Showing posts with label எச்சில் துப்பாதீர். Show all posts
Showing posts with label எச்சில் துப்பாதீர். Show all posts

துப்புவது எச்சில் அல்ல....விஷம்..!


....த்தூ! த்தூத்தூத்து!

ஒரு தொலைக் காட்சி விளம்பரத்தில் ஒரு பொடியனுக்கு அம்மாக்காரி சாதம் ஊட்டிக் கொண்டே வருவாள். பொடியன் அம்மாக்காரி ஊட்டியதை
....த்தூ! த்தூத்தூத்து! என்று துப்பியபடியே வீடு முழுக்க ஓடி அம்மாக்காரியை ட்ரில் எடுத்துக் கொண்டிருப்பான். ஆஹா, பொடியன் என்னமாக ஓடுகிறான் என்று  அந்தக் காட்சியை என்னை மாதிரியே நீங்களும் ரசித்திருப்பீர்கள்!

தமிழ் வலைப் பதிவுலகில் மூன்று நாட்களாக இப்படித் துப்பி எழுதும் போக்கு, சாதி, முற்போக்கு முத்திரையுடன் ஆரம்பமாகி இருப்பது தமிழ் வலைப் பதிவுலகம் நல்ல நிலையில் இல்லை என்பதையே சொல்லாமல் சொல்கிறது.

காரணம், அதற்கும் முந்தைய காரணம், காரியம் என்று எல்லாவற்றையும் பார்த்த பிறகு ஒரே ஒரு வரி தான் சொல்லத் தோன்றுகிறது.

நீங்கள் துப்புவது வெறும் எச்சில் மட்டும் அல்ல! கொடும் விஷம்! இந்த விஷயம் எங்கே கொண்டுபோய்விடும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இங்கே.


முழுச் செய்தியையும் படிக்க, இங்கே.

இன்னொரு செய்தி இங்கே

அதில் இருந்து கொஞ்சம் ......

"முனைவர் நா. கண்ணன், இன்னும் சொல்கிறார்:

"Chuimsae geneன்றெல்லாம் பேசுகிறார்கள். நம்மவர்களோ நாட்சிகள் போல் இனவாதம் பேசி, மொழிவாதம் பேசி நம்மைப் பிரித்து சீரழிக்கும் எண்ணங்களைக் கூசாமல் பரப்பிய வண்ணம் உள்ளனர். Chuimsae gene என்றால் என்ன? நல்லதை எண்ணும் மரபணு. நல்லது எனும் போது கூடும் மனோநிலை. ஒருமைப்படும் மனது. நல்லதே எண்ணும் உள்ளம்.

இது எவ்வளவு தேவை மின்தமிழ் உலகிற்கு தற்போது!

நம் மொழியில் இல்லாத சொல்லா? பக்தி இயக்கம் என்பதே இந்த Chuimsae gene  ஐ ஒளிபடச்செய்வதுதான்.செய்வோம்."

நல்லது நடக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களோடு, நல்ல எண்ணங்களைப் பரிமாறத் துவங்க  ஆரம்பிப்போம்!
"

oooOooo


திங்கள் கிழமை சிந்தனைகள்!படமாக!