not mean that you know everything about it.
In the Divine Consciousness the smallest things from below unite with the highest, the most sublime from above.

The Mother, 3 July 1954
Coll. Works Vol.15

இப்போது தான் தொடங்கின மாதிரி இருந்தது, இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டே நாட்கள் தான் மீதம் இருக்கிறது. அப்புறம் என்ன, வெடி வெடித்து, ஆர்ப்பாட்டமாக வருகிற புதிய ஆண்டின் வரவைக் கொண்டாட வேண்டியது தான்!

ஒவ்வொரு ஆண்டுத தொடக்கத்திலும், இந்த ஆண்டில் குறைந்த பட்சமாக இன்ன இன்ன இலக்கைத் தொட்டு விட வேண்டும் என்று குறித்துக் கொள்வது உண்டு. அப்புறம், அது இந்திய அரசாங்கம் போடும் அய்ந்தாண்டுத் திட்டங்கள் மாதிரித் தான். என்ன குறிக்கோளுடன், என்ன செயலைத் தொடங்கினோம், எவ்வளவு முன்னேறினோம்,இன்னமும் எட்டப் பட வேண்டிய இலக்கு எந்த அளவு இருக்கிறது அது எதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாது,அது பற்றிக் கவலை படுவாருமில்லை!

ஏகப்பட்ட அபிலாஷைகள், கனவுகள்! எல்லாம் சரி தான்! கனவுகளும், அபிலாஷைகளும் எட்ட முடியாதவை ஒன்றும் அல்ல. ஆனாலும், கனவு காணத் தெரிந்த அளவுக்கு, கனவு மெய்ப்பட, காரியம் கை வசமாக எந்த அளவுக்கு சிரத்தையுடன் உழைப்பும் வேண்டும் என்பதில் ஏற்படுகிற தளர்வு, சோம்பேறித்தனம் இதெல்லாம் தான், கனவுகளை வெறும் பகற்கனவாகவே வைத்திருக்கிறது.

Consciousness என்றும் ஜாக்ரத் அல்லது விழித்திருக்கும் நிலையைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லியிருப்பதை மேலே பார்த்தோம்.

அளவு பண்பை மாற்றும்: பண்பு அளவை மாற்றும் என்பது இயக்கத்தின் அடிப்படை விதி.

நம்முடைய ஒவ்வொரு எண்ண அலையும், செயலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு அடிப்படையாக, விதையாக இருப்பதை நாம் அறிவதே இல்லை. தெரியாமல் நிகழ்ந்த போதிலும், இந்த பிரபஞ்சம் ஒரு புதிய கட்டமைப்பிற்கு மாறிக் கொண்டே இருப்பதும், விழிப்புணர்வு என்று இப்போது நாம் அறிந்திருப்பது கூட பெரும் மாறுதலுக்கு உள்ளாகிக் கொண்டிருப்பதும் கூட பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி தான்.

மனிதப் பிறவி என்பது ஸ்ருஷ்டியின் முடிந்த, இறுதியான நிலை அல்ல.

பரிணாம வளர்ச்சியில், மிருகத்திடமிருந்து முன்னேறி, ஆனாலும், மிருக உணர்வுகளின் ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுபடாமலிருக்கும், இடைப்பட்ட நிலை தான்!

கடவுள் பாதி, மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை அல்ல மனிதன்.

மிருகவுணர்வுகளில் இருந்து விடுபட்டு தெய்வீக நிலையை எட்டக் காத்திருக்கும் ஒரு புதிய ஏற்பாடு.

You are
what your deep, driving desire is.

As
your desire is, so is your will.

As
your will is, so is your deed.

As
your deed is, so is your destiny. “

(Brihadaranyaka Upanishad, 4.4.5)


ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னைச் சரண் அடைகிறேன்.

அறியாமை, முயலாமை, இல்லாமை, இப்படி எல்லா ஆமைகளையும் என் தோள்களில் இருந்து இறக்கி வைக்க தயவு செய்வாய்.

இந்த ஆமைகளோடே இனியும் கூடியிராமல், ஒரு புதிய அனுபவத்திற்கு என்னைத் தயார் செய்வாய். தகுதியும், தைரியமும் அருள்வாய்!

பிறக்கும் புத்தாண்டு, உணமையிலேயே புத்துணர்வை அளிக்கும் ஆண்டாக வரம் அருள்வாய். வீணாய்க் கழிந்த பொழுதையும் ஈடு கட்டும் முயற்சியை, மன வலிமையை,எல்லா நேரங்களிலும் நீ என்னோடே கூட இருக்கிறாய், துணை செய்கிறாய், என்னுள் நிறைந்து எல்லாவற்றையும் நீயே நடத்துகிறாய் என்கிற உறுதியான நம்பிக்கையை வரமாக அருள்வாய்.

ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்ய மயி, பரமே!

Courage outside, peace inside and a quiet unshakable trust in the Divine's Grace!


