அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்!

அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்!

The Mother's Birthday - 21st February 2011
 
நாளை, 21 ஆம் தேதி புதுவை ஆசிரமத்திற்கு நேரில் செல்ல முடிகிறவர்களுக்கு வழங்கப்படும் தரிசன நாள் செய்தி! இதனுடன்,  பூக்களும் பிரசாதமாகக் கிடைக்கும்! சமாதியைச் சுற்றி அமர்ந்து கூட்டுத் தியானம் செய்கிற நல்ல வரமும், அன்னையின் அறைக்குச் சென்று, அன்னையின் அருளே இன்றைக்கும் சூக்குமமாகச் செயல்படுவதைப் புரிந்துகொள்கிற உன்னதமான அனுபவமும் கிடைக்கும்.

 
ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.

எனது கரணங்கள், மனம் ஜீவன் அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்.

ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் உனது ஒளியையே வேண்டி நிற்கிறேன்.

ஒவ்வாத எண்ணங்களோடும் செயல்களோடும் இருக்க நேரிடும் போது கூட
அன்னை என்னோடு இருக்கிறாள்! அவள் என்னைப்பார்த்துக் கொள்வாள் !
இந்த ஒரு நம்பிக்கையே என்னைச் சரிந்து விடாமல் காப்பாற்றி வருகிறது.
எண்ணமும் எழுத்தும் உன்னதே என்று இருக்கும் பரம சுகநிலை அருள்வாய்!
புதுவையிலோ, உனது இருப்பிடத்திற்கு அருகிலோ இருக்கும் வாய்ப்பு இல்லை.

ஆனாலும் உனது அருளும்  ஒளியும்  இங்கேயும் நிறைந்திருப்பதைஅறிகிறேன் அம்மா!

அருளுக்கும் ஒளிக்கும் தூரம் ஏது? உனக்கும் எனக்கும் தடைச் சுவர்கள் தானேது?

நாளைக் காலையில் உன்னுடைய தரிசனம் வேண்டி வரிசையில்  நிற்கும் அடியவர் பலருடன், என்னுடைய இந்தப் பிரார்த்தனை மலர்களும் சேர்ந்து நிற்கும்!

என்னையும் உனது அன்பிற்குத் தகுதியான குழந்தையாக ஏற்றுக்கொள்வாய் அம்மா!
 
இதுவே இன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் வேண்டும் வரம்!ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி , சத்யமயி பரமே !


 

4 comments:

 1. தங்கச்சிக்கு கண்ணாலம்
  என் தங்கச்சிக்கு கண்ணாலம்

  கவித தெரியுமா சார் உங்களுக்கு!

  ReplyDelete
 2. .........இனிமேத்தான் தெரிஞ்சுக்கணும் வால்ஸ்!

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றீ... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. //என்னையும் உனது அன்பிற்குத் தகுதியான குழந்தையாக ஏற்றுக்கொள்வாய் அம்மா!//

  என்னையும்!

  அன்னையின் திருவடிகள் சரணம்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!