இந்திய அரசியல்-எழுச்சியை ஏற்படுத்தப் போவது யார்?



"ஒவ்வொரு துறையிலும் இந்தியா சீர்படுத்த முடியாத அளவு பழுதடைந்து வருகிறது. இந்த மாபெரும் தேசத்தை வழி நடத்தக் கூடிய எந்தவொரு தலைவரோ, கட்சியோ கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை"

என்ற ஆதங்கத்தோடு வெளிவந்த வார்த்தைகள் திரு தேவனுடையது! ப்ளஸ்ஸில் நடந்த ஒரு விவாதத்தின் பின்னூட்டமாக அவர் எழுதிய வார்த்தைகளின் பின்னால் இருந்த ஏமாற்றம் இப்படியும் வெளிப்படுகிறது.

"அதனால்தான் மூழ்கும் ஓட்டைக் கப்பலில் இருந்து கொண்டு அதனை சரிசெய்ய முயற்சி செய்து சக்தியெல்லாம் விரயம் செய்வதைக் காட்டிலும் நமக்கென ஒரு ஒழுங்கான சிறு படகை தயார் செய்ய முடியும் என்ற நோக்கத்தில்தான் தனித் தமிழ்நாடு பற்றி பேசி வருகிறேன்"

இந்தக் கண்ணோட்டம், வலி, வேதனை எந்த அளவுக்கு சரி?ஒரு விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் தீர்வு கிடைக்குமா இல்லையா என்பதே இருக்கிறது.

ஒரு வழக்கம், அல்லது அமைப்பு எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்! அதை மாற்றுவதென்பது அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடுவதில் மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்தோம் என்றால், அப்போது வருவது சலிப்பும், சோர்வும் தோல்வி மனப்பான்மையும் தான்!

மாறாக, மாற்றம் என்பது எப்போதும் ஒரு சிறுபுள்ளியாக ஆரம்பித்து, மொத்தத்துக்கும் பரவும் என்பதைப் புரிந்து கொண்டோமானால், நாம் விரும்புகிற மாற்றத்துக்கு நாம் தான் முதலில் விதை நெல்லாக, களமாக இருக்க வேண்டும், மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும், 
இதுவரை பழகிப்போனதை, உதவாததை உதறுவோம் என்ற முடிவுக்கு வருவதிலும் தான் இருக்கிறது என்பதும் புரியும்

தினமணி  தலையங்கம்: ஏமாற்றம்!


எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் திருத்தங்களைச் செய்யாவிட்டால் - ஒவ்வொரு கட்சியும் இருபது, முப்பது திருத்தங்களை கூறியுள்ளன - மாநிலங்களவையில் லோக்பால் மசோதா நிறைவேறுவது சாத்தியமே இல்லை என்கின்ற புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மாநிலங்களவையில் நள்ளிரவு வரை நடைபெற்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. ஆகவே மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

ஐந்து மாநிலஙகளின் தேர்தல் 2012 மார்ச் 4-ம் தேதிதான் முடிவடையும் என்பதால் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக லோக்பால் மசோதா விவாதிக்கப்பட வாய்ப்புகள் இல்லை.இதைப் பார்க்கும்போது, ஏதோ திட்டமிட்டு, மிகவும் புத்திசாலித்தனமாக, ஆனால் மக்கள் மத்தியில் யாருமே எந்தக் கட்சியையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடத்தப்படும் நாடகம்தானோ இது என்று ஒரு குடிமகனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. மாநிலங்களவையில் தற்போது 243 பேர் இருக்கின்றனர். 122 பேர் ஆதரித்தால்தான் லோக்பால் மசோதா நிறைவேறும். 

காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாநிலங்களவையில் 92 பேர் உள்ளனர். மீதமுள்ள 30 பேர் ஆதரவைப் பெறுவது, ஆட்சிப் பொறுப்பில் உள்ளதும், அனுபவங்கள் நிறைந்ததுமான காங்கிரஸ் கட்சிக்குக் கடினமொன்றும் அல்ல.தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே ஒருவரையொருவர் காரசாரமாகத் திட்டிவிட்டு, மாநிலங்களவையில் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக நின்றால், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களைச் சந்தித்து வாக்கு திரட்டுவது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஆகவே, இந்த விவகாரத்தைத் தேர்தலுக்கு பின்பு- வெற்றியோ தோல்வியோ எதுவான போதிலும் பார்த்துக்கொள்வோம் என்கின்ற ராஜதந்திரமான முடிவால்தான் இப்போதைக்கு லோக்பால் மசோதா வாக்குவாதத்துடன், தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

லோக்பால் மசோதாவைத் தயாரித்த நிலைக்குழுத் தலைவர் அபிஷேக் சிங்வி, இந்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் லோக்பால் மசோதாவில் எதற்கு அதிக எதிர்ப்பு இருந்தது என்பதை கூறியிருக்கிறார். 

