சண்டேன்னா மூணு! #அரசியல் #திமுகஅரசியல் #மாற்றுஅரசியல்

இன்றைய நாளிதழ்களில் திமுகவின் சாதனைகளாக ஒரு நாலைந்து பக்க விளம்பரமாக அதிமுக கொடுத்ததில், திமுக தரப்பு உறைந்து போய்விட்ட மாதிரியே தெரிகிறது  இத்தனை நாள் ஊடகங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு திமுகவினர் அடுத்துவந்த தம்பட்டம் எல்லாம் கிழிந்து தொங்குகிறதாம்! போதாக்குறைக்கு ஒரு மாஜி திமுக பெண் அமைச்சருடைய தாயாரே நில அபகரிப்பு  சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார். என்னவென்று?  


பெற்ற தாயுடைய சொத்துக்களையே மோசடியாகத் தனது புருஷன் பெயருக்கு மாற்றிக்கொண்ட அந்த திமுக பெண் பிரமுகர் பூங்கோதை ஆலடி அருணா தான்! இந்த ஒரு சோற்றுப் பதம் போதாதென்றால் உங்கள் ஊரில் உள்ள திமுக பெரும்புள்ளிகளுடைய முன்கதை & பின்கதை சுருக்கத்தைத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்!


திமுக ஊதி ஊதிப் பெரிதாக்கி வந்த நாங்க தான் ஆச்சியப் புடிக்கப்போறோம் பலூனை இப்படி ஒரே நாளில் உடைத்துவிட்டார்களே! திமுக சொம்புகளுக்கு துக்கம் நெஞ்சை அடைக்காதா?  நெஞ்சே வெடிக்கும்படி ஒருத்தர் பொதுவெளியில் வாந்தி எடுத்திருக்கிறார்.


யாரிந்த விவேக் என்று விசாரித்தால், மின்னம்பலம் இணைய இதழில் இருப்பவர் என்று சொல்கிறார்கள். கடைசி மூன்று வரிகளில் சொல்லியிருப்பதைத்தானே இவர்களும் திமுகவுக்கு ஆதரவாக இத்தனைநாள் செய்து வந்தார்கள் என்று நான் கேட்கப்போவதில்லை!

தட்டிக்கேட்க ஆளில்லாமலிருந்ததால் இத்தனை நாள் திராவிட கழகம், தி மு கழகம் , சுபவீ செட்டியார், திருமா உள்ளிட்டபலரும் இது பெரியார் மண் அது இதென்று முண்டா தட்டிக் கொண்டிருந்தார்கள் யாராவது சிறிது சந்தேகத்தோடு கேள்வி கேட்டால் அவரை சங்கி என்று பழித்தார்கள்! ஆகாதவர்கள் எவரைப்பார்த்தாலும்  பிஜேபியின் B டீம் என்றார்கள்  அதையும் மீறிக் கேள்வி கேட்டால், கேட்காதே! பிஜேபி உள்ளே வந்துவிடும் என்றார்கள்! கடைசிவரை தாங்கள் யார், தங்களுடைய கொள்கை என்ன, சாதித்ததென்ன இவை எதையும் சொல்லாமலேயே அடுத்தவர்களை அவதூறாகப் பேசுவதொன்றையே!  முழுநேரத் தொழிலாக வைத்து இருந்தார்கள்  கடைசியில் என்ன ஆனது? சோணமுத்தா எல்லாம் போச்சா?.       


பெங்களூரு பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தேஜஸ்வி சூர்யா கூட, இந்த 10 நிமிட வீடியோ நேர்காணலில் ஊழலில் காங்கிரசும்  திமு கழகமும் ஊறித்திளைப்பவை என்பதனால் நேச்சுரல் கூட்டாளிகள் என்று சொல்கிறார். அண்ணாமலை IPS ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவார் என்பதையும் மிகுந்த நம்பிக்கையோடு சொல்கிறார் இதையும் திமுகவினர் செய்து வரும் வெறுப்பு அரசியலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!  ஒப்பிட்டுப்பார்க்க இன்னொரு 7 நிமிட வீடியோ 



வெறும் 20 சீட்டுகளில் மட்டுமே போட்டியிடும் பிஜேபி மாற்று அரசியல் சக்தியா? மாற்றத்துக்கான சக்தியாக மிகுந்த வீரியத்துடன் பிஜேபி தமிழகத்தில் காலூன்றி விட்டது என்பது சத்தியம்! 

தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகத்தை இதுநாள் வரை ஒட்டவிடாமல் வைத்திருந்த திமுகவை நிராகரிப்போம்! திமுகவுடன் சேர்ந்து கொட்டம் அடிக்கும் உதிரிகளான விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சில்லறைகளையும்  முற்றிலும் நிராகரிப்போம்! தமிழகம் தனித்தீவல்ல! பாரதத்தின் ஒரு அங்கமே எனத் தலைநிமிர்ந்து சொல்லுவோம்!

மீண்டும் சந்திப்போம்

8 comments:

  1. தீமூக்காவை ஓரங்கட்டுவோம். .

    ReplyDelete
    Replies
    1. நமக்கடுத்த தலைமுறை நிம்மதியாக வாழ்வதற்காக நிச்சயமாக அதைச் செய்தெ ஆகவேண்டும் துரை செல்வராஜூ சார்!

      Delete
  2. எல்லா செய்தித்தாள்களிலும் வந்த அந்த விளம்பரம்...  படங்கள் வாட்ஸாப்பில் வந்தபோது நிஜமா பொய்யா என்று அறியாமல் பழைய செய்தியா, போட்டோஷாப்பா என்று குழம்பி இருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. விளம்பரமாக வந்த செய்திகளில் சொல்லப்பட்டவை அத்தனையும் நிஜம் ஸ்ரீராம்!

      Delete
  3. மின்னம்பலமும் திமுக பத்திரிகை போலவே ரொம்ப மாதங்களாகச் செயல்படுகிறது, திமுக உறுப்பினரை பொருளாதாரப் புலி என்பதுபோல ப்ரொஜக்ட் செய்து இத்தனைகாலம் நாடகங்கள் நடத்தியது. விளம்பரம் என வந்திருப்பது எதுவும் சொந்தச் சரக்கல்ல. அந்த அந்தப் பத்திரிகைகளில் வந்ததுதானே. அவர்களென்ன மின்னம்பலம் போன்ற இணையப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளைப் போன்று திமுக எழுதிக்கொடுத்ததையா நிகழ்ச்சிகள் என்ற பெயரில் வெளியிட்டார்கள்?

    சிறுபான்மையினர் வாக்குகள் தேவை என்பதற்காக பாஜகவையே பிரதான எதிரி போல எதிர்கட்சிகள் பேசிப் பேசி அந்தக் கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன.

    போதாக்குறைக்கு, காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் மாநிலத்துக்கு ஒரு நிலைமை, தேர்தல் நடக்கும் இடங்களில் வெவ்வேறு பேச்சு என்று நாடகமாடுகின்றன. இவர்கள தங்கள் கட்சிகளை அழிக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. மின்னம்பலம் கிடக்கட்டும், அது துக்கடா! இங்கே பிரதான ஊடகங்கள்,டிவி சேனல்கள் அத்தனையும் திமுகவின் சார்பிலேயே செயல்பட்டுவந்தது வெறும் காசுக்காக மட்டுமே என்றா நினைக்கிறீர்கள் நெல்லைத்தமிழன் சார்?

      வேறு அஜெண்டாக்களும் அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் சாயம் வெளுத்த பிறகும் கூட வெட்கமே இல்லாமல் தொடர்ந்து அதே வேலையைச் செய்து வருகிறார்கள். அதிகம் பெயர்கெட்டுப்போன லயோலா கல்லூரி ஜெசூட்ஸ் நாங்கள் இந்தத்தேர்தலில் எந்தக்கருத்துக்கணிப்பையும் நடத்தவில்லை என்று அறிவித்தாலும் சும்மா இருப்பார்களென்று நம்புவதற்ற்கில்லை. திமுக இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறதா அல்லது அவர்கள் திமுகவைப்பயன் படுத்திக்க கொள்கிறார்களா ? இரண்டுமே நடக்கிறது என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம் ?

      Delete
  4. எப்படி இவ்வளவு ரகசியமாக விளம்பரங்கள் வந்தன என்பது ஆச்சர்யம்தான்

    ReplyDelete
    Replies
    1. இதில் எந்த ரகசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு இடத்தில் என்றால் கூட ரகசியமாகச் செய்துவிட்டார்கள் என்று சந்தேகப்படுவதில் அர்த்தமிருக்கும். ஆனால் கட்சிப்பாத்திரிகைகள் தவிர அத்தனை நாளிதழ்களிலும் ஒரே மாதிரி செய்தி /விளம்பரம் வெளிவந்ததில், அச்சு ஊடாகங்கள் விளம்பர வருவாயையே நம்பி இருப்பதாக ஹிந்து என் ராம் சொன்னதாக வந்த செய்தி, நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!