இன்னொரு எமெர்ஜென்சி கொண்டு வருகிற தைரியம் சோனி(யா) காங்கிரசுக்கு இருக்கிறதா?


சென்ற பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, சிபிஐ வெட்கக் கேடான ஒரு விஷயத்தை டில்லி நீதிமன்றம் ஒன்றில் பதிவு செய்தது. 

ஸ்பெக்ட்ரம் ஊழலில்,தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் அம்சங்கள் குறித்து டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கொடுத்திருந்த புகார் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்பதுதான் அந்த வெட்கக்கேடான வாக்குமூலம். அந்த மாதம் ஐந்தாம் தேதிதான், சிபிஐ விசாரணையில் ஸ்வான் டெலிகாம் தனது உரிமத்தை எடிசலட் டிபி நிறுவனத்துக்குக் கைமாற்றியதில் பாதுகாப்பு அம்சங்கள் புறக்கணிக்கப் பட்டதாக  டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி புகாராகத் தெரிவித்திருந்ததும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை என்று கேட்டிருந்ததற்குத் தான் சிபிஐ இப்படிப் பொறுப்பில்லாமல், அல்லது நழுவுகிற மாதிரிப் பதில் சொல்லியிருந்தது.  

அவர்கள் சொன்ன ஒரே சாக்கு, டாக்டர் சுவாமியின் புகார் அவர்களுக்குத் தரப்படவில்லை  என்பது மட்டும் தான்.

இந்த எடிலசட் டிபி நிறுவனத்தில் மும்பை தாதா (இருப்பு கராச்சி) தாவூத் இப்ராஹீமுக்குப் பங்கு இருக்கிறது, தேசப்பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது என்பது டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச் சாட்டின் சாராம்சம். எண்பதாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிஐ தயாரித்திருந்தாலும், முக்கியமான இந்த விஷயம் விசாரணையில் எடுத்துக் கொள்ளப்பட்டதா, யார் யார் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பது இன்று வரை தெளிவு படுத்தப்படாத ஒன்று. 

தாவூத் இப்ராஹீம் என்றாலும் சரி, கலைஞர் தொலைக்காட்சிக்குக் "கடன் கொடுத்த" டிபி ரியாலிடி நிறுவனமானாலும் சரி நிழல் கூட்டாளியாக ஷரத் பவார் இருப்பதாக ஊடகங்கள் திரும்பத் திரும்ப சொல்கின்றன.

ஷரத் பவார் பக்கம் விசாரணையைத் திருப்ப காங்கிரசுக்கு தைரியம் எப்போதுமே வரப்போவதில்லை!தாவூத் இப்ராஹீம், சிவசேனா பால் தாக்கரே என்று நேரெதிரான இரண்டு பிசாசுகளின் மீதுசவாரி செய்யத் தெரிந்த சாமர்த்தியம் உள்ளவரை,காங்கிரஸ் என்ன செய்து விட முடியும்?

ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்தவர்களுக்கு ஒரே ஒரு மணி நேர அவகாசத்தில் வங்கிகள் கிடைத்த லைசன்ஸ் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கடனாக வழங்கின. மொத்தம் பதினோராயிரம் கோடி ரூபாய்!பெரிய பிசினஸ் புள்ளிகள் என்பதையும் தாண்டி, மிகக் குறுகிய கால அவகாசத்தில், ஸ்டேட் வங்கி உட்பட மூன்று வங்கிகள் கடன் வழங்கிய பின்னணி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவே இல்லை.வங்கி நடைமுறைகளின் படியே கடன் வழங்கப்பட்டது என்று விசாரணையை சிபிஐ  ஒரு குட் சர்டிபிகேட் கொடுத்து முடித்துக் கொண்டது.
 
அதேமாதிரி டாட்டாக்களுக்கும் நன்னடத்தை சர்டிபிகேட், நிரா ராடியாவுக்கும் சர்டிபிகேட்!விசாரணை நடத்தத் தெரிகிறதோ, இல்லையோ, சிபிஐக்கு தன்னுடைய எஜமானர்களுக்கு வேணுங்கப் பட்டவர்களுக்கு சர்டிபிகேட் மட்டும் கொடுக்கத் தெரிகிறது!
எஜமானர்களுடைய யோக்கியதை என்ன வாழுகிறதாம்?