"இரண்டரை மாதங்களாக இந்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் விவாதத்துக்குரியவையாக 23 விஷயங்கள் எடுத்துக் கொள்ளப் பட்டன. அதில் இரண்டு விஷயங்களில் மட்டுமே கருத்து வேறுபாடு சற்று அதிகம் எனலாம். அவை, மத்தியப் புலனாய்வுத் துறையை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது (ஆதரவு 20, எதிர்ப்பு 10) அரசு ஊழியர்களில் சி, டி பிரிவை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது இரண்டும்தான்'' என்கிறார் அவர். 

இதை வைத்துப் பார்க்கும்போது, இப்போது மாநிலங்களவையில் பெரும் பிரச்னையாக விவாதிக்கப்படுகின்ற லோக்ஆயுக்தா அமைப்பதைக் கட்டாயமாக்குவது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும் என்கின்ற விவகாரமே நிலைக்குழுவில் ஒரு பிரச்னையாக இருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்று கூச்சல்போடும் அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகளும் நிலைக்குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள். நிலைக்குழுவில் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் 10 பேருக்கும் குறைவு. அப்படியிருக்கையில் நிலைக்குழுவில் அதிகபட்சமாக எதிர்க்கப்பட்ட (13 பேர்) விவகாரம் அரசு ஊழியர்கள் சி, டி பிரிவு குறித்தது தான். மாநிலங்களின் உரிமை, அது இது என்று குரல் கொடுக்கும் உதிரி - எதிர்க்கட்சிகள் அனைத்தும் அறைக்குள் பேசும் போது அனுசரிப்பாக இருக்கிறார்கள். அவையில் மக்கள் அறியப் பேசும்போது, கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்து மீண்டும் கூடும்போது, ஆதரிப்பார்கள் அல்லது வெளியே சென்றுவிடுவார்கள். அவைக்குள் இருக்க மாட்டார்கள்.

தேர்தல்முடியும் வரை தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது லோக்பாலை கொண்டு வந்து விட்டதாகப் பேச வேண்டும். ஆனால், கொண்டு வந்து விட்டதாகவும் இருக்கக்கூடாது. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமே எதிர்த்தால் எப்படி? எதிர்க்கட்சியைக் காட்டிலும் ரொம்ப எதிரிபோல, தோழமைக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் ரொம்ப ஆவேசமாக எதிர்க்கிறது. ஆளும் காங்கிரசும் நிஜமாகவே பயப்படுவதைப்போல நடுநடுங்குகிறது.  

1968 முதல் லோக்பால் மசோதா விவாதிக்கப்படுகிறதே தவிர, நாடாளு மன்றத்தில் விவாதத்துக்குக்கூட எடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளிப் போகிறது. இந்த முறை நிலைக்குழு வரை சென்று மக்களவையிலும் நிறைவேறி, மாநிலங்கள் அவையில் விவாதம்வரை சென்று முடக்கப் பட்டிருக்கிறது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எந்தவொரு அரசியல் கட்சியும் வலுவான லோக்பால் அமைப்பு ஏற்படுவதை விரும்பவில்லை என்பதுதான் அது.

நமக்குக் கோபம் அரசியல்வாதிகளிடம் வரவில்லை. அவர்கள் அப்படித் தான் இருப்பார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், மக்களின் பேராதரவுடன் எழுச்சியை ஏற்படுத்திய "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பும் அதன் வேகமும் தடம்புரண்டுவிட்டதே என்பது தான்! 

நமது ஆதங்கம், ஆத்திரம் எல்லாமே. அண்ணா ஹசாரே குழுவினர் ஊழலுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டத்தைக் காங்கிரசுக்கு எதிரான போராட்டம் ஆக்கியதன் விளைவாகத் தங்களது நம்பகத்தன்மையை இழந்து விட்டதால் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான் 

இது.லோக்பாலுக்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் இன்னொரு எழுச்சியை ஏற்படுத்தப் போவது யார்? அது நிச்சயமாக அண்ணா ஹசாரேயாக இருக்க முடியாது. நமது அரசியல்கட்சிகளாகவும் இருக்க வழியில்லை. இந்த நிலையில், இந்திய மக்கள் இலவுகாத்த கிளிகளாகக் காத்திருக்க வேண்டியது தானா


Bonne Annee! Happy New Year!

Bonne Année 2012
 

 
 
 
கடந்து போன வருடம், ஊழல், செயலற்ற தன்மை, கையாலாகாத் தனம், பொறுப்பற்ற அரசியல், தங்களால் எதுவுமே செய்ய முடியாதென்று சோம்பிக் கிடந்த ஜனங்கள் என்று ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் இந்த தேசத்தை ஒரு போட்டுப் புரட்டி விட்டுப் போயிருக்கிறது.