"Two things you must never forget: Sri Aurobindo's compassion and the Mother's love, and it is with these two things that you will go on fighting steadily, patiently, until the enemies are definitively routed and the Victory is won for ever.

Courage outside, peace inside and a quiet unshakable trust in the Divine's Grace."

The Mother
Vol 15 ,19 May 1933




A conflict is born of the opposition of the two instinctive tendencies which govern human action: the individualist and the gregarious.

The Evolution of Future Man என்கிற நூலில் ஸ்ரீ அரவிந்தர், மனிதனுடைய பரிணாம வளர்ச்சி எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை விவரித்திருக்கிறார். முதல் மூன்று அத்தியாயங்களின் சாராம்சத்தை, முந்தைய பதிவுகளில் சுருக்கமாகப் பார்த்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக , அந்த நூலின் நான்காவது அத்தியாயத்தின் சுருக்கமாக, பவித்ரா என்று அன்புடன் அழைக்கப் பட்ட பிரெஞ்சு அடியவர் இப்படிச் சொல்லுகிறார்:

“Standards of Conduct and Spiritual Freedom

“Since perfection is progressive, good and evil are shifting quantities and change from time to time their meaning and value. Four main principles successively govern human conduct. The first two are personal need and the good of the collectivity. A conflict is born of the opposition of the two instinctive tendencies which govern human action: the individualist and the gregarious. In order to settle this conflict, a new principle comes in, other and higher than the two conflicting instincts, and aiming both to override and to reconcile them. This third principle is the ethical ideal.

But conflicts do not subside; they seem rather to multiply. Moral laws are arbitrary and rigid; when applied to life, they are obliged to come to terms with it and end in compromises which deprive them of all power.

Behind the ethical law, which is a false image, a greater truth of a vast consciousness without fetters unveils itself, the supreme law of our divine nature. It determines perfectly our relations with each being and with the totality of the universe, and it also reveals the exact rhythm of the direct expression of the Divine in us. It is the fourth and supreme principle of action, which is at the same time imperative law and absolute freedom.”

முழுமை அல்லது பூர்த்தி என்று நாம் கருதுவதில், நல்லது, நல்லது அல்லது என்பன அளவிலும், பண்பிலும் மாறிக் கொண்டே இருக்கும். மனிதனிடத்தில், இரண்டு விதமான முரண்பாடுகள், எப்போதும் மோதிக்கொண்டே இருக்கும். முதலாவது, தனித்துவமானது, தன்முனைப்பாக வெளிப்படும்; இன்னொன்று குழு மனப்பான்மை. இந்த இரண்டு முரண்பாடுகளின் மோதலைத் தீர்ப்பதற்கு, இந்த இரண்டையும் விட உயர்ந்ததான மூன்றாவதுகுறிக்கோள் உருவாகும். இது, முந்தைய இரண்டையும் சமன் பெறச் செய்து அல்லது அவைகளை மீறி ஒரு தீர்வாக அமையும்.

ஆனாலும், முரண்பாடுகளும், மோதல்களும் ஓய்ந்து விடுவதில்லை. மாறாக, மென்மேலும் வளர்ந்து கொண்டிருப்பதாகத் தான் தோற்றும். பழைய சம்ப்ரதாயங்கள், நடைமுறைக்கு உதவாமல் போகும். இவை மேலோட்டமான பொய்த்தோற்றமே!

இதன் பின்னால் எல்லையற்ற மெய்யுணர்வு தடைகளைத் தகர்த்து வெளிப்படும். இந்த எல்லையற்ற மெய்யுணர்வு தான், நம்முடைய உன்னதமான தெய்வீக நிலை. இது தான், நமக்கும் , இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத உறவை வெளிப்படுத்தும்.

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது; பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது"

என்பது அனுபவ சாத்தியமாகும். இதுவே தெய்வீகம் நம்க்குள் நேரடியாக வெளிப்படுகிற நிலை.

Golden Drops of Light



If you want peace upon earth,
first establish peace in your heart.
If you want union in the world,
first unify the different parts of your own being.

The Mother
Vol 15 ,February 1965

Thanks and courtesy: Golden Drops of Light by www.searchforlight

“Without an inner change man can no longer cope with the gigantic development of the outer life. “

அப்படிப் பட்ட திருவுரு மாற்றத்தை இவனுக்கும் தந்தருள்வாய் தாயே!

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்!

மாற மறுக்கிற, பழைய பழக்கங்களின் அடிமையாகவே இருக்கத் தூண்டுகிற எல்லாத் தடைகளையும் நீ அறியச் சமர்ப்பிக்கிறேன். தடைகளை வென்று, திருவுரு மாற்றம் இவனுக்குள் நிகழட்டும். இவனது வாழ்வும், வளமும் உன்னுடைய அருட்கொடையாக என்றைக்கும் தழைத்தோங்கட்டும்.

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி, பரமே!

But reason cannot arrive at any final truth!