இங்கே மற்றும் இங்கே 


தம்பி சுனா சானா உன் மேல எப்ப வேணும்னாலும் செருப்பு விழலாம்... பத்திரமா இருந்துக்கோடா அம்பி....


சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு தேவையற்றது. அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார். நிருபர்களிடம் அவர் பேசுகையில்...... முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான...

  • 12 people like this.


    • Illamaran Alandur சுப்ரமணிய சுவாமி !
      உன் சூவ மூடு சாமி !

      about an hour ago

    • புகழ் கிருஷ் un velaiye ithuthana un thalai arichukkitte irukkum pola
      ஐ மு கூட்டணிக் குழப்பம், கூட்டணி தர்மம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சாம்பிள்! 
      காங்கிரஸ்காரரான கபில் சிபல் காரியத்துக்காக உளறுகிறவர்! உபிக்கள், அதாவது ளறுவதற்கென்றே  பிறந்தவர்கள்  எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஒரு சின்ன சாம்பிள்!

ஊர்வாயை சுத்தம் செய்ய துடிக்கும்போது, தங்கள் வாயையும் சுத்தம் செய்து கொள்ளவேண்டுமே! க'னாக்கள் தயாரா?

தொடர்புள்ள இன்னொரு செய்தி இங்கே 
 

காரணங்கள் ஜோடனையில் நியாயமாகத் தான் தோன்றும் பின்னால் உள்ள கோரமுகம்....?  
 
தினமணி நாளிதழின் நேற்றைய தலையங்கம்: 
தனியார்மயம் தரும் சீதனம்!



திரிகளை மட்டுமன்றி, நாட்டில் நிலவும் உட்பகை குறித்தும் உளவு பார்ப்பது ஏற்கக்கூடியதாகவே இருந்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு மனிதனையும் ஒற்றுப்பார்த்து, அவர்தம் அந்தரங்க விவகாரங்களையும் தெரிந்துகொள்வது சரியா?, இது ஒரு அரசின், குறிப்பாக மக்களாட்சியின் இறையாண்மைக்குப் பொருந்துமா? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வியை எழுப்பி ருப்பவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. 

ண்டனில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், அங்கு வந்திருந்த மக்களிடம், "நீங்கள் பயன்படுத்தும் செல்போனும் உளவு பார்க்க உதவி செய்கிறது. மக்கள் அனைவரையும் அரசாங்கம் உளவு பார்க்கிறது" என்று கூறியிருக்கிறார். இத்தகைய உளவு பார்க்க உதவும் தகவல் தொழில்நுட்பக் கருவிகளை மேலை நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மிக அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருக்கின்றன. 

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபி உள்நாட்டு மக்களில் சிலரும் இங்கிலாந்து சென்று வாழும் லிபிய மக்களும் தனக்கு எதிராக இருப்பதை உளவுத் தகவல் தொழில்நுட்பத்தினால் அறிந்து, அவர்களைத் தீர்த்துக் கட்டியிருக்கிறார். மேலைநாட்டுத் தகவல் தொழில்நுட்பக் கருவித் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உளவுக் கருவிகளை லிபியா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு விற்றுள்ளன. இந்திய அரசின் சிபிஐ அனுப்பும் மின்கடிதங்கள் அனைத்தையும் சீனா படித்துக் கொண்டிருக்கிறது என்று அசாஞ்ச் சொல்லும் போதும்கூட, ஒரு நாடு ஒரு அண்டை நாட்டின் மீது இப்படித்தான் தன் கவனத்தைச் செலுத்தும் என்கின்ற வகையில் புரிந்துகொள்ள முடிகிறது. 

னால், மக்களாட்சி நடைபெறும் நாட்டில்கூட, அனைத்து மக்களையும் உளவு பார்க்க முடியும், செல்போனும் இணைய தளமும் அதை சாத்தியம் ஆக்குகிறது என்பதை அறியும்போது, கொஞ்சம் ஆச்சரியத்தையும் - கூடுதலாக அச்சத்தையும் உண்டாக்குகின்றது. 