நானே உன் ரட்சகனும், மீட்பனும் ஏழைப் பங்காளனுமாய்  இருப்பேன் என்று தங்களுடைய கோரமுகத்தை வெற்று வாக்குறுதிகளில், இலவசங்களில் மறைத்துக் கொண்டு சுயநலம், குடும்பநலம் என்றே ஆகிப்போன தலைவர்களும், எவ்வளவு அம்பலப்பட்டுப் போனாலும் இவர்களது புரட்டுக்களில் மயங்கிக் கிந்தாலும் கிடப்பேன், ஆனால் மாற்றத்துக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டேன் என்று சோம்பிக் கிடந்த ஜனங்களும் சூடுபட்டது போல வீறிட்டெழ 1,76,000,00,00,000 என்ற மந்திர எண் வரவேண்டி இருந்தது.

இத்தனை பூஜ்யங்களை பார்த்ததே இல்லை என்று ஆச்சரியப்பட்ட நீதியும் கூட, பூஜ்யங்களைப்பார்த்த மயக்கத்தில் மறுபடி தூங்க ஆரம்பித்து விட்டதோ என்று சந்தேகப்படும்படி, 2011 ஆம் ஆண்டு ஒருவித அலுப்புடன் சஸ்பென்சாக விட்டுப் போயிருக்கிறது.

தூண்டிலில் புழுவை வைப்பது எப்படி மீன்களின் மீதான காருண்யத்தினால் இல்லையோ, அப்படியே இலவசங்களுமே கூட ஒரு மாயைதான் என்பதைப் புரிந்துகொள்ளாத ஜனங்கள் கொஞ்சம் விழித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட ஆரம்பித்த தருணத்திலேயே, இலவசங்கள் கொஞ்சம் ஓவர் டோசாக..! ஜனங்கள் மறுபடி  தூங்கப்போய் விட்டார்களோ? 
 
2011 ஒரு கேள்வியையும் எழுப்பி விட்டுப் போயிருக்கிறது!

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்திருவடிகளைச் சரணடைகிறேன். எனது கரணங்கள்,மனம், ஜீவன் அனைத்தையும் உன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். உனது கருணைக்குப் பாத்திரமாகும் தகுதியை அருள்வாய்,உனது பிரியத்துக்குத் தகுதியான குழந்தையாக வரமாக அருள்வாய்!

பிறக்கும் இந்தப் புத்தாண்டு,ஒளிமயமானதாக இருக்க வரம் தருவாய். பாரத தேசம் பார்க்கெல்லாம் திலகம். உலகின் ஆன்மீக குருபீடமாக திகழும் புண்ணிய பூமி. தகுதியற்றவர்களிடம் சிக்கித் தலை குனிந்து கொண்டிருக்கும் நிலை இன்னும் தொடரலாமோ?

அம்மா, மகா காளீ! உன்னை வணங்குகிறேன்! சிறுமையை அழித்து, சீர்மையை அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய
யி, சத்யமயி பரமே!
 


காங்கிரஸ் என்றால் ஊழல்தான்! கேலிப் படங்கள் சொல்வதும் அதையே தான்!

ஊழலுக்கெதிரான இந்தியா என்று அண்ணா ஹசாரே மட்டும் தான் இயக்கம் நடத்த முடியுமா?

ஊழலுக்கெதிரான கேலிச்சித்திரங்கள் என்று நாங்களும் நடத்துவோம்ல என்று ஒருத்தர் மிகவும் முனைப்பாக இருக்கிறார் போல! மின்னஞ்சலில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கேலிச் சித்திரங்களில் ஒரு சில என்னுடைய மின்னஞ்சலுக்கும் வந்த
. கேலி தானே என்று ஒதுக்கி வைத்துவிட்டுப் போக முடியாதபடி, படங்களில் இருக்கும் சில யதார்த்த நிலைகள் யோசிக்கவும் வைத்தன.
ப்ரஷ்டமேவ ஜயதே! லஞ்சமே ஜெயிக்கும்! 

என்கிறது இந்த முதல் படம்! அசோக ஸ்தூபியில் இருக்கும் சிங்கங்கள், நேர்மைக்கு அடையாளம் என்றால் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு ஓநாய்களைத் தவிர வேறென்ன சரியான பொருத்தமாக இருக்க முடியும்? அப்புறமென்ன!! இப்போது கடைப்பிடித்து வரும் கொள்கையை லஞ்சமே ஜெயிக்கும் என்று வெளிப்படையாகவே பிரகடனப் படுத்தி விட வேண்டியது தானே!