Our mind is a house haunted by the slain past,
Ideas soon mummified, ghosts of old truths,
God's spontaneities tied with formal strings
And packed into drawers of reason's trim bureau,

Savitri B. II, C. XIII, P. 285


courtesy: www.searchforlight.org

மனம் என்பது இரு விதமான முரண்பாடுகளுக்கிடையில் எப்போதும் சலித்துக் கொண்டே இருக்கிற கருவி, ஏன், எப்படி, எதனால் என்று தர்க்கித்துக் கொண்டே போகும். இப்படிப் பட்ட கருவி ஒரு போதும் உண்மையை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ள முடியாது. இந்தத் தருணத்தில்மிகவும் புரட்சிகரமாகத் தோன்றுகிற ஒரு கருத்து அல்லது வடிவம், சீக்கிரமாகவே நீர்த்துப் போவதை நம் அன்றாட வாழ்வில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மத நம்பிக்கைகள், ஆன்மீகச் சிந்தனைகள் என்பன மனிதன் தன் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிற முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பவையாக இருந்ததுண்டு. காலப் போக்கில் இந்த தீர்வுகளே புதிய பிரச்சினைகளாகமாறிப் போனதையும் வரலாற்றில் நாம் பார்த்திருக்கிறோம்.

உடனேயே "மதம் என்பது மக்களுக்கு வழங்கப்படும் அபின்" அல்லது "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்" என்று ஆரம்பித்து, பிரச்சினைக்கெல்லாம் இவர் அல்லது அவர் தான் காரணம் என்று பழியை ஏதோ ஒன்றின் மேல் சுமத்தி விட்டு, பிரச்சினை என்ன என்பதையே மறந்து விட்டு ஏதோ ஒரு ஈயம் [மார்க்சீயம், பார்ப்பனீயம்] பூசிவிட்டால் அது தான் தீர்வு என்று மயங்கிக் கிடக்கிறோம்.

ஒரு மதம் என்பது, ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் பேரில் எழுப்பப் படுவது. அதைப் பின்பற்றுகிறவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது. திக்கு திசை தெரியாமல் இருப்பதை விட, ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு முன்னேற ஒரு வழி அவ்வளவு தான். ஒரு கால கட்டத்தில், மதத்தின் தேவை இல்லாமல் போகும்.

எப்போது?

குறுகிய வட்டத்தில் இருந்து ஆன்மீகச் சிந்தனைக்கு உயருகிற போது, மதம் என்பது அவசியம் இல்லாது போகும்.

ஆன்மீகச் சிந்தனை என்பது ஒரு பரந்த பார்வை, தனக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்த நிலை. எல்லாவற்றையும் நேசிக்கக் கற்றுக் கொண்ட நிலை. ஆன்மீகம் என்கிற போதே, எல்லாவற்றையும் துறந்த நிலை என்பதாக தப்பான ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொண்டு, அடிப்படை உண்மைகளையே நிராகரிக்கிற தப்பான அணுகுமுறைக்குப் போய் விடுகிறோம்.

உண்மையில், ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற ஒரு பக்குவமான நிலை.
Why does man have faith in reason?

Because reason has a legitimate function to fulfil, for which it is perfectly adpated; and this is to justify and illumine for man his various experiences and to give him faith and conviction in holding on to the enlarging of his consciousness.

This truth is hidden from the rationalist because he is supported by two constant articles of faith, first that his own reason is right and the reason of others who differ from him is wrong, and secondly that whatever may be the present deficiencies of the human intellect, the collective human reason will eventually arrive at purity and be able to found human thoughts and life securely on a clear rational basis entirely satisfying to the intelligence.

His first article of faith is no doubt the common expression of our egoism and arrogant fallibility, but it is something more; it expresses this truth that it is the legitimate function of the reason to justify to man his action and his hope and the faith that is in him and to give him that idea and knowledge, however restricted, and that dynamic conviction, however narrow and intolerant, which he needs in order that he may live, act and grow in the highest light available to him.

The reason cannot grasp all truth in its embrace because truth is too infinite for it; but still it does grasp the something of it which we immediately need, and its insufficiency does not detract from the value of its work, but is rather the measure of its value.

For man is not intended to grasp the whole truth of his being at once, but to move towards it through a succession of experiences and a constant, though not by any means perfectly continuous self-enlargement. The first business of reason then is to justify and enlighten to him his various experiences and to give him faith and conviction in holding on to his self-enlargings. It justifies to him now this, now that, the experiences of the moment, the receding light of the past, the half-seen vision of the future. Its inconstancy, its divisibility against itself, its power of sustaining opposite views are the whole of its value. It would not do indeed for it to support too conflicting views in the same individual, except at moments of awakening and transition, but in the collective body of men and in the successions of Time that is its whole business.

For so man moves towards the infinity of Truth by the experience of its variety; so his reason helps him to build, change, destroy what he has built and prepare a new construction, in a word, to progress, grow, enlarge himself in his self-knowledge and world-knowledge and their works.