தீவிரவாதத்தைக் கண்காணித்தல், நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் எப்படி உளவு பார்க்கின்றன, இவை பொருளாதார வர்த்தகப் பயன்பாட்டுக்கு எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது வளர்ச்சியால் ஏற்படும் தீமைகள் என்று ஒதுக்கிவிடக்கூடியவை அல்ல. இத்தகைய உளவு பார்க்கும் தகவல்தொழில்நுட்ப வசதியால் தனிமனித அந்தரங்கம் என்பதே இல்லாமல் ஆகிவிட்டது.இந்த உளவுத் தொழில்நுட்பம் வெறுமனே அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படுவதில்லை. இவை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் கிடைப்பதில் தடையில்லாமல் கிடைக்கின்றன. 

ங்களுக்கு இணையாகப் போட்டியில் உள்ள அல்லது வளர்ந்துவரும் மற்றொரு தொழில் நிறுவனத்தைக் கண்காணிக்க இதனைப் பயன்படுத்த முடியும். ஓர் அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை வேவு பார்க்கப் பயன்படுத்தலாம். கணினி மூலம் நடைபெறும் அனைத்து வர்த்தகப் பரிமாற்றங்கள், வணிகச் செயல்பாடுகளிலும் இத்தகைய உளவுத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்படலாம். 

க, ஒன்று மட்டும் உறுதியாக்கப் பட்டுள்ளது. மின்அஞ்சல், செல்போன் இரண்டையும் எவராலும் உட்புகுந்து கண்காணிக்க முடியும். செல்போனும் இணையதளமும் பாதுகாப்பான நடைமுறைகள் அல்ல என்பதைத்தான் இந்தத் தொழில்நுட்பம் நமக்குப் புரிய வைத்துள்ளது. ஆனால், இவை இல்லாமல் இனி எந்தவொரு தனிமனிதனாலும் செயல்படவே முடியாது என்கிற அளவுக்கு தகவல் தொழில்நுட்பத்தின் பொன்விலங்கை வேண்டுமென்றே மனித இனம் பூட்டிக்கொண்டாகிவிட்டது. 

சாதாரண வங்கிக் கணக்கை செயலாக்கவும், ரயில் பயணத்தை முன்பதிவு செய்யவும்கூட நமக்கு இணையதளம் அவசியமாகிவிட்டது. இனி பின்னோக்கிச் செல்லுதல் இயலாது.இணைய தளத்தில் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர் அனுப்பும் மின்அஞ்சலை ஆர்வத்தால் திறந்தாலே போதும், அதில் நமது தகவல்கள் அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ளும் சைத்தான் மென்பொருள்கள் உள்ளன என்று சொன்னாலும் அதை உள் வாங்கிக் கொள்ள ஆளில்லை. ஃபேஸ்புக் பகுதியில் யார் வேண்டுமானாலும் நுழைய முடியும் என்றாலும், அனைத்துத் தகவல்களையும் அதில் கொட்டிவிடாத ஆட்கள் மிகக் குறைவு. 

ந்தத் தொழில்நுட்பம் இல்லாமல் இருக்க முடியாது, வாழவே முடியாது என்கின்ற நிலைமை உருவாக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், இத்தகைய கண்காணிப்பு மற்றும் உளவுத் தொழில்நுட்பத்தை யார் விற்கலாம், யார் யாரெல்லாம் வாங்கிப் பயன்படுத்தலாம், பயன்படுத்தப்படுவதில் உள்ள அளவுகள், எல்லைகள் என்ன என்பனவற்றை வரையறை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இதற்கு மேலதிகமான தேவை இருக்கிறது. ஏனென்றால், இங்கே தகவல்தொழில் நுட்பத்தில் அதிகளவில் வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முதலீடு செய்துள்ளன. 

ந்நிறுவனங்கள் தாங்கள் சேகரிக்கும் உளவுத் தகவல்களை இந்திய அரசுக்கு வழங்கினால் பரவாயில்லை. வேறு நாடுகளுக்கோ அல்லது தீவிரவாத அமைப்புக்கோ கிடைக்கச் செய்தால் எத்தனை மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.தீவிரவாதம் தலை விரித்து ஆடும் இன்றைய சூழ்நிலையில் இத்தகைய தொழில் நுட்பத்தை தீவிரவாதிகள் வாங்கி, அரசையும் மக்களையும் கண்காணிப்பதும் உளவு பார்ப்பதற்குமான சாத்தியங்கள் இருப்பதை மறுக்க முடியாது. 