தேசிய விலங்காக டைனசார் காங்கிரசைத் தவிர வேறெது பொருத்தமாக இருக்க முடியும்! 
குல்லா! காங்கிரஸ் கள்ளா!

தேசீயப்பறவையாக, பிணம் தின்னிக் கழுகு!  
சோனி(யா)காங்கிரசுக்கும், அரசுக்கும் இதை விடப் பொருத்தமாக வேறொன்று கிடைக்குமா? போபால் மக்களை சாட்சியம் கேட்டுப் பாருங்கள்!


முதலில் இது சுத்தமாக இருந்தால் அல்லவோ, மற்றதும் சுத்தமாக இருக்கும்! சுத்தம் செய்யப் படவேண்டியது முதலில் இந்தக் கழிப்பறையைத் தான்!

தேசீயக் கழிப்பறை! 

தேசீயப் பாட்டு! 
 ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி!



தேசீய விளையாட்டு!  
வில்லு அம்பு ஓல்ட் பேஷன்!கேடி ப்ரதர்சைக் கூப்பிடுங்க! புதுசா என்ன விளையாட்டுன்னு தெரிஞ்சுக்கலாம்!


ஊழலே உணவாக! ஊழலே சுவாசமாக! அதுதான் காங்கிரஸ்!


தேசீய பானம்! அக்கமாலா, கப்சி கதை கேட்டு என்ன புண்ணியம்?
 
அரசியல் அட்டைகளுக்கு மக்களின் ரத்தம் தான்  தேசீய பானம்!


தேர்தல் தானே தேசீயத் திருவிழா! 
அன்னிக்கு ஒருநாள் மட்டும் ஓட்டுப் போடற மகாஜனங்கள் எல்லாம் இந்நாட்டு மன்னர்! அப்புறம் "வானளாவிய அதிகாரம்" எல்லாம் யாருக்காம்?

போகும் திசை மறந்து போச்சு! - இங்கே
பொய்யே வேதமின்னு ஆச்சு!

பொய்யும் புரட்டும் ஆட்சிக் கட்டிலில்.. இதில் வாய்மையே எங்கிருந்து வெல்லுவது?
 
தேசீய ஜோக்குன்னா அது இதுதான்!

முதுகெலும்பில்லாத காங்கிரஸ்காரனை
ஆட்சிக் கட்டிலில் ஏத்தி வச்சா - தெருவில்
போகிற நாய் கூட காலைத் தூக்கி அசிங்கம் செய்யும்!

கசாப்- தேசீய விருந்தாளி!


 
ஒன்றே சொல்வீர் ! அதையும் உரக்கச் சொல்வீர்!
 

காகிதப்பூக்கள் மணக்காது! காங்கிரஸ் ஆட்சி உதவாது!
 
கவைக்குதவாத காங்கிரசைத் தூக்கி எறிய உறுதி கொள்வீர்! 


சாண் ஏறி முழம் வழுக்கும் கதை!ஊழலும் இந்திய அரசியலும்!



ஓரடி முன்னால், ஈரடி பின்னால்!

லெனினுடைய வார்த்தைகள் இவை!இங்கே நம் பக்கத்தில் சாண்  ஏறி முழம் சறுக்குவது என்போமே அது மாதிரி!

லோக்பால், ஜன லோக்பால் என்று மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டே கடைசியில் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, ஒரு உப்புக்குச் சப்பாணி மசோதாவைக் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றியிருக்கிறது. அதற்கு அரசியல் சாசன அந்தஸ்து தரும் வடிவம் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்கள் அவையில் இன்றைக்கு மதியம் தாக்கல் செய்யப் படுவதாக இருந்த இந்த லோக்பால் மசோதா, நாளை மாநிலங்கள் அவையின் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. மாநிலங்களின் அவையில் போதிய உறுப்பினர்கள் பலம் இல்லாத மத்தியில் ஆளும் கூட்டணி அரசு,கேள்விக்குரிய எல்லாவிதமான வழிமுறைகளையும் கையாளத் தீர்மானித்திருப்பதாகவே தகவல்கள் சொல்கின்றன.இந்த மசோதா மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப் பட்டால், கடைசிக் கட்டமாக, மக்களவை, மாநிலங்கள்அவை இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதில் சிம்பிள் மெஜாரிட்டி கிடைக்கிறதா  இல்லையா என்ற கட்டத்தை நோக்கி மசோதா போய்க் கொண்டிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அண்ணா ஹசாரே குறைப்பட்டுக் கொள்கிற மாதிரி ஒரு வலுவான ஜன லோக்பால் அமைப்பை காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியுமே ஏற்கத்தயாராக இல்லை என்பது மிக வெளிப் படையாகவே தெரிகிறது. அதை மறைப்பதற்கு எந்த அரசியல் வாதியுமே பிரயாசைப் படவில்லை! மாறாக, உன்னாலே உன்னாலே என்று மற்றத் தரப்பைக் கைகாட்டித் தாங்கள் தப்பித்துக் கொள்ளப்பார்ப்பதாகவே, திருத்தங்கள், ஏற்கப்பட்டதும் நிராகரித்ததும் குரல் வாக்கெடுப்பிலேயே அவசர அவசரமாக முடித்து வைக்கப்பட்ட காட்சியை மக்களவையில் பார்க்கமுடிந்தது. 