But reason cannot arrive at any final truth because it can neither get to the root of things nor embrace their totality.
It deals with the finite, the separate and has no measure for the all and the infinite.

Without an inner change man can no longer cope with the gigantic development of the outer life.

“Our human knowledge is a candle burnt
On a dim altar to a sun-vast Truth”

Savitri Bk. II, C. XII, P. 280

A change of consciousness is the major fact of the next evolutionary transformation


“A change of consciousness is the major fact of the next evolutionary transformation, and the consciousness itself, by its own mutation, will impose and effect any necessary mutation of the body.“

-Sri Aurobindo

“The Future Evolution of Man” Chapter 2

மனிதனுடைய பரிணாம வளர்ச்சி எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை ஸ்ரீ அரவிந்தர் சொன்னதன் சாராம்சமாக, பவித்ரா என்றழைக்கப்பட்ட அடியவர் இரண்டாவது அத்தியாயத்தின் சுருக்கத்தை இப்படிச் சொல்கிறார்:

The Place of Man in Evolution

“An evolution of consciousness is the central motive of terrestrial existence. The evolutionary working of Nature has a double process: an evolution of forms, an evolution of the soul.

Man occupies the crest of the evolutionary wave. With him occurs the passage from an unconscious to a conscious evolution. At each step one receives an intimation of what the following step will be. The nature of the next step is indicated by the deep aspirations awakening in the human race.

A change of consciousness is the major fact of the next evolutionary transformation, and the consciousness itself, by its own mutation, will impose and effect any necessary mutation of the body. There is no reason to suppose that this transformation is impossible on earth. In fact, it would give the truest meaning to earthly existence.

Man's urge towards spirituality is an undeniable indication of the inner drive of the Spirit within towards emergence, its insistence towards the next step of its manifestation.”

பரிணாம வளர்ச்சியில் இரண்டு விதமான அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று வடிவங்களிலான பரிணாம மாற்றம், இன்னொன்று ஆத்மா அல்லது சைத்ய புருஷனுடைய பரிணாம மாற்றம்.

முதலாவது அம்சத்தில்,

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்"

என்று திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் உரைத்தது
போல, பரிணாமம் பல படிகளைக் கொண்டதாயிருக்கிறது. இரண்டாவதாக ,புல்லாய்க் கிடந்த போதும், புழுவாய்க் கிடந்த போதும், பலப்பல மிருகமாய்ப் பிறந்த போதும், உள்ளே இருக்கிற ஆத்மா ஒன்றே என்று சொல்லப் பட்டாலும், விழிப்பு நிலையில் ஏகப் பட்ட படித்தரங்கள் இருக்கின்றன.

ரமண மகரிஷி, தன்னுடைய சிறு வயதில் மரணத்தைப் பற்றிய ஒரு விழிப்பு ஏற்பட்டதும் "என் தந்தையிடம் போகிறேன்" என்று எழுதி வைத்து விட்டுத் திருவண்ணாமலைக்கு வந்தார். பன்னிரண்டு வயதிலேயே, ஆத்ம ஞானம் கிடைத்து விட்டது என்பது வரை எல்லோருக்கும் தெரியும், ஆனால், அதற்கு முன் எத்தனை எத்தனை முயற்சிகள், எத்தனை எத்தனை பிறவிகளில் அவர் செய்திருப்பார் என்பது மட்டும் தெரியாது. ஒவ்வொரு மனிதனிடத்திலும், இத்தகு முயற்சிகளை, பரிணாமச் சக்கரம் எல்லா நேரங்களிலும் செய்து கொண்டே வந்திருக்கிறது, இனியும் மேற்கொள்ளும்.

ஸ்ரீ அரவிந்தர் மேலும் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்:

“If a spiritual unfolding on earth is the hidden truth of our birth into Matter, if it is fundamentally an evolution of consciousness that has been taking place in Nature, then man as he is cannot be the last term of that evolution: he is too imperfect an expression of the spirit, mind itself a too limited form and instrumentation; mind is only a middle term of consciousness, the mental being can only be a transitional being.

If, then, man is incapable of exceeding mentality, he must be surpassed and supermind and superman must manifest and take the lead of the creation. But if his mind is capable of opening to what exceeds it, then there is no reason why man himself should not arrive at supermind and supermanhood or at least lend his mentality, life and body to an evolution of that greater term of the Spirit manifesting in Nature.”

“For all problems of existence are essentially problems of harmony."


At each step one recieves an intimation of what the following step will be.