கவல் தொழில்நுட்பத் துறை தனியார்மயமாக்கப்பட்டதன் விளைவு 2ஜி போன்ற மெகா ஊழல் மட்டுமல்ல, தேசப்பாதுகாப்புக்கும் தனிமனித சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தலும் கூட என்பதை இப்போதாவது நாம் புரிந்து கொண்டால் சரி!

அந்த கறுப்பு தினத்தின் முப்பத்தைந்தாவது நினைவு தினம்!.


இன்னொரு எமெர்ஜென்சி கொண்டு வருகிற தைரியம் சோனி(யா) காங்கிரசுக்கு இல்லை என்பது உண்மைதான்! 
ஆனால், வாலறுந்த நரி மாதிரியே தன்னுடைய கையாலாகாத் தனத்தை மூடி மறைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் கிறுக்கு மாய்க்கான்கள் நிறைந்த கட்சி அது என்பதை மறந்துவிட வேண்டாம்!
--------------------------------------------------------------------------------------------------------------
எது பொருளோ அதைப் புறக்கணித்தும், எதைப் புறக்கணிக்க வேண்டுமோ அதைப் பொருட் படுத்தியும் இன்னும் எத்தனைநாள் சீரழிவைப் பொறுத்திருப்போம்?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!

7 comments:

  1. அதிரடி கருத்துக்கள்.
    தொழில் நுட்பம் வளர வளர மனித நேயம் தேய்வது sad coincidence. கண்காணிப்பது மிகச் சாதாரணமான ஊடுருவலாக மாறிவிட்டது/விடும். goerge orwell நினைவுக்கு வருகிறார் சில நேரம்.
    எமர்ஜென்சி கொண்டு வருவதால் என்ன உபயோகம்? சிபிஐயின் confession/complaint நம்பமுடியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  2. வாருங்கள் அப்பாதுரை சார்!

    தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுவரும் அசுர வளர்ச்சி, ஒருபக்கம் கட்டுக்களை அடுக்கிக் கொண்டே போவதுபோலத் தெரிந்தாலும் இன்னொருபக்கம் அதைவிட வேகமாகக் கட்டுடைத்தலும் நடந்து கொண்டே இருக்கிறது.ஊடுருவுவது உளவு பார்ப்பது எளிதான மாதிரியே, அதை முறியடிப்பதும் போக்குக் காட்டுவதும் அப்படித்தான்!

    கம்யூனிசத்தில், குறிப்பாக ஸ்டாலினோடு கசந்து ஆர்வெல் சொன்னது எல்லா இசங்களுக்கும் பொருந்தக் கூடியது தான்!

    சிபிஐ, ரா மட்டுமல்ல, இந்த தேசத்தின் நிர்வாகம், நீதித்துறை, நாடாளுமன்ற நடவடிக்கைகள், தேர்தல் முறை,பத்திரிகைகள், எல்லாவற்றிலுமே தன்னுடைய சுயநலத்துக்காக, காங்கிரஸ் புகுந்து விளையாடி நாசப்படுத்தி வைத்திருக்கிறது.

    காங்கிரசுக்கு ஒட்டு மொத்தமாகத் தலை முழுகிவிட்டு, அப்புறம்தான் ஒவ்வொன்றாக சீரமைக்கப்படவேண்டும் அல்லது புதிதாகவே தொடங்கப்பட வேண்டும் என்றாகியிருக்கிறது.

    ReplyDelete
  3. //காங்கிரசுக்கு ஒட்டு மொத்தமாகத் தலை முழுகிவிட்டு, அப்புறம்தான் ஒவ்வொன்றாக சீரமைக்கப்படவேண்டும்

    400 வருஷ வெள்ளைக்கார ஆட்சி விடுதலையை விட இது கஷ்டம்.

    காங்கிரஸ் மட்டுமென்ன.. கழகங்கள் கூட அப்படித்தான்னு தோணுது.

    நாட்டை ஆனந்த பவனுக்கு எடுத்துட்டு போனது புரியாம ஆனந்த பவனை நாட்டுக்கு கொடுத்த கதையை நம்பிட்டிருக்குற வரைக்கும் இது ரொம்ப சிரமம்.