இந்த லோக்பால் மசோதாவின் கதி எப்படி இருந்தாலும், ஆளும் ஐ மு கூட்டணிக் குழப்பம் இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நாடாளுமன்றத்துக்கு இன்னொரு இடைத்தேர்தலை விரும்பாத கட்சிகள் அத்தனையும் இப்போதே ஒரு இடைத்தேர்தலை சந்தித்தால்தான் தப்பிப் பிழைக்க முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டனவோ என்றொரு சந்தேகமும் வலுவாக எழ ஆரம்பித்திருக்கிறது.

சென்ற ஆகஸ்ட் நிலவரப்படி, இந்தப்பக்கங்களிலேயே ஏற்கெனெவே பேசியிருந்ததைப் போல, உடனடியாகத் தேர்தல் என்று வந்தால், பிஜேபிக்குத் தான் சாதகமாக இருக்கும் என்றிருந்தது. இப்போது, பாரதீய ஜனதா கட்சியைக் கொஞ்சம் ஓரம் கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை அல்லது அசட்டுத் துணிச்சல் காங்கிரசுக்கும் வந்திருப்பதாகவே செய்திகள் சொல்கின்றன. தவிர, அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சோனியா போயிருந்த தருணங்களில்  அண்ணா ஹசாரே இயக்கத்துக்கு எக்கச்சக்கமாகப் பணிந்து போய் விட்டதாகவும், இப்போதாவது நிமிர்ந்து நின்று தேர்தல்களில் அண்ணாவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று இத்தாலிய மம்மி தைரியமாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றம் தான் எதையும் முடிவு செய்யும்! நாங்கள் அண்ணா ஹசாரே போராட்டத்தைக் கண்டு ஒன்றும் பயப் படவில்லை என்று காக்க காக்க கனகவேல் காக்க என்று அரண்டவன் கந்தர் ஷஷ்டி கவசத்தைக் குளறித் தடுமாறி ஒப்பிப்பது போல மத்திய அமைச்சர்கள் குழற ஆரம்பித்திருப்பதே அவர்கள் எவ்வளவு பயந்து போயிருக்கிறார்கள் என்று காட்டிக் கொண்டிருக்கிறது. 


போதாக்குறைக்கு, ஊடகங்கள் தொடர்ந்து அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆளே சேரவில்லை, ஜனங்களுடைய ஆதரவு குறைந்து போய் விட்டது என்று ஊதிக் கொண்டிருந்தாலும், சிறை நிரப்பும் போராட்டத்துக்குக் கிட்டத் தட்ட ஒரு லட்சம் தன்னார்வலர்கள் முன்வந்திருப்பதாக வெளி வந்திருக்கும் செய்திகள்  ஜனங்களுடைய மனதில் ஊழலுக்கு எதிரான நெருப்பு கனன்று கொண்டிருப்பதைக் கவனிப்பார் எவருமில்லை. 

இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்று சேர்ந்து திரட்டினாலும் கூட ஒருலட்சம் தன்னார்வலர்களை சிறை நிரப்பும் போராட்டத்துக்குத் தயார் செய்ய முடியாது என்பதை ஏனோ வசதியாக மறந்தும் மறைத்தும் விடுகிறார்கள்.

வருகிற மே மாதத்திற்குள் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் காங்கிரசின் அசட்டுத் துணிச்சலை சோதிப்பது மாதிரி நடக்க இருக்கின்றன. அந்த ஐந்திலும் மிக முக்கியமாக, உத்தரப் பிரதேசத்தில் மே மாதம் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் தான் இருக்கும். அந்த முடிவுகளை வைத்துக் கொண்டு அதன் பின் யோசிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி நினைத்திருக்குமேயானால்,உணவுப்பாதுகாப்புச் சட்டம், இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு, பெயரளவுக்கான லோக்பால் மசோதா இப்படி எல்லாவற்றிலும் அவசரப்பட்டிருக்க வேண்டியதே இல்லை.

