நேற்றைக்கு, நாம் தமிழர் இயக்கத்தை ஆதரிக்கும் வழக்கறிஞர் ஒருவரிடம் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்!
"திமுக தோற்றது எதிர்பார்த்தது தான்! ஆனாலும், அவங்க (காங்கிரஸ்) அஞ்சு சீட் ஜெயிச்சது தான் ரொம்பக் கொடுமை!" என்றார்!
"திமுக தோற்றது எதிர்பார்த்தது தான்! ஆனாலும், அவங்க (காங்கிரஸ்) அஞ்சு சீட் ஜெயிச்சது தான் ரொம்பக் கொடுமை!" என்றார்!
உண்மையைச் சொல்லப்போனால்,சென்ற சட்ட மன்றத் தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை விட காங்கிரஸ், இந்தத்தேர்தலில் அதிக வாக்கு வாங்கியிருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும்! கண்முன்னால் இருக்கும் விவரங்களைக் கூடப் பார்க்க நம்மால் முடிவதில்லை. புள்ளி விவரங்களை எடுத்துக் காட்டினாலும் பயனிருக்காது என்பதால்,விவாதத்தைத் தொடரவில்லை.
நடந்து முடிந்த தமிழக சட்ட மன்றத் தேர்தல் இதற்கு முந்தைய தேர்தல்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும் என்பது ஆரம்பத்தில் இருந்தே எல்லோருக்கும் தெரிகிற மாதிரித்தான் இருந்தது.அந்த வகையில் இந்தத் தேர்தல்களில், சில கற்பிதங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன!
முதலில், காங்கிரசோடு கூட்டணி வைக்கிற கட்சி ஜெயிக்கும் என்பது! அதெல்லாம், கனவாய்ப் பழங்கதையாய்ப் போய் நீண்ட நாட்களாகிறது. திராவிடக் கட்சிகள் 28, 26 சதவீதம் வாக்கு வங்கிகளை வைத்திருந்த காலங்களில், காங்கிரசுக்கென்று 17-19 சதவீதம் வாக்கு வங்கி இருந்த காலம் ஒன்று இருந்தது.அப்போதிருந்த கற்பிதம் இப்போதும் சரியாக இருக்குமா என்று எவரும் யோசிக்கவில்லை, அதை அப்படியே நம்பிக் கொண்டிருந்தார்கள். நடந்து முடிந்த தமிழக சட்ட மன்றத் தேர்தல் இதற்கு முந்தைய தேர்தல்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும் என்பது ஆரம்பத்தில் இருந்தே எல்லோருக்கும் தெரிகிற மாதிரித்தான் இருந்தது.அந்த வகையில் இந்தத் தேர்தல்களில், சில கற்பிதங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன!
ஏனென்றால், இதுவரை ஜெயிக்கிற தரப்போடு காங்கிரஸ் இருந்தது, முதல் தடவையாக இன்றைக்குத் தலைகீழாக மாறியிருக்கிறது!
நிச்சயமாகக் குறைந்திருக்கிறது. சுமார் இருபது சதவீதத்தைக் ஒட்டி, தனித்து வாக்குவங்கியை வைத்திருந்த ஒரு தேசீயக் கட்சி, மாநிலக் கட்சிகளோடு மாறிமாறிக் கூட்டு வைத்துக் கொண்டே வந்ததில் படிப் படியாகத் தன்னுடைய சொந்த வலுவை இழந்து, நேற்றைக்குக் கட்சி ஆரம்பித்த விஜயகாந்தை விடக் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது என்பது பெருமைதரக் கூடிய விஷயமா?
சென்ற 2006 தேர்தலில் காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகளின் சதவீதம் 8.38, இப்போது 9.30 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
சென்ற சட்டமன்றத் தேர்தல்களிலேயே, வன்னியர் ஒட்டு அன்னியருக்கு இல்லை என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு, தேதிமுக ஆப்பு வைத்து, அதை இந்தத் தேர்தலிலும் தக்க வைத்துக் கொண்டது என்பதுதான் உண்மை.
அப்படியானால் இந்தத்தேர்தலில் என்ன தான் நடந்தது?
உதயசூரியனாகத் தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் அஸ்தமன சூரியனாகிப் போனதைப் போனதேர்தலில் இருந்தே காண முடிந்ததைத் தான், இந்தத்தேர்தல் இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. அப்படியானால் இந்தத்தேர்தலில் என்ன தான் நடந்தது?
சென்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வாங்கிய வாக்குகள் 26.46% தான், அப்போதே அதிமுக திமுகவை விட ஆறு சதவீத வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்தது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தோடு மட்டுமே தன்னை பயில்வான் மாதிரிக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் முதல் முதலாகத் திமுகவுக்கு, சென்ற சட்டமன்றத் தேர்தல்களில் தான் எழுந்தது.
இந்தத் தேர்தல்களில் இன்னும் நான்கு சதவீதத்தை இழந்து திமுக வெறும் 22.38% என்று சுருங்கியதில், திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளும் பரிதாபமாகத் தோற்க வேண்டியதாகிப் போய்விட்டது என்று கூட, இந்தப் புள்ளிவிவரங்களை வைத்து சொல்ல முடியும்!காகித ஓடம் கடல் அலை மீது ...........
