கம் செப்டெம்பர்! காங்கிரஸ் சாயம் வெளுத்துப் போச்சு...!


பிரணாப் குமார் முகர்ஜி வாக்குக் கொடுத்ததாலோ, அல்லது காங்கிரஸ் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை போகத் தங்கள் தலைக்கே தீம்பு வருவதை உணர்ந்ததாலோ, இந்த ஊழல் வழக்கை ஊற்றி மூடிவிட முயற்சிப்பது இன்றைய இரண்டு செய்திகளில் வெளிப் படையாகத் தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சி சாத்தானின் ஆட்சிதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது!

முதலாவது, கேடி பிரதர்சுக்கு ஆறுதல் அளிக்கிற மாதிரி, 2001 முதல் 2007 வரையிலான காலத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஏர்செல் விவகாரத்தில் சிவசங்கரனை தயாநிதி மாறன் கட்டாயப்படுத்தி விற்க வைக்கவில்லை என்று நீதி மன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்திருப்பது! எஸ்ஸார் குழுமம் மட்டும் ஏதோ சந்தேகப்படுகிற மாதிரி நடந்து கொண்டிருப்பதாக ஒரு தகவல்.

புதுதில்லி, செப்.1: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு சிபிஐ நற்சான்றிதழ் அளித்துள்ளது.2ஜி வழக்கில் விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்தது. அதில் 2001-2007ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டதில் எந்த சக்தியும் நிர்பந்தப்படுத்தியிருப்பதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் லூப் டெலிகாம் நிறுவனம் எஸ்ஸார் நிறுவனத்தின் ஓர் அங்கம்தான் என்றும் இரு நிறுவனங்களும் மோசடி செய்திருப்பதாகவும் உச்சநீதி மன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷெளரியின் பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட உரிமங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட வேண்டும் என்றும் அப்போதைய நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சிபிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அருண்ஷெளரியும், ஜஸ்வந்த் சிங்கும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜபேயி ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கப் பிரிவும் தனது இடைக்கால விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தற்கும் முந்தைய காலத்தில் தான் குளறுபடிகள் நடந்திருப்பதாக, அருண் ஷூரி, ஜஸ்வந்த்சிங் இருவரையும் விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் சிபிஐ வழக்கு விசாரணையை, ஏற்கெனெவே குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் எளிதில் தப்பிக்கிற மாதிரி
இன்னும் அகலமாகத் திறந்து வைத்திருக்கிறது.கண்துடைப்பாக, இன்றைக்கு தயாநிதி மாறன் விசாரிக்கப்படுவார் என்ற செய்தியும் ஏற்கெனெவே காலையில் வெளியானது.

ரண்டாவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் ஆர் கே ஆர்னால்ட் எழுதியிருப்பதாகச் சொல்லப்படும் ரகசியக் கடிதம்! எழுமாதங்களுக்கு முன்னால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் தொகையை எவ்வளவு என்று கண்டு சொல்லுமாறு சிபிஐ விடுத்திருந்த வேண்டுகோளுக்குப் பதிலாக, அப்படி சொல்வது ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்கும்
என்று இழப்பு எவ்வளவு என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்ற ரீதியில் இந்தக் கடிதம் இருப்பதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

போதாக்குறைக்கு, ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படுவதை ட்ராய் சிபாரிசு செய்யவில்லை என்றும், ஆகக் குறைந்த விலையான 1659 கோடிக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டது அரசின் கொள்கைரீதியான முடிவு என்றும் இந்தக் கடிதம் சொல்வதாக, இந்தியா டுடே செய்தி மேலும் சொல்கிறது. இது உண்மையாக இருக்குமானால், இதை வைத்தே, குற்றச்சாட்டை, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் தவறானது என்று வாதாட வசதியாக, வலுவான ஓட்டை ஒன்று ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் போடப்பட்டிருக்கிறது.
காங்கிரசின் ஏவலுக்குக் கைகட்டி நிற்கும் கருவியாக சிபிஐயும், வருமான வரித்துறையும், அமலாக்கத்துறை முதலான இன்ன பிற அரசுத் துறைகளும்  இயங்கும் போது இது தான் நடக்கும் என்பது ஏற்கெனெவே எதிர்பார்க்கப்பட்டதுதான்! இத்தனைக்கும் உச்ச நீதிமன்றத்தின் கண் காணிப்பில் இந்த விசாரணை நடக்கும் போதே, இவர்களால் இப்படித்துணிந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்துக் கொள்கிற மாதிரி ஓட்டை போட முடிகிறது.  முன்பு சொன்னதை (ஏ)மாற்றி, அப்படியே திருப்பிப் போட முடிகிறது!
ப்போது கேடிபிரதர்ஸ் கமுக்கமாக இருந்து, தங்களுடைய காரியத்தை சாதித்துக் கொண்டுவிட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.ஒவ்வொரு ஜெயிலாகப் போய் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து விட்டு வரும் அழகிரி, கேடி ப்ரதர்சுடைய தொழில் நுணுக்கத்தைக் கற்றுக் கொள்ளவே இல்லை என்பது ஒரு புறம்! நுணலும் தன் வாயால் கெடும் என்ற மாதிரி, நாங்கள் ஆட்சிக்கு மறுபடி வந்தால் நாங்களும் இதே போல, கைது நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று மிரட்டல்விடும் தொனியில் பேட்டியளித்திருப்பது, முக மற்றும் வாரிசுகளுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை என்பது இன்னொருபுறம்!
செப்டெம்பர் இரண்டாம் வாரத்தில் சுப்ரமணிய சுவாமி, கண்டனூர் பானா சீனாவையும், சோனியா காண்டியையும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சந்திக்கு இழுப்பதற்கு முன்னால் காங்கிரஸ் மேற்கொண்டிருக்கிற தற்காப்பு வழியாக மட்டுமே இதைப் பார்க்க முடிகிறது. 