கூடா நட்பு என்று திமுக தலைவர் கருணாநிதி காங்கிரசைச் சொன்ன மாதிரி, காங்கிரசும், கூட்டணிக் கட்சிகளின் அதிகரித்து வரும் நிர்பந்தங்களை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. முக்கியமான அமைச்சர்கள் மீது எழுந்திருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்கள், எதிர்க்கட்சிகள் வாயை அடைக்க முடியாமலும், நாடாளு மன்றத்தை நடத்த முடியாமலும் நித்யகண்டம் பூர்ணாயுசு என்று ஐந்து ஆண்டுகளை ஓட்டுவது இனி முடியாது என்று காங்கிரஸ் தத்தளிக்கிறது.

தவிர, ராவுலுக்குப் பட்டம் சூட்ட வேண்டிய வேளை வந்து விட்டது என்று தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இத்தாலிய மம்மி முடிவுக்கு வந்திருக்கலாம்! எது எப்படியானாலும்,பல விசித்திரமான பிராணிகள், திசைக்கொன்றாக ஓடும் ஜந்துக்களை வைத்து வண்டி ஓட்டுவது போல இனிமேலும் கூட்டணி அரசை நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தார்களானால், அது இயற்கையானது தான்! 

உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதா என்றால், அப்படி ஒரு அறிகுறியும் தெரியவில்லை. இன்றைக்கோ, மே மாதமோ தேர்தல் எப்போது வந்தாலும் மாயாவதியின் பி எஸ் பி கட்சிதான் முன்னால் இருக்கிறது. முலாயம் சிங் யாதவ் அடுத்த இடத்தைப் பிடிக்கலாம்! சரண்சிங்கின் மகன் அஜித் சிங்கை கூட்டணிக்குள் சேர்த்து, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கியதில். முலாயம் சிங் யாதவுக்கு விழும் வாக்குகளைப் பிரிக்கலாம். அதுபோக மைனாரிடிகளுக்கு இடஒதுக்கீட்டில்உள் ஒதுக்கீடு செய்திருப்பதில் முஸ்லிம் ஓட்டுவங்கியைக் கொஞ்சம் வசப்படுத்தி விடலாம் என்று காங்கிரஸ் போடும் கணக்கு முற்றிலும் தப்புக் கணக்காகவே ஆகி விடுகிற வாய்ப்புத்தான் இப்போதைக்குத் தெளிவாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியை இந்திய அரசியலில் இருந்து வெளியேற்றினால் ஒழிய இந்த தேசத்துக்கு விடிவு இல்லை! வேறெந்தக் கட்சியாக இருந்தாலும், அந்தக் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் வெளிப் படையாக இருக்கிறதா, கிழடு தட்டிப் போன தலைமை இல்லாமல் இருக்கிறதா, வாரிசு, குடும்ப அரசியலுக்கு இடம் கொடுக்காததாக இயங்குகிறதா என்ற கேள்விகள், வடிகட்டும் காரணிகளாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது!

தலைவர்கள் வழிகாட்டுவதற்குத்தான்! நம் தலைமேல் ஏறி மிதிப்பதற்கு அல்ல! மக்கள் குரலை செவி மடுத்துக் கேட்கிறவர்கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்! ஓட்டுப் போட்ட ஒருநாளுடன் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது முடிந்து விட்டது, வானளாவிய அதிகாரம் எங்களுக்குத்தான் என்று சவடால் பேசும் எவரையும் நிராகரிக்கும் துணிவு, உரிமை வேண்டும்!

உரிமையும் சுதந்திரமும் இலவசங்களில் கிடைக்காது, தானாகவும் வராது!

எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்? 


எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?


சண்டேன்னா மூணு! மண்ணுமோஹனும் அழகிரி, தயாநிதி, பின்னே ஜெயலலிதாவும்!

கவர்னரா  நான் எதுக்கு இருக்கேன்! டோன்ட் ஒர்ரி மன்மோஹன்னு சொல்றாரோ ரோசையா!


 ஏதோ நீங்க இருக்கீங்கன்ற தைரியத்துல தான் நானும் இருக்கேன்னு சொல்றாரோ அழகிரி!


சிரிசிரி தயாநிதி!என்னை ஒண்ணும் பண்ண முடியாதேன்னு சொல்றாரோ!

திமுக தலைவர் கருணாநிதி திங்களன்று காலையில் ராஜ்பவனில் பிரதமரை சந்தித்து முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து மனு ஒன்றைக் கொடுத்தாராம்! அது வெளியில் சொல்லப்படுகிற தகவல்!ஆனால், இந்த வருடத்தின் அதிகம் அறியப்பட்ட முகமாக, அதாவது மிகவும் பிரபலமான கைதி என்று இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழால் வர்ணிக்கப்பட்ட கனிமொழியையும் உடன் அழைத்துப் போனாராம்! அதற்கு  எத்தனை உள்ளர்த்தம் இருக்கிறதோ?