“For all problems of existence are essentially problems of harmony.They arise from the perception of an unsolved discord and the instinct of an undiscovered agreement or unity. ”
-Sri Aurobindo,
The Future Evolution of Man, Ch.1 'The Human Aspiration

“Everyone has in him something divine, something his own, a chance of perfection and strength in however small a sphere which God offers him to take or refuse. The task is to find it, develop it and use it. The chief aim of education should be to help the growing soul to draw out that in itself which is best and make it perfect for a noble use.”
-Sri Aurobindo

ஸ்ரீ அரவிந்தர் எவ்வாறு மனித குலம், பரிணாமத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்பதை " The Future Evolution of man" என்கிற நூலில் அழகாக விளக்கியிருக்கிறார்.ஒவ்வொரு அடி எடுத்து வைக்கிறபோதும், அடுத்த அடி எப்படி எடுத்து வைக்க வேண்டும் என்பதை அறிகிற புத்தியையும் ஆண்டவன் நமக்கு அருளுகிறான் என்பதையும் ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறார். அதன் முதல் அத்தியாயத்தின் சாராம்சமாக பவித்ரா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அடியவர் இப்படிச் சொல்லுகிறார்:

The Human Aspiration

“ Man's highest aspiration - his seeking for perfection, his longing for freedom and mastery, his search after pure truth and unmixed delight - is in flagrant contradiction with his present existence and normal experience.

Such contradiction is part of Nature's general method; it is a sign that she is working towards a greater harmony. The reconciliation is achieved by an evolutionary progress.

Life evolves out of Matter, Mind out of Life, because they are already involved there: Matter is a form of veiled Life, Life a form of veiled Mind. May not Mind be a form and veil of a higher power, the Spirit, which would be supramental in its nature? Man's highest aspiration would then only indicate the gradual unveiling of the Spirit within, the preparation of a higher life upon earth.”

மனிதன் தன் வாழ்வில் சந்திக்கிற ஒவ்வொரு முரண்பாடும், ஒவ்வொரு துயரமும் ஒரு பெரிய ஒருமைக்கான முன்னேற்பாடாகவே அமைவது இறைவனது சித்தம். சடமாக இருந்த நிலையிலிருந்து உயிர் தோன்றியது. உயிரிலிருந்து மனம் தோன்றியது. சடமாக இருந்த நிலையில் உயிர்மை மறைக்கப்பட்டதாக இருந்தது போலவே உயிர்மை என்பது மனத்தின் மறைக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. மனத்தையும் மிஞ்சிய பெருநிலையை அடைவதற்கே கேள்விகள் எழுந்தன.

தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறிந்து கொள்வதில் மனிதனுக்கு இயல்பாகவே எழுந்த ஆர்வம் அல்லது விழைவு, அதை ஒட்டி எழுகிற தடைகள், அதையும் மீறி அடுத்து என்ன, அடுத்தது என்ன என்கிற தேடல் மனித குலம் தோன்றிய நாளில் இருந்தே தொடங்கி விட்டது.

அந்த வகையில், இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு முரண்பாடும், எதிர்மறையான சிந்தனையும், சூழலும், இவனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்லுகிற கருவியாகவே இறைவன் அருளியிருக்கிறான். வீணே கழிந்தன நாட்கள் என்று வேதனைப் படவோ பதட்டப் படவோ அவசியமில்லை என்று சொல்லாமல் சொல்லுகிறான். வெளியே ஆர்ப்பரிக்கிற ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஈடாக உள்ளேயே இருக்கிற அழுக்கை, இருளைக் கண்டு கொள்கிற பயிற்சியாகவே படிப்பித்துக் கொண்டிருக்கிறான்.
"மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா"
பழுதையைப் பாம்பாகக் காண்பிக்கிற மனத்தின் உண்மையான தன்மையைப் புரிந்து கொண்டால் அதுவே இன்றைக்குக் கிடைக்கிற பெரிய வரம்!
ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
எனது மனம், கரணங்கள், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
உனது பிரியத்திற்கு உகந்த குழந்தையாக வரம் அருள்வாய்.
உனது சித்தத்தின் படியே இயங்குகிற வாழ்க்கையை அருள்வாய்.
அகந்தை, அறியாமை எனும் இருளில் மறைந்து கிடக்கிற, உனது சித்தத்திற்கு பணிய மறுக்கிற பகுதிகளில் உனது கருணையாகிற ஓளி படட்டும், உனது ஒளியினால் இவனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தும் நிறைவு செய்யப் படட்டும்.

IT is in one’s own self that all the obstacles lie


Golden Drops of Light

Hidden in an earthly garment that survives,
I am the worldless being vast and free.
-Sri Aurobindo

March 1, 1914

“IT is in one’s own self that all the obstacles lie,
IT is in one’s own self that all the difficulties are found,
IT is in one’s own self that there is all the darkness and ignorance.
Were we to travel throughout the earth, were we to go and bury ourselves in some solitude, break with all our habits, lead the most ascetic life, yet if some bond of illusion held back our consciousness far from Thy absolute Consciousness, if some egoistic attachment cut us off from the integral communion with Thy divine Love, we would be no nearer Thee despite all outer circumstances.
Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.
O Lord, I implore Thee! Grant that I may be perfectly conscious and master of all that constitutes this personality, so that I may be delivered from myself and Thou alone mayst live and act through these multiple elements.
To live in Love, by Love, for Love, indissolubly united to Thy highest manifestation....
Always more light, more beauty, more truth!”