போவது போலே மூவரும் போவோம்!
பாட்டு ரெடியாக இருக்கிறது!
மானம் கெட்ட தமிழன், சுரணை கெட்ட தமிழன் என்று தான் தோற்ற போதெல்லாம் தூற்றி வாரிய வார்த்தைகள் இருக்கின்றன!
புள்ளிவிவரங்களைத் திரித்து, தோற்றதற்கு சப்பைக்கட்டு சொல்வதற்கு ஏற்கெனெவே அனுபவம் நிறைய இருக்கிறது!
அப்புறம் என்ன, காங்கிரஸ் திமுக கூட்டணிக்குக் கம்பல்சரி ஓய்வு கொடுத்து விட வேண்டியதுதானே! என்று ஏப்ரல் முதல் தேதியன்று இந்தப்பதிவில் எழுதியது கூடக் கொஞ்சம் மாறிப் போய்விட்டது!
இரண்டு கூட்டணிகளிலும் மற்றக் கட்சிகளுடைய வாக்குவங்கியும் கிட்டத்தட்ட அப்படியே இருக்க, திமுகவின் வாக்குவங்கி மட்டும் 16.70% குறைந்து, இது உதயசூரியனில்லை, அஸ்தமித்து விட்ட சூரியன் தான் என்பதை சொல்வதாக இருக்கிறது.அப்புறம் என்ன, காங்கிரஸ் திமுக கூட்டணிக்குக் கம்பல்சரி ஓய்வு கொடுத்து விட வேண்டியதுதானே! என்று ஏப்ரல் முதல் தேதியன்று இந்தப்பதிவில் எழுதியது கூடக் கொஞ்சம் மாறிப் போய்விட்டது!
அதைப் புரிந்துகொண்டதால் தான் முந்தைய காலங்களில், புள்ளி விவரங்களைக் காட்டி திமுகவின் தோல்விக்கு சப்பைக்கட்டுக் கட்ட முடிந்த கருணாநிதி, மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்து விட்டார்கள் மக்களுக்கு நன்றி என்றி குத்தலாகச் சொன்னதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதாகிவிட்டது போல!!
ooOoo
கர்நாடக அரசியலில், பாச்சா பலிக்கவில்லை என்றவுடன் பரத்வாஜ் இறங்கி வந்திருக்கிறார்! ஆக இந்த ரவுண்டில், எடியூரப்பா ஜெயித்திருக்கிறார்! சரி!
இன்னும் எத்தனை நாளைக்கு, எடியூரப்பாவுடன் தழைந்து போய்ச் சமாதானம் செய்து கொண்ட பரத்வாஜ் சும்மா இருப்பார்?
சரியாக ஊகிக்க முடிகிறவர்களுக்கு ஒரு அட்வான்ஸ் சபாஷ்!
இன்னும் எத்தனை நாளைக்கு, எடியூரப்பாவுடன் தழைந்து போய்ச் சமாதானம் செய்து கொண்ட பரத்வாஜ் சும்மா இருப்பார்?
சரியாக ஊகிக்க முடிகிறவர்களுக்கு ஒரு அட்வான்ஸ் சபாஷ்!
ooOoo
காங்கிரஸ் இளவரசர், உத்தர பிரதேச விவசாயிகளோடு சேர்ந்து கொண்டு தர்ணா செய்தது, கைதானது மிகப் பரபரப்பாக செய்திகளில் அடிபட்டதும், பிரதமரிடம் விவசாயிகளுக்காக ராகுல் உருகியதும் அரசியல் டிராமாவில் நேற்றைய சீன்கள்!
இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி அரசியலில் அனுபவமே இல்லாதவர் என்ற அளவுக்கு ராகுல் நடத்திய கூத்து ஆண்டி கிளைமாக்ஸாக இன்றைய செய்தியாகத் தொலைக் காட்சி செய்திகளில் ஆகிப் போனதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.
கழகங்களிடம் மாறி மாறிக் கூட்டணி வைத்தும் கூட, ஒரு தப்பை எப்படி சூப்பராக செய்வது, அசடு வழிவதைக் கூடப் பெரும் சாதனையாகக் காட்டிக் கொள்வது என்பதைக் கூடக் கற்றுக் கொள்ளவில்லையே!என்ன காங்கிரஸ், என்ன கூட்டணி தர்மம்!
சூனா பானா வடிவேலுவிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்ளச் சொல்லலாமோ?!
திஸ்கி ஒன்று:
இந்தப் புள்ளிவிவரங்கள் வெளிப்படையாக சொல்லாத இன்னொரு விஷயமும் இருக்கிறது.
பிஜேபிக்கு, சென்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளைவிட இந்தத் தேர்தலில் கொஞ்சம் கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதைவிட, காங்கிரஸ் வென்ற ஐந்து தொகுதிகளில், அவர்கள் வென்ற வாக்கு வித்தியாசம், அங்கே பிஜேபி வாங்கிய வாக்குகளைவிடக் குறைவு என்பதுதான்.ஆக, சில இடங்களில் காங்கிரஸ் வென்றது கூட, பிஜேபி கூட நினைத்துப் பார்க்காத, வாக்குகளைப் பிரித்ததனால் வந்ததுதான்!