Showing posts with label மதுரைக்கு வந்த சோதனை. Show all posts
Showing posts with label மதுரைக்கு வந்த சோதனை. Show all posts

சண்டேன்னா மூணு! மதுரைக்கு வந்தசோதனை! வடக்கும் தெற்கும்!

காங்கிரஸ் கட்சி இந்த தேசத்துக்கு செய்துவரும் மிகப் பெரிய துரோகம், இவர்கள் பலவீனப்படுகிற தருணங்களில், இந்த தேசத்தையும் சேர்த்தே பலவீனப் படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதுதான். அரசு இயந்திரம்,  நிர்வாகம், நாடாளுமன்ற நடைமுறைகள், நீதித்துறை, ஊடகங்கள்  என்று எல்லாவற்றையுமே காங்கிரஸ் தொடர்ந்து பலவீனப் படுத்திக் கொண்டு வருகிறது. குற்றுயிரும், குலை உயிருமாக இருந்து கொண்டே, இந்திய ஜனநாயகம் அவ்வப்போது சில நம்பிக்கைக் கீற்றுக்களையும் தந்து கொண்டிருக்கிறது என்பது ஒன்று தான் இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என்று இந்தப்பக்கங்களில் எழுதியதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்த வேண்டுமோ? 


திமுக சப்போர்ட் கரைசேர்க்காது என்பது தெரிந்ததாலோ என்னவோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வேட்பாளர் திரைப்படக் கலைஞர்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய ஆரம்பித்தது மிகவும் வேடிக்கை! நேற்று நடந்த இந்தக் கூத்தின் ஒரு சிறிய சாம்பிள் இது. 

இதோ , இந்த வாரம் ஹிந்துப்பெண்கள் கோயிலுக்கு போவதே ஆண்களை மயக்கத்தான் என்று எழுதிய மலையாளியையும் , திருச்செங்கோடு தேர்த் திருவிழாவில் பெண்கள் கண்டவனோடு கூடி பிள்ளை பெறுவார்கள் என்று எழுதிய பெருமாள் முருகனையும் விழுந்து விழுந்து ஆதரித்த மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் இன்று கோயிலில் சாமிகும்பிடும் போட்டோ வெளியாகியிருக்கிறது...
யாரை ஏமாற்ற இந்த நாதாரிகள் இப்படி நடிக்கிறார்கள்? ஹிந்துக்களைப்பார்த்தால் அவ்வளவு ஏமாளிகளாகத்தெரிகிறதா இவர்களுக்கு?
ஹிந்துக்களே..!
திருடர்கள் ஜாக்கிரதை!
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்


பிஜேபி ஒரு வட இந்தியக்கட்சியாம்! சிவகங்கை பெரிய ஜாமீன் பானாசீனா சொல்லிவிட்டார்! அப்படிப் பார்த்தால் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்ததே வெளிநாட்டுக்காரர்கள் தான் என்பதும் அப்படி இப்படிக் கைமாறி ஒரு இத்தாலியப்பெண்மணி, வாரிசு பாத்தியத்தில் நடக்கும் கட்சி என்பது அப்பச்சிக்குத் தெரியாதா என்ன? தெரிந்தும் இப்படிப் பேசுகிறார் என்றால் வாய்க்கொழுப்பு என்பதற்கு மேல் வேறென்ன?  இவர் எந்த மாநிலத்தின் ராஜ்யசபா எம்பியாக எவ்வளவு பாடுபட்டு வந்தாராம்? 

இப்பதான் அடிவயித்துல ஒரு சூடு பரவுது போல. 18 ம் தேதி ஒரு பாரதப்போர் ஆரம்பம். தீயவர்கள் அழியும் காலம் நெருங்கி விட்டது. COUNTDOWN STARTS. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

5:51 PM - 6 Apr 2019 

"இருளில் இருந்த மக்கள் பேரோளியினை கண்டனர்
இதோ உங்களுக்கு ஒரு மகள் கொடுக்கபட்டுள்ளார்"
"ஏ தமிழகமே உயிர்கொள் உனக்கான ஒளி வந்துவிட்டது" தலைவி வந்தபின் தயக்கமேது?
தலைவி சொன்னால் அல் கய்தாவினையே ஏற்கும் சங்கம் இந்த காங்கிரஸை ஏற்காதா? வெல்க காங்கிரஸ் என்று நையாண்டி செய்கிறாரா? புளகாங்கிதப் படுகிறாரா? புரியலையே சாமி!   

மீண்டும்  சந்திப்போம்!