தோட்டத்தில் சசிப் பெயர்ச்சி தொடங்கி  ராஜ்பவனில் கனிப்பெயர்ச்சி இரண்டும்  மண்ணுமோகன் பெயர்ச்சியில் வந்து முடியுமோ? 


 ஆனாக்க அஞ்சாதே மண்ணுமோஹன்னு ஒருத்தர் கூட சொல்ல மாட்டேங்கறாங்களே!

சால்வை அழுகர், பானா சீனா, தேதிமுக, கறுப்புக் கொடி, முல்லைப்பெரியாறு விவகாரம் இவைகளை அப்டேட்சில் விரிவாகப் பார்க்கலாம்!  

மிரளும் காங்கிரஸ்!அசட்டுத் துணிச்சலும் அயோக்கியக் கூட்டணியும்!




இந்தப்பக்கங்களுக்குத் தொடர்ந்து வருபவர்களுக்கு, குறிப்பாக அரசியல்,பொருளாதாரம்,நாட்டு நடப்பு குறித்த பதிவுகளைப் படித்து வருபவர்களுக்கு, காங்கிரஸ் என்ற விஷ விருட்சம் எல்லா ஜனநாயக நடைமுறைகளையும், நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என்று எல்லாவற்றிலும் ஒரு நச்சுச் சூழலைப் பரப்பிக் கொண்டு, தானும் மரணித்துக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு எழுதிக் கொண்டிருப்பது புரியும், புரிந்து கொள்ள முடியும்!

தேச விடுதலைக்காகப் போராடிய காந்தி முதலான தலைவர்கள் இருந்த காங்கிரஸ் இல்லை இன்றிருப்பது! ஆயிரம் குறை சொல்ல முடிந்தாலும்,ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, ஆனால் அதைக் காப்பாற்றுவதற்கு எதுவுமே செய்ய முடியாமல் போன நேருவின் தலைமையில் இருந்த காங்கிரஸ் கூட இல்லை இப்போதிருப்பது!

சொந்த வாழ்க்கையிலேற்பட்ட அவலங்களால் சுற்றி இருப்பவர்கள் மீதிருந்த சந்தேகம், பேட்டை ரவுடியை விட மோசமாகத் தலை விரித்தாடிக் கொண்டிருந்த சஞ்சீவ் என்ற சஞ்சய் காந்தியின் மீதிருந்த குருட்டுத்தனமான பயம், அதோடு கலந்திருந்த பாசத்தினால், நாடாளு மன்ற நடைமுறைகள்,நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என்று எல்லாவற்றையுமே சீரழித்த இந்திரா என்ற  நேருவின் மகள்   தலைமையில் கீழிருந்த காங்கிரஸ் கூட இல்லை இப்போதிருப்பது.


இப்போதிருக்கும் காங்கிரஸ், ஜனங்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போன ஒரு தலைமையின் கீழ்,தேசத்துக்கு எதிராகவே தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிற தியாக சிகரத்தின் கைகளில் சிக்கியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு விவகாரமாக இருக்கட்டும்,அண்டைநாடுகளின் விஷமத்தை எதிர்கொ ள்வதிலாகட்டும் பிரச்சினைகளைத் தள்ளிப் போட்டே சாகடிக்கிற கையாலாதவர்களின் கட்சியாகக் காங்கிரஸ் இருக்கிறது. இந்த தினமணி தலையங்கத்தை ஒரு முறை கவனமாகப் படித்துப் பாருங்கள்! 


காங்கிரசைத் தூக்கி எறிவோம் என்று உறுதி கொள்ளுங்கள்!



தினமணி தலையங்கம்: பொய் சொல்வது யார்?



முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு (சர்வே) செய்வதற்காக எந்தக் கோரிக்கையையும் கேரள அரசு இதுவரை அனுப்பவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

ஏனென்றால், கேரள அரசு சர்வே நடத்தி, எந்த இடத்தில் அணை கட்ட வேண்டும்; எவ்வளவு உயரம் கட்ட வேண்டும் என்பதையெல்லாம் கணித்து விட்டது என்கிற தகவலை கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தாமஸ் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இப்படியொரு பதிலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர் இவ்வாறு கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தாமஸ் அளித்த பேட்டியில், புதிய அணைக்கான கருத்துரு உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்புக் குழுவிடம் செப்டம்பர் 29-ம் தேதி அளிக்கப்படும் என்று (செப்.20-ம் தேதி ) முன்பு அளித்த பேட்டியிலேயே தெரிவித்திருக்கிறார்.

தற்போது அமைச்சரின் பேட்டி குறித்து கேரள பத்திரிகைகள், கேரள நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது அவரும், "ஆய்வு குறித்து ஏற்கெனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்று ஆய்வு நடத்திய பிறகுதானே, புதிய அணைக்கான கருத்துருவே தயாரிக்க முடிந்தது' என்று கூறியுள்ளார். புதிய அணை அமையவுள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இங்கே எந்தவொரு பணியை மேற்கொள்வதாக இருந்தாலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமல் நடத்த முடியாது.