ச்சநீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பது, இந்த மாதம் பதினைந்தாம் தேதி மூன்றாம் குற்றப்பத்திரிகையில் சிபிஐ  என்ன சொல்லப்போகிறது என்பது,சுப்பிரமணிய சுவாமி என்ன போட்டு டைக்கப்போகிறார் என்பது ல்லாமாக சேர்ந்து கம் செப்டெம்பர் என்று உற்சாகமாக வரவேற்க வைத்திருக்கிறது!


உச்சநீதிமன்றம் என்ன செய்யும் என்பதற்கு இன்று ஒரு கோடி காட்டப் பட்டிருக்கிறது.


"உங்கள் வழிமுறைகளை திருத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் அன்னா ஹசாரே பாணி போராட்டங்களை மோசமான வடிவத்தில் சந்திக்க நேரிடும்" என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குமாறு கவுகாத்தி ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. ஐகோர்ட்டின் உத்தரவை அமல் படுத்தினால், அரசுக்கு பல கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும் என்று அதில் கூறியிருந்தது.இம்மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எச்.எல்.தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா, சுப்ரீம் கோர்ட்டு கேட்ட சில தகவல்களை அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த நீதிபதிகள், மத்திய அரசை சரமாரியாக விமர்சித்தனர்.அவர்கள் கூறியதாவது:-

மத்திய அரசு அதிகாரிகள், தங்கள் வக்கீல்களுக்கு போதிய தகவல்களை அளிப்பது இல்லை. இது பொதுவான நடைமுறை ஆகிவிட்டது. இதனால் கோர்ட்டின் நேரம் வீணாகிறது.உங்கள் வழிமுறைகளை திருத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், மக்கள் உங்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இத்தகைய (அன்னா ஹசாரே) போராட்டத்தை பார்த்தீர்கள். இனிமேல் நடக்கும் போராட்டங்கள் மிகவும் மோசமானதாக இருக்கும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மேலும், நீதித்துறை மீதான விமர்சனத்துக்கும் நீதிபதிகள் பதிலடி கொடுத்தனர். அதுபற்றி அவர்கள், "நீதித்துறையின் தரம் தாழ்ந்து விட்டதாக சில அறிவுஜீவிகள் சமீபத்தில் பேசியுள்ளனர். அவர்கள் கூரை மீது ஏறி இப்படி கூச்சல் போடட்டும். நீதித்துறையை விமர்சிப்பதை விட்டுவிட்டு, தங்கள் அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்று அவர்கள் பார்க்க வேண்டும்" என்று கூறினர்.


கம் செப்டெம்பர்! கம் ஆன் செப்டெம்பர்!



திஸ்கி : அப்டேட்ஸ்

மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் சிரிக்காமலேயே காமெடி செய்ய முடியும் என்று  நிரூபித்திருக்கிறார்! கூட்டு முடிவு, கூட்டுப் பொறுப்பு என்று காங்கிரசுக்கு சுட்டுப்போட்டாலும் தெரியாத விஷயங்கள் எல்லாம் இருப்பதாக சொல்லியிருப்பது, இந்தமாதத்தின் மிகப்பெரிய ஜோக்!

 
நேற்றிரவு என் டி டீவீயில் ஒளிபரப்பான இந்த விவாதத்தின் சுட்டி இங்கே 

2 comments:

  1. எதிர்பார்த்த படியே சி பி ஐயின் உட்டாலக்கடி உல்டா அறிக்கைகள், மற்றும் மத்திய அரசின் போக்கு இவற்றைப் பார்க்கும்போது நடப்பது ஒன்றும் நியாயமாகத் தெரியவில்லை. இவர்களால் மு.பூ.யை சோற்றில் மறைக்க முடிகிறது. அறிக்கைப் போருக்குக் கபில் சிபலும், அபத்தப் போருக்கு மனீஷ் திவாரிகளும்...ம்...ஹூம்...நம்பிக்கை எந்தக் கடையில் கிடைக்கும்?!

    ReplyDelete
  2. வாருங்கள் ஸ்ரீராம்!

    நேற்றிரவு என்டிடீவீயில் ஒளிபரப்பான விவாதத்தில், கிரண் பேடி ஊழலை விசாரிக்க, சுயேட்சையான விசாரணை அமைப்பு இங்கே இல்லை, இப்போதுள்ள நடைமுறையில் இந்தமாதிரியான விஷயங்கள் எல்லாம் முளையிலேயே, அதாவது விசாரணை நடத்த அனுமதி கோரும் நிலையிலேயே கிள்ளப்படுவதாக சொல்லியிருப்பதை, இன்றைக்கு அப்டேட் செய்திருக்கும் வீடியோவில் பாருங்கள்.

    மேலோட்டமாகப்பார்க்கையில் மாறனைக் காப்பாற்றுகிற மாதிரித் தெரிந்தாலும், உண்மையில் பானாசீனா, அப்புறம் மன்மோகன், அதற்கும் அடுத்து சோனியா என்று காங்கிரஸ் தலைகள் சிக்குவதில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவியாகவும், முந்தைய பிஜேபி ஆட்சி மீதும் சேற்றை வாரி இறைத்து, கவனத்தைத்திசைதிருப்பும் வேலையாகவே இது இருக்கிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!