Showing posts with label என்கவுன்டர். Show all posts
Showing posts with label என்கவுன்டர். Show all posts

இட்லி வடை பொங்கல்! #53 ஒரு என்கவுன்டரும் பல எதிரொலிகளும்!

கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா ஹைதராபாத் என்கவுன்டர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நிதானமான மனோநிலையில் கார்டூன் வரைந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். மற்றப்படி எங்கே பார்த்தாலும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் சூடான விவாதங்களுமாக மட்டுமே இந்தவிஷயம் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.


இந்த வீடியோ 53 நிமிடம் எப்படி என்பதை  நீங்களே பார்த்து விட்டு முடிவு செய்துகொள்ளலாம்!

   
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாலுபேருமே தப்பிக்க முயன்றார்கள், போலீசாரைத் தாக்கவும் முயன்றார்கள், தற்காப்புக்காக சுட்டதில் நாலுபேருமே செத்தும் போனார்கள் என்கிறது போலீஸ் தரப்பு. உயிர் போகாமல் சுட்டுப்பிடிக்க முடியவில்லையா என்கிற கேள்வியை ஏன் எவரும் எழுப்பவில்லை? இந்த விஷயத்தில் என்னென்ன மாதிரிக் குரல்கள் எழுகின்றன என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

எனக்கு செய்திகளின் உண்மைத்தன்மையில் சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது.பல செய்திகள் எப்படி திரிக்கப்படுகின்றன மிகைப்படுத்தப்படுகின்றன அடக்கி வாசிக்கப்படுகின்றன என்று அருகேயிருந்து பார்த்திருக்கிறேன். உண்மையில் இங்கே செய்தியே இல்லை.ஒபினியன்கள் தான் இருக்கின்றன.இதை எல்லா தரப்பும் செய்கிறார்கள்.ஒருமுறை தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான நபர்களில் ஒருவர் போலிச் செய்திகளாகப் பகிர்ந்து கொண்டிருந்தார். அவரிடம் சுட்டிக்காட்டியும் அதை நீக்கவில்லை. 'அவர்களும் இதைத்தான் செய்கிறார்கள்.நாம் செய்தால் என்ன?இருக்கட்டும்'என்றார்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
பிரியங்கா ரெட்டி விஷயத்தில் அவர் இறந்ததை மட்டுமே நான் நம்புகிறேன். அவருக்கு என் அஞ்சலிகள்.ஆண்,பெண்,மாற்றுப் பாலினத்தவர் என்றெல்லாம் பிளவுறாத ஒரு கிரகத்தில் அவர் பிறக்கட்டும்
இப்போது என்னைப் பொறுத்தவரை உண்மையான செய்தி என்பது நீங்கள் கேள்விப்படாத செய்திதான்.நீதி என்று உங்களுக்கு சொல்லப்படுவது மிகச் சாமர்த்தியமாக திரிக்கப்பட்ட ஒரு போலிச் செய்தி. அவ்வளவுதான். 


உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் என்ற இடத்தில் சிதைக்கப் பட்ட பெண் ஒருத்தி நீதிமன்றத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்ததும் செய்த முதல் காரியம் அவளை உயிரோடு கொளுத்தியது! 85% தீக்காயங்கள், பலமணிநேரமாக உயிருக்குப் போராடிய அந்தப்பெண் இன்றைக்கு இறந்துவிட்டாள். என்ன நீதி கிடைத்தது?

People love violence. So when you give a solution to rape like hang the rapists, lynch them, castrate them, murder them--people just love the idea. But when you say educate men about women's equality, fight patriarchy &misogyny, eradicate women's oppression--people won't like it.
9:58 AM · Dec 4, 2019Twitter for Android
'மக்களுக்கு வன்முறை ரொம்பவும் பிடித்த விஷயம். எனவே ரேப்பிஸ்ட்களை தூக்கில் போடுங்கள், வெட்டி தள்ளுங்கள், ஆண்மையை நீக்குங்கள், சுட்டு தள்ளுங்கள் - என்றெல்லாம் சொன்னால் அவர்களுக்கு மிகவும் இனிக்கிறது. ஆனால் பெண்களை சமமாக நடத்த ஆண்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தந்தைவழி குடும்ப முறையை எதிர்த்துப் போராடுங்கள், பெண் ஒடுக்குமுறையை ஒழியுங்கள் - என்றெல்லாம் சொன்னால் கசக்கிறது.'

தஸ்லிமா நஸ்ரின் சொல்லியிருப்பதில் உள்ள நியாயம் புரிகிறதா?  


 இது செம நக்கலு.

என்கவுன்டர்களைக் கொண்டாடுகிற சமூகமாக நாம்  தாழ்ந்துவருகிறோம் என்பதைத் தாண்டி, எப்படிப்பார்த்தாலும் என்கவுன்டர்களை எந்தவகையிலும் நியாயப்படுத்தவே முடியாது! 

மீண்டும் சந்திப்போம்.