-The Mother
“Prayers and Meditations”

தமிழிலே ஒரு அழகான முதுமொழி உண்டு:
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
"எண்ணம் போல வாழ்வு"
நம்முடைய துயரம், வறுமை, நோய் முதலான எல்லாம் வெளியில் இருந்தே வருவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அது போலவே, மகிழ்ச்சி முதலானவையும் வெளியில் இருந்து வருவதாக எண்ணி மயங்கிக் கிடக்கிறோம்.

உண்மையில், சந்தோஷமோ, துக்கமோ வெளியில் இருந்து வருவதில்லை. தீது, நன்று எனப் பேதப்படுத்திப் பார்க்கிற எதுவும் நமக்கு வெளியிலிருந்து வருவதுமில்லை.

காளிப் பாட்டிலே பாரதி அருமையாகச் சொன்னான்:

"யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மை எல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை!"

இதுவரை இவனுக்கு இந்த நுட்பம் ஏனோ தெரியாமலே போயிற்று. தன்னைச் சுற்றி உள்ளவர்களுடைய குறைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும், தன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல, இவனது அகத்தில் இருந்த அழுக்குத் தான் பிறரிடத்தில் இவன் பார்த்துக் கொண்டிருந்தது.

தன்னைச் சுற்றியிருக்கிற உலகத்தைப் புரட்சிகரமாக சீர்திருத்தம் செய்யப் போகிறேன் என்று கிளம்பியவனுக்கு சீர்திருத்தம் என்பது தன்னிடத்தில் தான் தொடங்குகிறது என்பது ஏனோ புரியவில்லை. புரட்சி என்று பகட்டான வார்த்தையில் சொல்லப் படுவது, ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவிலே நடத்திக் காட்ட வேண்டிய திருவுரு மாற்றம் என்பதோ, அப்படிப் பட்ட மாற்றம், வெறும் ஆவேசத்தினாலோ, வார்த்தை ஜாலங்களினாலோ, எதையோ ஒன்றை கரித்துக் கொட்டுவதாலோ, வெறுப்பை உமிழ்வதாலோ நிகழ்வதில்லை என்கிற உண்மை வெளிப்படவே இவ்வளவு நாட்கள் ஆயிற்று.

உண்மையைத் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை.
அனுபவ சாத்தியமாகிற வரைக்கும், உண்மை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தானிருக்கும் என்பதும், நிறையவே பட்டும், சுட்டும் கொண்ட பிறகு தான் புலப்பட தொடங்கியது.

"குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை" என்பது நிதர்சனமாகத் தெரியத் தொடங்கின நேரத்தில், பழைய பழக்கங்களில் ஊறிப் போன பிடிமானமும், வெளிச்சூழ்நிலைகளும் சேர்ந்து,'மாறப் போகிறாயா என்ன? ஒன்ணும் காமெடி கீமடி பண்ணலையே" என்று வடிவேலு ரேஞ்சுக்கு ரேக்கி விட்டுப் போய்க் கொண்டிருப்பதையும், கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்து கொள்ள முடிந்தது.
“Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.”
ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த பிரார்த்தனையை மறுபடி படிக்கிற போது தான் சில வெளிச்சக் கீற்றுக்கள் இருண்ட மனத்தின் ஏதோ ஒரு மாற மறுக்கிற பகுதியின் மேல் விழுவதை உணர முடிகிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உனது திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
உனது ஒளியினால் இவனது அகமும், புறமும் நிறைவு செய்யப் படட்டும், உனது எல்லையற்ற கருணையினால், பழக்கங்களின் அடிமையாகவே இருக்கச் சோம்பிக்கிடக்கிற பகுதிகளும், உனது ஒளியினால் தூய்மை பெறட்டும்.
தடைகளை அகற்றுவாய் தாயே! த்ரிதேக சுத்தியை அருள்வாய்.

உனது சித்தப்படி இயங்குகிற கருவியாக இவனை ஏற்றுக் கொள்வாய் தாயே!
ஓம் ஆனந்தமயி,சைதனயமயி சத்யமயி பரமே!

All we owe to Thee!



“When in your heart and thought you make no difference
between Sri Aurobindo and me, when to think of
Sri Aurobindo will be to think of me and to think of me
will mean to think of Sri Aurobindo inevitably, when to see
one will mean inevitably to see the other, like one and
the same Person, -- then you will know that you begin
to be open to the supramental force and consciousness. “

"Without him, I exist not; without me, he is unmanifest."

-The Mother, on Sri Aurobindo.

மரணத்தை வெல்ல வேண்டும், மரணமில்லாப் பெருவாழ்வு பெற வேண்டும் என்பது மனித குலத்தின் தீராத தாகமாக, தவிப்பும், முயற்சியுமாகவும் கால காலமாக இருந்து கொண்டே இருக்கிறது.