"வனத்துறையின் அனுமதி பெறாமல் எப்படி ஆய்வு நடத்த முடியும்? ஆய்வு நடத்தாமல் எப்படி டிபிஆர் (டீடெய்ல்டு பிராஜக்ட் ரிபோர்ட்) தயாரிக்க முடியும்?

2010-ம் ஆண்டிலேயே புதிய அணை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு விண்ணப்பித்தோம். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (ஈ.ஐ.ஏ) செய்யாமல் அனுமதி அளிக்க இயலாது என்று மத்திய அரசு சொன்னது. அதன் பிறகு இந்த மதிப்பீட்டைச் செய்யும் பணியை கேரள வனஆராய்ச்சிக் கழகத்திடம் அளித்தோம். அவர்களால் செய்ய இயலவில்லை. அதனால் இதைச் செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதுபற்றி மத்திய அரசுக்கும் தகவல் கொடுத்துள்ளோம்' என்று கேரள நீர்ப்பாசனத் துறையின் தலைமைப் பொறியாளர் வெளிப்படையாகப் பேட்டியளிக்கிறார்.

என்ன நடந்து கொண்டிருக்கிறது? மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பு வகித்த காலத்தில் இதற்கான அனுமதி கிடைத்ததாக கேரள எம்.பி.க்கள் சொல்கின்றனர்.

ஜனவரி 2010-ல் வெளியான செய்திகளில், கேரள நீர்ப்பாசனத் துறை புதிய அணைக்கான சர்வே நடத்தி, தற்போதுள்ள அணைக்குக் கீழே 426 மீ, 627 மீ, 650 மீ அணைகள் கட்டும் ஆய்வுகளை நடத்தியுள்ளதாகவும், இந்த இடங்களில் உள்ள மண், பாறையின் தன்மை குறித்து அறிய இதன் மாதிரிகளை ஆய்வுக்காக லால்பகதூர் சாஸ்திரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது இரண்டு கேள்விகளைத்தான் நாம் மத்திய அரசிடம் கேட்க வேண்டியிருக்கிறது.

புதிய அணையைக் கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இத்தனை பணிகளும் நடந்திருக்க முடியுமா? அனுமதியின்றி நடந்திருக்குமேயானால், அதற்காக மத்திய வனத்துறை என்ன நடவடிக்கையை இந்த மாநில அரசின் மீது மேற்கொள்ளப் போகிறது?

இதைவிட முக்கியமாக இன்னொரு கேள்வி இருக்கிறது.

மத்திய வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க முடியுமா? பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இத்தகைய புதிய அணையைக் கட்டுவதால் பல்லுயிர் பெருக்கத்துக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுவிடாதா?

அணையின் நீரை 142 அடிக்கு உயர்த்தினால் அதனால் தேங்கும் அணை நீர்ப் பரப்பு பல ஆயிரம் ஏக்கர் அதிகரிக்கும். அப்போது பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும். அதைக் கருத்தில்கொண்டாகிலும் அணை நீரை 136 அடிக்கு மேலாக உயர்த்த அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி முறையிட்டிருக்கும்போது, புதிய அணை கட்டுவதால் மட்டும் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படாதா? இதற்குக் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதிலளிக்கட்டும்.

புவிவெப்ப மாநாட்டு ஒப்பந்தத்தில், வெப்ப மண்டலக் காடுகளைக் காப்பதாக ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமா? அதற்கு மத்திய அரசு அனுமதிக்குமா? என்கிற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன்.

அந்த இடத்தில் புதிதாக அணை கட்டும் விவகாரத்தை கைவிடும் கோரிக்கையைத் தவிர, வேறு எதை வேண்டுமானாலும் தமிழக முதல்வருடன் பேசத் தயார் என்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. புதிய அணையை ரூ.650 கோடிசெலவில் கட்டுவதற்கும் அவர்கள் திட்டம் தீட்டிவிட்டார்கள். புதிய அணையைக் கட்டும்போது, முல்லைப் பெரியாறு அணையை எவ்வாறு, எந்தெந்த நிலைகளில் உடைப்பது என்பதை பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியாக அளிக்கிறார்கள். உடைக்கப்படும் அணையிலிருந்து எந்தெந்தப் பகுதியை புது அணைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம் என்றும் பேசுகிறார்கள்.

இவ்வளவு நடக்கிறதே, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் பதில் என்ன? அணை கட்ட அனுமதி தருவாரா, மாட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்தியாக வேண்டும்!

பொய் சொல்வது யார், ஜெயந்தி நடராஜனா? 


உம்மன் சாண்டியா?