    இந்தியாவில் அத்தனை படிப்பும் அத்தனை இளமையும் துடிப்பும் இருந்தும் காங்கிரசும் கழகங்களும் திரும்பத் திரும்பப் பதவிக்கு வந்துட்டிருப்பது பெரிய ஆச்சரியம். மிச்ச கட்சிகளும் நகல் காங்கிரஸ் அல்லது நகல் கழகம்னு மக்கள் நம்புறதால் அசலுக்கே ஓட்டு போடறாங்களோ?

    ReplyDelete
  4. இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? காந்திஜி ஒருவரைத் தவிர இந்தியாவில் வேறு எந்தத்தலைவரும் மக்களிடம் சென்றது கிடையாது, மக்களை நேரடி அரசியலில் ஈடுபடுத்தியதும் கிடையாது.

    ஜனங்களிடம் ஒவ்வொரு தலைவரும், நீங்கள் ஓட்டுப் போட்டால் மட்டும் போதும் மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற ரீதியில் சொன்னதை ஜனங்கள் நம்பியது, நம்பிக் கொண்டே இருப்பது இந்திய ஜனநாயகத்தில் நடந்த முதல் தவறு, கோணல்!இப்போது ஜனங்களில் ஒரு பகுதி கிளர்ந்தெழுந்தால் கூட அரசியல்வாதிகள் சொல்வது இது: "ஓட்டுப் போடுகிற ஒரு வேலை மட்டும் தான் உன்னுடையது.அதற்கு அப்புறம் வானளாவிய அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களிடம் தான்!"

    இப்படிச் சொல்ல முடிகிற தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?ஜனங்களாவது, எழுச்சி கொள்வதாவது என்ற அலட்சியம் தான்.

    அண்ணா ஹசாரே விஷயத்தில் இப்படி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  5. அந்நா ஹசாரேயை நம்ப முடியவில்லையே சார். he is no gandhi.. not even a gandhianனு தோணுது.

    ReplyDelete
  6. ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த பிறகுதானே அத்தனை அதிகாரமும்? ஓட்டு போடுமுன் மக்கள் ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்? இந்தியாவின் வாக்களர் தொகையில் >50% நாற்பது வயதுக்குக் குறைவானவராக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.. இவர்களெல்லாம் குறைந்தது இரண்டு முதல் நாலைந்து தேர்தல்களைச் சந்தித்தவர்களாக இருப்பார்கள் எனும் பொழுது அதே கட்சியை தொடர்ந்து ஆதரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கருணாநிதியை திட்டோ திட்டு என்று திட்டிவிட்டு, இப்போ ஜெயலலிதாவை திட்டோ திட்டு என்று திட்டுகிறார்கள். மையத்தில் காங்கிரசை விட்டால் கதியே இல்லை என்ற நிலை போலிருக்கிறது.

    நீங்கள் சொல்லியிருப்பது போல strings இல்லாமல் மக்களைத் தொட்டவர்கள், காந்திக்குப் பிறகு எவருமில்லை என்பதே. நினைத்துப் பார்க்கும் பொழுது அதிர்ச்சிய்ம் குற்ற உணர்வும் தோன்றுகிறது.

    ReplyDelete
  7. அண்ணா ஹசாரே கூட இருப்பவர்களை நம்ப முடியவில்லை என்று சொன்னால் அது நூற்றுக்கு நூறு சரி! அண்ணா அல்லது வேறு எவரும் காந்தியாகி விட முடியாது. ஆகவும் வேண்டாம். ஆனால், அடிப்படையான விஷயங்களில் கோட்டை விடாமல் இருக்க வேண்டுமே! அண்ணா அண்ட் கோவிடம் நிதானம் கொஞ்ச நஞ்சமல்ல நிறையவே இல்லை.

    அதற்கு இணையாக, காந்தீய வழிகளில் எல்லாம் நாங்கள் பணிந்துபோய்விட மாட்டோம் என்று கோயபல்சையும் மிஞ்சும் கபில் சிபல்,அபிஷேக் மனு சிங்வி போன்றவர்களை வைத்துக் கொண்டு காங்கிரஸ் கொக்கரித்துக் கொண்டிருக்கிறதே! அந்த காந்தி இதை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று ஊகிக்கக் கூட முடியாத அளவுக்கு அல்லவா காந்தி தேசத்தில் நாம் இருக்கிறோம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!