ஐம்பூதக் கூட்டினால் ஆன இந்த உடல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குலைந்து போகும், எந்த பூதங்களில் இருந்து பெறப்பட்டதோ அதே ஐம்பூதச் சூழலுக்குத் திரும்பும் என்பது ஒரு பாமரனுக்குக் கூடத் தெரியும். யாக்கை நிலையாமை என்பது, ஒரு விதி அவ்வளவு தானே அன்றி மாற்ற முடியாத முடிவு ஒன்றும் அல்ல. ஹட யோகம், காய கல்பம் என்று பலப் பல வழிகளில் இந்த ஐம்பூதக்கூட்டினால் ஆன உடலை நீட்டித்திருக்கச் செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் மேற்கொண்ட பூரண யோகம், இந்த உடலிலேயே மரணமில்லாமல் வாழ்வது என்ற ஒரு குறுகிய முயற்சி அல்ல. பூரண யோகம் கை கூடும் போது இந்த உடலே திருவுருமாற்றத்திற்கு உள்ளாகும் போது மரணமில்லாப் பெருவாழ்வு சாத்தியம் தான் என்பது தான் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை இருவரும் தம் அடியவர்களுக்கு உபதேசித்ததன் சாரம்.
மகான்கள் உபதேசத்தைத் தன் மனம் போன போக்கில் திரித்துச் சொல்லுவதும், அப்படிப் பட்டவர்கள் பின்னாலும் கூட்டம் கூடுவதும் உலகிற்குப் புதியது அல்ல.
ஆசார்ய, பகவான், இப்படி அழைத்துக் கொண்ட போதும் திருப்தி அடையாமல் தன்னைத் தானே ஓஷோ என்று அழைத்துக் கொண்ட ஒரு [ஜைன மதத்தில் பிறந்த] குரு ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை இருவரைப் பற்றி விமரிசனம் செய்தது நினைவிற்கு வந்தது. இதே நபரைப் பற்றி, பின்னாளில் அவரைப் பின்பற்றுகிறவர்கள் சொன்னார்கள்:"ஓஷோ பிறக்கவும் இல்லை;இறக்கவும் இல்லை. இந்த பூமிக்கு வந்து சென்ற காலம்......"
Osho:

“I know about Sri Aurobindo, because he himself was teaching his whole life that his special work was to give methods to people to attain physical immortality. All old teachers have taught you spiritual immortality; that's not a big problem, because the spiritual element in you is already immortal.

He used to say, "I am doing the real thing. The physical body, which is not immortal, I am going to make it immortal." And one day he died...

The chief disciple, "the Mother" of the Sri Aurobindo ashram, finally found a solution to it. She said, "He is not dead, he has gone into deep samadhi, the deepest that anyone has ever gone. He will wake up again - he is simply asleep."

So they made a marble grave for him, with all the comforts, because he was just sleeping and one day he was going to wake up...Then years passed, but he did not knock from the grave. People started suspecting, but the mother was over ninety, and she was still preaching physical immortality...

Then one day she died. And it was very difficult for the believers, because the believers had some investment; their investment was their own immortality...

I said, "But how long will it take? By that time you will all be dead! Even if they come.... You just go and open the grave, and you will know that it is no longer sleep. There are only skeletons, stinking of death, not the fragrance of immortality.”
What are your intelligent thoughts on this?

from Prem:

Mother and Sri Aurobindo never said that they were working on physical immortality. They said they were working on the next evolutionary step, the triple transformation:
psychic transformation
spiritual transformation
supermental transformation
The first two are not new, and they stated that. The third has never yet been done in this universe or manifestation. Physical immortality would be a "minor consequence", it was not the goal...
The supermental transformation is about the consciousness beyond mind being as totally manifest as mind became in the animal. Supermental consciousness, is Truth consciousness, it is infinite and omnipotent. There are steps in that change and Mother said it would take 300 years after psychic transformation in the same body. Humanity was not willing to go as fast as was needed for Mother to achieve it in her current body. Sri Aurobindo sacrificed his body to avoid WWIII over Korea, and gave Mother the task to complete the transformation.
Mother obviously did not complete it in that body. I was there the day she quote 'left', 17 Nov 1973, and when I went to the Ashram that morning to meditate there were all these long faced people. So I asked one of the students from the school who was helping people what happened. He said "Mother has left her body". He was very sad, but my heart knew and felt "Victory". She had achieved what was needed for the supramental transformation to still take place. When and how is to be unfolded. The Divine is in charge and yet humanity and each individual has free will.
There are still individuals who choose, the Great Peace, Unity, Oneness with God, and Service to the Work of Transformation, of the next evolutionary step.
Is this some small miracle that takes place in a year or a decade? How hard is it for each of us to conquer anger? lust? jealousy? arrogance? ignorance? falsehood?
On the other hand we have the help of the Divine, the promise that it shall be done, and in fact the promise that it is done, it must proceed in the time that it takes. I have no other reason to live.
Prem
from the auroconf mail list
Fri, 9 Apr 1999

Thanks and courtesy:
இங்கே பார்க்கலாம், படிக்கலாம்

இப்போது எடுத்துக் கொண்ட விஷயம் ஓஷோவின் உளறல்களைப் பற்றி அல்ல. இந்த மாதிரி "பிறரைக் குற்றம் சொல்லியே பெயர் வாங்கும் புலவர்களுக்கு" எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதும் இல்லை.

"To Thee who hast been the material envelope of our Master,
To Thee our infinite gratitude. Before Thee who hast done so much
for us, who hast worked, struggled, suffered, hoped endured,
so much.
Before Thee who hast willed all, attempted all, prepared,
achieved all, for us.
Before Thee we bow down and implore that we may never forget
even for a moment, all we owe to Thee."
-The Mother,
December 9, 1950.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய !


Contemplation for The Day

But many-visaged is the cosmic Soul;
A touch can alter the fixed front of Fate.
A sudden turn can come, a road appear.
A greater Mind may see a greater Truth


Savitri B. II, C. X, P. 256



May I be nothing else any more than a flame of love!

“O THOU, sole Reality, Light of our light and Life of our life,

Love supreme, Saviour of the world, grant that more and more I may be perfectly awakened to the awareness of Thy constant presence.

Let all my acts conform to Thy law; let there be no difference between my will and Thine. Extricate me from the illusory consciousness of my mind, from its world of fantasies; let me identify my consciousness with the Absolute Consciousness, for that art Thou.

Give me constancy in the will to attain the end, give me firmness and energy and the courage which shakes off all torpor and lassitude.

Give me the peace of perfect disinterestedness, the peace that makes Thy presence felt and Thy intervention effective, the peace that is ever victorious over all bad will and every obscurity.

Grant, I implore Thee, that all in my being may be identified with Thee. May I be nothing else any more than a flame of love utterly awakened to a supreme realisation of Thee.”

The Mother

Prayers and Meditations

February 15, 1914

ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய யோகம் பூர்த்தியாவதற்கு தன்னுடைய உடலையே த்யாகம் செய்த நாள் இன்று.

அருட்பெருஞ்சோதி என்று ராமலிங்க வள்ளலார் பெருமானாலும்,அதிமானச ஒளி என்று ஸ்ரீ அரவிந்தராலும் அழைக்கப்பட்ட அருட்பேரொளி ஸ்ரீ அரவிந்தர் உடலில் ஐந்து நாட்கள் பொன்னொளியாக இறங்கிய நாள் இன்று.

மரணம் என்பது பொய்மையின் தற்காலிக வெற்றி தானே அன்றி நிரந்தரமானது அல்ல. மரணம் என்பது வெற்றி கொள்ளக் கூடியதே. தென் தமிழ்க் கோடியில் சித்தர்களாலும், ஞானிகளாலும் மிக ரகசியமாக வளர்க்கப் பட்ட வித்யை இது. ராமலிங்க அடிகள் என்று அழைக்கப்பட்ட வள்ளல் பெருமானும், ஸ்ரீ அரவிந்தரும் சற்றேறத்தாழ சம காலத்தில் அறிவித்த உண்மை இது.

இருபத்து நான்காயிரம் வரிகளில் சாவித்திரி என்கிற தன்னுடைய பெருங்கவிதையில் ஸ்ரீ அரவிந்தர் இந்த பூரண யோகத்தின் அனைத்து அம்சங்களையும் மிக நுட்பமாகச் செதுக்கியிருக்கிறார். "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்" என்று வழக்கில் இருந்தாலும் உரை, மனம் கடந்த ஒரு சத்தியப் பெருக்கை, தன்னுடைய யோக சாதனையில் கண்டதை சாவித்திரி எனும் மகா காவியமாக ஸ்ரீ அரவிந்தர் படைத்திருக்கிறார். 'உரை மனம் கடந்த ஒரு பெருவளி அதன் மேல் அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்சோதி' என்று வள்ளல் பெருமான் கூறாமல் கூறியதை சாவித்திரி ஒரு பெரும் மந்திரமாக தன்னைப் படிப்பவர்களுக்கு பேரானந்த நிலையை அருளும் தாயின் தயவாக, நமக்கெல்லாம் வழங்கியிருக்கிறார்.

இந்தப் பெருங்கருணைக்கு எப்படி கைம்மாறு செய்ய முடியும்? எப்படி நன்றி செலுத்த முடியும்?


Om Sri Aurobindo Mirra!

Open my mind, my heart, my life

to

your Light, your Love, your Power.

In all things may I see the Divine!


கை கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதை அன்றிக்கு வேறென்ன செய்ய முடியும்?

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவருடைய திருவடிகளிலும் எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய !